Followers

Saturday, August 26, 2017

தாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று சொன்னது பொய்!

தாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று சொன்னது பொய்!

ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

ஆக்ராவில், 'தேஜோ மஹாலய' என்ற சிவன் கோவில் இருந்தது. இந்த கோவிலைத் தான், மொகலாய மன்னர் ஷாஜகான், கல்லறையாக மாற்றி, தாஜ் மஹால் கட்டினார்.அங்கு, சிவன் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள், அடையாளங்கள் இப்போதும் உள்ளன. அதனால், தாஜ் மஹாலுக்குள், ஹிந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மத்திய கலாசாரத்துறை அமைச்சகம், ' தாஜ்மஹாலில், சிவன் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை,' என, லோக்சபாவில், 2015ல் தெரிவித்தது. இந்நிலையில், ஆக்ரா நீதிமன்றத்தில், தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு:

தாஜ்மஹால், இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது என்றாலும், அங்கு, மதம் தொடர்பான எந்த நிகழ்ச்சியும், எப்போதும் நடந்ததில்லை. வரலாற்று ஆய்வின்படியும், ஆவணங்கள் ஆய்வின்படியும், யமுனை நதிக்கரையில், சிவன் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

சிவன் கோவில் தான், தாஜ்மஹாலாக மாற்றி கட்டப்பட்டுள்ளதாக, மனுதாரர்கள், எந்த ஆதாரமும் இல்லாமல் மனு தாக்கல் செய்துள்ளனர். அதனால், அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

27-08-2017


12 comments:

Dr.Anburaj said...


இந்தியாவில் அரேபிய மதவாதிகள் ஜனத்தொகை 20 கோடிக்கும் மேல். இந்தியாவை அழிக்க எந்த நேரமும் தயாராக மேற்படி மக்கள் இருக்கின்றாா்கள். இந்த நிலைமையில் தாஜ்மகால் ஒரு இந்து ஆலயம் அல்லது அரண்மனை என்றால் 800 வருடங்கள் அடிமைகளாக இருந்த இந்துக்களே சிந்திக்க மாட்டாா்கள்.ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். ஆகவே பழைய கல்லறைகளைத் தோண்டி என்ன பயன் என்ற ஆற்றாமையில் சில அறிக்கைகளஅமைந்துள்ளன. இருப்பினும் தாஜ மகால் இந்து கோவில் அல்லது அரண்மனை என்பதற்கு சில விளக்கங்களை மட்டும் தொிந்து கொள்வோம்.ஏற்பதும் மறுப்பதும் வாசகா்கள் முடிவு.
------------------------------------------------------------------------------------
தன் வாழ் நாளெல்லாம் அபினுக்கும், மதுவுக்கும் அடிமையானவனாக, பெரும் பெண் பித்தனாக, குரூரம் நிரம்பிய இரக்கமற்ற கொலைகாரனாக, மதவெறியனாக இருந்த ஷாஜஹான் “தாஜ் மஹால்” என்று அழைக்கப்படுகிற ஒரு உன்னதக் கட்டிடத்தைக் கட்டியிருக்க வாய்ப்பே இல்லை. குரூரம் நிறைந்த கொலைகாரனுக்குக் கலை மனம் இருக்க வாய்ப்பிருக்கிறதா என்ன? அந்தப்புரத்தில் ஆயிரக்கணக்கான பெண்களுடன் நாள் முழுக்க அடைந்து கிடந்த ஒரு மனிதன் தன்னுடைய பல மனைவிகளில் ஒரே ஒருத்திக்காக, அவள் இறந்த துக்கத்தில் அவள் நினைவாக தாஜ் மஹாலைக் கட்டிய கதை நம்பும்படியாகவா இருக்கிறது? அவ்வளவு காதல் இருக்கிற ஒரு மனிதன் மும்தாஜ் இறந்தபிறகு பிற பெண்களைத் திருமணம் செய்து கொள்ளாமலா இருந்தார்?

மும்தாஜை ஷாஜஹான் திருமணம் செய்து கொண்ட போது மும்தாஜுக்கு 18 வயது. திருமணம் செய்து கொண்ட வருடத்திலிருந்து மும்தாஜ் இறக்கும் வரை 14 பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அதாகப்பட்டது

மும்தாஜ் வருடமெல்லாம் கர்ப்பிணியாகவே இருந்தார்.

இறுதியில் 14வது குழந்தைப்பிறப்பின்போது மும்தாஜ் இறந்து போனார். மனைவி மீது காதலில் ஊறித் திளைக்கிற எந்தக் கணவனாவது இப்படித் தன் மனைவியை பிள்ளை பெறும் மெஷினாக நடத்திக் கொல்வானா? கண்ணில் கண்ட எந்தப் பெண்களையும் ஷாஜஹான் விட்டதில்லை. அது அவருடைய மந்திரிகளின் மனைவியானாலும் சரி; அவரது சொந்த மகள்களானாலும் சரி. அப்படியாகப்பட்ட ஷாஜஹானா மும்தாஜின் இறப்பைத் தாங்காமல் கதறி அழுதுகொண்டே தாஜ்மஹாலைக் கட்டியதாகச் சொல்வது எப்பேற்பட்ட கட்டுக்கதை? சொந்த வரலாற்றில் பொய்களையும், புனைகதைகளையும் மட்டுமே எழுதிக் கொண்ட மொகலாய அரசர்கள் சொல்வதனை மட்டுமே நாம் நம்ப வேண்டும் எனச் சொல்கிறவனின் மூளையை பரிசோதிக்க வேண்டும்.
.... தொடரும்.2

Dr.Anburaj said...

பக்கம்-2
தான் அரசனாக வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய உறவினர்களை எல்லாம் கொலை செய்தவர் ஷாஜஹான். அவருடைய தந்தையான ஜஹாங்கிர், ஷாஜஹானை முற்றிலும் வெறுத்து ஒதுக்கியவர். ஜஹாங்கிர் தன்னுடைய வரலாற்றில் எங்கெல்லாம் ஷாஜஹானுடைய பெயர் வருகிறதோ அங்கெல்லாம் “கேடு கெட்டவன்” (The wretched) என்றே எழுதவேண்டும் என்று உத்தரவிட்டு அதன்படியே எழுதியும் வைத்தார். ஜஹாங்கிர் இறந்த பிறகு ஷாஜஹான் பணம் கொடுத்து ஆட்களை அமர்த்தி “கேடு கெட்டவன்” என்கிற வார்த்தைய “இளவரசர்” என்று திருத்தியதும் பதிவாகித்தானே இருக்கிறது? இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

ஷாஜஹான் ஒருபோது தான் தாஜ்மஹாலைக் கட்டியதாக எங்குமே எழுதி வைக்கவில்லை. ஏன்?

தாஜ்மஹாலிலேயே கூட ஒரு சிறிய கல்வெட்டு கூடக் கிடையாது. கட்டியிருந்தால்தானே கல்வெட்டு வைக்க முடியும்?

