'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, January 18, 2016
மனிதனின் விரல் ரேகைகளைப் பற்றி குர்ஆன்!
நான் வேலை பார்த்து வரும் கம்பெனியில் வருகைப் பதிவேடாக கைரேகையை பயன்படுத்துகிறோம். அந்த கருவியைத்தான் மேலே பார்க்கிறீர்கள். ஆயிரம் பேர் வந்தாலும் துல்லியமாக பதிவேற்றப்பட்டிருக்கும் நபர்களின் முகத்தை வைக்கப்படும் கைரேகையை வைத்து காட்டி விடுகிறது இந்த கருவி. இதனைப் பார்த்து பல முறை ஆச்சரியப்பட்டுள்ளேன்.
முன்பு இறந்தவர்கள் தற்போது பூமியில் வாழ்பவர்கள் மேலும் இனி பூமியில் பிறக்கப் போகிறவர்கள் என்று கிட்டத் தட்ட 1000 கோடி மக்கள் என்று வைத்துக் கொள்வோம். அத்தனை விரல் நுனிகளும் ஒன்றைப்போல் மற்றொன்று இருப்பதில்லை. ஒரு இஞ்ச் அளவே உள்ள இந்த விரலின் நுனியில் அனைவரின் விபரங்களையும் இறைவன் ஜிப் செய்து வைத்துள்ளான். பத்திரப் பதிவு, காவல் துறை, பாஸ் போர்ட், விசா என்று எதை எடுத்தாலும் இந்த விரல் நுனியின் பணியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது நம்மால்.
மனிதனின் விரல் ரேகைகளைப் பற்றி குர்ஆன்!
'மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்'
75 : 3, 4 - குர்ஆன்
அன்றைய அரபுகள் 'இறந்ததற்கு பின்பு திரும்பவும் எழுப்பப் படுவோமா? எலும்புகள் மக்கி மண்ணான பிறகு எவ்வாறு நம்மை இறைவன் உயிர்ப்பிப்பான்?' என்றெல்லாம் முகமது நபியிடம் சந்தேகத்தோடு கேட்க ஆரம்பித்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், அந்த மனிதனின் விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.
விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகள் எல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் இறைவன் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?
மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.
ஏன் என்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான். தற்போது டி என் ஏ டெஸ்ட், கண் டெஸ்ட் மூலமாகவும் மனிதர்களை இனம் பிரிக்கிறார்கள். ஆனால் உலகம் முழக்க பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது விரல் ரேகைகளையே. இதனால் தான் இன்று மேலை நாடுகளில் பேங்கிலிருந்து பணம் எடுக்க ரேகைகளை உபயோகப் படுத்துகிறார்கள். நம் நாட்டிலும் காவல் துறையிலிருந்து நீதி மன்றம் வரை விரல் ரேகைகளையே பயன் படுத்துகிறோம்.
ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் மறுமை நாளில் திரும்ப கொண்டு வந்து விடுவோம். அங்கு எவரும் தப்பிக்க முடியாது. நமக்கு மக்கிப் போன எலும்புகளை ஒன்றாக்கி திரும்பவும் உயிர்ப்பிப்பது பெரிய காரியம் அல்ல என்ற உண்மையை இறைவன் அந்த மக்களுக்கு விளக்குகிறான்.
குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் ஒரு எடுத்துக் காட்டு.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்'
1)இந்த குரான் வசனத்திற்கும் விரல் ரேகையின் தனித்துவத்திற்கும் என்ன சம்பந்தம் ?
2)விரல் நுனியில் அமைந்துள்ள ரேகைகள் நபருக்கு நபர் வேறுபடும் எ ன்ற தகவல்குரானில் எங்கும் சொல்லப்படவேயில்லை.தாங்கள் மேற்காட்டும் வசனத்தில் எங்குள்ளது ?
அழுகிப்போனதை சீராக்க முடியும் என்று சொன்னதாகவே உள்ளது.
