'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, January 30, 2016
'ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின்' சில காட்சிகள்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு இனிதே துவக்கம் திருச்சியில்.....
Friday, January 29, 2016
இரண்டு மனைவி கட்டவில்லை என்றால் சிறைவாசம் - எரித்ரியா
இவ்வளவு சந்தோஷமாக எங்கு ஓடுகிறார்கள்? இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கா? :-)
அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர்கள் விஷயத்தில் நீதமாக நடக்கவியலாது என நீங்கள் அஞ்சினால், மற்றப் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். அவ்வாறு பலரைத் திருமணம் புரிந்தால், அப்போது அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் நீதமாக நடக்க முடியாது எனப் பயந்தால், ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அடிமைப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டியது. நீங்கள் பேதம் பாராட்டாமலிருப்பதற்கு இதுவே சுலபமான முறையாகும்.
(திருக்குர்ஆன்: 4:3)
அன்று இறங்கிய இந்த குர்ஆன் வசனம் இன்று எரித்ரியாவுக்கு பொருந்திப் பொவதை பாருங்கள். குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இனி பதிவை படிக்க ஆரம்பியுங்கள். :-)
எரித்ரியா (28 ஜன. 2016): "ஆண்கள் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
இச்சட்டத்தைப் பின்பற்றாத ஆண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்" என எரித்ரியா அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்கா கண்டத்தில் சூடானுக்கு அருகிலுள்ள நாடு எரித்ரியா. சுமார் 4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் காணப்படுகிறது. இதனால் அங்குத் திருமணம் புரியாமல் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குடும்ப வாழ்வு கிடைக்காமல் தகாத உறவுகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தவும் பெண்கள் அனைவரும் சமூகத்தில் அந்தஸ்துடன் வாழவும் தம் நாட்டில் வாழும் ஆண்கள் அனைவரும் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவ்வாறு திருமணம் புரியும் ஆண்களுக்கு வீடு மற்றும் செலவினங்களுக்கான உதவியையும் அரசே செய்யும் எனவும் அறிவித்துள்ளது.
இச்சட்டத்தைப் பின்பற்றாத ஆண்களுக்குக் கடுமையான வேலையுடன் ஆயுள் தண்டனை சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வருமெனவும் தம் கணவரை மற்றொரு திருமணம் புரிய அனுமதிக்காத பெண்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும் அச்சட்டம் கூறுகிறது.
1998-2000 ஆண்டுகளில் பக்கத்து நாடான எதியோப்பியாவுடன் நடந்தப் போரில் எரித்ரியா இராணுவ வீரர்கள் சுமார் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்ததைத் தொடர்ந்து பெண்களுக்குத் திருமணம் புரிய ஆண்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
எரித்ரிய அரசின் இப்புதிய சட்டம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crazy Monday, which is published by the Standard newspaper, is well known for its focus on scandalous stories and gossip as part of an attempt to attract a younger readership, says Mathias Muindi from the BBC's media monitoring service.
But this has not stopped it being reported in many countries from Nigeria to South Africa, with some suggesting that it was true.
The story said that to make up for the shortage of men in the country, following the civil war with Ethiopia from 1998-2000, every man must marry at least two women or face imprisonment.
It has been trending on Twitter in Nigeria, and other countries, for several days with people sharing links to the Eritrea's visa application documents.
தகவல் உதவி
இந்நேரம் காம்
BBC
28-01-2016
http://www.bbc.com/news/world-africa-35427654
மனித உடலை விட்டு விரை ஏன் தனித்துள்ளது?
ஆகவே மனிதன், தான் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? குதித்து வெளியாகும் ஒரு துளி நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது ஆணின் முதுகந் தண்டிற்கும் கடைசி விலா எலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
அல்-குர்ஆன்: 86:5-7
அற்ப விந்துத் துளியிலிருந்து உன்னை படைத்துள்ளேன். ஆனால் படைத்த என்னை விடுத்து படைப்பினங்களை வணங்கி பாவத்தில் வீழ்கிறாயே மனிதா? என்று மக்களைப் பார்த்து கேட்கிறான் இறைவன். அந்த விந்தைப் பற்றியும் அது உற்பத்தியாகும் வழி முறைகள் பற்றியும் சிறிது இந்த பதிவில் பார்போம்.
விந்து வெளியேறும் போது அதே பாதையில் உள்ள சிறுநீர் வந்து விடாமல் ஒரு தடுப்பை இறைவன் ஏற்படுத்தியுள்ளதை என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? சிறுநீர் வெளியாகும் வழியும், விந்து வெளியாகும் வழியும் ஒன்றாக இருந்தாலும் அந்த இரண்டும் கலந்து விடாமல் இருக்க அவன் ஏற்படுத்தியுள்ள தடைகள்தான் எத்தகையது?
'குதித்து வெளியாகும் விந்து' என்று வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளதை கவனியுங்கள். குதித்து வேகமாக சென்றால்தான் பெண்ணின் கர்ப்பப்பையை உயிர்ப்புடன் உள்ள விந்தணுக்குள் சென்றடைய முடியும். தாமதமானால் பெண் உடலின் சூட்டினால் விந்தணுக்கள் இறந்து விட அதிக வாய்ப்புண்டு.
மேலும் ஓரு மனித உடலின் சராசரி வெட்ப நிலை 37 டிகிரியாகும். ஆணுறுப்பிற்கு கீழே இருக்கும் இனவிருத்தி உயிரணுக்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் விதையின் வெப்ப நிலை, உடலின் வெட்ப நிலையை விட சுமார் 3 அல்லது 4 டிகிரி குறைவாகவே இருக்கும். காரணம் விந்தில் இருக்கும் பல கோடி உயிரணுக்கள் 34 டிகிரி வெட்ப நிலையில் தான் உயிர் வாழ முடியும். வெப்ப நிலை அந்த அளவைவிட சற்று அதிகரிக்கும் போது அந்த உயிரணுக்களால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும்.
விந்து சிறுநீரைப் போல சாதாரணமாக வெளிப்படுமேயானால் ஆணுறுப்பில் உள்ள கூடுதல் வெப்ப நிலையாலும், சிறுநீரின் வேதிய பொருட்களாலும் அந்த விந்தில் உள்ள உயிரணுக்கள் வரும் வழியிலேயே செத்துபோய்விடும். அதனை கருத்தில் கொண்டுதான் பல கோடி உயிரணுக்களை சுமந்து வரும் விந்தை குதித்து விரைவாக வீரியத்துடன் தனித்து வெளியேறும் தன்மையில் படைத்துள்ளான் இறைவன்.
'விரை' உடலைவிட்டும் பிரிந்திருப்பது ஏன்?
விந்துவினை உற்பத்தி செய்யும் 'விரை' உடலின் உட்பகுதியில் இருப்பதுதான் அதனால் உற்பத்தி செய்யப்படும் உயிரணுக்களுக்கு தகுந்த பாதுகாப்பானது என்றிருந்தும் அது இருந்த அந்த பழைய இடத்தைவிட்டு நகர்ந்து ஏன் உடலைவிட்டும் பிரிந்து தனியாக நிற்கிறது? என்பதையும் இந்த வசனத்தின் மூலம் சிந்திக்கத் தூண்டுகிறான் இறைவன். ஏனெனில் இந்த வசனத்தின் ஆரம்பமே 'மனிதன் தான் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்தித்துப் பார்க்கட்டும்' என்றுதான் உள்ளது.? எனவே ஏன் இந்த இடம் மாற்றம் நிகழ்ந்தது? என்பதையும் நாம் சிந்திக்க தூண்டப்படுகிறோம்.
ஒரு மனித உடலின் சராசரி வெப்ப நிலை 37 டிகிரியாகும். பொதுவாக உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உடலின் வெப்ப நிலை சீராக இருந்து வருகிறது. இனவிருத்திக்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சுமார் 33 டிகிரி வெப்ப நிலையில்தான் உயிர் வாழ முடியும். அந்த அளவை விட கூடும் போது அதனால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும். 37 டிகிரி வெட்பநிலையில் உள்ள உடலின் உட்பகுதியில் 'விரை' இருந்தால் அந்த விரையிலும் 37 டிகிரி வெட்ப நிலைதான் இருக்கும். அதில் உயிரணுக்களால் நிச்சயமாக உயிர் வாழ முடியாது. இந்த உயிரணுக்கள் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக உடலின் வெப்பநிலையை குறைக்க முனைந்தால் உடலில் வேறுபல பாதிப்புகள் ஏற்படும். எனவே அந்த விரையை உடலிலிருந்து தனியாக பிரித்து, அதனுடைய வெப்பநிலையை சரி செய்வதுதான் முறையாகும் என்று கருதிய அல்லாஹ் அதனை உடலைவிட்டும் தனியாக பிரிந்து இருக்கும் அமைப்பில் படைத்து, அதன் வெப்ப நிலை சராசரியாக 33-34 டிகிரி இருக்கும் நிலையில் ஆக்கியுள்ளான். இந்த இடம் மாற்றம் கருவளர்ச்சியின் சிறிது காலத்திற்கு பிறகு ஆரம்பித்து குழந்தை பிறப்பதற்குள் பூர்த்தி அடைந்துவிடுகிறது. ஒரு குழந்தைக்குகருவில் இருக்கும் போதே விரையின் இடம் மாற்றம் ஏற்படவில்லையெனில் அவருக்கு ஆண்மை இருக்காது, விரைக் கேன்ஸர் (புற்று நோய்) ஏற்படுவற்கும் அதிக வாய்ப்புகளும் உள்ளன. மேலும் விரை மாற்றம் நடைபெறாத குழந்தைகள் இறந்தே பிறப்பது, அல்லது பிறந்த ஒரு சில மாதங்களிலேயே இறந்துவிடுவதுதான் அதிகம் அதிகம் என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும்.
இந்த இடத்தில் இறைவன் செய்துள்ள இன்னொரு அற்புதத்தையும் நம்மால் நினைத்துப் பார்க்கமால் இருக்க முடியவில்லை. விரையில் உள்ள இரத்தக்குழாய்களும், விந்து உற்பத்தியாகும் இடமும் அடுத்தடுத்த நெருக்கமாக இருந்தாலும் விந்து, இரத்தத்தில் கலந்து விடமுடியாதபடி மிகப் பெரிய தடுப்பை இறைவன் ஏற்படுத்தி, விந்துக்கென உள்ள அதனுடைய பிரத்யேக குழாயை சென்றடையும் விதத்தில் பாதுகாப்பாக ஆக்கி இருப்பது பிரமிக்கத்தக்க ஒன்றாகும். காரணம் தடுப்பு மட்டும் இல்லையெனில், விந்து இரத்தத்துடன் கலந்து மிகப் பெரும் ஆபத்துகளை சந்தித்து, அழிவிற்குள்ளாகி விடும். அதாவது விந்து இரத்தத்துடன் கலந்து விடும்போது, பாக்டீரியாக்கள் (நோய்கிருமிகள்) தன்னுள் புகுந்துவிட்டதாக கருதி இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் எதிர்ப்பு சக்தியை தோற்றுவித்து, விந்துவில் உள்ள எல்லா உயிரணுக்களையும் ஒன்றுவிடாமல் அழித்துவிடும். அது மட்டுமல்லாது இந்த எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் நிரந்தரமாகவே தங்கி, உயிரணுக்கள் உற்பத்தியாகும் போதெல்லாம் அதனை அழித்துக் கொண்டே இருக்கும். அப்போது அந்த மனிதனுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு அறவே இல்லாமல் போய்விடும்.
தான் படைக்க விரும்பிய மனிதப் பிரதிநிதிகள் இந்த உலகில் வந்து சேர்வதற்கு இறைவன் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்புகள்தான் எத்தனை? எத்தனை?
இது வேதமாகும். நன்கறிந்த, ஞானமுடையவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானம் நிரப்பப்பட்டு, பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.
அல்குர்ஆன் 11:1
அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.
அல்குர்ஆன் 17:41
உங்களிடம் ஒரு வேதத்தை அருளினோம். அதில் உங்களுக்கு அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா?
