Followers

Saturday, November 10, 2018

தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணியை பற்றி....

தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணியை பற்றி, கல்வித்துறை அரசு அதிகாரிகளின் கருத்து
தக்கலை அரசு முஸ்லிம் தொடங்கப்பள்ளியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குமரி மாவட்டத்தின்
தக்கலை, திருவை, ஆளூர், திங்கள் சந்தை, குளச்சல் ஆகிய 5 கிளைகளின் சார்பாக பராமரிப்பின்றி காணபட்ட இடங்களை சுத்தபடுத்தி சீரமைப்பு இன்று ( 10/11/18) காலை செய்யப்பட்டது
நமது சீரமைப்பு பணிகளை கண்ட தக்கலை வட்டார கல்வி அதிகாரி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்..!!
தக்கலை வட்டார கல்வி அதிகாரி நம்மிடம் கூறும்போது...
உள்ளதை உள்ளபடியே கூறுகிறேன் - உங்கள் மதத்தில் ஒரு பற்று உண்டு இந்த சமூக பணி மூலம் மறுமையில் பலன் கிடைக்கும் என்றும் எந்த விதமான சாதி, சமய பாகுபாடின்றி நம்முடைய பாடசாலையும், இந்த பாடசாலையில் படிக்கும் பிள்ளைகள் உயர வேண்டும் என்றும் நீங்கள் செய்கின்ற இந்த பணி மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
காலை மதிய உணவு என அனைத்தையும் நீங்களாகவே தயார் செய்து எங்களிடம் ஒரு நயா பைசா கூட எதிர்ப்பார்க்காமல் சிறப்பாக உங்கள் செய்கிறீர்கள். இப்படிப்பட்ட உள்ளங்களை தேர்வு செய்வது கடினம்.
முஸ்லிம் என்றால் தீவிரவாதிகள், இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது போன்ற பேச்சுகள் எல்லாம் வெளி பேச்சாக தான் கருதுகிறேன். உண்மையாக உங்களுடன் பழகும் போது தான் அதன் நட்பு என்றென்று புரிகிறது.
இரத்த தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று இரத்தம் தான நம்பர் உங்களிடம் வாங்கியது ஒரு நம்பிக்கை தருகிறது.
இந்த இரத்த தான பணி என்பது சாதாரண பணியல்ல, ஒரு சகோதரன் தனது சொந்த சகோதரனுக்கு கூட இரத்த தான செய்ய மனது வராது அப்படியிருக்கையில் நீங்களோ மனதார அடுத்தவருக்கு இரத்தம் கொடுக்குறீர்கள்.
மனதறிய கூறுகிறேன் உங்களது இந்த பணி மிக சிறப்பானது, இந்த பலன் மறுமையில் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். மேலும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...
:- ஜெயராஜ், வட்டார கல்வி அதிகாரி, தக்கலை வட்டம்..
தக்கலை அரசு முஸ்லிம் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும் போது...
இயக்கங்கள் பலதும் பல வகையாக செயல்பட்டு கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ( TNTJ) பள்ளி மாணவர்களுக்காவும் பள்ளியின. வளர்ச்சிக்காகவும் நீங்கள் செய்யும் இந்த பணி மிக பெரிய உதவியாகவும், மாணவர்கள் மத்தியிலும் எங்கள் ( அதிகாரிகள்) மத்தியிலும் வரவேற்பு தந்துள்ளது.
எங்களுடைய அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து தந்துள்ளீர்கள். இந்த பள்ளியில் பயிலும் மாணவ/ மாணவியர்களின் வளர்ச்சி தான் உங்களுக்கு நன்றியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதை வெறுமனே பாராட்டுவதல்ல.! உரிமையுடன் கூறி கொள்வது, காரணம் இது போன்ற உதவிகள் செய்ய ஆட்கள் இல்லாத பல இடங்கள் இருக்கும் வேளையில் நீங்கள் வயது வித்யாசமின்றி செய்யும் பணி பாராட்டதக்கது, எங்கள் பள்ளி கல்வி துறை சார்பாக மிக்க நன்றி
:- ஜஸ்டின் ஜெரோம், தலைமை ஆசிரியர்
அல்ஹம்துலில்லாஹ்..!!
இந்த சீரமைப்பு பணியின் போது குர்ஆன் மற்றும் தாவா புத்தகங்கள் வழங்கப்பட்டது. அது போக நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.


No comments: