Followers

Monday, July 31, 2017

மக்களவையில் மல்லிகார்ஜூனா பிஜேபியை நோக்கி சாடல்!



மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) கும்பல் வன்முறை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "குஜராத், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் என பாஜக எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் கும்பல் வன்முறையும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலும் அதிகமாக உள்ளது. இந்த தேசம் சகோதரத்துவத்துக்கு பெயர் பெற்றது. காந்தியைப் பற்றி நாம் பேசுகிறோம் ஆனால் அவரிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டோம்? பிரதமர் மோடியோ புத்தரைப் பற்றியும் குருநானக் பற்றியும் உரையாற்றுகிறார். ஆனால், இங்கு சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் கும்பல் வன்முறையில் ஈடுபட்ட எத்தனை பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறமுடியுமா? இந்த சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி அவையில் விளக்கமளிக்க வேண்டும். விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளையும் பசு பாதுகாவலர்களையும் இந்த அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது.
ஒரு சம்பவத்தில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் அப்பாவிகளாகவே கருதப்பட வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் விவகாரத்தில் மட்டும் உண்மை தலைகீழாக இருக்கிறது. நிரூபிக்கப்படும்வரை அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர்.
இந்த தேசம் இந்துஸ்தானாகவே இருக்கட்டும், அதை வன்முறை சம்பவங்களால் லின்சிஸ்தானாக்க வேண்டாம். (குறிப்பு: ஆங்கிலத்தில் lynch என்ற வார்த்தைக்கு தமிழில் விசாரணையின்றி நடைபெறும் கொலை என்று பொருள்)" .
நாட்டு மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதையும் யாரிடம் நேசமாக இருக்க வேண்டும் என்பதையும் அரசாங்கம் தீர்மானிக்க முடியாது" என்றார்.

2 comments:

Dr.Anburaj said...


900 ஆண்டுகள் இந்துக்கள் அரேபிய காடையா்களுக்கு அடிமையாக இருந்துள்ளாா்கள்.எனவே அரேபிய அடிமைத்தனம் இவா்களது இரத்தத்தில் கலந்து விட்டது.ஆகவே இவா்கள் இந்துக்கள்இசுலாமிய பயங்கர வாதத்தால் பாதிக்கப்பட்டால் வாய்மூடி மௌனமாக இருப்பாா்கள். இந்துக்களை காபீா் என்று இழிவு படுத்துவதை கேட்க திராணியுள்ள அரசியல் வாதி இந்தியாவில் பிஜேபியில்தான் உள்ளாா் கள். மற்றவா்கள் கோழைகள்.

Dr.Anburaj said...

கஜினி முகமது தொட்டு ஔரங்கசீப் வரை, கிழக்கிந்த கம்பெனி வணிகன் முதல் இறுதியான மவுண்ட்பேட்டன் பிரபு வரை ஹிந்துக்களுக்குச் செய்த கொடுமைகள் எவ்வளவு?

ஒரே வரியில் பிரிட்டிஷாரைப் பார்த்து விவேகானந்தர் சொல்லி விட்டார்: “நீங்கள் எங்களுக்குச் செய்த கொடுமைகளுக்கு ஹிந்து மஹா சமுத்திரம் அடியில் உள்ள சேற்றை முழுதுமாக வாரி உங்கள் மீது இறைத்தாலும் நீங்கள் எங்களுக்குச் செய்த தீங்கிற்குத் தினையளவும் பதில் செய்ததாக ஆகாது.”





உண்மை; இது கஜினிக்கும் பொருந்தும் தானே!



ஆனால் வழிவழியாக வந்த உயர்ந்த சிந்தனா பாரம்பரியம் கொண்ட ஹிந்துக்கள், முஸ்லீம்களை ஒட்டு மொத்தமாக அழிக்க எண்ணம் கூடக் கொள்ளவில்லை. மதமாற்றவும் நினைக்கவில்லை!!

பிரிட்டிஷாரை ஒட்டு மொத்தமாக ரத்தத்திற்கு ரத்தம் சாவுக்கு சாவு என்று முழங்கி அழிக்க முற்படவில்லை.



இஸ்லாமியரை இன்று வரை வாழ வைத்து மதிப்புடன் நடத்தி வருகிறோம். அனைத்து இஸ்லாமிய நாடுகளுடன் தோழமை உறவு தொடர்கிறது.



பிரிட்டிஷாரை மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் கடைசி வரை நடத்தினோம் - சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட.

இது தான் ஹிந்து பாரம்பரியத்திற்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கும் உள்ள வேற்றுமை.



இஸ்லாம் தன்னை ஒப்புக்கொள்ளாதவனை ஒப்புக் கொள்ளாது. காபிர் காபிர் தான்!

கிறிஸ்தவமும் ஏசுவிடம் “ஓப்புக் கொடுக்காதவரை” ஒப்புக் கொள்ளாது.



ஆனால் ஹிந்து மதமோ அப்படியில்லை; ஒரு ஹிந்துவானவன், “அனைவரும் வாழ வேண்டும்; கொள்கையில், வாழ்க்கை முறையில், மதத்தில், இனத்தில் வேறுபட்டிருந்தாலும் கூட” என்று எப்போதும் எண்ணி வந்திருக்கிறான்; எண்ணி வருகிறான்; இனியும் எண்ணுவான்.

இதுவே ஒரே வித்தியாசம்.



இதே அணுகுமுறை இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வருமானால் அப்போது “உலகத்தில் கலி அழிந்தது; கிருத யுகம் எழுந்தது மாதோ” என்று உரக்கக் கூறலாம்.