Followers

Wednesday, May 13, 2015

தலித் குதிரையில் ஏறக் கூடாதா? சாதி வெறியின் உச்சம்!



பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் ரத்லம் ஊருக்கு அருகில் உள்ளது நெக்ரன் என்ற கிராமம். இந்த கிராமம் உயர் சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். பவன் என்ற தலித் இளைஞரின் திருமணம் இந்த கிராமத்துக்கு அருகில் நடந்தது. அவர்கள் சாதி வழக்கப்படி பவனை குதிரையில் ஏற்றி ஊர்வலமாக கிராமத்தில் அழைத்துச் சென்றனர். வர்ணாசிரமத்தில் ஊறிய மேல் சாதியினருக்கு இது பொருக்குமா? உடனே இதனை எதிர்த்தனர். 'தலித் குதிரையில் ஏறி வருவதா?' என்று பல மேல் சாதி இளைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது பற்றி மணமகன் பவன் கூறும் போது 'மேல் சாதி இளைஞர்கள் நான் குதிரையில் ஊர்வலம் வருவதை விரும்பவில்லை. பிரச்னையாகும் என்பதால் இது பற்றி காவல் துறையில் புகார் செய்தேன். போலீஸ் பாதுகாப்பும் கொடுத்தனர். ஊர்வலம் மேல் சாதியினர் தெருக்களில் நுழைந்த போது என் மேல் கற்களை வீச ஆரம்பித்தனர். உடன் போலீசார் எனக்கு ஹெல்மட் அணிவித்து எனது தலையை காப்பாற்றிக் கொள்ள அறிவுறுத்தினர். அதன் பிறகு ஹெல்மட் அணிந்து பாதுகாப்போடு எனது குதிரை பயணம் அந்த தெருவைக் கடந்தது' என்கிறார் பரிதாபகரமாக...

உதவி தாசில்தார் ஜெயின், தால் காவல் நிலைய கண்காணிப்பாளர் சுரேஷ் பாலாஜி போன்று பல அதிகாரிகளும் தலித் மக்களும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். மேல் சாதி இளைஞர்கள் 72 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை. எதிர்த்த மேல் சாதியினரை அடித்து விரட்ட காவல்துறை முயலவில்லை. மாறாக பாதுகாப்புக்கு மணமகனுக்கு ஹெல்மட் தருகிறது. :-) ஏனெனில் மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பது பிஜேபி ஆட்சி. எனவே காவல் துறை தனது அதிகாரத்தை பயன் படுத்தாமல் சற்று அடக்கி வாசித்துள்ளது.

இது போன்ற அடக்கு முறைகளை கண்டு வெறுத்து இஸ்லாத்தை நோக்கி செல்பவர்களை சென்னி மலை ராம் நிவாஸ் போன்றோர் கொச்சைபடுத்துகின்றனர். இவ்வாறு மதம் மாறியவர்களை வசைபாடுவதை விட்டு விட்டு இந்து மதத்தில் உள்ள இது போன்ற தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து குரலெழுப்பினால் அதுவே அவர்கள் இந்து மதத்துக்கு செய்யும் நன்மையாக அமையும்.

அறிவியலில் மனிதன் எங்கெங்கோ சென்று விட்டான். ஆனால் நமது நாட்டில் சக மனிதன் மனிதனாக வாழ நமது சமூகம் சம்மதிப்பதில்லை. என்று ஒழியும் இந்த வர்ணாசிரம வெறி?

தகவல் உதவி
தி இந்து ஆங்கில நாளிதழ்
13-05-2015

http://www.thehindu.com/news/national/dalit-groom-attacked-for-riding-a-horse-in-madhya-pradesh/article7198539.ece

1 comment:

Dr.Anburaj said...

1) வேதங்கள் ஒருகாலத்தில் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது. எல்லோரும் கற்க வேண்டிய நூலாக வேதங்கள் இருந்தன.