அல்குர்ஆன் 21:10
மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
அல்குர்ஆன் 29:49
உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அது அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது.
அல்குர்ஆன் 29:51
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
அல்குர்ஆன் 47:24
Wednesday, January 27, 2016
பழ கருப்பையாவை நீக்க காரணமான நேரலை பேட்டி!
ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவது ஆச்சர்யம். பழ.கருப்பையாவைச் சந்திக்கப்போனால், அதைவிடப் பல மடங்கு ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் தருகிறார்...
``திடீரென உங்கள் கட்சியையே விமர்சனம்செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள். அதுவும் இவ்வளவு கடுமையான விமர்சனம். கட்சித் தலைமையில் இருந்து ஏதேனும் விளக்கம் கேட்டார்களா?''
அ.தி.மு.க-வைப் பற்றி உங்களது மதிப்பீடு என்ன?''
நான்கரை ஆண்டுகாலம் எம்.எல்.ஏ-வாக இருந்து நீங்கள் செய்தது என்ன?''
விமர்சனங்களை, நீங்கள் கட்சிக் கூட்டங்களில் பேசியிருக்கிறீர்களா... அல்லது ஏதோ ஒருவிதத்தில் தலைமைக்குத் தெரியப்படுத்தி இருக்கிறீர்களா?'' என்ற பல கேள்விகளுக்கு பதிலளித்த பழ. கருப்பையாவின் எக்ஸ்க்ளுசிவ் வீடியோ பேட்டி இதோ...
இஸ்லாமிய பெண்கள் ஏன் புர்ஹா அணிகிறார்கள்?
இஸ்லாமிய பெண்கள் ஏன் புர்ஹா அணிகிறார்கள்?நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களின்...
Posted by Nazeer Ahamed on Wednesday, January 27, 2016
இஸ்லாமிய பெண்கள் ஏன் புர்ஹா அணிகிறார்கள்?
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
(அல் குஆன் 33:59)
நன்கு சம அழகுள்ள இரு பெண்களை கடைவீதியில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மேற்கத்திய அடையான குட்டை பாவாடை அணிந்திருக்கின்றாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது குட்டை பாவாடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக குட்டை பாவாடையணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றாள் அவளுடைய ஆடை கடைத் தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக அற்புதமான திட்டத்தையல்லவா திருமறை கூறியிருக்கிறது.
ஆறிலிருந்து அறுபது வரை - இணை கற்பித்தல்
ஆறு வயதோ அல்லது ஏழு வயதோ இருக்கும் அந்த சிறுவனுக்கு இருக்கும் உணர்வு 60 வயதை தாண்டிய அந்த முதியருக்கு இல்லை. கைலியை வரிந...
Posted by Nazeer Ahamed on Wednesday, January 27, 2016
ஆறு வயதோ அல்லது ஏழு வயதோ இருக்கும் அந்த சிறுவனுக்கு இருக்கும் உணர்வு 60 வயதை தாண்டிய அந்த முதியருக்கு இல்லை. கைலியை வரிந்து கட்டிக் கொண்டு 'யா முஹய்யதீன்'... 'யா முஹய்யதீன்' என்று பித்து பிடித்தவர் போல் அங்கும் இங்கும் அலைகிறார். இத்தனை சப்தங்களுக்கு இடையிலும் 'படைப்பினங்களை விடுத்து படைத்தவனையே வணங்குவோம்' என்று அந்த சிறுவன் இன்னும் குரலை உயர்த்துகிறான். 'அல்லாஹ் அக்பர்'
எல்லா புகழும் இறைவனுக்கே!
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
அல்குர்ஆன் (9:31)
பாகிஸ்தான் ஜிந்தாபாத்! சென்னையில் பாகிஸ்தானி கைது!
"லாங்லிவ் முஸ்லிம்ஸ்,
பாகிஸ்தான் ஜிந்தாபாத்,
இஸ்லாம் ஜிந்தாபாத்"
-----------------என்றெல்லாம் எழுதி...
==>இப்படிக்கு....
"பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்"
இவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளுங்கட்சியின் தளத்தில் "மண்டைஓடு எலும்பு" படம் எல்லாம் பந்தாவாக வரைந்து அட்டகாசமாக யாரோ படங்காட்டி இருந்தனர்..!
அரசு தீவிரமாக ஆராய்ந்து இந்த செய்தியை அனுப்பியது யார் என்ற புலனாய்வில் இறங்கியது. முடிவில் பாகிஸ்தான் தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டான். பொறியியல் பட்டம் பெற்று... பெங்களூருவில் ஒரு பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணி புரியும்... நம்ம வியாசர்பாடியை சேர்ந்த 23 வயதாகும் ஈஸ்வரன் என்ற இந்துத்வவாதியை காவல் துறை கைது செய்து அவனை புழல் சிறையில் அடைத்தது.
இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விட அரை டவுசர்கள் என்ன மாதிரி எல்லாம் திட்டம் போட்டுகிறார்கள். யூதர்களின் வாரிசுகளல்லவா? யூதர்களைப் போல மிக திட்டமிட்டு தங்கள் காய்களை நகர்த்துகின்றார்கள்.
ஆனால் இஸ்லாம் என்பது இறை மார்க்கம். அந்த மார்க்கத்தை எப்படி பாதுகாப்பது என்பதை இறைவன் நன்கு அறிந்துள்ளதால் இவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகவே திரும்புகின்றன.
இது பழைய செய்தியாக இருந்தாலும் குடியரசு தினத்தில் தேச பற்று மிக்க அரை டவுசர்களின் ஞாபகம் வரவே தூசி தட்டி இந்த பதிவை போடுகிறேன். :-)
ஜெய் ஹிந்த்!
நியூஸ் சோர்ஸ் :
http://inneram.com/news/tamilnadu/3225-engineer-arrested-for-hacking-admk-site.html
Tuesday, January 26, 2016
கோவை புரட்சியில் தூக்கிலிடப்பட்ட 38 முஸ்லிம்கள்!
(படத்தில் உள்ளது இந்திய சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் பாடுபட்ட இந்திய இஸ்லாமிய தலைவர்கள்)
1800 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் திண்டுக்கல் காட்டுப் பகுதியிலிருந்து 5 புரட்சிப் படைப்பிரிவினர் ஆங்கில ராணுவ மையங்களைத் தாக்கிட கோவைக்குச் சென்று அதற்காக ஆயத்தமானார்கள். திப்பு சுல்தானின் மறைவுக்குப் பின் துவக்கப்பட்ட புரட்சியின் ஆரம்பக் கட்டம் இதுவாகும். எல்லா புரட்சியாளர்களும் ஆயுதம் தாங்கியிருந்தனர் அவர்களது பயணம் ரகசியமாக இருந்தது. திப்பு சுல்தான் படையில் போர் வீரர்களாகவும் தளபதிகளாகவும் பணியாற்றியவர்களும் விவசாயிகளும் இந்தப் புரட்சிப் படையில் இருந்தனர்.
இந்தப் புரட்சிப் படைக்கு ஹசம், அப்பாச்சிக் கவுண்டர், சாமையா ஆகியோர் தலைமையேற்று கோயம்பத்தூரை நோக்கி வழி நடத்திச் சென்றனர். தீரன் சின்னமலை இந்த வீரர்களுக்கு உரிய ஆணையை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
அரவாக்குறிச்சியைச் சேர்ந்த கௌரவக் கவுண்டரும், ஓசூரைச் சேர்ந்த புத்தே முஹம்மதுவும் தாராபுரத்தை நோக்கி புரட்சிப் படையை வழி நடத்திச் சென்றனர்.
இச்சப்பட்டியைச் சேர்ந்த ருனவ்னுல்லா கான் தலைமையில் புரட்சிப் படையின் இரண்டாவது அணி காங்கேயத்தை நோக்கிச் சென்றது.
1800, ஜூன் 3ஆம் நாள் கோவை நகரின் முக்கிய இடங்களிலெல்லாம் ஆங்கிலேய எதிரிகளை தாக்குவதற்கு புரட்சிப் படையினர் தயார் நிலையில் இருந்தனர்.
நன்கு ஆலோசிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த கோயம்புத்தூரின் ராணுவ கோட்டையை முற்றுகையிடும் திட்டம் ஆங்கிலேயருக்கு இரகசிய ஒற்றர்கள் மூலமாக தெரிந்தது. ஒரு சில இடங்களில் புரட்சிப் படைகள் தாக்குதல் நடத்தின. மற்ற பகுதிகளில் புரட்சிப் படையினர் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டனர்.
கோவைப் புரட்சித் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தேசியப் புரட்சிவாதிகளுக்கு உயர்ந்த அளவு தண்டனை வழங்குமாறும் பிடிபட்டவர்கள் அனைவரையும் இராணுவ முறைப்படி ஒரே விசாரணை நடத்தி அதில் எது அதிக அளவு தண்டனை என்று கலெக்டர் கருதுகிறாரோ அந்த தண்டனையையோ அல்லது மரண தண்டனையோ உடனடியாக வழங்கிடுமாறு கவர்னர் எட்வர்ட் கிளைவ் சேலம் கலெக்டருக்கு ஆணை பிறப்பித்தார். கவர்னரின் ஆணைக்கினங்க சேலம் மாவட்டக் கலெக்டர் வில்லியம் மாக்ஸிலியார்டு கோவைப் புரட்சியாளர்கள் 42 பேர்களை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தினர்.
இந்த 42 பேரில் 38 பேர் முஸ்லிம் வீரர்கள். 4 பேர் இந்து வீரர்கள். அனைவருக்கும் ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.
பல பகுதி மக்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதற்காக தாராபுரத்தில் 8 பேரையும் சத்திய மங்கலத்தில் 7 பேரையும் கோயம்புத்தூரில் 6 பேரையும் மற்றவர்களைப் பல்வேறு புரட்சி மையங்களிலும் பொது இடங்களிலும் வைத்து காட்டுமிராண்டித் தனமாக தூக்கிலிட்டுக் கொன்றனர் ஆங்கிலேயர்கள்.
கோவைப் புரட்சியில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட முஸ்லிம்கள்:
1.ஷம்னஸ்கான்
2.மொஹைதீன் கான்
3.தாராபுரம் சையது இமாம்
4.மான் கான்
5.பீர் சாஹிப்
6.ஷேக் மியான்
7.கோவை கலீஃபா அமீர்தான்
8.ருனா முஸ்டாஹ் கான்
9.குலாம் பாய் ஹைதர் கான்
10.ஜமாஷ் கான் அலி சாஹிப்
11.கொடிக்கால் ஷேக் அலி
12.செவான் கான்
13.அலி சாஹிப்
14.முடா சாஹிப்
15.முஹம்மது சாஹிப்
16.மிர் கமருத்தீன் கான்
17.ஷேக் மொஹைதீன்
18.கமருத்தீன்
19.சோலை மலை ஜமீன்தார்
20.ஃபதே முஹம்மது
21.ஷேக் மதார்
22.ஷேக் புத்தீன்
23.குலாம் உசேன் ஷேக் அலி
24.பீர் முஹம்மது
25.குலாம் அலி
26.சோட்டா அப்துல் காதர்
27.முஹம்மது ஷெரீஃப்
28.ஷேக் மீரா
29.ஷேக் முஹம்மது திவாஹர்
30.பீர் முங்கப்பா அலி
31.சையது மொஹர்தீன்
32.ஹைதர்கான்
33.மொஹிர்தீன் கான்
34.ஷேக் முஹம்மது
35.தீதார் ஷேக் இமாம்
36.பீனா ஷேக் மியான்
37.ஓசூர் புத்தே முஹம்மது
38.ருவைனுல்லா கான்
தகவல் உதவி
விடியல் வெள்ளி
ஆகஸ்ட்-செப்டம்பர்-2008
இத்தனை பேர் விடுதலைப் போரில் பொதுவில் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். நமது வரலாற்று பாடநூல்களில் இந்த செய்தியை நாம் என்றாவது பார்த்திருக்கிறோமா?