ஷாஜஹானிடம் காசு வாங்கித் தின்ற வரலாற்றுக் குறிப்பெழுதும் கூட்டம்தான் ஷாஜஹன் தாஜ்மஹாலைக் கட்டியதாக பொய்யாக எழுதியது. அதனையே நாம் இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கிறோம். Time has come to rethink about that.


ஷாஜஹான் அரசனான வரலாற்றையும் கொஞ்சம் பார்ப்போமே.

ஜஹாங்கிரின் மூத்த மகனான குஸ்ரூதான் பட்டத்திற்குரிய அடுத்த வாரிசு. ஆனால் ஜஹாங்கிர் இறக்கும்வரைக்கும் காத்திருக்க குஸ்ரூவுக்குப் பொறுமையில்லாததால்

ஜஹாங்கிருக்கு-ஆம் தந்தைக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டு
தில்லியை நோக்கி வந்தார். கோபமுற்ற ஜஹாங்கிர் குஸ்ரூவை போர்க்களத்தில் தோற்கடித்து அவரைக் கைதியாகப் பிடிக்கிறார். ஜஹாங்கிர் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் குஸ்ரூவின் கண்களைப் பொசுக்கிக் குருடாக்கி விட்டார்.

முகலாய பாணி அது. குரூரங்களுக்குக் குறைவில்லை. அது சொந்த மகனாக இருந்தாலும் சரி; பெற்ற அப்பனாக இருந்தாலும் சரி.

ஜஹாங்கிர் குருடான மகனைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டார். இருந்தாலும் அவருக்குத் துக்கம் தாளவில்லை. இன்னொரு மகனான ஷாஜஹானின் மீதும் அவருக்குக் கடுமையான கசப்பு இருந்ததால் குஸ்ரூவின் மகனான சுல்தான் போலக்கி (Sultan Bolaki) தனக்குப் பின் டில்லி அரியணை ஏற வேண்டும் என முடிவெடுத்தார். இது அறிந்த ஷாஜஹான் மிகுந்த கோபமடைந்தார். இது நடந்த சமயம் ஷாஜஹான் தக்காணப்பகுதியை ஆண்டு கொண்டிருந்தார். ஜஹாங்கிருடன் நேரடியாக மோதி டில்லியைக் கைப்பற்றுவது கடினமானதால் வழக்கமான தன் தந்திரங்களைப் பயன்படுத்த முடிவெடுத்த ஷாஜஹான் டெல்லிக்குப் போய் ஜஹாங்கிரிடம் நைச்சியமாக நடந்து கொண்டார்.

மகன் திருந்திவிட்டான் என்று ஜஹாங்கிர் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் பார்வையற்ற அண்ணன் குஸ்ரூவைத் தக்காணத்திற்கு அழைத்துச் சென்று தான் நன்கு கவனித்துக் கொள்வதாகச் சொல்கிறார். முதுமையிலிருந்த ஜஹாங்கிர் அதுவும் நல்ல யோசனைதான் என்று குஸ்ரூவை ஷாஜஹானுடன் தக்காணத்துக்கு அனுப்பி வைக்கிறார்.

ஷாஜஹான் தன்னுடன் தக்காணத்திற்கு வந்த குஸ்ரூவை விஷம் வைத்துக் கொன்றுவிட்டார். ( என் குறிப்பு இசுலாமிய அரேபிய சகோதரத்துவம் )

கோபமடைந்த ஜஹாங்கிர் ஷாஜஹானுக்குப் பாடம் புகட்டுவதற்குப் படையெடுத்து வரும் வழியில் இறந்துவிட்டார்

Dr.Anburaj said...

பக்கம் -3
மரணப்படுக்கையில் ஜஹாங்கிர் அவரது படைத்தலைவனும், மந்திரியுமான ஆஸஃப்கானிடம் குஸ்ரூவின் மகன் சுல்தான் போலக்கியை அரியாசனத்தில் அமர்த்தவும், சிறுவனான அவனுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளவும் வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறார். அப்படியே செய்வதாக தன்னுடைய தொடையில் தட்டி சத்தியம் செய்கிறார் ஆஸஃப்கான். அன்றைய நம்பிக்கைகளின்படி அந்தச் சத்தியம் ஆஸஃப்கானின் தொடைக்கு மட்டுமே கட்டுப்பட்டது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஆஸ்ஃப்கான், ஷாஜஹானின் மாமனார். அவருடைய மூத்தமகளை ஷாஜஹான் திருமணம் செய்திருந்தார். எனவே மருமகனை அரியணை ஏற்ற மாமனார் மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டார்.

ஜஹாங்கிரின் மரணத்தால் ஸ்தம்பித்த நிர்வாகத்தை சரியாக்குவதற்கு சிறுவனான போலக்கி அரசராக அறிவிக்கப்பட்டார். போலக்கியைக் கொல்வதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. அதனை அறிந்த போலக்கியின் மாமன் மகன்கள்

(கிறிஸ்தவராக மதம் மாறிய சுல்தான் தானியேலின் மகன்கள்) போலக்கியை எச்சரிக்கிறார்கள்.

அறியாத சிறுவனான போலக்கி அது உண்மையா என்று ஆஸஃப்கானிடம் கேட்க, அதனை மறுக்கும் ஆஸஃப்கான் போலக்கியின் மகன்களைக் கொலை செய்துவிட்டு உடனடியாக தில்லிக்கு வரும்படி ஷாஜஹானுக்கு ரகசியமாக செய்தி அனுப்புகிறார்.

நேரடியாக வந்தால் முகலாயப்படைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் ஷாஜஹான் செய்த தந்திரம் சினிமாக் கதைக்கு ஒப்பானது. ஷாஜஹான் இறந்துவிட்டதாகவும் அவரது பிணம் தில்லிக்கு எடுத்துக் கொண்டுவரப்படுவதாகவும் ஒரு செய்தியைப் பரப்புகிறார். ஆஸஃப்கான் சிறுவன் போலக்கியிடம் அது உண்மையான செய்திதான் என்று கூறி அவனை நம்ப வைக்கிறார். இறந்தது அரச குலத்தவரானதால் பாதுஷாவான போலக்கி கோட்டைக்கு வெளியே போய் ஷாஜஹானின் பிணத்தை சகல மரியாதையுடன் பெற்றுக் கொண்டு அரண்மனைக்கு வரவேண்டும் என்று அவனை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

ஒரு சவப்பெட்டிக்குள் ஒளிந்து படுத்துக் கொண்டு வரும் ஷாஜஹான், போலக்கியின் முகலாயப் படைகள் அருகில் வந்ததும் சவப்பெட்டியிலிருந்து சிரித்துக் கொண்டே வெளியே வருகிறார். ஏற்கனவே செய்திருந்த ஏற்பாடுகளின்படி முகலாயப்படைத் தலைவர்கள் ஷாஜஹான அந்த இடத்திலேயே தில்லி பாதுஷாவாக அறிவிக்கிறார்கள். இது அறிந்த சிறுவன் போலக்கி அங்கிருந்து தப்பி ஓடுகிறான். தனக்கு எதிரானவர்களை தயக்கமின்றிக் கொலை செய்பவரான ஷாஜஹான் அவனைத் தப்பிச் செல்லவிடுகிறார். நாடெங்கும் பிச்சைக்காரனாகத் திரிந்த போலக்கி பாரசீகத்திற்குச் சென்று பாரசீக அரசர் ஷா ஷஃப்வியிடம் அடைக்கலமாகிறார்.

