Followers

Saturday, August 12, 2017

ஹாஜிகள் குழும தொடங்கி விட்டனர்!

உலகம் முழுவதிலுமிருந்து ஹாஜிகள் குழும தொடங்கி விட்டனர்!

உலகம் முழுவதிலும் இருந்து 140 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் தங்களின் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஜெத்தா ஏர்போர்டில் குழுமத் தொடங்கி விட்டனர். 1000 க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் இமிக்ரேஷன் சரி செய்ய பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


அனைவருக்கும் ஒரே உடை: ஒரே வணக்க வழிபாடு: கருப்பன், வெள்ளையன், அமெரிக்கன், ஐரோப்பியன், ஆப்ரிக்கன் என்ற பாகுபாடு இல்லாமல் 'இறைவா! உனக்கு நாங்கள் அடிபணிந்தோம்' என்று சப்தமாக கூறிக் கொண்டு இதோ வந்து விட்டனர் ஹாஜிகள். இந்த ஹாஜிகளின் எண்ணத்தை ஏக இறைவன் பரிபூரணமாக்குவானாக! எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் தங்களின் கடமையை நிறைவேற்ற இறைவன் இவர்களுக்கு உதவி புரிவானாக!


4 comments:

Dr.Anburaj said...


சுற்றி வந்து வணங்குவது இந்து பண்பாடு. தீவிர சமய அனுஷ்டான வேளையில் சைவ உணவு உண்ண வேண்டும் உடல்உறவு தடை செய்வது இந்து பண்பாடு.அஸ்வத் என்ற புனிதமான கருப்பு கல்லை - புனிதமானது என்பது இநது பண்பாடு.முத்தமிடுவது இநது பண்பாடு. பல நடவடிக்கைகள் இந்து பண்பாடாக இருப்து ஆச்சாியமாக உள்ளது.

Dr.Anburaj said...

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது நாடிகளில் நுழைவது கடினம்.

எனவே, பிராணாயாமம் பயில்வதற்கு முன்னர் நாடிகள் சுத்தப்படுத்தப் பட வேண்டும். நாடி சக்தி பிராணாயாமம் பயில்வதற்கு அடிப்படை ஆகும்.

நாடிகளை இரண்டு வழிகளில் சுத்தப்படுத்த முடியும். அவையாவன; சாமனு, நிர்மனு, சாமனு என்பது, பீஜ மந்திரத்தினால் மூளையைச் சுத்தப்படுத்துதல். நிர்மனு என்பது உடலை சுத்தப்படுத்துதல்.

ஒரு தியான நிலையிலோ, சுலபமான முறையிலோ அமர்ந்து முதுகெலும்பை நேராக நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இடது கை முழங்காலிலும், வலது கை மூக்கின் மேலும் இருக்க வேண்டும். கட்டை விரல் மூக்கின் வலது புறமும், நான்காவது ஐந்தாவது விரல்கள் இடது புறமும் இருக்க வேண்டும். சுட்டு விரலையும், நாடி விரலையும் மடக்கிக் கொள்ள வேண்டும். மூக்கை அழுத்தித் திருப்பாமல், எலும்புப் பகுதியை மட்டும் அழுத்திக் கொண்டு சுவாசத்தில் ஈடுபட வேண்டும்.

முதலில் இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பின்னர் அதே நாசி வழியாக நீண்ட உள்மூச்சை இழுக்க வேண்டும். அப்போது வலது நாசி துவாரம் மூடப்பட்டிருக்க வேண்டும்.

பின்னர் இடது நாசியை மூடிக் கொண்டு வலது நாசித் துவாரம் வழியே மூச்சை வெளியிட வேண்டும். பின்னர் வலது நாசி வழியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின்னர் நாசி வழியே மூச்சை வெளியிட வேண்டும். இது ஒரு தடவை என கணக்கிட வேண்டும்.

இந்த சுவாச முறையில் உள்மூச்சு வெளிமூச்சு இரண்டும் மிகவும் மெதுவாக நடக்க வேண்டும். சப்தம் எதுவும் உண்டாக்காமல் பயிற்சி செய்ய வேண்டும். உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. அதிகாலை அல்லது பின் மாலை நேரம் இதற்கு ஏற்ற காலமாகும்.