'நாங்கள் இனி வெள்ளையருக்கு எதிராக போராட மாட்டோம்' என்று மன்னிப்பு கடிதம்எழுதி கொடுத்தவர்கள் எல்லாம் 'விடுதலை போராட்ட வீரர்கள்' என்று நாட்டில் வலம் வருகின்றனர். உண்மையிலேயே இந்த நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை இழந்த சமுதாயம் துரோகி பட்டம் சுமத்தப்பட்டு விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் உள்ளது.
நமது நாட்டின் குடியரசு தினமான இன்றைய தினத்தில் தூக்கிலிடப்பட்ட அந்த வீர புருஷர்களை நினைவு கூர்வோம்.
Monday, January 25, 2016
சகோதரர் யூனுஸூக்கு அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது!
சென்னையின் மழை வெள்ள பாதிப்பில் பல உயிர்களை காப்பாற்றி தனது வீட்டையும் தங்காலிக தங்குமிடமாக்கிய சகோதரர் யூனுஸூக்கு அவரது செயலை பாராட்டி 'அறிஞர் அண்ணா' விருது வழங்கப்பட்டது.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
எனது நாடு சிறந்த ஆட்சியாளர்களை பெற்று மத மோதல்கள் இல்லாத நாடாக மாறி சகல சவுகரியங்களும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
அஜ்மீர் தர்ஹாவில் நடக்கும் அட்டூழியங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு வட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டேன். டெல்லி, ஆக்ரா சுற்றப்பாரக்க திட்டம். அதன...
Posted by Nazeer Ahamed on Saturday, January 23, 2016
சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு வட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டேன். டெல்லி, ஆக்ரா சுற்றப்பாரக்க திட்டம். அதன்படி க்ரேண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸில் பயணத்தை தொடர்ந்தோம். ஆக்ரா சுற்றிப் பார்த்து விட்டு அஜ்மீருக்கும் போகலாம் என்று எனது தாயார் விருப்பப்பட்டார். சுற்றிப் பார்க்க மட்டுமே அங்கு எந்த வேண்டுதலும் செய்யக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் பேரில் அஜ்மீருக்கும் சென்றோம். உணவகங்களில் நல்ல ருசியான சாப்பாடு. இனிப்பு பதார்த்தங்களும் புதிய புதிய வகைகளாக இருந்தன. அஜ்மீர் தர்ஹாவை பார்வையிட சென்றோம். அன்று வெள்ளிக் கிழமை. வழக்கத்தை விட அதிகமான கூட்டம். கும்பல் கும்பலாக போர்வை போர்த்த ஆட்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
தர்ஹாவின் உள்ளே நுழைந்தவுடன் தாடியும் ஜிப்பாவும் தலைப்பாகையுடன் ஒருவன் வந்து 'வெளியூரா? நான் சுற்றிக் காண்பிக்கிறேன் வாருங்கள்' என்று அழைத்துச் சென்றார். பெரிய தாடியோடு ஒரு முல்லா அமர்ந்திருந்தார். 'இவரிடம் துவா செய்ய சொல்லுங்கள். எல்லாம் கை கூடும்' என்றார். 'இறைவனிடம் நானே கேட்டுக் கொள்கிறேன்' என்று சொல்லி விட்டு நகர ஆரம்பித்தேன். என்னை ஒரு மாதிரியாக அந்த ஆள் பார்த்துக் கொண்டே உண்டியல் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அந்த உண்டியலின் மேல் பகுதிக்கு ஏணி வைத்துள்ளார்கள். அவ்வளவு பெரியது. எண்ணெய் கொப்பரை என்று சொல்வார்களல்லவா அது போல் ராட்சஸ உண்டியல். மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பணங்களையும் பொருட்களையும் வீசிக் கொண்டிருந்தனர். மக்களின் அறியாமையை நினைத்து வருத்தமுற்றேன். அந்த காணிக்கைகள் எல்லாம் அங்கே உட்கார்ந்து உண்டு கொழுத்து வாழும் முல்லாக்களுக்கே செல்கின்றது. என் தாயாரும் மனைவியும் பய பக்தியோடு அந்த அடக்கஸ்தலத்தை பார்வையிட்டனர். ஒரு முல்லா உட்கார்ந்து கொண்டு ஏதேதோ ஓதிக் கொண்டு மக்களிடமிருந்து காணிக்கைகளை வாங்கிக் கொண்டிருந்தார். 'ரீல் உட்ரான்... ரீல் உட்ரான்' என்று தாயாரிடம் தமிழில் சொன்னேன். 'பேசாம இரு... தமிழ் தெரிஞ்சவங்க யாராவது கேட்டா பிரச்னையாயிடும்' என்று பயந்தார்கள். பிறகு உண்டியலில் பணம் போட சொல்லி அந்த ஆள் கேட்டுக் கொண்டார். மேலே ஏறி வேண்டா வெறுப்பாக இருபதோ, ஐம்பதோ ரூபாயை போட்டேன். 'அவ்வளவுதானா? வெளியூரிலிருந்து வருபவர்கள் 2000, 3000 என்று அள்ளி வீசுவார்கள்' என்றார். நான் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
ஏழைகள் வழி நெடுக உட்கார்ந்து யாசித்துக் கொண்டிருந்தனர். இடையிடையே இசை முழக்கங்களோடு பல க்ரூப்களாக வந்து போர்வை போர்த்திக் கொண்டிருந்தனர். இது போல் போர்வை போர்த்துவது யார் சொல்லிக் கொடுத்ததோ தெரியவில்லை. இஸ்லாமிய நடவடிக்கைகள் எதுவுமே அங்கு இல்லை. உழைக்காமல் உண்டு கொழுக்கும் முல்லாக்களின் மார்க்க முரணான செயல்கள் எங்கும் நிரவி கிடந்தது.
இந்த வீடியோ கிளிப்பையும் பாருங்கள்: அஜ்மீர் தர்ஹாவில் நடக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். இதுதான் இஸ்லாம் காட்டிய வழிமுறையா? அரை குறை உடையோடு இவ்வாறு ஆண்களோடு கலந்து நடனம் ஆடுவதுதான் நபிகள் நாயகம் கற்றுத் தந்த வழிமுறையா? இஸ்லாமிய சட்டங்களை குழி தோண்டி புதைப்பதற்காக எதிரிகளால் நயவஞ்சகமாக புகுத்தப்பட்டதே இந்த தர்ஹா கலாசாரம். இதுவரை இதன் தீங்குகளை விளங்காமல் இருந்தோம். இனி வருங்காலங்களிலாவது தர்ஹா மாயையிலிருந்து விலகி ஏக இறைவனை மட்டுமே வணங்குவோம் என்ற சங்கல்பம் எடுப்போமாக!
Sunday, January 24, 2016
பொங்கல் பற்றி ஷோபா சக்தியின் அருமையான அலசல்!
பொங்கல் பற்றி ஷோபா சக்தியின் அருமையான அலசல்!வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்...
Posted by Nazeer Ahamed on Sunday, January 24, 2016
பொங்கல் பற்றி ஷோபா சக்தியின் அருமையான அலசல்!
வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்
2009 ஜனவரி ‘த சண்டே இந்தியன்’ இதழில் ‘தைப்பொங்கல் அனைத்துத் தமிழர்களின் விழா கிடையாது, அதுவொரு இந்து மதப் பண்டிகையே’ என நான் ஒரு கட்டுரை எழுதியபோது பெரியளவில் எதிர்வினைகள் ஏதும் எழவில்லை. இம்முறை பொங்கலையொட்டி அதே கருத்தை நான் சமூக வலைத்தளங்களில் சொன்னபோது கன்னா பின்னாவென்று எதிர்வினைகள் கிளம்பலாயின. வழமைபோலவே ‘இது தமிழர்களைக் கூறுபோடும் முயற்சி’ என்றும் பல எதிர்வினையாளர்கள் சொல்லத் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் ஆங்காங்கே கிளம்பும் ‘முப்பாட்டன் முருகன்’ போன்ற தமிழ்த்துவ எழுச்சிகள் இந்த எதிர்வினைகள் எனப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.
இன்றைக்கு முப்பது வருடங்களிற்கு முன்புவரை இந்துகளைத் தவிர்ந்த ஏனைய மதத்தவர்கள் தைப் பொங்கல் கொண்டாடியதேயில்லை. முப்பது வருடங்களிற்கு உள்ளாக மிகச் சில கத்தோலிக்க ஆலயங்களில் மட்டுமே பொங்கலிடும் வழக்கம் நுழைந்திருக்கிறது. ஏனைய கிறிஸ்தவப் பிரிவுகளின் ஆலயங்களில் பொங்கலிடும் வழக்கம் இன்றுமில்லை. மசூதிகளிலும் பொங்கிப் படைக்கும் வழக்கமில்லை. இந்துகளைத் தவிர்த்த ஏனைய தமிழ்பேசும் மதத்தவர்கள் இன்றுவரை தங்களது வீடுகளில் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. அவ்வாறானால் இதை எவ்வாறு தமிழர்களின் பொது விழா என அழைக்கமுடியும்?
இன்றைக்கு ஓர் நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழ்ச் சமூகத்தில் தலித்துகளின் உரிமைகளும் நிலமைகளும் எவ்வாறிருந்தன என்பது எல்லோரும் அறிந்ததே. கோயிலிற்குள் நுழைய முடியாது, கோயில்களில் தேங்காய் உடைக்க முடியாது, பொதுக் குளங்களில் குளிக்க முடியாது, தண்ணீர் அள்ள முடியாது, நிலம் வைத்திருக்க உரிமையில்லை, பொது வழிகளில் நடமாடக்கூடாது, மேற்சட்டை அணிய முடியாது, தாலி கட்ட உரிமையில்லை, அவ்வளவு ஏன் சில பிரிவினருக்கு வீட்டில் பாயாசம் சமைக்கக் கூட உரிமையில்லை. அவ்வாறெனில் இந்த மக்கள் உண்மையில் பொங்கலைக் கொண்டாட வாய்ப்புகள் இருந்தனவா? பிற சாதித் தமிழர்களோடு பொங்கலைப் பகிர்ந்துண்டு களித்தார்களா? இல்லையெனில், வரலாற்றுரீதியாக இதுவொரு சாதி இந்துகளின் பண்டிகையே தவிர ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகை அல்ல.
எந்த நேரத்தில் வரலாறு என்ற பெயரை உச்சரித்தேனோ தெரியாது, பொங்கல் பிரியர்கள் பொங்கல் தமிழர்களின் ஆதி விழாவே என நிறுவுவதற்காக, சங்க காலம்வரை ஆதாரங்களைத் தேடிச் சென்றார்கள். அகநானூறில் ஆதாரம் இருக்கிறது என்றார்கள், புறநானூறில் ‘புரூவ்’ இருக்கிறது என்றார்கள். ஆனால் யாரும் இதுவரை உருப்படியாக ஓர் ஆதாரத்தைக் கூடக் காட்டியதில்லை. தை முதல் நாளில், தமிழர்கள் பொங்கல் விழா எடுத்தார்கள் என்பதற்கு எந்த இலக்கியத்திலிருந்தும் அவர்களால் ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை. எனவே, பழந்தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும், விவசாயத்திற்கு மழை அருளிய இந்திரனுக்கு புதியவற்றைப் பொங்கலிட்டு வழிபடும் ‘இந்திரவிழா’வின் எச்சமா இன்றைய பொங்கல் என நான் கேட்க வேண்டியிருந்தது.