தொடர்ந்து அரியணை ஏறிய ஷாஜஹானால் அவரது பெரும்பாலான உறவினர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள்.

Dr.Anburaj said...

பக்கம்-4இந்தியாவில் முகலாய ஆட்சியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற எந்தக் கட்டிடமும் முகலாயர்களால் கட்டப்படவேயில்லை என்கிறார் வரலாற்றாசிரியர் K.M. Elliot. அவரது The History of India as told by its Historians என்கிற புத்தகத்தில் The so called Mogul rule is the biggest fraud of Indian history என்கிறார்.

நாம் முகலாயர்களால் கட்டப்பட்டது என நம்பிக் கொண்டிருக்கும் அத்தனை கட்டிடங்களும் அது தாஜ்மஹாலாக இருந்தாலும், தில்லி செங்கோட்டையாக இருந்தாலும், ஜூம்மா மசூதியானாலும், குதுப்மினாரானாலும் அல்லது எந்த முஸ்லிம்களால் கட்டப்பட்டவை எனப்படும் கோட்டைகள், மசூதிகளானாலும் சரி. அவை ஹிந்து அரசர்களால் கட்டப்பட்டவையே என ஆதாரங்களுடன் எடுத்து விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

முகலாயர்கள் ஹிந்து அரசர்களால் கட்டப்பட அரண்மனைகள் அல்லது ஆலயங்களின் மேல்பகுதியில் மட்டுமே மாற்றங்களைச் செய்து அதனைத் தாங்கள் கட்டியதாகக் காட்டிக் கொண்டார்கள். உதாரணமாக தாஜ்மஹாலில் செதுக்கப்பட்டிருக்கும் குரானிய எழுத்துக்கள்.

பொ.யு. பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் உண்மையில் ராஜபுத்திர அரசரான ஜெய்சிங்கிற்குச் சொந்தமான “தேஜோ மஹாலயா” என்றழைக்கப்ட்டதொரு அரண்மனை (அதனை சிவன் கோவில் என்றும் கூறுவதுண்டு). ராஜா ஜெய்சிங், ஷாஜஹானுக்கு அடிபணிந்து கப்பம் கட்டி வந்தவர். ஷாஜஹான் அவரது மனைவி மும்தாஜின் மரணத்தை சாக்காக வைத்து அவரிடமிருந்து அந்த அரண்மனையை பிடுங்கிக் கொண்டார்.

ஷாஜஹானின் “காதல்” மனைவியான மும்தாஜ் 1628-ஆம் வருடம் பாகல்பூரில் இறந்து அங்கேயே புதைக்கப்பட்டார். ஆறுமாதம் கழித்து அதனைத் தோண்டியெடுத்து “தாஜ் மஹால்” என்றழைக்கப்படுகிற அரண்மனையின் நிலவறையில் மீண்டும் புதைக்கப்பட்டார். அப்படியானால் தாஜ்மஹால் ஆறே மாதத்தில் கட்டிமுடிக்கப்பட்ட ஒன்றா என்ன? ஆனால் அதன் பின்னர் கிட்டத்தட்ட 22 வருட காலம் தாஜ்மஹால் மூடிக்கிடந்தது. ஷாஜஹான் அதில் இன்றைக்கு நாம் காண்கிற மாற்றங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தார்.

தாஜ்மஹால் 1661-ஆம் வருடம் திறந்து வைக்கப்பட்டதாகக் கூறுவது மற்றொரு பொய். ஔரங்கஸிப் 1658-ஆம் வருடமே ஷாஜஹானை சிறையிலடைத்து விட்டார் என்பதனைக் கவனிக்கையில் அது ஒரு பித்தலாட்டம் என்று தெரியவரும். மேலும் ஷாஜஹான் ஒரு வடிகட்டின கஞ்சன். கிட்டத்தட்ட நூறு அறைகளும், சுரங்க வழிகளும் கொண்ட தாஜ்மஹாலைக் கட்டி முடிக்க அன்றைக்கே பல கோடி ரூபாய்கள் வேண்டும். அத்தனை பணத்தை செலவு செய்து ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜிற்காக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது பெரும் புளுகு.

அவரது அரண்மனை அந்தப்புரத்தில் ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள்.

ஷாஜஹானுக்கும் அவரது மகளுக்கும் இருந்த தகாத உறவு நிரூபிக்கப்பட்ட ஒன்று.

அப்படியாகப்பட்ட மனிதர் 25 வருடங்களாக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது

அண்டப்புளுகுதான். ஆனால் அப்படித்தான் நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்.

ஷாஜஹான் ஒன்றும் பணக்கார அரசருமல்ல. அவரது ஆட்சி அமைதியானதாகவும் இருக்கவில்லை. ஷாஜஹானின் 30 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் 48 போர்கள் நடந்தன. தாஜ்மஹாலில் நடந்த குரானிய வசனங்களைப் பொருத்தும் வேலைகளைக் கண்ட டாவர்னியர் என்கிற ஃப்ரெஞ்சுக்காரர் சாதாரண சாரம் கட்டுவதற்கு மரம் இல்லாமல் செங்கற்களைக் கொண்டு சாரம் கட்டியிருந்ததாகக் கூறுகிறார். இவ்வளவு செலவு செய்து தாஜ்மஹாலைக் கட்டுகிற ஷாஜஹானுக்கு மரம் வாங்கக் கூடக் காசில்லை என்பது ஆச்சரியம்தான்.

இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்ட எத்தனை திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்? எவ்வளவு வரைபடங்கள் வரைந்திருக்கப்பட வேண்டும்? அப்படி எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை.

ஷாஜஹான் தும்மினால் எழுதி வைக்கும் அவரது வரலாற்றாசிரியர்கள் ஒருவர் கூட இந்தக் கட்டிடம் கட்ட நிகழ்ந்த திட்டமிடல்களை, செலவுகளைக் குறித்து ஒருவார்த்தை கூட எழுதவில்லை. அப்படி எதுவும் நடந்திருந்தால்தானே எழுதி வைப்பார்கள்.

