Followers

Tuesday, August 29, 2017

"மும்பையில் கனமழை வெள்ளம்: -TNTJ

"மும்பையில் கனமழை வெள்ளம்: களப்பணியில் தவ்ஹீத் ஜமாஅத், தாராவி கிளை"

மும்பையில் தற்போது கனமழை கொட்டி வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இதனால் ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கியிருப்பதால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது! சாலைகளில் மரங்கள் விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் பல இடங்களுக்கு தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில்....

ஆல்இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மும்பை மண்டலம் தாராவி கிளை சகோதரர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து உடனடியாக களத்தில் இறங்கினர்

இன்று நீண்ட நேரம் மழை இடைவிடாது பெய்ததால் மாஹீம் ரயில்வே நிலைத்தில் வெளியே பயணத்தில் இருந்த மக்கள் வீடு திரும்ப முடியாத சூழல், அனைத்து கடைகளும் உணவு விடுதிகளும் அடைந்திருந்தது இதனால் பல மணி நேரம் குழந்தைகளும் முதியோர்களும் உட்பட மக்கள் அதிகமானோர் பட்னியில் இருந்தனர்.

தவ்ஹீத் ஜமாஅத் தாராவி கிளை சகோதரர்கள் ஏற்பாட்டில்  அனைத்து உடனடியாக உணவு பொட்டலங்களை தயார் செய்து பல கிலோமீட்டர் பயணம் செய்து வெள்ளத்தால் சிக்கிகொண்ட மாஹிம் நிலையத்தில் சிக்கி கொண்ட  மக்களுக்கு தண்ணீர், பிஸ்கட், உணவு போன்றவைகளை முதற்கட்டமாக வழங்கி பொதுமக்களின் பசியை தீர்த்தனர்.

இதில் பாதுகாப்பு நின்ற காவலர்களுக்கு கூட உணவு இல்லாமல் துன்பபட்டனர். அவர்களுக்கும் தாராவி கிளை தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் உணவு வழங்கியதும் மிக பெரிய தெம்புடன் நம் சகோதரர்களை கட்டி தழுவி நன்றியை தெரிவித்தனர்.

புகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்

மனிதரிடம் காட்டும் இரக்கமும் அன்பும் ஏக இறைவனுக்கு மிக பிடித்தமானது என்று இஸ்லாத்தின் அடிப்படையான மனிதநேயத்தை மராட்டிய மண்ணில் மழைவெள்ளத்தால் மக்கள் இந்த உணவு ஊட்டுதல் மூலம் புரிந்திருப்பார்கள்.

ஏனெனில்...

"இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்" :-  நபி நாயகம் (ஸல்)

மேலும் கனமழை தொடராமலும் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்யுங்கள்





3 comments:

Dr.Anburaj said...


இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்" :- நபி நாயகம் (ஸல்)


முஹம்மது என்ற அரேபிய ஆட்சியாளரை பின்பற்றாத மக்களை காபீா் என்று பட்டம் கட்டி காலி செய்யும் இயக்கமே இசுலாம் என்பது.

Unknown said...

கப்ரில் நடக்கும் வேதனை குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்: –

“அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து,
‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத் صلى الله عليه وسلم குறித்துக் கேட்பர்.
அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்…
நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.” (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ , ஆதாரம் : புகாரி)

Unknown said...

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பொன்மொழிகள்
தொழுகையை விட்டவனின் நிலை:
நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: புரைதா (ரழி)
நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா