Followers

Saturday, May 27, 2017

நோன்பு புற்று நோயை குணப்படுத்தும் காரணிகளில் ஒன்று - புதிய ஆய்வு



நோன்பானது பல மனிதர்களின் புற்று நோயை குணப்படுத்தும் காரணியாக அமைகிறது என்று தற்போதய ஆய்வுகள் தெரிவிக்கினறன. 'தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழக' ஆய்வாளர்கள் புற்று நோயால் ஏற்படும் கட்டிகளை எதிர்க்கும் சக்தியை நோன்பு தருகிறது என்ற ஆய்வை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வானது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆய்வகத்தில் எலிகளை வைத்து இந்த சோதனையை நிகழ்த்தினர். உணவு உண்ட ஒரு எலியும் உணவு தரப்படாத எலியும் இந்த சோதனையில் பரிசோதிக்கப்பட்டன. உணவு தரப்படாத எலியின் கட்டிகள் எதிர் வினையாற்றி புற்று நோய் கட்டிகளை அழித்து விட்டதை ஆய்வுகளில் உறுதிபடுத்தியுள்ளனர். உணவு தரப்பட்ட எலியின் உடலில் அந்த கட்டிகள் அழிக்கப்படாமல் அப்படியே இருந்ததும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

வால்டர் லாங்கோ என்ற ஆய்வாளர் டெய்லி மெயில் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் 'கேன்சரை உற்பத்தி பண்ணும் செல்கள் ஆச்சரியமாக உணவு தரப்படாத எலியின் உடம்பில் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றன. உணவு தரப்பட்ட எலியில் இந்த மாற்றத்தை எங்களால் காண முடியவில்லை' என்று கூறுகிறார்.

இதே ஆய்வுகளை மனிதர்களிடமும் சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்து பார்த்தனர். கலோரி குறைவாக உள்ள மனிதர்களிடம் புற்று நோய் அறிகுறிகள் வெகுவாக குறைந்திருப்பதை கவனிக்க முடிந்ததாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
10-02-2012

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 2:184

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

அல்குர்ஆன் 2:185


http://timesofindia.indiatimes.com/home/science/Fasting-may-be-the-best-way-to-combat-cancer/articleshow/11832019.cms

1 comment:

A.Anburaj Anantha said...

நோன்பு என்று அரேபிய கலாச்சாரத்திலும் விரதம் என்று இந்து மதத்திலும் உபவாசம் என்று

கிறிஸ்தவா்களாலும் அனுஷ்டிக்கப்டும் இந்த ஒழுங்கு முறைக்கு உட்பட்ட உண்ணா நோன்பு

நல்ல பழக்கம்.ஆனால் வருடத்திற்கு ஒரு முறை ரம்சான் காலத்தில் மடடும் உண்ணா நோன்பு

இருப்பதை விட குறிப்பிட்ட கால இடைவெளியில் நீா் சத்து வற்றி விடாமல்பாா்த்துக் கொண்டு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.அதுதான் நன்மைதரும்.பகலில் நோன்பு இரவு வயிறு வெ.....டி....க்...க வெடிக்க உண்டு ...உண்டு களிப்பதும் சாியானதல்ல.அரேபிய சாப்பாட்டு இராமன் களின் பழக்க வழக்கங்களை கண் மூடிக் கொண்டு பின்பற்றுவது மூட நம்பிக்கையாகி விடும்.