இன்றைக்கு இஸ்லாமிய கட்டிடக் கலையாக அறியப்படுகிற கும்மட்டங்கள் யாவும் ஹிந்துக் கட்டிடக்கலையே என்று ஆராய்ந்து முடிவிற்குக் வந்திருக்கிறார்கள். அவர்கள் அடைந்திருக்கும் முடிவான கருத்து…. ஹிந்துக்களின் கட்டிடக்கலையை கடத்தி தன்னுடையதாக பொதுவில் தெரிவித்துவிட்டார்கள் என்பது அவர்களின் இறுதியான முடிவு. (They, the mugals and muslims in general, hijacked the hindu architecture and announced it as their own)

Dr.Anburaj said...

இஸ்லாம் பரவத் துவங்கிய நாளிலிருந்து கொலையும், கொள்ளையும் மட்டுமே நடத்தி வந்தவர்களுக்கு தங்களுக்கென ஒரு கட்டிட பாணியை உருவாக்கிக் கொள்ள எங்கே நேரமிருக்கும்? தாங்கள் வென்ற இடங்களில் இருந்த அழகிய பிரமாண்டமான இந்து கட்டிடங்களை தங்களுடையதாக அறிவித்துக் கொண்டார்கள்.

படையெடுத்து வந்த பெரும்பாலான முஸ்லிம்கள் படிப்பறிவில்லாதவர்கள். கொள்ளைக்காரா்கள்தான்.தாஜ்மஹாலைப் போன்றதொரு மாபெரும் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கற்பனையோ அதற்கான கணித அறிவோ இல்லதவர்கள்.தகுதியோ கிஞ்சித்தும் இல்லாதவா்கள்.

ஆனால் இந்திய அரசர்கள் காலம்காலமாக பெரும் அரண்மனைகளையும், பேராலயங்களையும் கட்டியவர்கள். அவர்களிடம் பணிபுரிந்த ஹிந்து கட்டிடக் கலைஞர்கள் பெரும் திறமைசாலிகள்.

இந்தியாவிற்கு வந்தேறிய மொகலாயர்களிடம் அவர்களைப் போன்றவர்கள் அறவே இல்லை. இன்றைக்கு இருக்கும் முஸ்லிம் கட்டிடக் கலைஞர்கள் கூட முன்னால் ஹிந்துக்கள்தான். ஷாஜஹானால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் அவர்கள்.

இந்திய வரலாறெங்கும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட சுவாரசியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரம்பத்தில் நான் இதையெல்லாம் நம்பவில்லை. ஆனால் இதன் பின்னணியில் செய்யப்பட்டிருக்கும் ஆராய்ச்சிகள் சாதாரணமானவையல்ல என்று உணர்ந்த பின்னர் மேலும், மேலும் படிக்கத் தூண்டியது.ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் மீது படையெடுத்த எல்லா இஸ்லாமிய வெளிநாட்டவர்களும் இந்தியாவின் மீதும் அதன் மக்களின் மீதும் காதல் கொண்டவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை. அது கோரி முகமதாகட்டும், கஜினி முகமதாகட்டும், பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் என அத்தனை பேர்களின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பது மட்டும்தான். அப்படி அவர்கள் இருந்ததாக இந்தியப் பாடப்புத்தகங்களில் எழுதி வைத்து நம்மை மழுங்கடித்து வைத்திருக்கிறார்கள் என்பதனை நாம் உணர வேண்டும். அக்பர், ஷாஜஹான் போன்றவர்கள் இந்தியர்கள் மீது அன்பு செலுத்தினார்கள். அவர்கள் மண்ணின் மைந்தர்களான ஹிந்துக்களுக்கு நன்மைகள் செய்தார்கள் என்பதெல்லாம் அப்பட்டமான கட்டுக்கதைகளே. அத்தனை முகலாய அரசர்களும் மத அடிப்படைவாத எண்ணம் கொண்ட, போதைக்கு அடிமையான, கொள்ளைக்கார, கொலைகார, பெண் பித்தர்கள். பெருமளவு பணம் செலவு செய்து இந்தியாவில் அழகான கட்டிடங்களைக் கட்ட அவர்கள் பைத்தியக்காரர்கள் இல்லை.

Dr.Anburaj said...

இந்தியாவின் செல்வங்களைக் கண்மூடித்தனமாகக் கொள்ளையடித்தாலும் எந்த முகலாய அரசனும் பணக்காரனில்லை. அவர்கள் அடித்த கொள்ளைகள் அவர்கள் வைத்திருந்த மிகப் பெரும் ராணுவத்திற்கே செலவாகியது. நாடெங்கிலும் அவர்களுக்கு எதிராக எழுந்த கலவரங்களை ஒடுக்குவதற்கு அவர்களுக்கு பெரிய ராணுவம் தேவையான ஒன்று. எனவே அவர்களுக்கு எந்த நேரமும் பணத்தேவை இருந்து கொண்டே இருந்தது. ஷாஜஹானின் காலத்தில் இந்தியாவில் பயணம் செய்த ஃப்ரெஞ்ச் நாட்டு வியாபாரி டாவர்னியர், ஷாஜஹானின் மொத்த செல்வத்தின் அளவு ஆறு கோடி ரூபாய்கள் மட்டுமே என்கிறார். அதையும் விட ஷாஜஹான் உலக மகா கஞ்சன் என்கிறார். அந்தப்புரத்துப் பெண்கள் கேட்கும் எந்தவொரு சிறு பொருளையும் வாங்கிக் கொடுக்க மனம் வராத ஒரு பிசிநாறியாகவே ஷாஜஹானைச் சொல்கிறார் டாவர்னியர்.

அப்படியாகப்பட்ட ஒரு மனிதன் பெரும் செலவும், நேரமும் பிடிக்கும் தாஜ்மஹாலை ஒரு போதும் கட்டியிருக்க வாய்ப்பில்லை. தாஜ்மஹால் ஏழுமாடிகளை உடைய, ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறைகளை உடையதொரு கட்டிடம். இன்று சமாதிகள் இருக்கும் தளத்திற்குக் கீழ் மேலும் இரண்டு அல்லது மூன்று தளங்கள் இருக்கின்றன. இவ்வளவு செலவு செய்து தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் அந்தத் தளங்களை மூடிவைக்கக் காரணம்தான் என்ன? பி.என். ஓக் எழுதிய தாஜ்மகால் குறித்த புத்தகத்தைப் படித்து ஆச்சரியமடைந்த அமெரிக்க கல்லூரி புரொஃபசர் ஒருவர் இந்தியாவிற்கு வந்து பி.என். ஓக்குடன் தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்த்து அது ஒரு ஹிந்துக் கட்டிடம்தான் என்று உறுதிப்படுத்துகிறார். யமுனை நதிக்கரையை ஒட்டியிருந்த ஒருகதவின் ஒரு சிறிய பகுதியை அமெரிக்காவிற்கு எடுத்து வந்து கார்பன் டேட்டிங் செய்ததில் அந்தக் கதவு ஏறக்குறைய 230 வருடங்கள் பழமையானது எனக் கண்டுபிடிக்கிறார். அதாகப்பட்டது ஷாஜஹான் கட்டியதாகச் சொல்லப்பட்ட வருடத்திலிருந்து 230 வருடங்கள் பின்னால்.