தை முதல் நாளில் பொங்கலிடுவதின் காரணம், தாற்பரியம் மற்றும் வரலாறு குறித்து மிகத் தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. தேடுதலில் ஆர்வமுள்ளவர்களிற்காக இணையம் முழுவதும் கட்டுரைகளும் ஆதாரங்களும் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றின் சாரங்களைத் தொகுத்துக்கொள்ளலாம்:
தை முதல் நாளில் சூரியனிற்கு பொங்கலிடும் வழக்கத்தின் அடிப்படை ‘மகர சங்கராந்தி’ ஆகும். புவி சூரியனைச் சுற்றி வந்தாலும், இந்துமத சாஸ்திரங்கள் பன்னிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதுகின்றன. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கித் தனது பயணத்தை திருப்புகின்ற நாள் -மகர இராசியினுள் பிரவேசிக்கும் நாள் – மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ‘சங்கரமண’ எனில் நகரத் தொடங்கு எனப் பொருள். இதுவே இந்நாளில் இந்துகள் சூரியனிற்குப் படையலிட்டு எடுக்கும் விழா ‘சங்கராந்தி’ என அழைக்கப்பட காரணமாயிற்று. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று தொடங்குகிறது. இந்த நாளில்தான் இன்றுவரை தைப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. அதனால்தான் இந்துப் பஞ்சாங்கக் கணிப்புக்கு ஏற்றவாறு பொங்கல் விழாவும் ஓர் ஆண்டில் சனவரி 15ம் நாளும் இன்னொரு ஆண்டில் சனவரி 14ம் நாளும் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் பொங்கல் 14ம் தேதியா அல்லது 15ம் தேதியா எனத் தீர்மானிப்பது இராசிபலனும் சோதிடர்களும்தானே தவிர தமிழரின் வரலாறு அதைத் தீர்மானிப்பதில்லை.
இல்லை, இந்தப் பஞ்சாங்கத்திற்கும் தமிழர்களின் பொங்கலிற்கும் தொடர்பில்லையெனில் ஏன் பொங்கல் விழா ஒரு நிலையான நாளில் அல்லாமல் 14 – 15 என மாறி மாறிக் கொண்டாடப்படுகின்றது என நான் கேட்பேனா மாட்டேனா? இன்றுவரை தமிழ் பஞ்சாங்கக் கலண்டர்கள் இந் நாட்களைச் ‘சங்கராந்திப் பொங்கல்’ என்றே குறிப்பிடுகின்றன.
இந்த நாளை ஏதோ தமிழர்கள் மட்டும்தான் கொண்டாடுவதாகவும் இது தமிழர்களிற்கே உரித்தான விழாவாகவும் நினைத்துவிட வேண்டியதில்லை. இதே நாளை மகர ஜோதி, லோரி , உத்தராயண், மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி என்று இந்தியா முழுவதிலுமுள்ள இந்துகள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகிறார்கள்.
மூடத்தனமான இராசிபலன் கணிதத்தை முன்வைத்துக் கொண்டாடப்படும் விழாவையும், அந்நாளில் சூரியனையும் நெருப்பையும் வணங்கிக் கற்கால வழமையைத் தொடர்வதையும், தமிழர்களின் விழாவென ஏந்தித் தாங்குவதையும் எவ்வாறு புரிந்துகொள்ளவது? வேறொரு சரியான காரணம் எனக்குச் சொல்லப்படாதவரை இதைத் தமிழ்த்துவ முகமூடிக்குள் உறைந்திருக்கும் இந்துத்துவம் என்று மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது.
இந்துக்களின் கொண்டாட்டமாக இருந்துவந்த இந்த விழா எந்தக் கட்டத்தில் தமிழர்களின் விழாவென்ற குரலைப் பெறுகிறது? சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் மறைமலையடிகள் போன்றவர்கள் இந்தக் குரலை ஒலித்தாலும் இதை ஓங்கி ஒலித்தவர் தந்தை பெரியார்.
அவர் விடுதலை இதழில் (30.01.1959) இவ்வாறு எழுதினார்:
“தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பதுஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன்.”
இங்கே பெரியார் பொங்கல் விழாவை தமிழ் மரபு , தொன்மை என்றெல்லாம் ஏதும் சொன்னாரில்லை. “ஏதாவது ஒன்று வேண்டுமே” என்பதற்காக தீபாவளியைக் காட்டிலும் சமயத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என அவர் மதிப்பிட்ட பொங்கல் பண்டிகையைத் தமிழர் விழாவாகப் பரிந்துரைக்கிறார்.
அதேவேளையில் “நான் சொல்கிறேன் என்பதால் நம்பாமல் உங்கள் பகுத்தறிவால் நான் சொல்வதை ஆராய்ச்சி செய்து நல்லதை ஏற்று அல்லாததைத் தள்ளிவிடுங்கள்” என எப்போதும் உரைத்தவரும் பெரியார்தான். இருபத்தோராம் நூற்றாண்டில், இந்து சமயக் காலக்கணிதத்திற்கு உட்பட்டு சமஸ்கிருதமொழியில் பயன்பாடுள்ள ஒரு மடத்தனமான சாஸ்திரத்தை தமிழர் விழாவென நாங்கள் தூக்கிப்பிடிக்கத்தான் வேண்டுமா? சூரியன் தனுவை விட்டு மகர ராசிக்கு நகர்ந்தால் நமக்கென்ன மக்களே! அதுக்கெல்லாமா நாங்கள் விழா எடுக்க முடியும்!
தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இந்து சமயக் காலக் கணித சாஸ்த்திரத்தின்படிக்குக் கொண்டாடும் ஒரு விழாவை ஒட்டுமொத்தத் தமிழர்களின் விழாவாக, ஏனைய மதத்தவர்கள் மீதும் எல்லாத் தமிழர்கள் மீதும் திணிக்கும் செயல் தமிழ்த்துவமா இல்லை இந்துத்துவமா?
சமூக வலைத்தளங்களில் மூர்க்கத்தோடு இயங்கும் இந்துத்துவ சக்திகளை நம்மால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். ஆனால் நசிந்து நசிந்து “யார் என்ன செய்தாலும் என்ன… எனக்குப் பொங்கல் தின்னக் கிடைத்தால் சரிதான்” என்று மறைமுகமாக முட்டுக்கொடுப்பவர்கள்தான் ஆபாசமானவர்கள். இது வெறுமனே பொங்குதல், தின்னுதல் என்றளவில் நிற்கமட்டும் நமக்கென்ன பிரச்சினை. ஆனால் இதையொரு தமிழ் பண்பாட்டுப் பொது அடையாளமாக வலியத் திணிக்க முற்படும்போதுதான் நாம் மறுத்துப் பேச வேண்டியிருக்கிறது.
பொங்கல் விழாவால் தமிழர்களை ஒன்றிணைப்பதை, நான் கேள்விகேட்டுக் குழப்பிவிடுகிறேன் என்றுகூட ஒரு பொங்கல் பிரியர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அய்யா! நீங்கள் சொல்வது போல தமிழர்கள் பல்லாயிரம் வருடங்களாகப் பொங்கலைச் சேர்ந்து கொண்டாடிவருகிறார்களென்றால் என்ன மயிருக்கு இந்தக் கணம்வரை சாதியாகப் பிரிந்துகிடக்கிறார்கள் எனக் கேட்கிறேன். தமிழர்களை வெறுமனே புக்கை, சுண்டல் கொடுத்து இணைக்கலாமென்றா நீங்கள் நினைக்கிறீர்கள்?
கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல திருப்பித் திருப்பிச் சொன்னால், இப்போது தமிழர் ஆண்டென அழைக்கப்படும் பிரபவ-விபவ என்னும் அறுபது ஆண்டுகள் வட்டம் இந்துக் காலக் கணித முறையை (சக சம்வாட் ) அடிப்படையாகக்கொண்ட ஆண்டுவட்டம். இந்தக் காலக் கணித முறையில் இராசி சக்கரத்தில் தனு இராசியிலிருந்து மகர இராசிக்குள் சூரியன்நுழையும் நாளே தை மாதத்தின் முதல்நாள் ஆகிறது. இந்த நாள் நிலையானதல்ல. இராசிபலன் கணிப்பிற்கேற்ப முன்னும்பின்னுமாக மாறும். இந்த நாட்களில்தான், சோதிடர்கள் குறிக்கும் பஞ்சாங்க தினங்களில்தான் நீங்கள் சூரியனிற்குப் பொங்கல் இடுவீர்களானால் இது இந்து சாஸ்திர வகைப்பட்டதே ஒழிய இது ஒருபோதும் தமிழ்த்துவ விழாவாகாது.
சாஸ்திரங்களென்று சொன்னேன். “அதனால் இப்ப என்ன வந்தது?” என்று ஒரு சிறங்கைப் பொங்கல் உண்ட மிதப்பில் கேட்காதீர்கள். கீழே அண்ணல் அம்பேத்கர் சொல்வதைக் கவனியுங்கள்:
“நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி!”
-ஷோபா சக்தி
பிரபல எழுத்தாளர்
இஸ்லாம் அந்நிய மார்க்கமா?
தோட்டி என்றும் தொம்பன் என்றும்
சூத்திரன் என்றும் பார்பனன் என்றும்
வைசியன் என்றும் சண்டாளன் என்றும்
மனிதனை பிரித்தாளும் வர்ணாசிரமமே!
குவைத் நாட்டில் இஸ்லாமியரின் கருவறை
என்று உலகோரால் வியந்து பார்க்கப்படும்
பள்ளிவாசலின் உள் அரங்கிலேயே இன்று
திருமாவை பேச வைத்து அழகு பார்தோம்!
இப்போது சொல்லுங்கள் நியாயவான்களே!
இஸ்லாம் அந்நிய மார்க்கமா? அல்லது
இந்த மண்ணுக்கேற்ற மார்க்கமா? என்று.
Saturday, January 23, 2016
மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை!
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் தனியார் இயற்கை மற்றும் யோக மருத்துவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. ஏற்கெனவே, இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மருத்துவர்கள் இல்லை என விழுப்புரம் ஆட்சியரிடம் மாணவ, மாணவிகள் மனு அளித்தனர். சிலர் தீக்குளிக்க முயற்சித்ததை தொடர்ந்து உண்மை நிலை அறிய ஒரு குழுவை விழுப்புரம் ஆட்சியர் லட்சுமி அமைத்தார்.
கள்ளக்குறிச்சி கோட்டாச்சியர் மாலதி தலைமையிலான அந்த குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், ‘கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை’ என கூறி இருந்தார். இந்த நிலையில், அந்த கல்லூரியில் படிக்கும் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகளும் கல்லூரிக்கு எதிரே உள்ள ஒரு கிணற்றில் குதித்து நேற்று மாலை தற்கொலை செய்தனர். தகவலறிந்த சின்ன சேலம் போலீஸார் விரைந்து வந்து 3 பேரின் உடலையும் கிணற்றில் இருந்து மீட்டனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட 3 மாணவிகளும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை பற்றிய முழு தகவல்களும் உடனடியாக தெரியவில்லை. வெளி நபர்களின் பாலியல் தொந்தரவால் மாணவிகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் குறிப்பிட்டனர்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
24-01-2016
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)
இறைவன் கொடுத்த இந்த சிறந்த உயிரை நாமாக போக்கிக் கொள்ள நமக்கு உரிமையில்லை. எந்த சிக்கல் வந்தாலும் அதனை இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு மனதை லேசாக்குவோம். மனச்சிதைவிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.
புனித நகரம் என்று சொல்லப்படும் காசியின் நிலை!
புண்ணிய தலங்கள் என்பது சுகாதாரமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மன நிம்மதி தேடி செல்பவர்கள் நோயை விலை கொடுத்து வாங்கியத...
Posted by Nazeer Ahamed on Saturday, January 23, 2016
புண்ணிய தலங்கள் என்பது சுகாதாரமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மன நிம்மதி தேடி செல்பவர்கள் நோயை விலை கொடுத்து வாங்கியதாகி விடும். பாபரி மசூதி இடத்தில் கோவில் கட்டுவேன் என்று அடம் பிடிக்கும் இந்துத்வாக்கள் காசி போன்ற இந்துக்களின் புனித தலங்களை தூய்மைபடுத்தி அங்கு வருபவர் நோய் தொற்றாமல் பார்த்துக் கொள்வார்களாக. வல்லபாய் பட்டேலுக்கு கோடிக் கணக்கில் சிலை வைக்க பாடுபடும் இந்த கையாலாத அரசு காசியின் அவல நிலையை கண்டு கொள்வதில்லை. எல்லாம் வெளி வேஷம் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.