ஏனெனில், சூரியனிடமிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்கள் உடலில் உள்ள ஆஷ்துமா, ஜலதோஷம், இருமல் இவற்றை விரட்டுகிறது. வைட்டமின் 'டி' சூரியகதிர்களில் உள்ள அல்ட்ராவயலட் கதிரில் உள்ளது.

நுரையீரல், இதயம், வயிறு ஆகியவை சுத்தமடையும். நுரையீரலின் சுவாசிக்கும் தன்மை அதிகப்படும். சுவாசம் சீரடையும். தியானத்திற்கு முன் நாடிசுத்தி செய்வதால், தியானம் எளிதில் கைகூடும்.

நன்றி : பானுகுமார் தமிழ் தாமரை

Dr.Anburaj said...

மற்ற மதங்களை விட இந்து மதம் ஏன் சிறந்தது
1.நமது மதம் தத்துவங்களை ஆதாரமாக கொண்டது. எந்த மகானையோ மனிதர்களையோ ஆதாரமாக கொள்ளவில்லை .பிற மதங்கள் அந்த மதத்தை தோற்றுவித்த மனிதர்களை ஆதாரமாக கொண்டது

2.நமது மதத்தின் முடிவுகள் இன்றைய விஞ்ஞானிகளின் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு ஒத்து இருக்கிறது. –

உதாரணமாக 1.சூன்யத்திலிருந்து எந்தபொருளையும் படைக்க முடியாது, சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை படைக்க முடியாது.2. அனைத்தும் வட்டம்போல உள்ளது. முட்டையிலிருந்து குஞ்சு, குஞ்சுவிலிருந்து முட்டை இதே போல் சுழற்சி. பிரபஞ்சமும் தோற்றம்,ஒடுக்கம், தோற்றம் ஒடுக்கம் என்று தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது 3. ஒரு சக்தி தான் இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சூன்யத்திலிருந்து புதிதாக சக்தியை உருவாக்க முடியாது. 4. ஒரு உயிர்தான் இன்னொரு உயிராக பரிணமிக்கிறது. ஓர் அறிவு,ஈர் அறிவு என்று அறிவு படிப்படியாக விரிந்து உயர்நிலையாக மனிதனாக பரிணமிக்கிறது. 5. இந்த உலகில் எப்போதும் இரண்டு சக்திகள் உள்ளன கவர்தல்சக்தி மற்றும் விலக்கும் சக்தி 6. இந்த உலகிற்கு எது தேவையோ அதை இந்த உலகமே உருவாக்கிக்கொள்ளும் படைப்பாற்றல். 7. தொடர்மாற்றம் பற்றிய கருத்து ,இன்று நமது உடலில் உள்ள அணுக்கள் நாளை இன்னொருவரின் உடலுக்குள் செல்கிறது, இவ்வாறு உடல் தொடர்ந்து மாறுகிறது. அதே போல் மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஆனால் நாம் மாறுவதில்லை 8. உடலும்,மனமும் ஜடப்பொருள் ,உணர்வு இல்லாதது. ஆனால் இந்த இரண்டையும் இயக்குவது உணர்வுப்பொருள். 9. அனைவரின் மனமும் பிரபஞ்ச மனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன .–

இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். விஞ்ஞானம் நம்மிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளன.–

3. நமது மதம் வேதங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. அவைகளின் மொழி சமஸ்கிருதம் இல்லை. அவை வேதமொழி. வேதங்கள் இதுவரை எழுதப்படவில்லை. இறைவனின் வார்த்தைகளே வேதம். …இது பற்றி தனியாக விவாதிக்கலாம்…இந்த கருத்து நமது மதத்திற்கு மட்டுமே உரியது.–

4. நமது மதம் , இதுவரை உலகில் தோற்றிய அனைத்து மதங்களையும், இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் மகாசமுத்திரம் போல உள்ளது. அதாவது இதில் இல்லாத எந்த புதிய கருத்துக்களையும் வேறு மதத்தில் நீங்கள் காணமுடியாது. –

5. நமது மதத்தில் மட்டுமே மனிதன் இறைவனாக மாற முடியும் என்ற கருத்து உள்ளது. அவ்வாறு இறைவனுடன் ஒன்று கலக்கும் முக்தி நிலை பற்றி கருத்து இங்கு மட்டுமே உள்ளது.–

6.உலகின் இதுவரை கண்டுபிடிக்கப்ட்ட மிக உயர்ந்த தத்துவமான அத்வைத தத்துவம் வேறு மதங்களில் இல்லை.

