Followers

Friday, August 25, 2017

போலி ஆன்மீகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும்.



ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம், கருசார் மோதியா கிராமத்தில் ஜாட் சீக்கிய குடும்பத்தில் 1967 ஆகஸ்டில் குர்மீத் ராம் ரஹீம் சிங் பிறந்தார். 7-வது வயதிலேயே தேரா சச்சா அமைப்பில் இணைந்தார். 23-வது வயதில் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். 'நான் தெய்வ பிறவி' என்று கூறி பலரை தனது ஆன்மீக வலைக்குள் வீழ்த்தினார். இவரது ஆசிரமத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 400 இளைஞர்களுக்கு இவரது ஆசிரமத்தில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பாலியல் விவகாரத்தில் இவருக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதால்  பஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்கள் இன்று பற்றி எரிகின்றது. ஒரு குற்றவாளியோடு மோடி சமமாக நின்று போஸ் கொடுக்கிறார். பிஜேபி அமைச்சர்கள் இவரது காலில் விழுகின்றனர். இந்துத்வாவின் முழு ஆசியோடு நேற்று வரை வலம் வந்துள்ளார். இவரது கைதுக்காக இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டியுள்ளது. பல கோடி அரசு சொத்துக்கள் நாசம்.


போலி ஆன்மீகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும். இந்து மதத்திலும், சீக்கிய மதத்திலும் ஆன்மீகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் உள்ளது. எனவேதான் மன அமைதி தேடி இத்தனை கோடி பேர் போலி சாமியார்களின் பிடியில் வீழ்கிறார்கள்.

4 comments:

Dr.Anburaj said...

இவரைப்போலவே அரேபியாவில் ஏராளமான போலி மதவாதிகள் இருந்து மேற்படி நாடுகளை சீரழித்துக் கொண்டிருக்கின்றனா்கள். இவனுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும்.ஆஸரமத்தின் சொத்துக்களை அரசு தன்வயப்படுத்தி விற்று கல்வித்துறைக்கு செலவு செய்ய வேண்டும்.

Dr.Anburaj said...

சுவாமி விவேகானந்தரை கற்றுக் கொடுத்தால் இது போன்ற பிரச்சனைகள் ஒருபோதும் வராது.
மக்கள் போலிகளை அடையாளம் காணும் பக்குவம் பயிற்சி வேண்டுமே!

Unknown said...

"போலி மதவாதி குர்மீத் ராம் ரஹீம் சிங்- இவனுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும்" என்று அன்புராஜ் சொல்கிறார்.
நம் நாட்டில் இப்பொழுது நடைமுறையில் உள்ள சட்டத்தால் இவனை தண்டிக்க முடியாது என்று அன்புராஜுக்கு தெரியும் ஆகவே ....
அகில உலகையும் படைத்தது பராமரிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சட்டத்தை செயல்படுத்த சொல்கிறார். அல்லாஹ் அன்புராஜுக்கு நேர் வழி காட்டுவானாக என்று பிரார்த்திப்போம்.

Unknown said...

அன்புராஜ் சொல்கிறார் "சுவாமி விவேகானந்தரை"........
யார் இந்த சுவாமி? சுவாமி என்றால் என்ன? கடவுள் என்று தானே அர்த்தம்.
மனிதனை கடவுளாக்காதே, பிரச்சினையின் ஆரம்பமே அதுதான்.
உன்னை படைத்த இறைவன் யார் என்று முதலில் அறிந்துகொள்.

உன்னை படைத்த இறைவன் யார்? பதில் சொல் .