மெக்காவில் கஃபாவுக்கும் இதே போன்று இறந்த உடல்கள் ஒரு நாளுக்கு நூற்றுக் கணக்கில் தொழ வைப்பதற்காக வந்து கொண்டிருக்கும். அந்த இறந்த உடல்கள் மிக கண்ணியமாக போர்த்தப்பட்டு உலக மக்கள் அனைவரின் பிரார்தனையோடு உடல்கள் அடக்கப்படுகிறது. அங்கும் உடல்கள் ஒதுக்குப் புறத்தில் அழகிய முறையில் குளிப்பாட்டப்பட்டு சுற்றுப் புறத்துக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாமல் அடக்கப்படுகிறது.
இறந்த உடல்களை வைத்து வாழும் உயிர்களை சிரமப்படுத்தாமல் சிறந்த வழிமுறைகளை இனியாவது இந்து மத ஆர்வலர்கள் கண்டு அதன்படி செயல்படுத்துவார்களாக!
Friday, January 22, 2016
சாதிக் கொடுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்!
1.மலேபுலா ஸ்ரீகாந்த், ஜனவரி 1, 2007 - இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, மும்பை
2.அஜய் எஸ். சந்திரா, ஆக. 26, 2007 – ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), பெங்களூரு
3.ஜஸ்பிரீத் சிங், ஜனவரி 27, 2008 – இறுதி ஆண்டு எம்பிபிஎஸ், அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர்
4. செந்தில் குமார், பிப்ரவரி 23, 2008 – பி.எச்.டி, இயற்பியல் துறை, ஹைதராபாத் பல்கலைக்கழகம்
5. பிரசாந்த் குரீல், ஏப்ரல் 19, 2008 - முதலாம் ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
6. ஜி. சுமன், ஜனவரி 2, 2009 – இறுதி ஆண்டு எம்.டெக், ஐஐடி, கான்பூர்
7. அங்கிதா வேக்தா, ஏப்ரல் 20, 2009 – முதலாம ஆண்டு, பி.எஸ்.சி (நர்சிங்), சிங்கி நர்சிங் நிலையம், அகமதாபாத்
8. டி. ஸ்யாம் குமார், ஆக. 13, 2009 – முதலாம் ஆண்டு பி.டெக், சரோஜினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹைதராபாத்
9. எஸ். அமராவதி, நவ 4, 2009 – தேசிய இளநிலை பெண் குத்துச்சண்டை வீரர், சிறப்பு பயிற்சி மையம், ஆந்திரப் பிரதேச விளையாட்டு ஆணையம், ஹைதராபாத்
10. பன்தி அனுஷா, நவம்பர் 5, 2009 – பி.காம், இறுதி ஆண்டு, வில்லா மேரி கல்லூரி, ஹைதராபாத்
11. புஷ்பாஞ்சலி பூர்த்தி, ஜனவரி 30, 2010 – முதலாம் ஆண்டு, எம்.பி.ஏ., விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெங்களூரு
12. சுஷில் குமார் சௌத்ரி, ஜனவரி 31, 2010 - இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (முன்னாள் கேஜிஎம்சி), லக்னோ
13. பால்முகுந்த் பாரதி, மார்ச் 3, 2010 – இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், எய்ம்ஸ், புது தில்லி
14. ஜே.கே. ரமேஷ், ஜூலை 1, 2010 - இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி, விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு
மாதுரி சேலே, நவம்பர் 17, 2010 – இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
15. ஜி. வரலக்ஷ்மி, ஜனவரி 30, 2011 – பி.டெக் முதலாம் ஆண்டு, விக்னான் பொறியியல் கல்லூரி, ஹைதராபாத்
16. மனிஷ் குமார், பிப்ரவரி 13, 2011 – மூன்றாம் ஆண்டு, பி.டெக், ஐஐடி, ரூர்க்கி
17. லினேஷ் மோகன் காலே, ஏப்ரல் 16, 2011 – இளநிலை, நோய் எதிர்ப்புத் திறனுக்கான தேசிய நிறுவனம், புது தில்லி
18. அனில் குமார் மீனா, மார்ச் 3, 2012 – முதலாம் ஆண்டு, எய்ம்ஸ், புது தில்லி
பெரும்பகுதி கிராமப்புற இந்தியாவில் தலித் மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்யவும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள். ஓம் பிரகாஷ் வால்மீகி என்ற இந்தி தலித் எழுத்தாளர் தனது சுயசரிதையில் தலைமை ஆசிரியரால் தனது சாதித் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட அவமானத்தை நினைவு கூர்கிறார். ‘போய் விளையாட்டு மைதானம் முழுவதையும் பெருக்கு, இல்லா விட்டால் உன் குண்டியில் மிளகாய்களைத் திணித்து பள்ளியிலிருந்து துரத்தி விடுவேன்’ என்று தலைமை ஆசிரியர் அவரிடம் சொன்னாராம். பகிர்ந்து கொள்வதற்கான இது போன்ற கொடும் நிகழ்வுகள் முறையாகக் கல்வி கற்ற ஒவ்வொரு முதல் தலைமுறை தலித்திடமும் இருக்கின்றன.
(தகவல்: இன்சைட் அறக்கட்டளை) நன்றி: ஆனந்த், அவுட்லுக்
Thursday, January 21, 2016
திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை
26-11-2015 அன்று குஞ்சம்மாள் என்ற என்பது வயதைக் கடந்த மூதாட்டி இயற்கை எய்தியுள்ளார். ஊரே வெள்ளக்காடாக இருந்த நேரம் அது. குஞ்சம்மாள் சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல முயற்சிக்கின்றனர், ஆதிக்க சாதியினர் தடுக்கின்றனர். குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகி புகார் கொடுக்கிறார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் மூன்று நாள் கடக்கிறது. பிணம் அழுகிக்கொண்டிருந்த நிலையில் “சடலத்தை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்லுங்கள்; இல்லையேல் நாங்களே அடக்கம் செய்வோம்” என்று தாழ்த்தப்பட்ட மக்களை நிர்பந்திக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்ற சூழலில் 29-11-2015 அன்று உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் பிணம் எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வயல்வெளி வழியாகச் சென்று அடக்கம் செய்யப்படுகிறது.
அடுத்த ஒரு மாதத்தில் 90 வயதைக் கடந்த குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து 03-01-2016 அன்று இயற்கை எய்துகிறார். பேரன் கார்த்தி இரவோடு இரவாக சென்னை சென்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 04-01-2016 அன்று நீதிமன்றம் “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லமுத்துவின் சடலம் கவுரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அவசர கோலத்தில் வயல்வெளியில் பாதை ஏற்படுத்தி உள்ளனர். வாய்க்கால்களில் மண்மூட்டைகளை அடுக்கி, சாலைகளை இணைத்துள்ளனர். தங்கள் நிலையில் உறுதியாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லமுத்து சடலம் வைத்துள்ள வீட்டில் ஒன்று குவிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மின்சாரத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி பகுதிக்கு மின் தொடர்பை துண்டித்துள்ளனர். “ஊரில் சாவு மின்தொடர்பை துண்டிக்கக் கூடாது” என்று கடைநிலை ஊழியர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “மேலிட உத்தரவு அமல்படுத்துங்கள்” என்று கடைநிலை ஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தங்களது இயலாமையையும், கையறு நிலையையும் கண்கலங்கியபடியும், தயக்கத்துடனும் மின்துறை ஊழியர்கள் வெளிப்படுத்தினர். திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் பட்டியலில் மின்வாரிய அதிகாரிகளையும் இணைக்கப்படவேண்டும்.
குளிர்சாதனப் பெட்டி செயல்படாமல் பிணம் அழுகத் தொடங்குகிறது. ஆகையால் அங்கிருந்த இளைஞர்கள் ஐஸ்கட்டிகளை வாங்கி வந்து சடலத்தைப் பாதுகாத்துள்ளனர். “இங்கேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கிறோம். நாங்களும் அதிலேயே விழுந்து சாகிறோம்” என்று பெண்கள் மண்ணெண்ணெயுடன் களத்தில் இறங்கியுள்ளனர். செல்லமுத்து சடலம் இருந்த இடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு மக்கள் விரட்டப்பட்டுள்ளனர். மேலத்தெரு, வடக்குத்தெரு மற்றும் பிற பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
நிலைமை கட்டுமீறவே மக்களிடம் பொதுப்பாதை வழியாக அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து சாலை பிரியும் இடத்தில் தடிஅடி நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களைக் கைது செய்து சடலத்தைக் கைப்பற்றி வயல்வழியே எடுத்துச் சென்றது காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், தேவர் – இமானுவேல் குருபூசை பாதுகாப்பு புகழ் ஜெயசந்திரன் காவல் துறையினரைப் பிணம் தூக்க வைத்து சாதனை படைத்துள்ளார். குஞ்சம்மாள் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே செல்லமுத்துவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.
500-க்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்து சம்பவத்தை வெளியுலகிற்கு அறிவித்தனர். மயிலாடுதுறையிலும், திருவாரூலும் சமூக ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தில் நிலவிய கள்ள மௌனத்தைக் கலைத்துப் பொது விவாதத்தைத் தூண்டியுள்ளது.
நன்றி வினவு
http://www.vinavu.com/2016/01/21/thirunalkondacheri-caste-atrocity-report/
இப்படி ஒரு கொடுமை உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா? அவர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தானே! இறந்த பிணத்தை தெரு வழியாக தூக்கிச் செல்வதில் அப்படி என்ன கௌரவம் குறைந்து போய் விடும். திட்டமிட்டு பிணம் அழுக வேண்டும் என்பதற்காக மின்சாரத்தையும் துண்டித்திருக்கிறார்கள்? வயல் பாதை கரடு முரடாக இருக்கும் என்பதால் மணல் மூட்டைகளை போட்டு தற்காலிக சாலை அமைத்துள்ளதை பாருங்கள். சிரமப்பட்டு மணல் மூட்டை கொண்டு சாலைகள் அமைப்பார்கள். ஆனால் தெரு வழியாக பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். என்னவொரு அழகிய மனிதாபிமானம்.
மனித குலம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வு இது.
Wednesday, January 20, 2016
எங்கு சென்றாலும் சாதிக் கொடுமை!
எங்கு சென்றாலும் சாதிக் கொடுமை!
கடந்த 4 ஆண்டுகளில் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்!
டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ என்கிற அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர சில ஆண்டுகளுக்கு முன்னால் பணிக்கப்பட்ட தோராட் குழு, பல அவலங் களை அம்பலப்படுத்தும் உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் விடுதியின் ஒரு புறத்தில் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் சமமாகப் பங்கேற்க முடியாமல் ஓரம்கட்டப்படுகின்றனர் என்று அது கூறியிருந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக்கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் சமூகப் புறக்கணிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த அவலத்தை நீக்க வேண்டும் என்றால் முதல் படியாக அரசு, இப்படியொரு நிலை நிலவுகிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆத்மசுத்தியுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்!
தமிழ் இந்து நாளிதழ்
21-01-2016
'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை!
//*இந்த உலகில் கிட்டத்தட்ட 52 முஸ்லீம் ந நாடுகள் உள்ளன, அதில் எத்தனை நாடுகள் ஹஜ் மானியம் கொடுக்கின்றன ?//
வீர முத்து பால கிருஷ்ணன் என்ற இந்துத்வாவாதி நேற்று @ram nivas பதிவில் கக்கிய விஷமே இது. அதாவது 'ஹஜ் மான்யம்' என்ற பெயரில் மத்திய அரசு கோடிக் கணக்கில் இஸ்லாமியருக்கு கொட்டிக் கொடுப்பதாக ஒரு பொய்யை அரங்கேற்றுகிறார். ஹஜ் பயணம் செய்வோரிடமிருந்து மத்திய அரசு கொள்ளையடிக்கிறது என்பதுதான் உண்மை.
'ஹஜ் மான்யத்தால்' பலன் பெறுவது பெரும்பாலும் பார்பனர்களே. இது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏர் இந்தியா நிறுவனத்தில் அதிகம் வேலை செய்வது யார்,? பார்பனர்கள். ஓகே... இனி எனது பழைய பதிவை படியுங்கள் உண்மை விளங்கும்.
