Followers

Saturday, August 26, 2017

புனித நாட்களில் அதிகமதிகம் இறைவனை புகழ்வோம்!

"அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?" என்று வினவ, "ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட; ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு, இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி.

இரு பெருநாட்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும்.


பெருநாள் தொழும் திடலுக்கு நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.


அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)

துல் ஹஜ் ஆரம்பத்திலிருந்து 10ம் நாள் வரை அதிகமதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம். வீணான பேச்சுகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம். தக்பீர் முழங்கி இறைவனை பெருமைபடுத்துவோம்.






No comments: