Followers

Thursday, July 27, 2017

லிங்காயத்துகள் இந்துக்கள் இல்லையாம்! போராடுகிறார்கள்.

இந்த வாரத்தின் மிக கவனிக்கத்தக்க செய்தி என்றால் அது இது தான். கர்நாடகத்தின் தனி பெரும் சமூகமான லிங்காயத்துகள், தங்களை ஹிந்து மதத்தின் ஒரு அங்கமாக பார்க்காமல், தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று மிகப்பெரும் போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கின்றனர். சுமார் இரண்டு லட்சம் பேர் பங்குக்கொண்ட இந்த போராட்டத்தில் அச்சமூகத்தை சார்ந்த பல மடாதிபதிகளும் கலந்துக்கொண்டிருக்கின்றனர். பனிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியான பசவன்னாவால், சாதிய மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்டதே தங்கள் சமயம் என்று கூறும் இவர்கள், தங்கள் மதத்தின் தன்மைகளாக பின்வருவதை குறிப்பிடுகின்றனர்.

தங்களின் மதம் 'லிங்காயத்' என்று அழைக்கப்பட வேண்டும். தாங்கள் தீவிர ஓரிறை வழிபாட்டாளர்கள், தங்களின் கடவுள் பெயர் சிவன், சிவன் என்றவுடன் இந்து மத கோவில்களில் இருக்கும் உருவங்களுடன் தொடர்புப்படுத்த கூடாது, அகிலத்தை படைத்து பாதுகாக்கும் ஆற்றலையே சிவன் என்று குறிப்பிடுகிறோம், தங்கள் சமயத்தில் உருவ வழிபாடு கிடையாது, நெருப்பு வழிபாடு கிடையாது, சாதிய வேறுபாடுகள் கிடையாது. இப்படியாக தங்கள் சமயம் குறித்த இவர்களின் விவரிப்பு தொடர்கிறது.

இந்த போராட்டத்தை கண்டு மிரண்டு போன கர்நாடக அரசாங்கம், இந்த கோரிக்கை குறித்து லிங்காயத்து சமூக மக்களிடம் கருத்தொற்றுமை இருந்தால், தனி மதமாக லிங்காயத்துகளை அறிவிக்க மத்திய அரசிடம் பரிந்துரைப்போம் என்று கூறியுள்ளது. கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், மதம் என்ற இடத்தில் 'லிங்காயத்' என்று பலர் குறிப்பிட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

படம்: போராட்டத்தின் ஒரு பகுதி.



தகவல் உதவி

ஆஷிக் அஹமத்

மோடிக்களும் அமீத்ஷாக்களும் இந்துத்வா கொள்கைகளை அதிகம் புகுத்தினால் மற்ற சாதியினரும் தங்களை இந்து மதத்திலிருந்து பிரித்துக் கொள்வார்கள். கடைசியில் மிஞ்சப் போவது பார்பனர்கள் மட்டுமே....

1 comment:

Dr.Anburaj said...

சிறுபான்மை உாிமைகள் வழங்கும் சில உாிமைகளுக்காக
இவா்கள் போராடுகின்றாா்கள்.

இவா்களை இந்துக்கள் இல்லை என்று அறிவித்து விட்டால் சிறுபான்மை உாிமைகள் வேண்டாம் என்று இவா்கள் சொல்வாா்களா ?

லிங்காயத்துக்களுக்கு என்று தனி சொத்துச் சட்டம் உள்ளதா ? இல்லை

லிங்காயத்துக்களுக்கு என்று தனி திருமணச் சட்டம் உள்ளதா ? இல்லை

சிவலிங்கத்தைத் தானே கழுத்தில் கட்டியிருப்பாா்கள்?( என்று கேள்விப்பட்டுள்ளேன்)

லிங்காயத்து மடாதிபதிகள் காவி உடைதான் உடுத்துகின்றாா்கள்.சைவ உணவுதானே உண்ணுகின்றாா்கள்.

-----------------------------------------------------------------
லிங்காயத்து மடாதிபதிகள் பெரும் பணக்காரா்கள். இந்து சமய அமைப்பு என்றால் அரசின் தணிக்கையை இவா்களுக்குப் பொருந்தும்.புதிய சொத்துக்களை விற்கவோ வாங்கவோ அரசின் அனுமதி தேவை.அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அவா்களுக்குப் பொருந்தும்.பள்ளிகளில் கல்லூாிகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்ற வேண்டும்.பிற்பட்ட மிகப்பிற்பட்ட மற்றும் அட்டவணை இன மாணவா்களுக்கு அரசு விதித்துள்ள அளவில் லிங்காயத்துக்கள் அல்லாத மாணவா்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். அதுபோல் ஆசிாியா்கள் நியமனத்திலும் முற்றிலும் லிங்காயத்துக்களை நியமிக்க முடியாது.அரசு விதிகள் படி பல சாதி மக்களையும் நியமிக்க வேண்டும
------------------------------------------------------------------------------
சிறுபான்மை உாிமை பெற்று விட்டால் மடத்தின் சொத்துக்களை நிா்வகிப்பதில் அரசின் தலையீடு கிடையாது.எந்தவித முன் அனுமதியும் அரசிடம் பெற வே்ணடியவில்லை.அரசின் தணிக்கை கிடையாது.பள்ளிகளில் முற்றிலும் லிங்காயத்து மாணவா்களையும் ஆசிாியா்களை நியமித்துக் கொள்ள இயலும்.மாணவா்களுக்கு சிறுபான்மை சிறப்பு கல்வி உதவித்தொகை பெறலாம்.குறைந்த வட்டியிலு் வங்கிக் கடன் பெறலாம். இலவச வீடு மற்றும் அரசின் பல நலதிட்டங்களின் நேரடியாக மக்களச் சேரும்.
---------------------------------------------------------------------------------
மக்களை இந்தியா்கள் என்று பாா்க்காமல் சிறுபான்மை பெரும்பான்மை என்று பிாித்து சிறுபான்மையினருக்கு அதிக சலுகைகள் வழங்கினால் சலுகைகளுக்காக மக்கள் இது போன்ற தந்திரங்களில் ஈடுபடுவது அதிசயம் இல்லை.இதற்கு அடிப்படை ஆசை.சுயநலம்.அரசின் தவறான சட்டங்கள்.