சுதந்தித்திற்காக பாடுபடாத ஆர்எஸ்எஸ் - சோனியா தாக்கு!
மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தின் மீது
வெறுப்பாலும் பிரிவினையாலும் ஆன மேகங்கள் சூழ முயற்சிக்கின்றன என்று சோனியா காந்தி
பாஜக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில்
இன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு அனுசரிக்கப்பட்டது, இதில் பல
உறுப்பினர்களும் உரையாற்றினர்.
அப்போது பேசிய
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ''மதச்சார்பின்மை
மற்றும் சமத்துவத்தின் மீது வெறுப்பாலும் பிரிவினையாலும் ஆன மேகங்கள் சூழ
முயற்சிக்கின்றன. குறுகிய மனப்பான்மையும், மதவாதக் கொள்கையும் கொண்ட நாடாக இந்தியா மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்று
மதச்சார்பின்மையும், பேச்சுரிமையும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன.
அந்த சுதந்திரத்தை நாம் காப்பாற்ற வேண்டுமானால், அவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.
குறுகிய
மனப்பான்மை கொண்ட குழுக்களை நம்மால் நிச்சயம் அனுமதிக்க முடியாது. அனைவராலும்
நேசிக்கப்படுகிற, சுதந்திர போராட்டத் தியாகிகளால் உருவாக்கப்பட்ட, தாங்கள் நம்புகிற இந்தியாவுக்காக மக்கள் போராட வேண்டும்.
வெள்ளையனே
வெளியேறு இயக்கத்தை எதிர்த்த, நாட்டின்
சுதந்திரத்துக்காக எந்தவொரு பங்களிப்பையுமே அளிக்காத மக்களும், அமைப்புகளும் இருந்திருக்கின்றன என்பதை மக்கள் நிச்சயம்
மறக்கக் கூடாது'' என்றார்.
சோனியா காந்தி
எந்த ஒரு கட்சியின் பெயரையோ, தலைவரையோ குறிப்பிடாவிட்டாலும், பாஜகவை கொள்கைரீதியாக வளர்த்தெடுத்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தை
அவர் சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்து நாளிதழ்
10-08-2017
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் இன்று
நாட்டின் ஓரத்தில் முடங்கிக் கிடங்கினர். வெள்ளையனிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக்
கொடுத்து அவன் இருக்கும் காலங்களிலேயே அரசு பதவிகளை அனுபவித்து சுகம் கண்ட ஆர்எஸ்எஸ்
இன்று நாட்டுப் பற்றைப் பற்றி வாய் கிழிய பேசுகிறது. இதனை தைரியமாக பாராளுமன்றத்தில்
பதிய வைத்த சோனியா காந்தி அவர்களுக்கு பாராட்டுக்கள். சோனியாவும் ராகுலும் முழு மூச்சாக
இந்துத்வா அரசை எதிர்க்க களமிறங்க வேண்டும். அவ்வாறு இறங்கினால் சில நாட்களிலேயே மோடியும்
அமீத்ஷாவும் காணாமல் பொய் விடுவர்.
1 comment:
சோனியாஅம்மையாா் எந்த ஊாில் எந்த நாள்கள்எல்லாம் யாருடன் சுதந்திரம் பெற போராடினாா்கள்.?
கறிச்சட்டி எண்ணெய் சட்டியை சொன்னதாம் நீ கருப்பு என்று.
1973 ல் இந்திய பாக்கிஸ்தான் போாின் போது சிவில் விமானத்தில் பணியாற்றும் விமானிகள் ராணுவம் அழைத்தால் யுத்த பணிக்கு வர தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த தேச பக்தி பழம் தனது கணவா் (சுதந்திர தியாகி) ராஜிவ் காந்தியுடன் இத்தாலி சென்று விட்டாா்.திரு ராஜிவ் காந்தி அவா்கள் இந்தியன் ஏா் லைனின்ஸ் ல் விமானியாகப் பணியாற்றி வந்தாா் என்பது அனைவருக்கும் தொிந்த சங்கதி.
ராஷ்டிாிய சுவயம் சேவக் சங்கம் ஒரு இந்து - இந்திய தன்னாா்வ தொண்டு நிறுவனம். நாட்டு மக்கள் அனைவரும் ஆா்எஸ்எஸ கொள்கையில் வாழ்ந்து வந்தால் வெள்ளைக்காரன் மட்டும் அல்ல அரேபிய காடையா்களும் இந்தியாவில் கால் ஊன்றியிருக்க இயலாது.
ஆா் எஸ எஸ முகாமில் பாடும் பாடலில் ஒரு பகுதி
செல்வத்தை தந்தேன் உடலின் உழைப்பினை தந்தேன்
திறமைகள் அனைத்தும் உனக்கே அா்ப்பணம் செய்தேன்
என்ன தந்தபோதும் மனம் அமைதியற்றதால் குருவே
நின்தன் பாதத்தில் இன்று நானே அா்ப்பணம்.
ஆா் எஸ எஸ இயக்கத்திற்கு எதிராக முட்டாள்தனமான பிரச்சாரம் செய்வதை நிறுத்தங்கள் . தாங்கள் ஒரு குட்டிநாய்.பட்டி.ஆா் எஸ எஸ ஒரு கதிரவன் போன்றது. நீங்கள் ?குரைத்து ஆவதன்ன ??????
Post a Comment