---------------------------
பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு? வசதியுடைய முஸ்லிம்களுக்குத்தானே கடமை' என்ற வாதத்தை வைக்கின்றனர். நியாயமான கோரிக்கையும் கூட. இது பற்றி இந்த பதிவில் அலசுவோம்.
கேரள ஹஜ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.அப்துல் ரஹீம் அவர்கள் தேஜஸ், மாத்யமம் மலையாள நாளிதழ்களில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:
ஹஜ் மான்யம் என்று கேட்டவுடன் புனித பயணிகளை அரசு இலவசமாக அழைத்துச் செல்வதாகவோ அல்லது புனித யாத்திரைக்கு பெருந் தொகையை ஒதுக்குவதாகவோ பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் இதில் துளி கூட உண்மையில்லை.
மத்திய அரசின் கீழ் ஹஜ் கமிட்டி வழியாக செல்லும் ஒவ்வொரு புனித பயணியும் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக சராசரியாக ஒன்றே கால் லட்ச ரூபாய் கட்டுகிறார். இதில் விமானக் கட்டணம் தற்பொழுது 16 ஆயிரம் ஆகும். இது நிரந்தர கட்டணமாகும். விமான பயணத்திற்கு இதனை விட அதிக கட்டணம் தேவைப்பட்டால் அதனை அரசு வழங்கும். இதுதான் ஹஜ் மான்யம். இந்த மான்யமும் அரசின் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனியார் விமானங்களுக்கு கிடையாது.
உதாரணமாக...கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் கோழ்க்கோட்டில் இருந்து ஹஜ்ஜூக்கு புறப்படுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கோழிக் கோட்டிலிருந்து ஜெத்தா செல்வதற்கு ஏர் இந்தியா வசூலிக்கும் தொகை 17300 ரூபாய் ஆகும். (தற்போது சில ஆயிரங்கள் வித்தியாசப்படலாம்). இந்த தொகைப்படி ஒரு ஹஜ் பயணிக்காக அரசு செலுத்த வேண்டிய மானியத் தொகை வெறும் 1300 ரூபாய் மட்டுமே! (ஜெட் ஏர்வேஸின் விமானக் கட்டணத்தோடு ஒப்பிட்டால் ஒவ்வோர் ஹஜ் பயணிக்கும் ரூ 2000 அரசு திரும்ப தர வேண்டியிருக்கும்.
ஒன்றேகால் லட்ச ரூபாயை புனித ஹஜ் பயணத்திற்காக கட்டும் பயணி மேலதிகமான 1300 ரூபாயை கட்டத் தயங்குவாரா? அதனையும் நாங்களே வழங்குகிறோம் என்று ஹஜ் பயணிகள் கூறினாலும் அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. நாங்களே வழங்குகிறோம் என பிடிவாதம் பிடித்து வருகிறது. இங்கேதான் ஹஜ் மானியத்தின் பெயரால் அரசு நடத்தும் ஏமாற்று வித்தை அம்பலப்படுகிறது. அதாவது ஆரிய மூளை இங்குதான் வேலை செய்கிறது.
அது எப்படி என்று பார்ப்போமா!
கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு கண்டு பிடித்த வழிதான் இந்த ஹஜ் மானியம் என்பது. ஹஜ் மானியத்தின் பெயரால் ஒரு பெருந்தொகையை அரசு ஏர் இந்தியாவுக்கு தானமாக வழங்குகிறது. முந்தய ஆண்டுகளை கவனித்தால் இது புரிய வரும். 2008 ஆம் ஆண்டு ஹஜ் மானியமாக 770 கோடி ரூபாய் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முந்தய வருடம் 2007 ஆம் ஆண்டு 595 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளின் புள்ளி விபரங்களை பெற முயற்சி மேற்கொண்டபோது அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தகவலை தர மறுக்கின்றனர். ஹஜ் ஒதுக்கீடு, நல்லெண்ண பிரதிநிதித்துவக் குழு ஆகியன தொடர்பான வழக்கில் தகவல்கள் ஒருக்கால் வெளியாகலாம்.
2008 ஆம் ஆண்டு 1.10 லட்சம் புனித பயணிகள் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக அரசு ஏர் இந்தியாவுக்கு மானியம் என்ற பெயரால் அளித்த தொகை 770 கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு புனித பயணிக்கும் 70 ஆயிரம் ரூபாய் வீதம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.
எவ்வளவு கடுமையான சீசனாக இருந்தாலும் ஒரு புனித பயணிக்கு கோழிக்கோட்டில் இருந்து ஜெத்தவிற்கோ மதினாவிற்கோ சென்று விட்டு திரும்பி வர விமானக் கட்டணமாக ரூ 70 ஆயிரம் செலுத்தத் தேவையில்லை. விமானக் கட்டணத்திற்காக புனிதப் பயணிகள் அளிக்கும் 16 ஆயிரம் ரூபாயோடு சேர்த்து ரூ 770 கோடியை ஏர் இந்தியாவுக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு. பல பயணிகள் சவுதி விமானத்திலும் அனுப்பப்படுகின்றனர். அதற்கு மானியம் கிடையாது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் எழுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மானியமாக முஸ்லிம்களின் பெயரால் ஏர் இந்தியாவுக்கு அளிக்கிறது நமது கையாலாக அரசு.
ஏர் இந்தியாவில் பணி புரியும் நபர்களுக்கு நமது ஹஜ் மானியத் தொகை எப்படி அனுப்பப்படுகிறது என்பதை பார்த்தோம். நம் ரத்தத்தை உறிஞ்சி ஏர் இந்தியா குடும்பங்கள் சகல வசதிகளையும் பெற்று வாழ்கின்றன.
இனி வரும் காலங்களில் ஹஜ் புனித பயணம் செல்வோர் 'எங்களுக்கு மானியத் தொகை வேண்டாம்! அப்படி கொடுக்கும் பணத்தில் நாங்கள் ஹஜ் செய்ய விரும்பவில்லை' என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்கள் இதற்கான போராட்டங்களை அறிவிக்க வேண்டும். வழக்கும் தொடர வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த ஹஜ் மானியத்தில் உண்டு கொழித்த அனைத்து கருப்பு ஆடுகளும் யார் என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.
முஸ்லிம்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் சற்றும் சளைத்ததல்ல. ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இத்தனை ஆண்டுகள் ஹஜ் மானியம் யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது? இந்த மானிய பணத்தை இது நாள் வரை அனுபவித்தவர்கள் யார்? யார்? என்ற விபரங்களைக் கேட்க வேண்டும். முக்கியமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்.
ஆக....இஸ்லாமியரின் ஹஜ் மானிய பணத்தில் தனது ஜீவனை நடத்திக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம் என்பது இதன் மூலம் விளங்குகிறது.. இஸ்லாமியருக்கு உதவினோம் என்ற பெயரும் வந்து விடும்: ஏர் இந்தியாவின் ஊழியர்கள் சுகமான வாழ்வுக்கும் அடித்தளம் இட்டது போல் ஆகி விடும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ! :-(
'ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.... காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே'
Posted by சுவனப் பிரியன் at 12:22 PM
Tuesday, January 19, 2016
இறைவனிடம் பரிந்துரைக்க யாரையும் அணுகலாமா?
1985 தஞ்சாவூரில் வலிமார்கள் மாநாட்டில் பேசிய ஒரு அறிவுஜீவி, அல்லாஹ் நெருப்பு போன்றவன், நம் பிரார்த்தனைகள் மாவு போன்றது, அவ்லியாக்கள் சட்டி போன்றவர்கள்.,எனவே பிரார்த்தனைகள் அல்லாஹ்விடம் நேரடியாக கேட்க முடியுமா? மாவை நேரடியாக அடுப்பில் ஊற்றினால் நெருப்பு அணைந்து விடாதா என்று கேட்க, அன்றைக்குத்தான் அந்த இடத்திலிருந்து ஏகத்துவ சிந்தனையின் ஊற்றுக் கண் துவக்கி வைக்கப்பட்டது.
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' என்று கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 39:3)
நபிகள் நாயகம் காலத்தில் அன்றைய அரபுகள் பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் எனப் பிரகடனம் செய்து விட்டான்.
இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இது போதிய சான்றாகும்.
தற்கொலைகளை தடுக்க முடியாதா?
படிப்பில் எந்த குறையும் இல்லை: தோற்றத்திலும் எந்த குறைவும் இல்லை: சிந்தனையிலும் எந்த குறையும் சொல்ல முடியாது:. ஆனால் ரோஹித் என்ற அந்த ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மெத்த படித்த மேதாவிகள்தான் அதிக தற்கொலையை நாடுகின்றனர்.
இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொள்பவர்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. படிப்பு செல்வம் எல்லாம் இருந்தும் மனதில் அமைதி இல்லை. பட தயாரிப்பாளர் ஜிவிக்கு இல்லாத செல்வாக்கா? பண பலமா? ஆனாலும் அவரும் தற்கொலையே தீர்வு என்று செல்கிறார்.
அதே நேரம் உங்கள் அருகில் இருக்கும் இஸ்லாமியர்களை நோட்டமிடுங்கள். தற்கொலையின் நினைவே அவர்களுக்கு இருக்காது. பெற்ற மகன் இறந்தாலும் பெற்ற தாயே இறந்தாலும் 'இறைவன் விதித்தது அவ்வளவுதான்' என்று கூறி வெகு சுலபமாக அதனை எடுத்துக் கொள்வார்கள். இந்தியாவை எடுத்துக் கொண்டால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் இஸ்லாமியர்கள். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தற்கொலையை நாடுவதில்லை. ஏனெனில் அவர்களிடம் இருப்பது அசைக்க முடியாத இறை நம்பிக்கை.
உலகில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார கழகம் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் வரை படத்தைத்தான் நாம் பார்க்கிறோம். ஆச்சரியமாக இந்த வரை படத்தில் இஸ்லாமிய நாடுகள் தற்கொலை விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இந்த பட்டியலில் முற்றிலுமாக வரவில்லை.
கிறித்தவர்கள், நாத்திகர்கள், இந்துக்கள், யூதர்கள், சீனர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எவரையுமே இந்த தற்கொலையானது விட்டு வைக்கவில்லை. அந்த அளவு மக்களின் வாழ்வு முறை நிம்மதியற்று போய்க் கொண்டுள்ளது. மன அமைதி இழந்த மனிதன் உடன் தற்கொலையை நாடுகிறான்.
மனச்சிதைவு ஏற்பட்டு தற்கொலைகளை நாடுவோரின் புள்ளி விபரங்களை இனி பார்ப்போம்.
அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் ஒன்றை தேசிய குற்றப்பிரிவு அமைப்பு (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்.
குடும்பப் பிரச்னை காரணமாக 24.3, தீராத நோயால் 19.6, வறுமையால் 1.7, காதல் விவகாரத்தால் 3.4, போதை பழக்கவழக்கங்களால் 2.7, வரதட்சணையால் 2.4, கடன் தொல்லையால் 2.2… என்ற சதவிகிதத்தில் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.
மாநிலங்கள் அளவில் ஒப்பிடும்போது மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 492 பேரும், தமிழகத்தில் 15 ஆயிரத்து 963 பேரும், மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்து 947 பேரும், ஆந்திராவில் 15 ஆயிரத்து 77 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 622 பேரும் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இந்த ஐந்து மாநிலங்களின் சதவிகிதம் மட்டும் 56.2. இதர 43.8 சதவிகித தற்கொலைகள் மற்ற 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
theguardian
04-09-2014
மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் எனது முப்பாட்டன் ராமசாமியா? பத்மனாபனா? கிருஷ்ண மூர்த்தியா? யாரென்றே தெரியாது. ஆனாலும் ஏதோ ஒரு சாதிப்பிரிவிலிருந்து வந்துள்ளேன். இன்று அந்த சாதியும் துடைத்தெறியப்பட்டு உலக முஸ்லிம்களில் ஒருவனாக உள்ளேன். மனச் சிதைவு என்பது என்னையும் என்னைப் போன்றவர்களையும் சிறிதும் அண்ட விடாது ஐந்து வேளை தொழுகை காப்பாற்றுகிறது. நாங்கள் தொழுவதால் இறைவனுக்கு தகுதி உயர்ந்து விடுவதில்லை. எங்களின் மன நிலையை சீராக்கி கொள்ள இந்த தொழுகை பயன்படுகிறது
எல்லா புகழும் இறைவனுக்கே.....
