Followers

Saturday, July 08, 2017

இந்து வியாபாரிகளுக்கு உதவி செய்த முஸ்லிம்கள்!

இந்து வியாபாரிகளுக்கு உதவி செய்த முஸ்லிம்கள்!

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்து வணிகர்கள் தங்களது வியாபாரத்தை மீண்டும் துவங்க முஸ்லிம் சமுதாயத்தினர் உதவி செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், பஷீர்ஹட் மற்றும் பாதுரியா உள்ளிட்ட பகுதிகளில் சமூகவலைதளத்தில் வெளியான புகைப்படத்தை தொடர்ந்து கலவரம் மூண்டது. பல கடைகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. கலவரத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கடைகளில் கொள்ளையடித்தனர்.பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அங்கு அமைதி திரும்பி வருகிறது. 


இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டு தங்களது பொருட்களை இழந்துள்ள இந்து வியாபாரிகளுக்கு அவர்களது முஸ்லிம் மதத்தை சேர்ந்த நண்பர்களும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் பண உதவி செய்து வருகின்றனர். 

கலவரத்தில் தனது பான் கடை மற்றும் பொருட்களை இழந்த அஜய் பால் என்பவர் கூறுகையில், எனது கடையில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வைத்திருந்தேன். நூற்று கணக்கானோர் வந்து, கடையை சூறையாடினர். கடையில் இருந்த அனைத்தையும் திருடி சென்றனர். எனது உறவினர்களும், முஸ்லிம் நண்பர்களும், கடையை மீண்டும் திறக்க பண உதவி செய்கின்றனர் என்றார். இதேபோல் அங்கு கடைகளை இழந்த பலருக்கு முஸ்லிம்கள் பண உதவி அளித்து வருகின்றனர். 

இது தொடர்பாக எர்சத் அலி காசி என்பவர் கூறுகையில், நாங்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் இணைக்கப்பட்டிருக்கிறோம். எனது குழந்தை பருவம் முதல் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக உள்ளனர். அவர்களுடன் வர்த்தக தொடர்பு உள்ளது. அவர்களிடம், உங்கள் வர்த்தகத்தை மீண்டும் துவங்கவும், வீடுகளை சரி செய்யவும் எங்களால் ஆன உதவிகளை செய்வோம் எனக்கூறியுள்ளோம். நாங்கள் அவர்களுக்கு பொய்யான வாக்குறுதி அளிக்கவில்லை. ரூ. 2 லட்சம் அல்லது ரூ.5 லட்சம் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், எங்களால் இயன்ற அளவு உதவி செய்வோம். எங்களிடம் உள்ள பணம் அல்லது மற்றவர்களிடம் சேகரித்து உங்களது இழப்பை ஈடுகட்ட உதவுவோம். நடந்தது நடந்தது தான். இதற்கு மேல் அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை. பஷீர்ஹட் பாரம்பரியம் சிதைக்கப்பட்டு விட்டது. இதுபோல் எப்போதும் நடந்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். 


இவரின் நண்பர் பினய்பால் கூறுகையில், எனது வீட்டிலிருந்து குடும்பத்துடன் தப்பி செல்லும்படி அனைவரும் கூறினர். நாங்கள் வசித்த தெருவில் என் கண்முன்னரே நூற்றுகணக்கானோர் வன்முறையில்ஈடுபட்டனர். நான் எர்சத்தை உதவிக்கு அழைத்தேன். அவர் என்னையும், எனது மனைவி குழந்தைகளைவீட்டிற்குள் அழைத்து சென்றார். எங்களுடன் தங்கி இருந்த அவர், பிரச்னையிலிருந்து காத்தார். இவ்வாறு அவர் கூறினார். அவர் வீட்டின் கீழ் தளத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். கலவரத்தில் அந்த கடை முற்றிலும் சூறையாடப்பட்டது. 


பஷீர்ஹட் பகுதி கவுன்சிலர் கூறுகையில், வழிபாட்டு தலங்களிலும், அக்கம் பக்கத்தினர் வீடுகளிலும், இந்து, முஸ்லிம்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம். வெளியாட்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. இங்கு நடந்த கலவரத்தில் வெளிநபர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


தகவல் உதவி
தினமலர்
09-07-2017

கலவரத்தை தூண்டியது வெளியாட்கள் என்பதை கவனிக்கவும். சிறப்பாக நடைபெற்று வரும் மம்தா பானர்ஜியின் ஆட்சியை கலைக்க பல வகைகளில் மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த கலவரத்துக்கு காரணமாக மம்தா பானர்ஜி மத்திய அரசை குற்றம் சாட்டியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.



சொந்த மக்களின் ரத்தத்தில் ஆட்சியில் அமர்ந்து இந்துத்வா எதனை சாதிக்க நினைக்கிறது?


1 comment:

vara vijay said...

Sir you don't gave proper reason why the riot started. What was that picture.