வேதங்களில் வரும் சுலோகம் இது :
“ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயஸ்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து இவ்வேத நூலை உங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள்தான் இவ்வேதங்களைப் படித்து பாரதநாடு மாத்திரமில்லை, பூலோகமுழுவதும் பிரச்சாரம் செய்து மறுபடியும் தர்மஸ்தாபனம் செய்ய வேண்டும்……… இந்நாடு, பூலோகம் முழுவதும் புனிதவேதம் விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்” என்று குறிப்பிடுகிறார்.ஓம்

யதேமாம் வாசம் கல்ணாணீமாவதானி ஜனேப்ய: I

ப்ரஹ் மராஜன்யாப்யாம் சூத்ராய

சார்யாய ச ஸ்வாய சாரணாய I

ப்ரியோ தேவானாம் தக்ஷிணாயை

தாதுரிஹ பூயாஸமயம் மே காம:

ஸம்ருத்யதாமுப மாதோ நமது II

யஜுர் வேதம் 26-2

மனிதர்களே, இறைவனாகிய நான்,

ப்ரஹ்மராஜன்யாப்யாம் – பிராமணர், க்ஷத்திரியர்

அரியாய – வைசியர்

சூத்ராய – சூத்திரர்

ச – இவர்களுடன்

ஸ்வயா ச -அவரவர் மனைவி, மக்கள், சேவகர்கள் முதலியோருடன்

அரணாய ச – உத்தம குணங்களோடு கூடிய மிக க்கீழானநிலையில் பிறந்தோர் ஆகவுள்ள

ஜனேப்ய: – மேற்கூறிய எல்லா மனிதர்களுக்குமாக

இஹ – இவ்வுலகில்

இமாம் – என்னால் வெளிப்படுத்தப்பட்டதும்

கல்யாணீம் – இன்பம் தருவதும் ஆகிய

வாசம் – நான்கு வேதரூபமான வாணியை

ஆவதானி – நான் உபதேசம் செய்கின்றேன். அவ்வாறே நீங்களும் நன்கு உபதேசம் செய்வீர்

தாது – தானம் செய்வோர் ஆகிய சத்சங்கத்தினர்

தேவானாம் – வித்வான்களுக்கு

தக்ஷிணாயை – தக்ஷிணை அதாவது தானம் முதலியவற்றை அளிப்பதால்

ப்ரிய: – உலகினரால் விரும்ப ப்படுகின்றவர்

பூயாஸம் – ஆவர்

மே – என்னுடைய

அயம் – இந்த

காம: – விருப்பம்

ஸம்ருத்யதாம் – சிறப்பான முறையில் மேலும்மேலும் நிறைவேறட்டும். அன்றியும்

மா – எனக்கு

அத – இந்த மறைவான சுகம்

உப நமது – காணிக்கையாக வந்து சேரட்டும். நீங்களும் இவ்வாறே செய்து இத்தகைய விருப்பம் நிறைவேறி சுகம் பெறுவீராக.

கருத்துரை : இம்மந்திரம் உபமாலங்காரம். பரமாத்மா எல்லா மனிதர்களுக்கும் உபதேசம் செய்கிறான். நான்கு வேதரூபமான நன்மைகள் நிறையச் செய்கின்ற வேதவாணியை எல்லா மனிதர்களின் நன்மைக்காக நான் உபதேசம் செய்திருக்கின்றேன். நான் விருப்பு வெறுப்பின்றி எல்லோரும் வேண்டியவனாக இருப்பதுபோல் நீங்களும் இருப்பீர். அவ்விதம் செய்வதால் உங்களுக்கு எல்லாச் செயல்களும் வெற்றி அடையும். நிறைவுறும்.

(சுவாமி தயானந்தரின் யஜுர்வேத பாஷ்யத்திலிருந்து)

இப்படி எல்லோருக்கும் அருளப்பட்டதுமான, எல்லோருக்கும் பொதுவானதுமான வேதங்கள் இடையில் ஒரு காலத்தில் வேதம் கேட்பதற்கு சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை இல்லை; அனுமதி இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. கேட்பதற்கே உரிமை இல்லை என்று சொல்லும்போது படிப்பதற்கு நிச்சயமாக அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த அவலநிலையைச் சரிசெய்வதற்கு பல்வேறு இந்து சமூக சீர்திருத்த இயக்கங்கள், இந்து சமூக சீர்திருத்தவாதிகள் பாரத தேசத்தில் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருந்தனர். ஸ்ரீராமானுஜர், சுவாமி விவேகானந்தர் என்று இந்து சமூக சீர்திருத்தப் பரம்பரை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.