எல்லோரும் நினைப்பது போல ஷாஜஹானின் “காதல்” மனைவி மும்தாஜ் அழகியோ அல்லது உடல் வனப்பில் சிறந்தவளோ அல்ல. ஷாஜஹானின் வரலாறான பாத்ஷாநாமாவில் மவுல்வி மொய்னுதீன் அகமது அந்தப் பெண்மணியின் உண்மையான பெயர் அர்ஜுமண்ட்பானு பேகம் என்கிறார். அதையும் விட மும்தாஜ் அரச குடும்பத்தில் பிறந்த பெண்ணும் இல்லை. ஜஹாங்கீரிடம் அமைச்சராகப் பணிபுரிந்த மிர்ஸா கியாஸ் பெய்க்கின் பேத்தி அவள். மிர்ஸா கியாஸ் பெய்க் பாரசீக அரண்மனையில் பணியாளாக வேலை செய்தவர். ஆனால் அவரது அழகான மகள் ஜஹாங்கீரின் வைப்பாட்டியாக இருந்ததால் கியாஸ் பெய்க் ஜஹாங்கிரிடம் முதல் அமைச்சராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர். அந்த வகையில் அவரது பேத்தியான மும்தாஜ் ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்தான். 1612-ஆம் வருடம் ஷாஜஹானுடன் திருமணம் நடக்கிறது என்றாலும் மும்தாஜ் பட்டத்தரசி அல்ல. ஷாஜஹானின் முதல் மனைவியும் பட்டத்தரசியுமானவள் பாரசீக அரசரான ஷா இஸ்மாயில் ஷஃபியின் பேத்தியாவாள். எனவே மும்தாஜ் ஷாஜஹானின் அந்தப்புரத்திலிருந்த 5000 பெண்களில் ஒருத்தி மட்டுமே.

மும்தாஜ் பர்ஹான்பூரில் இறந்த வருடம் எதுவென்ற சரியான குறிப்புகள் எதுவும் இல்லை. 1629, 1630, 1631 என்று ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு வருடத்தைக் கூறுகிறது. மனைவி மேல் மாளாக் காதல் கொண்ட ஷாஜஹான் அவள் இறந்த வருடத்தைக் கூடவா பாத்ஷாநாமாவில் எழுதி வைக்க மறந்துவிட்டார்? அதையும் விட மும்தாஜ் பிறந்ததாகக் கூறப்படும் வருடமும் போலித்தனமானதே. மும்தாஜின் மீது ஷாஜஹானுக்கு உண்மையான காதல் இருந்தால் அவள் இறந்த பர்ஹான்பூரிலேயே அவளுக்கு தாஜ்மஹாலைக் கட்டியிருக்க வேண்டும். அதை ஏன் அவர் செய்யவில்லை? புதைத்த ஆறுமாதம் கழித்து தோண்டியெடுக்கப்பட்ட மும்தாஜின் உடல் ஆக்ராவிற்குக் கொண்டுவரப்பட்டு மீண்டும் ஒரிடத்தில் புதைக்கப்படுகிறது. பிறகு ஒருவருடம் கழித்து தோண்டியெடுக்கப்பட்டு “கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற?!!” தாஜ்மஹாலில் புதைக்கப்படுகிறது.

Dr.Anburaj said...

மும்தாஜைக் குறித்து இன்னொரு விஷயத்தை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மதவெறியில் மும்தாஜ் எந்த முகலாய அரசனுக்கும் சளைத்தவளில்லை என்பதுதான் அது. ஹிந்துக்களின் மீதும் இந்தியாவிற்குள் வர ஆரம்பித்திருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் மும்தாஜின் நிலைப்பாடு மிகவும் அச்சமூட்டக் கூடிய ஒன்று. ஷாஜஹானின் அரண்மனையில் மருத்துவராகப் பணிபுரிந்த வெனிஸ் நாட்டவரான நிகோலோ மானுச்சி மும்தாஜின் மதவெறியைக் குறித்து இப்படிச் சொல்கிறார். “மும்தாஜின் காலத்தில் கிறிஸ்தவ போர்த்துக்கீசியர்கள் முகலாய அரசவையை வந்தடைந்திருந்தால் மும்தாஜ் அவர்களைப் பல துண்டுகளாக வெட்டியெறிய உத்தரவிட்டிருப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. பிடிபட்டவர்கள் பல குரூரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருப்பார்கள். அவர்களின் மனைவிமார்கள் பிடிக்கபட்டு பலருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டிருப்பார்கள். அவர்களில் அழகிகள் ஷாஜஹனின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பார்கள்” என்கிறார்.

மும்தாஜின் தூண்டுதலால் ஷாஜஹான் வங்காளத்தின் ஹூக்ளி பகுதியில் போர்ச்சுக்கீசியர்களின் சர்ச் ஒன்றை தரைமட்டமாக்கியிருக்கிறார். கோவாவில் பிடிபட்ட 400 கிறிஸ்தவர்களில் முஸ்லிமாக மதம் மாறச் சம்மதித்தவர்களைத் தவிர்த்து அத்தனை பேர்களும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட கிறிஸ்தவர்களை யானைகளின் கால்களில் தலையை இடற வைப்பது ஷாஜஹானின் பொழுதுபோக்கில் ஒன்று. பனாரஸில் ஹிந்துக்கள் கோவிலொன்றைக் கட்டுகிறார்கள் என்பதறிந்து கோபமடையும் ஷாஜஹான் அதனை உடனே இடித்துத் தகர்க்க உத்தரவிடுகிறார். அப்படியும் கோபம் குறையாமல் தனது ஆட்சிக்காலம் ஆரம்பமானதில் இருந்து கட்டப்பட்ட அத்தனை காஃபிரி ஹிந்துக் கோவில்களையும் இடிக்க உத்தரவிட்டு அப்படியே செய்து முடிக்கப்படுகிறது.

அரச குலத்தில் பிறக்காத, அரசவையில் பெரும் பதவியிலிருக்காத ஒருவருக்குப் பிறந்த, அழகோ அல்லது உடல் வனப்போ இல்லாத சாதாரணப் பெண்ணான மும்தாஜின் மரணத்தைக் காரணம் காட்டி ஷாஜஹான் ராஜா ஜெய்சிங்கிடமிருந்து அரண்மனையைப் பிடுங்கி அதனைத் தனதாக்கிக் கொண்டார். இறந்து பலகாலம் வரைக்கும் அர்ஜுமன்பானு பேகமாகவே இருந்தவள் ஷாஜஹானுக்கு வசதியாக மும்தாஜ் (The chosen one) என அழைக்கப்பட ஆரம்பிக்கப்படுகிறாள்.

I will stop here. I had enough on this subject. If you need further information I would highly recommend you to read P.N. Oak’s book. It got lots of interesting research information.

Dr.Anburaj said...

நான் தாஜ்மஹாலைக் குறித்து எழுதுவது அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணத்தில் அல்ல என்பதினை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியர்கள் தொடர்ந்து முட்டாள்களாக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். அதிலும் தமிழர்களைக் குறித்துச் சொல்லவே வேண்டாம். பிறர் சொல்வதனைக் கேட்டும், நம்பியும் வளர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. இணையம் என்னும் வலிமையானதொரு சாதனம் அதனை முற்றிலும் மாற்றியிருக்கிறது. இன்றைக்கு இணையத்தில் கிடைக்காத நூல்களோ அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகளோ இல்லை. ஒரு பொய்யான தகவலைக் கொடுத்துவிட்டு எவனும் தப்புவது கடினம். என்னுடைய ஆர்வம் நம்முடைய உண்மையான வரலாற்றை, நமக்கு மூடி மறைக்கப்பட்ட உண்மையான வரலாற்றை அறிவது மட்டுமே என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறேன். அதில் அரசியல் பார்வைகளையும், மதப் பார்வைகளையும் நுழைத்துப் பார்ப்பவர்களைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. If you don’t like it then don’t read it.

ஷாஜஹானின் ஆட்சிக்காலம் ஏதோ பொற்காலம் போலவும், அதனாலேயே அவரால் தாஜ் மஹாலையும், செங்கோட்டையையும், ஜும்மா மசூதியையும் இன்னபிற கட்டிடங்களையும் கட்ட முடிந்தது என்பது போலவுமான புளுகினை மீண்டும் மீண்டும் இந்தியர்களின் மீது திணிக்கிறார்கள். ஆராய்ச்சி மனோபாவம் சிறிதும் அற்ற இந்தியன் அதனை உண்மை எனவும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறான்.

இந்திய பாடப்புத்தகங்களிலும், பள்ளிகளிலும் முகலாயர்களின் “பொற்கால” ஆட்சியைக் குறித்துப் படித்துவிட்டு வெளிவரும் எந்தவொரு இந்தியனும் அதனை மறுக்க மிகவும் சிரமப்படுவான் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

ஷாஹானின் ஆட்சிக்காலம் பொற்காலம்தானா என்று ஆராயப் புகுபவர்கள் அது உண்மையில் அமைதியின்மையாலும், போர்களாலும், பஞ்சங்களினாலும், அழிவுகளாலும் இந்தியர்கள் துன்பப்பட்டதொரு ஆட்சிக்காலம் என அறிவார்கள். தாஜ் மஹாலையும், டில்லிக் கோட்டையையும், ஜும்மா மசூதியையும் ஷாஜஹான் கட்டியதாகக் கூறுவது எத்தனை பெரிய பொய் என்று அறிந்து அதிர்ச்சியடைவார்கள்.

ஷாஜஹானின் ஆட்சிக் காலத்தில் இந்திய ஹிந்துக்கள் காபீா்கள் என்று பட்டம் கட்டப்பட்டு தொடர்ந்து கொடுமைகளுக்கு ஆளானார்கள். பல ஹிந்து ஆலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கபட்டன. உள் நாட்டுப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்த ஷாஜஹானிடம் தாஜ் மஹாலைப் போன்றதொரு கட்டிடத்தைக் கட்டுவதற்கான நேரமோ, பணமோ தொழில் நுட்பமோ கலை ரசனையோ இல்லை என்பதுதான் உண்மை.மும்தாஜ்யை கா்ப்பமாக்கவும் அந்தப்புரத்து குமுஸ் செக்ஸ் அடிமைகளைச் சமாளிக்கவே அவருக்கு நேரம் சாியாக இருந்ததா என்று சிந்திக்க வேண்டும்.

1628-ஆம் வருடம் அரியணை ஏறிய ஷாஜஹான் அவ்ரங்க்ஸிப்பிடம் அரியணையை இழக்கும் வரை 29 ஆண்டுகள் 7 மாதங்கள் பதவியிலிருந்தார். அந்த இருபத்தொன்பது வருடங்களும் நாட்டின் பல பாகங்களில் முகலாயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளை ஒடுக்கவும், அவரது எதிரிகளுக்கு எதிரான போர்களை நடத்தவும் (சுமார் 48 போர்கள்) செலவாகியது. அதனை விடவும் வட இந்தியாவை உலுக்கியதொரு மிகப்பெரும் பஞ்சமும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் நிகழ்ந்தது. மீதமிருந்த நேரத்தில் பெண்களுடன் சல்லாபிக்கத்தான் அவருக்கு நேரமிருந்தது. நிலைமை இப்படியிருக்க, ஷாஜஹான்

தாஜ் மஹாலைப் போன்ற 1029 அறைகளுள்ளதொரு பெரும் கட்டிடத்தை மாய மந்திரமாகத்தான் கட்டியிருக்க முடியும்.கட்டவே முடியாது.

Dr.Anburaj said...

1630-ஆம் வருடம், ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தில் பெரும் பஞ்சம் நிலவியது. முகலாய ராஜ்யம் முழுவதும் அந்தப் பஞ்சம் நிகழ்ந்தாலும், குஜராத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அந்தப் பஞ்சத்தால் மிகவும் பாதிக்கப்பட்டன. ஷாஜஹானின் அரசவை எழுத்தர் முல்லா அப்துல் ஹமித் லாஹோரி இதனைக் குறித்து எழுதுகையில், “குஜராத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பஞ்சம் வாட்டியெடுத்தது. மக்கள் ஒரே ஒரு ரொட்டித் துண்டிற்கு ஏங்கினார்கள். பதவிகள் ரொட்டிக்கு விற்கப்பட்டன. ஆனால் வாங்குவாரில்லை. நேற்றுவரை செல்வத்தில் திளைத்தவர்கள் வறியவர்களானார்கள். நாய்களின் இறைச்சி ஆட்டிறைச்சி எனக் கூறிப் பலகாலம் விற்கப்பட்டது. மனித எலும்புகளை பொடியாக இடித்துக் கோதுமை மாவுடன் கலந்து சந்தையில் விற்றார்கள். பசியால் தவித்த மனிதர்கள் சக மனிதர்களைக் கொன்று தின்னவும் தலைப்பட்டார்கள். பெற்ற மகனின் இறைச்சி பாசத்தை விடவும் பெரிதாக நினைக்கப்பட்டது. சாலையெங்கும் சிதறிக் கிடந்த இறந்த பிணங்களின் காரணமாக சாலைப் போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டது. பெரும் விளைச்சலை அள்ளிக் கொடுத்த விளை நிலங்கள் அந்தத் தடயமே இல்லாமல் தரிசாகக் கிடந்தன”.