நியாயத் தீா்ப்பு நாள் என்பது சாத்தியம் இல்லை.அரேபிய நாட்டு தவறான தகவல்
திருநாவுக்கரசா் பும்பாவை என்ற இறந்த பெண்ணின் சாம்பலை மீண்டும் பெண்ணாக மாற்றினாா். உயிா்ப்பித்தாா்.
மனிதனால் முடியும் காாியமாக இருக்கும் காாியத்தை இறைவனால் செய்ய முடியாதா ? முடியும்.
அரேபிய கலாச்சாரத்தைப்பின்பற்றும் மக்களுக்கு மட்டும்தான் நியாயத் தீா்ப்பு என்று குரான்
சொல்கினறது. பல கலாச்சாரங்களும் பல நிலைகளில் மனிதா்களும் வாழந்து இறந்து விட்ட
ஒரு சமூதாயத்தில் நியாயதீா்ப்பு என்று ஒரு நாளில் அனைவருக்கும் எந்த முறைப்படி
இறைவன் தீா்ப்பு வழங்குவாா் எந்த சட்டத்தை ஆதாரமாகக் கொணடு தீா்ப்பு வழங்குவாா் ?
ஆதாம் ஏவாளுக்கு இறைவன் அளித்த moral code என்ன ? அவர்கள் என்ன மொழி பேசினாா்கள் ? அதன் எழுத்து வடிவம் என்ன ? அவரகளது குழந்தைகளுக்கு சிலேட் குச்சி நோட்டு புத்தகம் பை வைத்திருந்தா்களா ? அரபிக் பாடசாலை யில்படித்தாா்களா ?
ஆதாம் ஏவாள் கதையே ஒரு கட்டுக் கதைதானே ?
மனித இனம் மிருக வாழ்வில் இருந்து படிப்படியாக கலாச்சார பாிணாமம் அடைந்து வருகின்றது.இந்த நிலையில் ஒரு சட்டப்படி நியாயத் தீா்ப்பு வழங்குவாா் என்றால் அது பைத்தியக்காரத்தனமானது
என்ன கொடுமை. இந்துக்களாக வாழ்ந்தால் அல்லா என்ன செய்வான்.
முஸ்லீமல்லாதோரின் மீதான அல்லாஹ்வின் கொடூரம் சகிக்கமுடியாதது. உலகில் அவர்களை தண்டித்து, கொத்துக்கறி செய்வதற்கு உற்சாகமூட்டினான், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விரட்டியடித்தல் என்று பலவாறாக இழிபடுத்தியும் அவனது ஆத்திரம் தணியவில்லை. அவர்களை மரணத்திற்குப் பின்னும் விடுவதாக இல்லை. அல்லாஹ்விடம் பெரிய அடுப்பு ஒன்று உள்ளது. அதில் மனிதர்களை வறுத்து எடுப்பான். மனிதர்களின் கருகிய உடல்களிலிருந்து வெளியாகும் வாசனையின் மீது அல்லாஹ்விற்கு அலாதியான இன்பம் உண்டு.
…இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.
குர் ஆன் 5:34
அவர்கள் விஷயத்தில் கடுமை காட்டுவீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது கெட்ட புகலிடம்.
குர் ஆன் 66:09
தமது இறைவனைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருந்த இரண்டு வழக்காளிகள் இதோ உள்ளனர். (ஏக இறைவனை) மறுத் தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும். அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன. கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்!
குர் ஆன் 22:19-22
அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்பதற்காக தனது கழுத்தைத் திருப்பிக் கொள்கிறான். அவனுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. கியாமத் நாளில் சுட்டெரிக்கும் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம்.
குர் ஆன் 22:09
முஸ்லீமல்லதோரையும் அல்லாஹ்தானே படைத்தான்? அவன் எல்லொருக்கும்தானே இறைவன்? தனது செந்தப்படைப்புகளின் மீதே அவனுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? குர் ஆனில் அவன் கூறியுள்ள செய்தி, அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மட்டுமே நம்ப வேண்டும். அத்தகையவர்களுக்கு எல்லைகளற்ற உடலுறவு இன்பம்! நம்பாதவர்கள், பெரும் நெருப்பிலிட்டு கரிக்கப்படுவார்கள் என்ற அச்சுருத்தல்கள்.
