Followers

Monday, August 14, 2017

இறந்த கோசோலை பசுவை அடக்கம் செய்த முஸ்லிம்கள்!

இறந்த கோசோலை பசுவை அடக்கம் செய்த முஸ்லிம்கள்!

ஹர்தா: ம.பி.,யில், நகராட்சி நடத்தும் கோசாலை அருகே, நோயால் உயிரிழந்து, கேட்பாரற்று கிடந்த பசுவின் உடலை, அந்த பகுதி முஸ்லிம்கள், உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். ஹர்தா மாவட்டத்தில், பசுக்களை பராமரிக்கும் கோசாலை உள்ளது. இதில் இருந்த பசு ஒன்று, உடல் நலன் பாதிக்கப்பட்டதால், கோசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டது. 

சமீபத்தில், கோசாலை அருகே, அந்த பசு இறந்து விட்டது.இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்திற்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இருப்பினும், பசுவின் உடலை அகற்ற யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், இறந்த பசுவின் உடலை எடுத்துச் சென்று, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

இது குறித்து, சாஹித்கான் என்பவர் கூறுகையில், ''கோசாலை அருகே, சாலையில் பசு இறந்து கிடந்தது குறித்து, நகராட்சிக்கு தெரிவித்தோம்; பல மணி நேரம் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பசுவின் உடலை நாங்களே எடுத்துச் சென்று, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தோம்,'' என்றார்.

தகவல் உதவி
தின மலர்
15-08-2017

பயன் தராத நோய் வாய் பட்ட பசுக்களை கோசோலையிலிருந்து விரட்டி விட்டுள்ளார்கள். நோய் முற்றி தெருவில் செத்துக் கிடந்துள்ளது. பசுவை தெய்வமாக வணங்கும் கோசோலை நிர்வாகமோ பசு ஆர்வலர்களோ பல மணி நேரமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முடிவில் முஸ்லிம்கள் முன் வந்து அந்த இறந்த உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர். மனித நேயம் எங்கிருக்கிறது என்பது விளங்குகிறதா?





1 comment:

Dr.Anburaj said...

கால்நடைகளைக் காக்க வேண்டும். அதற்காக சாம்பிராணி போட்டு புசை போடுவது தேவையில்லை. இருப்பினும் பசு பாதுகாப்பு சாியான வழியில் போகவில்லை என்பது உண்மைதான்.
கடந்த மாதம் ஒரு கழுதை சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தது. அதை அடக்கம் செய்யும் அளவிற்கு ஆழமான குழி தோண்டும் வயது எனக்கு இல்லை.எனவே நான் ரூ.300 கொடுத்து ஒருவரை அதை அடக்கம் செய்யச் சொன்னேன். நான் என்றும் விளம்பரம் தேடிக் கொள்ளவில்லை.