இந்தப் பஞ்சம் நிகழ்ந்தது 1630-ஆம் வருடம். அதாகப்பட்டது மும்தாஜ் இறந்ததாகக் கூறப்பட்ட அதே வருடம் என்பதினை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாட்டின் நிலைமை இப்படியிருக்க எந்த அரசனாவது இறந்து போன தன் மனைவிக்காக கோடிக்கணக்கில் செலவு பிடிக்கும் சமாதியைக் கட்டத் துணிவானா? எங்கு நோக்கினும் ஜனங்கள் பஞ்சத்தால் ஈக்களைப் போல செத்து விழுந்து கொண்டிருக்கையில் தாஜ் மஹாலைக் கட்டுவதற்கு ஆட்கள் எங்கிருந்து கிடைப்பார்கள்? அதனையும் விட, மொகலாய அரசர்களில் ஷாஜஹான் ஒருவர் மட்டும்தான் பதவியிலிருக்கும் போதே அதிலிருந்து அவரது மகன்களால் விரட்டியடிக்கப்பட்டவர். ஷாஜஹானின் ஆட்சியில் அமைதியும், தேனும், பாலும் ஓடியிருந்தால் அவரை எதற்காக அவரது மகன்களே (அவ்ரங்க்ஸிப்) கைது செய்து சிறையிலடைத்தார்கள்? பின் எதற்கு அவருக்கெதிராக நாடு முழுவதும் கிளர்ச்சிகள் நடந்தன?

ஷாஜஹானின் ஆட்சிக்காலம் பொற்காலமாக இருந்தால் அவரது குடிமக்களே அவருக்கு ஆதரவாக அல்லவா பொங்கி எழுந்திருப்பார்கள்? அப்படி எதுவும் நடந்ததாக அவரது வரலாற்றாசிரியர்களே சொல்லவில்லையே. மாறாக நாடெங்கும் ஷாஜஹானுக்கு எதிராக கிளர்ச்சி நடந்ததாக அல்லவா அத்தனை வரலாற்றாசிரியர்களும் சொல்கிறார்கள் !



Dr.Anburaj said...


ஜும்மா மசூதியை ஷாஜஹான் கட்டியதாகச் சொல்வது இன்னொரு அப்பட்டமான

பொய்யே.

ஷாஜஹானுக்கு 230 வருடங்கள் முன்பு இந்தியாவிற்குப் படையெடுத்த தைமூர் (1398, டிசம்பர்) டில்லியின் ஜும்மா மசூதியைப் பற்றி எழுதியதொரு குறிப்பு அந்த மசூதி ஷாஜஹானுக்கு முன்பே தில்லியில் இருந்ததனைக் காட்டுகிறது. தைமூரின் குறிப்பு, “ஞாயிற்றுக் கிழமையன்று எனக்கு வந்த தகவலின்படி பெருவாரியான காஃபிர் ஹிந்துக்கள் தில்லியின் மஸ்ஜித்-இ-ஜனியில் ஆயுதங்களுடன் கூடி தங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்கிறது. அதையும் விட தைமூரின் குறிப்பு அங்கிருக்கும் கோட்டையையும், அதன் முப்பது வாயில்களையும் விளக்கமாகச் சொல்கிறது. ஆக, ஷாஜஹான் கட்டியதாகச் சொல்லப்படுகிற ஜும்மா மசூதியும், செங்கோட்டையும் ஷாஜஹான் காலத்திற்கு முன்பே அங்கு இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

தாஜ்மஹாலைக் கட்டியது ஷாஜஹான்தான் என்று நம்புகிறவர்கள் மீண்டும், மீண்டும் சொல்கின்றதொரு காரணம் அதன் கும்மட்டமும், அதனைச் சுற்றியுள்ள நான்கு மினரெட்டுகளைப் போலத் தோற்றமளிக்கும் தூண்களும்தான். எந்த ஹிந்து, இந்தியக் கோவில்களில் கும்மட்டம் கட்டி வழிபடுகிறார்கள் என்பது அவர்களின் கேள்வி. சரியானதொரு கேள்விதான் அது.

அதற்கான பதிலை பி.என். ஓக் அற்புதமாக விளக்குகிறார்.

இஸ்லாமியக் கட்டிடக்கலைக்கும் கும்மட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இஸ்லாமிய புனிதத் தலமான காபாவிலேயே கூட கும்மட்டம் எதுவுமில்லையே. அது ஒரு வெறும் சதுர வடிவான கட்டிடம் மட்டும்தானே? உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கட்டிடங்கள் அனைத்தும் அவர்கள் போரில் வென்ற பகுதிகளில் ஏற்கனவே இருந்த கட்டிடங்கள்தான். உதாரணமக ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி (Dome on the Rock and Al Aqsa) மற்றும் ஸ்பெயினின் அல்ஹம்ப்ரா-கடோவா மசூதிகளைச் சொல்லலாம். அவை இஸ்லாமியர்களால் கட்டப்பட்டவை அல்ல. வென்ற பிறகு அதனைத் தங்களின் மசூதிகளாக அறிவித்துக் கொண்டார்கள். அதனைப் போலவே சாமர்கண்டின் தைமூர் மசூதி, ரஷ்யாவின் ஷா-இ-ஸிந்த், இந்தியாவின் தாஜ்மஹால் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கட்டிடங்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன என்பது வரலாறு.பல ஊா்களில் உள்ள மசுதியும் முன்பு இந்து ஆலயங்களாக இருந்தவைகள்தாம்.

Dr.Anburaj said...

இஸ்லாமியக் கட்டிடக்கலைக்கும் கும்மட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இஸ்லாமிய புனிதத் தலமான காபாவிலேயே கூட கும்மட்டம் எதுவுமில்லையே. அது ஒரு வெறும் சதுர வடிவான கட்டிடம் மட்டும்தானே? உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கட்டிடங்கள் அனைத்தும் அவர்கள் போரில் வென்ற பகுதிகளில் ஏற்கனவே இருந்த கட்டிடங்கள்தான். உதாரணமக ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி (Dome on the Rock and Al Aqsa) மற்றும் ஸ்பெயினின் அல்ஹம்ப்ரா-கடோவா மசூதிகளைச் சொல்லலாம். அவை இஸ்லாமியர்களால் கட்டப்பட்டவை அல்ல. வென்ற பிறகு அதனைத் தங்களின் மசூதிகளாக அறிவித்துக் கொண்டார்கள். அதனைப் போலவே சாமர்கண்டின் தைமூர் மசூதி, ரஷ்யாவின் ஷா-இ-ஸிந்த்,

இந்தியாவின் தாஜ்மஹால் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கட்டிடங்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன என்பது வரலாறு.

தாங்கள் கைப்பற்றிய கட்டிடங்களில் சமாதிகளைப் போன்றதொரு அமைப்பை (cenotaphs) அமைத்து பின்னர் கட்டிடங்களைச் சுற்றிலும் குரானின் வாசகங்களைப் பதித்துவைத்து அதனைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.