தனக்கு எவ்வித பயனுமில்லாத வணக்கங்களையும், சடங்கு, சம்பிரதாயங்களின் செயல்முறைகளை போதித்து, இத்தனை வற்புறுத்தல்களையும், அச்சுருத்தல்களையும் கூறி காலில் விழுந்து கெஞ்சிக் கேட்காத குறையாக கேட்டுப் பெறவேண்டிய தேவையென்ன? தன்னை வழிபடுமாறு அல்லாஹ் கூறியது, மனிதர்களின் நன்மைக்கே என்ற P. ஜெயினுல் ஆபிதீன் அவர்களின் விளக்கம் உண்மையல்ல. பிறகு ஏன் இப்படி கூறவேண்டும்?
இறையில்லா இசுலாம் நன்றி.
உலகிலுள்ள பெரும்பாலான மக்களும் ஏதோ ஒரு முறையில் கடவுளை வழிபாடு செய்கிறவர்கள்தான். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது நன்மைக்காகவும் வெகு சிலர் மற்றவர்களின் நன்மைக்காவும் அனுதினமும் கடவுளைத் தொழுது சரணடைகின்றனர். இவர்கள் அனைவருமே கடவுளிடமிருந்து நன்மைகளை அடையமுடியுமா?
இந்த கேள்விக்கு சராசரிக்கும் குறைவான மத அறிவுடைய இஸ்லாமியர் கூட இதற்கு இல்லையென்ற பதிலை உறுதிபடக் கூறுவார். காரணம், அல்லாஹ்வையும் முஹம்மதையும் ஏற்காத ஒரு வணக்கம், ஏற்புடையதல்ல என்பதுதான். எனவே, நன்மைகளை அடைய(!) இஸ்லாம் கூறும் வணக்கமுறைகளைக் காண்போம்.
தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் என்றொரு பட்டியல் இருந்தாலும், அல்லாஹ்விற்கு இணை வைக்காது, அவனது தூதர் முஹம்மதிற்கும் முற்றிலும் வழிப்படுதலே முதன்மையானது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
குர் ஆன் 4:48
தன்னைத் தவிர வேறு கடவுளர்கள் இல்லை, தான்மட்டுமே ஒரே கடவுள் என்பது அல்லாஹ்விற்குத் தெரியுமல்லவா? மனிதர்கள் அதை உணராமல், தங்களது அறியாமையால் செயல்படுவதால் அவனுக்கு இழப்பு ஏதேனும் நிகழுமோ?
இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏக மனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை.
என்கிறார் அறிஞர் P. ஜெயினுல் ஆபிதீன். ஆனால் இது பீஜே அவர்களின் வெற்று கற்பனையே. இவரது இந்த விளக்கம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு எதிரானது. தான் மட்டுமே ஒரே இறைவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டும், தான் கூறும் முறையில் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்பதை அறியச்செய்ய அல்லாஹ் காண்பிக்கும் வெறித்தனம் எல்லையில்லாதது.
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.
குர் ஆன் 3:85
நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே.
குர் ஆன் 9:28
நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (அல்லாஹ்வை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை.
குர் ஆன் 3:28
நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே.
குர் ஆன் 5:51
இவ்வாறு அல்லாஹ், தனது விருப்பங்களையும், கோரிக்கைகளையும் தனது தூதர் முஹம்மதின் வாயிலாக விளம்பரமும் செய்தான். ஆனாலும் பெரிதாக எந்தப்பலனும் கிடைக்கவில்லை. தனது கோரிக்கையை ஏற்று, தனது அறிவுறுத்தலின்படி தன்னை வணங்க மறுத்தவர்களை, ’வழி’க்குக் கொண்டுவர இயலாமல் போனது. அவர்களுக்கெதிராக தன்னால் எதுவும் செய்ய கையாலாகமல், முஹம்மதுவிடம், அவர்கள் மீது போர்தொடுக்க வற்புறுத்துகிறான். வரிவசூல் செய்வேன் என்று மிரட்டலும் விடுகிறான். அப்படியாவது தன்னை வணங்கமாட்டார்களா என்ற நப்பாசைதான்.
நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! ...
குர் ஆன் 8:65
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப் பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்.
குர் ஆன் 9:28
அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்!
தன்னைத் தவிர வேறு ’இறைவன்கள்’ ஒருவரும் இல்லை எனும் பொழுது, அல்லாஹ்விற்கு ஏன் இவ்வளவு கவலை? தனது நிலையை நிரூபிக்க மிகுந்த சிரமங்களை மேற்கொள்கிறான். வெறித்தனமான கோபம் கொள்கிறான். தனது கைத்தடிகளை, மாற்று நம்பிக்கை கொண்டவர்கள் மீது போர் செய்யுமாறு ஏவிவிடுகிறான். போர்க்களத்தில் பின்தங்கி விடுவார்களோ அச்சம் மிகைத்ததாலோ என்னவோ அவர்களை உற்சாகமூட்டுகிறான். கூடவே தனது வானவர்(!) படைகளையும் அவர்களுக்கு துணையாக இருப்பதாக்கூறி அவர்களுக்க ஆசைகாட்டுகிறான்.
தங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) ரஸூலை (ஊரைவிட்டு) வெளியேற்ற எண்ணிய கூட்டத்தாரிடம் நீங்கள் போர் புரிய வேண்டமா? அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா? அல்லாஹ்–அவனே அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன்- நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால்.
(குர் ஆன் 9:13)
...உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (அல்லாஹ்வை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள்.
குர் ஆன் 8:65
உங்களுடைய ரப்பிடத்தில் நீங்கள் பாதுகாவல் தேடிய பொழுது தொடர்ந்து அணிவகுத்து முன்னே) வரும்படியான ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு நிச்சயமாக நான் உதவி செய்பவனாக இருக்கிறேன் என்று உங்களுக்கு அவன் பதிலளித்தான்.
(குர்ஆன் 8: 9)
மற்ற இறைவன்களை நிராகரித்துவிட்டு, தன்னை மட்டுமே ஏற்று வணங்க மறுத்தவர்களை கடுமையாக சித்திரவதை செய்து தண்டிக்க உத்தரவிடுகிறான்.
இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!
குர் ஆன் 9:05
கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகிய வையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை.
குர் ஆன் 5:33
அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். அவர்களை இழிவுபடுத்துவான்.
குர் ஆன் 9:14
என்னை நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள்”
குர் ஆன் 8:12
இப்படியெல்லாம் ஒரு கடவுள் கூறுவானா? இதுதான் கடவுளின் இலக்கணமா?
"கொல்லுங்கள்' "வெட்டுங்கள்' என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.
53. போரின் இலக்கணம் onlinepj.com
(பீஜே அவர்களின் கவனத்திற்கு, ஒவ்வொரு இணைப்பையும் வெட்ட வேண்டுமெனில் (கு 8:12), மனித உடலிலுள்ள 200க்கும் மேற்பட்ட எலும்பு இணைப்புகளையும் வெட்ட வேண்டுமா? என்று கசாப்புக்கடையில் உயர்நிலைப் போர்ப்பயிற்சி பெறும் நோக்கத்திலுள்ள ஜிஹாதி ஒருவர் கேட்கிறார்)
"கொல்லுங்கள்' "வெட்டுங்கள்' என்ற குர்ஆனின் கட்டளைகளின் உண்மையான காரணத்தை மறைத்து, மழுப்பலாக இவைகள் போர்க்களத்திற்கு மட்டும்தான் பொருந்தும் என்று கூறி, மாற்று மதத்தினருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டதைப் போல ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார் பீஜே. முஹம்மதையும் ஏற்க மறுத்தவர்கள், ‘ஜிஸ்யா’ வரி செலுத்தி ’திம்மிகள்’ என்ற இரண்டாம் தர குடிமக்களாக வேண்டும் அல்லது போரிட்டு மடியவேண்டும் இவைகள்தான் அல்லாஹ் வழங்கிய மாபெரும் வாய்ப்புகள். அதிலும் உருவ வழிபாடு செய்பவர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.
Post a Comment