7.நமது மதம், கடவுள் நன்மை,தீமை இரண்டையும் கடந்தவர் என்கிறது. மற்ற மதங்களில் கடவுள் நல்லவர் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. தீமையை அவரால் தடுக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சாத்தான் என்பது கடவுளுக்கு கட்டுப்படாத தன்னிச்சை பெற்ற வேறு ஒரு சக்தி–

8.நமது மதத்தில், மறுபிறப்பு பற்றிய கருத்து உள்ளது. ஒரு உயிர் பரிணாமம் அடைந்து வேறு உயிர்களாக மாறுவதை ஏற்றுக்கொள்கிறது.இது விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்துவருகிறது. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிமணமிப்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.ஆனால் அதை மறுபிறப்பு என்று சொன்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை…இதை பற்றிய தனியாக விவாதிக்கலாம்…..–

9. நமது மதத்தின் கடவுள், அனைத்து இனங்களின், அனைத்து உயிர்களின் கடவுள். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலக்குகளுக்கும் அவரே கடவுள்.அவர் மனிதர்களை மட்டும் நேசிப்பவரல்ல, இந்த உலகில் உள்ள அனைவரையும் நேசிப்பவர். அவர் நல்லவர்களை நேசிக்கிறார்,தீயவர்களை வெறுக்கிறார் என்று கருத்து நமது மதத்தில் இல்லை. அவர் அனைவரையும் சமமாக நேசிக்கிறார்.–

10.நமது மதத்தில் கர்மா தியரி இருக்கிறது. அதாவது ஒரு செயல், அதற்கு சமமான எதிர் செயலை உருவாக்கும். ஒருவர் துன்படுவதற்கு காரணம், அவர் அதற்கு முன்பு செய்த தீய செயல். இனி ஒருவர் இன்பமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இனிமேல் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். இவ்வாறு மனிதனின் இன்பத்திற்கும்,துன்பத்திற்கும் மனிதனே காரணமாகிறான்.

Dr.Anburaj said...

11. பிறமதங்களில் மனிதன் சூன்யத்திலிருந்து தோன்றினான் என்று சொல்கிறது. நமது மதம் மனிதன் இறைவனிலிருந்து தோன்றினான்,இறைவனில் வாழ்கிறான்,இறைவனில் ஒடுங்கி முடிவில் இறைவனாகிறான் என்கிறது.–

12. எல்லையற்ற காலம் பற்றிய கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. அதாவது இந்த பிரபஞ்சம் எல்லையற்ற காலம் வரை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். ஒருநாள் திடீரென தோன்றியது .ஒரு நாள் திடீரென அழிந்துவிடும் என்ற கருத்து இல்லை., நாம் காலத்தை கடந்து வாழ்ந்துகொண்டே இருப்போம். –

13.ஆன்மாவுக்கு உருவம் இல்லை ,அதே போல் இறைவனுக்கும் உருவம் இல்லை என்ற கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மதங்களின் கடவுள் ஏதோ ஒரு உருவத்தை உடையவராகவே இருக்கிறார். உருவங்களுக்கு அழிவு உண்டு என்று நமது மதமும்,விஞ்ஞானமும் கூறுகிறது.அதன் படி பார்த்தால் மற்ற மதங்களின் இறைவன் ஒரு நாள் அழிந்துவிடுவார்.–

14. நமது மதத்தில் மனிதன் இந்த வாழ்க்கையிலேயே முக்தியடைய முடியும் என்று சொல்கிறது. மற்ற மதங்களில் மனிதன் இறந்த பிறகு கல்லறையில்,கடைசி நாள்வரும் வரை காத்திருக்க வேண்டும்.