இஸ்லாமியக் கட்டிடக்கலை என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முகமது நபியோ அல்லது அவருக்குப் பின்னர் வந்த கலிஃபாக்களோ தங்கள் மதத்திற்கான கட்டிடக் கலை இன்னதென்று எழுதி வைத்திருக்கிறார்களா? அல்லது கும்மட்டம் கட்டுவதுதான் இஸ்லாமிய கட்டிக்கலையின் தனித்துவம் என்று வேறெங்கிலும் சொல்லப்பட்டிருக்கிறதா? அப்படி எதுவுமில்லை.

அதையும் விட கட்டிடம் கட்டுவதற்கான இஸ்லாமியக் கணக்குமுறைகள் என்று எதுவுமே இல்லை. அதையும் விட இஸ்லாமியக் கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயிற்சியளிக்கிற பள்ளிகளோ அல்லது கல்லூரிகளோ இஸ்லாமிய உலகில் எங்குமே இருந்ததாகத் தகவல் இல்லை.

இந்தியாவில் இருப்பது போல பரம்பரையான கட்டிட வல்லுனர்கள் என்று எவரும் இஸ்லாமிய உலகில் இருந்ததே இல்லை.

இந்தியாவின் மீது படையெடுத்த முகமது கஜினியிலிருந்து தைமூர் வரைக்கும் இந்தியக் கட்டிடக்கலையின் அற்புதங்களைக் குறித்தும் அதன் அழகினைக் குறித்தும், ஜொலிக்கும் அதன் பேராலயங்களைக் குறித்தும், திட்டமிட்டுக் கட்டப் பட்ட நகரங்களைக் குறித்தும், அணைக்கட்டுகளைக் குறித்தும் வாய் பிளந்தல்லவா எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்?

இந்துக்களைப் படுகொலை செய்த தைமூர் போன்றவர்கள் கட்டிடக்கலை வல்லுனர்கள், சிற்ப வேலை தெரிந்தவர்களை மட்டும் கொல்லாமல் உயிருடன் பிடித்துக் கொண்டு தங்களின் நாடுகளுக்குத் திரும்பினார்கள். இன்றைக்கு சாமர்கண்டிலிருக்கும் புகழ் பெற்ற தைமூர் மசூதி அவ்வாறு பிடித்துக் கொண்டு சென்ற இந்துக் கட்டிடக் கலைஞர்களால் கட்டப்பட்டதுதான்.

ஹிந்து அரசர்கள் காலம்காலமாக பெரும் அரண்மனைகளையும், ஆலயங்களையும் எழுப்பிய பாரம்பரியம் கொண்டவர்கள்.

பிற நாடுகளைக் கொள்ளையடிப்பதை மட்டுமே செய்துவந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நோக்கமும் இல்லை. அதற்கான பொறுமையும் தேவையும் இல்லை என்பதனை நீங்கள் உணர வேண்டும். வந்த இடங்களில் பிடித்த கட்டிடங்களை தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கட்டிக் கொண்டார்கள் எனபதுதான் உண்மை.கொள்ளையா்களின் சமாத்த்தியம் அதுதானே!

Dr.Anburaj said...

இன்றைக்குத் தாஜ்மஹால் எனப்படும் “தேஜோ மஹாலயா” பதினொன்றாம் நூற்றாண்டில் ராஜா பரமாத்ரிதேவினால் கட்டப்பட்ட ஒன்று என்பதற்கான சமஸ்கிருத கல்வெட்டு இன்றைக்கும் போபால் நகர மியூசியத்தில் இருக்கிறது. தாஜ் மஹால் கட்டிட வளாகத்தில் இருந்த அந்தக் கல்வெட்டு ஷாஜஹானின் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டு ஒரு மூலையில் தூக்கியெறிபபட்டிருந்தது. சிவபெருமானி தேஜோ லிங்கம் வைக்கப்பட்டிருந்த அந்த ஆலயத்தில் பாபரும் வந்து தங்கியிருந்திருக்கிறார். அவரது பாபர் நாமாவில் அதற்கான குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. பாபரின் காலத்தில் இப்ராஹிம் லோடியிடம் இருந்த அந்தக் கட்டிடத்தில் தான் தங்கியிருந்ததாக பாபரே குறிப்பிடுகிறார். பாபரின் மகள் அந்த இடத்தை புனித இடமாக (mysitc place) குறிப்பிட்டு எழுதிய குறிப்புகளும் இருக்கின்றன. முகமது கோரியில் துவங்கி அத்தனை இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களும் அந்தக் கட்டிடத்தை தொடர்ந்து தாக்கியிருக்கிறார்கள்.

மேலும் தாஜ்மஹால் ராஜஸ்தானிக் கட்டிடங்களின் பாணியில் கட்டப்பட்ட ஒன்று. எந்த மசூதியை எண்கோண வடிவில் கட்டியிருக்கிறார்கள்? தாஜ்மஹால் ஹிந்துக் கோவில் கட்டிடக்கலையின் அடிப்படையில் எண்கோண வடிவில் கட்டப்பட்டிருப்பதனை இன்றும் காணலாம். அதன் மினரெட்டுகளுக்கு வருவோம். முகலாய மசூதிகளின் மினரெட்டுகள் மசூதியின் கட்டிடத்தை ஒட்டி அதன் தோள்களிலிருந்து துவங்கும். ஆனால் தாஜ்மஹாலின் “மினரெட்டுகள்” அவ்வகையைச் சார்ந்தவையில்லை. அவை தேஜோ மஹாலயாவின் விளக்குத் தூண்கள். மேலும் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பாதுகாப்பு கோபுரங்களே அவை. இரவு நேரத்தில் அந்தத் தூண்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்தக் கோவிலின் அழகை மெருகூட்டுவதற்காகக் கட்டப்பட்ட தூண்களே அவையன்றி மினரெட்டுகளல்ல. இன்றைக்கும் வீடுகளில் சத்திய நாராயண பூசை செய்பவர்கள் நான்கு மூலைகளில் வாழை மரங்களை நட்டுவைப்பதனை நீங்கள் கவனித்திருக்கலாம். அது முற்றிலும் ஒரு இந்துப் பண்பாடு.

காலம்காலமாக ஒன்றைப் பார்த்து உண்மையென நம்பிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு தாஜ்மஹால் மும்தாஜின் காதலுக்காகக் கட்டப்பட்டதொரு கட்டிடம் அல்ல என்று நம்புவதற்குக் கடினமாதாக இருப்பது இயல்புதான். மூளைச்சலவை செய்யப்பட்ட மூளைகள் ஒன்றை நம்பிய பிறகு அதிலிருந்து பிறிதொன்றை ஏற்றுக் கொள்ள இயலாதவை. அது உண்மையானதாக இருந்தாலும் கூட.
--------------------------------------------------------------------------------------
தாஜ்மகால் குறித்து இப்படியும் ஒரு கருத்து நிலவுகின்றது என்பதை மட்டும் வாசகா்கள் அறிந்து கொள்ள வேண்டும். தற்சமயத்திற்கு இது போதும்.