-----------------------------------------------------------
நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)
'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'
குர்ஆன் 13:28
Monday, January 18, 2016
தலித் மாணவர் தற்கொலை - பிஜேபி அமைச்சர் மீது வழக்குப் பதிவு
ஹைதரபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட ரோஹித் வெமுலாவின் உடல் பெற்றோருக்கும் தெரிவிக்காமல் நண்பர்களுக்கும் தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக எரியூட்டப்பட்டுள்ளது. இவ்வளவு அவசரமாக உடலை எரிக்க வேண்டிய அவசியம் என்ன? இது தற்கொலையா? அல்லது கொலையா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.
மாணவர்களின் புகார் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிஜேபியின் மத்திய துணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பாராவ், மேலவை உறுப்பினர் ராமச்சந்திர ராவ், மாணவர்கள் சுஷீல் குமார், ராமகிருஷ்ணா ஆகியோர் மீது கச்சிபவுலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலித்தாக பிறந்து விட்டால் இந்த நாட்டில் அந்த உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் ஆள்வோரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த இஸ்லாமிய அமைப்பு!
பரங்கிப் பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிரதாப், தியாகராஜன், மணிகண்டன், குப்புசாமி ஆகிய நான்கு பேரின் கூரை வீடுகளும் சென்ற ஜனவரி ஏழாம் தேதி தீ விபத்தால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஏழைகளான இவர்கள் நால்வரும் வீட்டை புணரமைக்க முடியாமல் திகைத்து நின்றனர். இதனை கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பரங்கிப் பட்டை கிளை அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வந்தது. 60 ஆயிரம் செலவு செய்து அந்த ஏழை மக்களின் கூரை வீடுகளை செப்பனிட்டுக் கொடுத்தது.
மத நல்லிணக்கம் என்பதற்கு பெயர் இதுதான். ஒரு மதத்தவரின் பழக்கங்களை மற்ற மதத்தவர் பின் பற்றுவதன் மூலம் மத நல்லிணக்கம் வளராது. குழப்பமே மிஞ்சும். ஏகத்துவவாதிகளை பொறுத்த வரை மார்க்க விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். அதே நேரம் மனிதாபிமான உதவிகள் செய்வதில் மத வேறுபாடுகளைக் கடந்து முன்னணியில் இருப்பார்கள். சென்னை மழை வெள்ளத்திலும் அந்த மனிதாபிமானத்தைப் பார்த்தோம். இன்று பரங்கிப் பேட்டையிலும் அதே மனிதாபிமானத்தைப் பார்கிறோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!...
மனிதனின் விரல் ரேகைகளைப் பற்றி குர்ஆன்!
நான் வேலை பார்த்து வரும் கம்பெனியில் வருகைப் பதிவேடாக கைரேகையை பயன்படுத்துகிறோம். அந்த கருவியைத்தான் மேலே பார்க்கிறீர்கள். ஆயிரம் பேர் வந்தாலும் துல்லியமாக பதிவேற்றப்பட்டிருக்கும் நபர்களின் முகத்தை வைக்கப்படும் கைரேகையை வைத்து காட்டி விடுகிறது இந்த கருவி. இதனைப் பார்த்து பல முறை ஆச்சரியப்பட்டுள்ளேன்.
முன்பு இறந்தவர்கள் தற்போது பூமியில் வாழ்பவர்கள் மேலும் இனி பூமியில் பிறக்கப் போகிறவர்கள் என்று கிட்டத் தட்ட 1000 கோடி மக்கள் என்று வைத்துக் கொள்வோம். அத்தனை விரல் நுனிகளும் ஒன்றைப்போல் மற்றொன்று இருப்பதில்லை. ஒரு இஞ்ச் அளவே உள்ள இந்த விரலின் நுனியில் அனைவரின் விபரங்களையும் இறைவன் ஜிப் செய்து வைத்துள்ளான். பத்திரப் பதிவு, காவல் துறை, பாஸ் போர்ட், விசா என்று எதை எடுத்தாலும் இந்த விரல் நுனியின் பணியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது நம்மால்.
மனிதனின் விரல் ரேகைகளைப் பற்றி குர்ஆன்!
'மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்'
75 : 3, 4 - குர்ஆன்
அன்றைய அரபுகள் 'இறந்ததற்கு பின்பு திரும்பவும் எழுப்பப் படுவோமா? எலும்புகள் மக்கி மண்ணான பிறகு எவ்வாறு நம்மை இறைவன் உயிர்ப்பிப்பான்?' என்றெல்லாம் முகமது நபியிடம் சந்தேகத்தோடு கேட்க ஆரம்பித்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், அந்த மனிதனின் விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.
விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகள் எல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் இறைவன் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?
மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.
ஏன் என்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான். தற்போது டி என் ஏ டெஸ்ட், கண் டெஸ்ட் மூலமாகவும் மனிதர்களை இனம் பிரிக்கிறார்கள். ஆனால் உலகம் முழக்க பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது விரல் ரேகைகளையே. இதனால் தான் இன்று மேலை நாடுகளில் பேங்கிலிருந்து பணம் எடுக்க ரேகைகளை உபயோகப் படுத்துகிறார்கள். நம் நாட்டிலும் காவல் துறையிலிருந்து நீதி மன்றம் வரை விரல் ரேகைகளையே பயன் படுத்துகிறோம்.
ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் மறுமை நாளில் திரும்ப கொண்டு வந்து விடுவோம். அங்கு எவரும் தப்பிக்க முடியாது. நமக்கு மக்கிப் போன எலும்புகளை ஒன்றாக்கி திரும்பவும் உயிர்ப்பிப்பது பெரிய காரியம் அல்ல என்ற உண்மையை இறைவன் அந்த மக்களுக்கு விளக்குகிறான்.
குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் ஒரு எடுத்துக் காட்டு.
தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை....
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலித் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் வன்முறையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டிருந்த ரோஹித் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2-ம் தேதியன்று ரோஹித் உள்ளிட்ட 5 பேரும் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் (ASA) சேர்ந்தவர்களாவர்.
இந்நிலையில், ரோஹித் வெமுலா விடுதி அறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்பு எனக் கூறிய அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அறையில் இருந்து ரோஹித் உடலை அப்புறப்படுத்தவிடாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீஸார், மாணவர்கள் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பதற்றத்தை தணிக்கை போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இடைநீக்கத்தின் பின்னணி:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்தில் முசாபர்நகர் பாக்கி ஹை ‘Muzzafarnagar Baqi Hai’ என்ற விளக்கப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. இத்திரைப்படத்தை திரையிடுவது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மற்றும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (ASA) சேர்ந்தவர்களிடையே மோதல் வெடித்தது.
இதனையடுத்து அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 5 பேர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து கல்லூரி விடுதியில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஐவரும் கல்லூரி வளாக்த்திலேயே கூடாரம் அமைத்து தங்கி வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
துணை வேந்தர் ராஜினாமா செய்ய கோரிக்கை:
பல்கலைக்கழகத்தில் இருந்தும், தங்கும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டதாலேயே ரோஹித் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் பல்வேறு மாணவ கூட்டமைப்பினர், இதற்கு பொறுப்பேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் பி.அப்பா ராவ், தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் மீது குற்றச்சாட்டு:
தலித் மாணவர்கள் 5 பேரும் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செகந்தராபாத் தொகுதியில் மக்களவை எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எழுதிய கடிதத்தில், "ஹைதராபாத் பல்கலைக்கழக வளாக தரத்தை மேம்படுத்த வேண்டுமானால் 5 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்" என வலியுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே தலித் மாணவர்கள் ஐவரும் நீக்கப்பட்டனர் என மாணவ தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
தற்கொலை குறிப்பு:
ரோஹித் வெமுலாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் குண்டூர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரோஹித், பல்கலைக்கழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வு அறிஞர்களுக்கான (JRF) உதவித்தொகையை பெற்றுவந்தார்.
அவர் எழுதிய 5 பக்க தற்கொலைக் குறிப்பில், "என் கண்கள் எப்போதும் நட்சத்திரங்களையே கண்டு கொண்டிருந்தன. ஒரு நாள் எழுத்தாளராக, பெயர்பெற்ற கல்வியாளராக உருவாக வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக எனக்கு ஜெ.ஆர்.எஃப் உதவித்தொகைகூட வழங்கப்படவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.
144 தடை உத்தரவு அமல்:
ரோஹித் தற்கொலையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
Keywords: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், தலித் மாணவர் தற்கொலை, அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஜாதி, அரசியல், பாஜக
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
18-01-2016
காதல் தோல்வியால் இந்த மாணவர் இறந்தார் என்று வழக்கை மூடி விடுவார்கள். இந்த தற்கொலைக்கு ஸ்மிருதிராணியும் பிஜேபியும் பொறுப்பேற்க வேண்டும். ஐந்து மாணலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டால்தான் கல்லூரியின் தரம் உயரும் என்று அறிக்கை ஸ்மிருதிராணிக்கு அனுப்பப்பட்டு அந்த அமைச்சகத்தின் உத்தரவிலேயே ஐந்து மாணவர்களும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்து மதத்தில் எந்த உரிமையையும் கொடுக்காமல் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவதற்கென்றே தலித்களை சேர்த்து வைக்கும் காலமெல்லாம் இது போன்ற கொடுமைகளுக்கு பஞ்சமிருக்காது.
Sunday, January 17, 2016
‘டத்தோ’ பட்டம் பெற்ற ராமநாதபுரம் இளைஞர்
ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீக மாகக் கொண்ட இளைஞருக்கு மலேசிய அரசின் உயரிய விருதான ‘டத்தோ’ பட்டம் வழங்கப்பட் டுள்ளது.
‘டத்தோ’ என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். மலேசியப் பேரரசர், மலேசிய மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களுக்கும் டத்தோ விருதை வழங்குகின்றனர். 1965-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டு பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
மலேசியர்கள் மட்டுமே பெறக்கூடிய இந்த விருதை, வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காக பெற்றுள்ளனர். இந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கான டத்தோ விருதுகள் 12 பேருக்கு மலேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாகச் கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப்(35) என்பவரும் விருது பெற்றுள்ளார். இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
18-01-2016
தொழுகையின் அவசியத்தை அழகாக உணர்த்தும் காணொளி!
யாரும் இல்லாத பாலைவனத்தில் தனியாக ஒரு இளைஞன் நடந்து வருகிறார். ஏறிச் செல்ல வாகனம் ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்குமே என்...
Posted by Nazeer Ahamed on Sunday, January 17, 2016
யாரும் இல்லாத பாலைவனத்தில் தனியாக ஒரு இளைஞன் நடந்து வருகிறார். ஏறிச் செல்ல வாகனம் ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தோடு நடந்து போகிறார். எதிர்பாராமல் எதிரே ஒரு மகிழூந்து வருகிறது. ஆசையோடு அதில் அமர லிஃப்ட் கேட்கிறார். வண்டியும் இவரை ஏற்றிக் கொள்ள அருகில் வந்து நிற்கிறது. அதே நேரம் அவரது செல் போனிலிருந்து தொழுகைக்கான நேரத்தை நினைவூட்டும் வண்ணமாக 'அல்லாஹூ அக்பர்' என்ற பாங்கொலி சப்தமும் கேட்கிறது. அது அஸர் என்ற மாலை நேரத் தொழுகை. நாம் தற்போது அந்த வண்டியில் ஏறுவதை விட தொழுகையை நேரத்தோடு முடிப்பதே சிறந்தது என்று அந்த இளைஞர் முடிவெடுக்கிறார். உதவ வந்த அந்த நண்பர்களிடம் 'நன்றி' என்று கூறி விட்டு தொழுவதற்கு ஆயத்தமாகிறார்.
தன்னை படைத்த இறைவனை அமைதியாக வணங்கி விட்டு தொழுகையை முடித்தால் என்ன ஆச்சரியம். இவர் தொழுவதைப் பார்த்து வழியில் சென்ற பலரும் வாகனத்தை ஓரமாக்கி விட்டு தொழுது கொண்டிருக்கிறார்கள். இவர் ஒரு நன்மையை செய்யப் போய் அதன் மூலம் பலர் நன்மையை அடைய உந்து சக்தியாக இருந்திருக்கிறார்.
விளம்பரப் படமாக இருந்தாலும் அதன் மூலம் சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் இந்த விளம்பரதாரரை நாமும் பாராட்டுவோம்.
---------------------------------------------------
'இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் முஸ்லிமான அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 116
---------------------------------------------------
'நமக்கும், இறை மறுப்பாளாருக்கும் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் இறை மறுப்பாளாராகி விட்டார்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859
#தொழுகை
விமான பயணத்தில் மற்றொரு மைல் கல்!
விமான பயணங்களில் விபத்தால் பல ஆயிரம் உயிர்கள் வருடா வருடம் இந்த உலகை விட்டு செல்வதை அறிவோம். இதனை தடுக்க இனி வருங்கால வி...
Posted by Nazeer Ahamed on Saturday, January 16, 2016
விமான பயணங்களில் விபத்தால் பல ஆயிரம் உயிர்கள் வருடா வருடம் இந்த உலகை விட்டு செல்வதை அறிவோம். இதனை தடுக்க இனி வருங்கால விமான தயாரிப்பு கம்பெனிகள் இந்த காணொளியில் உள்ளதைப் போன்ற விமானங்களையே தயாரிக்க முனைவர். பயணிகளும் இது போன்ற பாதுகாப்பு கட்டமைப்பு வசதியுடைய விமானங்களையே அதிகம் தேர்ந்தெடுப்பர். இனி வருங்காலத்தில் பழைய விமானங்கள் எல்லாம் அடி மாட்டு விலைக்கு விற்கும் காலமும் வரும். சில செல்வந்தர்கள் கூட தங்களின் பயணத்திற்கு பழைய விமானங்களை வாங்கலாம். நான்கு சக்கர வாகனம் போல் வருங்காலத்தில் ஊருக்கு ஒரு விமானம் நிறுத்தப்படுவதை பார்க்கும் காலம் தூரமில்லை
---------------------------------------------
உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.''
குர்ஆன்(96:5)
''அவற்றின் கனிகளை நோக்குவீர்களாக. அவை பூத்துக் காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் உற்று நோக்குவீர்களாக. விசுவாசம் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன''
குர்ஆன்(6:99)
''நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.'' என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.
ஆதாரம்: அபு தாவுத், முஸ்லிம்
#அறிவியல் #விமானம் #TECHNOLOGY
Saturday, January 16, 2016
அப்பளம் பற்றி சில அரிய தகவல்கள் !
அப்பளம் பற்றி சில அரிய தகவல்கள் :-)
20 வருடங்களுக்கு முன்பெல்லாம் எங்கள் வீட்டில் பெரிய அண்டாவில் கூழ் கிண்டுவார்கள். அப்பளம், படையான் போன்றவைகள் வீட்டிலேயே செய்வதற்காக காலை 5 மணிக்கெல்லாம் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களெல்லாம் ஒன்றாக கூடி அப்பளம், படையான், கொத்தரவத்தல், மோர் மிளகாய் போன்றவைகளை இட வந்து விடுவார்கள். காலையிலேயே வீடு பெருநாள் போல ஜே ஜே என்று இருக்கும். வந்தவர்களுக்கெல்லாம் டீ பிஸ்கெட் என்று அமர்க்களப்படும். சிறுவர் சிறுமிகளுக்கோ ஏக கொண்டாட்டம். எங்கள் வீட்டின் வாசல் பெரிதாகையால் அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்களும் எங்கள் வீட்டில்தான் அப்பளம் மற்றும் படையான்களை காய வைப்பார்கள். அதெல்லாம் ஒரு காலம்....
தற்போது எல்லாம் கடைகளில் பாக்கெட் போட்டு கிடைப்பதால் அப்பளம் மற்றும் படையான் போடும் பழக்கமும் நின்று விட்டது. சவுதியிலும் கடைகளில் அப்பளம் பல டிசைன்களில் கிடைக்கிறது. அப்பளத்திற்கு சவுதிகள் வைத்துள்ள பெயர் 'ஹூப்ஸ் அல் ஹிந்த்' அதாவது 'இந்திய ரொட்டி' என்று பெயரிட்டுள்ளார்கள். :-) புரோட்டாவைப் போல வட்டமாக இருப்பதனால் இதனை ரொட்டி என்று நினைத்து இந்த பெயரை வைத்துள்ளார்கள்.
சாம்பார், ரசம், மீன் குழம்பு என்று எந்த குழம்புக்கும் தொட்டுக் கொள்ள இந்த அப்பளமானது ஏற்றதாக மாறி விடும். பாகிஸ்தானிகள் இதே அப்பளத்தை சற்று டிசைன் மாற்றி செய்கிறார்கள். கேரளாவில் அப்பளம் பிரியாணிக்கும் இருக்கும். எப்படியோ இந்தியர்களின் உணவு பழக்கத்தில் என்றுமே இடம் பிடித்த அப்பளத்தைப் பற்றியும் ஒரு பதிவு தேற்றியாகி விட்டது. :-)
ஆப்ரிக்காவில் உள்ள மிக எளிய பள்ளிவாசல்!
பெரிய டூம்கள் கிடையாது: பளபளக்கும் சலவைக் கல் கிடையாது: பஞ்சு மெத்தை போன்ற விரிப்புகள் கிடையாது: நறுமணம் கமழ வாசனை திரவியங்கள் கிடையாது:
ஒன்றே ஒன்றுதான் அந்த புதிய இஸ்லாமியரிடம் உள்ளது. அதுதான் அசைக்க முடியாத இறை நம்பிக்கை.
இதைத்தான் இறைவனும் விரும்புகிறான். அன்றைய நபித் தோழர்களும், நபிகளும் இது போன்ற பள்ளிவாசல்களில்தான் ஆரம்ப காலங்களில் தொழுதுள்ளார்கள். அதே போன்ற உறுதியையும் மன வலிமையையும் இந்த இளைஞனுக்கும் இறைவன் தந்தருள்வானாக!
ஏக இறைவனை மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கைக் கொண்டோரைக் கேலி செய்கின்றனர். இறைவனை அஞ்சியோர் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். இறைவன் நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.
-குர்ஆன் 2:212
Friday, January 15, 2016
கிரிஷ் என்ற இளைஞரின் வாழ்வை மாற்றிய இஸ்லாம்!
இந்து மதத்தில் ஆழ்ந்த பிடிப்புடையவர் சகோதரர் கிரிஷ். ஆன்மீக தேடலினால் பல மதங்களையும் ஆய்வு செய்தார். தனது பூர்வீக இந்து மதத்தின் ஆணி வேர் இஸ்லாம் என்பதை தேடலில் தெரிந்து கொண்டார். சனாதன தர்மத்தை போதிக்கும் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். தனது பெயரையும் முஹம்மது இஷாக் என்று மாற்றிக் கொண்டார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது அழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். சென்ற 2014 ஆம் ஆண்டு மெக்கா சென்று ஹஜ் பயணத்தையும் முடித்துள்ளார்.
இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்றவுடன் அவர்களின் முகத்தில் ஒரு தெய்வீககலை தொற்றிக் கொள்வதை பார்த்து பிரமிக்கிறோம். இறை மார்க்கமல்லவா!
இவருடைய வாழ்வு இம்மையிலும் மறுமையிலும் சிறப்பாக அமைய நாமும் பிரார்த்திப்போமாக!
தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்காமல் இருக்க மாட்டான்.
(அல்குர்ஆன் : 9:32)
Thursday, January 14, 2016
தர்ஹா கலாசாரம் இந்து சகோதரர்களையும் வழிகெடுக்கிறது!
தீபம் ஏற்றி ஆராதனை செய்தல்: எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் எண்ணெய்யை புனிதமாக கருதுவது: குத்து விளக்கு ஏற்றி வைத்தல்: ...
Posted by Nazeer Ahamed on Thursday, January 14, 2016
தீபம் ஏற்றி ஆராதனை செய்தல்: எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் எண்ணெய்யை புனிதமாக கருதுவது: குத்து விளக்கு ஏற்றி வைத்தல்: சாமி சிலைக்கு புடவை கட்டி விடுவது போல சமாதிக்கு சால்வை போர்த்துவது: அங்கு பால் ஊற்றினால் இங்கு சந்தனம் பூசுவது: அங்கு தேர் இழுத்தால் இங்கு சந்தனக் கூடு இழுத்தல்: அங்கு மந்திரம் ஓதி திண் பண்டங்கள் கொடுப்பது: இங்கு ஃபாத்திஹா ஓதி தின்பண்டங்கள் வழங்குவது:
அத்தனையும் பார்பனிய கலாசாரம்: அதனை அப்படியே சில பெயர் மாற்றங்களோடு தர்ஹாக்களில் அரங்கேற்றப்படுவதைப் பார்க்கிறோம்.
முன்பு யூதர்கள் நபிகள் காலத்தில் இஸ்லாத்தை அழிக்க இஸ்லாமியராக மாறி பல கட்டுக்கதைகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றியதை நாம் அறிவோம். அந்த நபி மொழிகளை எல்லாம் தரம் பிரித்து தற்போது அறிஞர்கள் உண்மையை கண்டறிந்துள்ளனர்.
அதே போல்தான் இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க பலர் இஸ்லாமியராக மாறி இது போன்ற பழக்கங்களை புகுத்தி விட்டனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு அன்று அந்த மக்களிடம் இல்லாததால் தர்ஹா கலாசாரத்தை அன்றைய மக்கள் அவ்வளவாக எதிர்க்கவில்லை.. அது இன்று இஸ்லாத்தின் ஒரு அங்கமாகவே இந்தியாவில் மட்டும் மாறி விட்டது.
தர்ஹாக்களின் செயல்பாடுகளை வைத்து இன்று வரை எந்த இந்துவாவது இஸ்லாத்தை ஏற்றிருக்கிறாரா? பல வருடங்கள் தர்ஹாவுக்கு வரும் இந்துக்களிடம் எந்த மாற்றத்தையும் காண முடியாது. தர்ஹாவுக்கும் போவார்: காளி கோவிலுக்கும் போவார்: மாதா கோவிலுக்கும் போவார்: அவரைப் பொருத்தவரை எந்த வித்தியாசமும் இல்லை. இது மத ஒற்றுமையை கொடுக்காது. மேலும் குழப்பத்தைத்தான் உண்டு பண்ணும்.
சன் டிவியின் இந்த சீரியலையும் பாருங்கள். இதனை எடுத்த டைரக்டரும் கதாசியரியரும் இஸ்லாத்தை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள்? இன்றைய அறிவியலுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் குர்ஆன் எங்கே? மயிலிறகால் வருடி ஊதி விடும் இந்த மூடன் எங்கே? வர்ணாசிரமத்தையும், புரோகிதத்தையும், மூடப்பழக்கத்தையும் ஒழிக்க வந்த இஸ்லாத்தின் பெயரால் இந்த கொடூரங்கள் பரவலாக அரங்கேற்றப்படுகிறது.
ஏகத்துவ வாதிகள் கடந்த 30 வருடங்களாக செய்த தொடர் பிரச்சாரத்தின் காரணமாக இன்று இறைவனின் உதவியால் தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைய தலைமுறையினர் தர்ஹா மாயையிலிருந்து விடுபட்டுள்ளனர். விலகி நிற்கும் மற்ற இஸ்லாமியர்களும் ஏகத்துவவாதிகளோடு கைகோர்த்து தர்ஹா வழிபாட்டை இல்லாதொழிப்பார்களாக!
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
குர்ஆன் 72:18
ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு சமாதியையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்:1662)