Followers

Saturday, November 03, 2018

நெகிழ்ச்சியான குறும்படம்

தனது தாயோடு கடைத் தெருவுக்கு வந்த சிறுவன் ஒரு மூதாட்டி தீபாவளிக்கு கடை பரப்பியுள்ளதைப் பார்க்கிறான். மண் விளக்குகளை வாங்க வருவோர் யாரும் இல்லை. எனவே ஏதாவது வாங்கலாம் என்றால் தாய் தடுக்கிறாள். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த கடைக்கு வந்த சிறுவன் அந்த மூதாட்டியிடம் பணம் கொடுத்து சில விளக்குகளை வாங்குகிறான். வாங்கிக் கொண்டே 'தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா' என்கிறான். அந்த மூதாட்டியோ 'இந்த விளக்குகள் எல்லாம் எப்போது விற்கிறதோ அப்போததான் எனக்கு தீபாவளி' என்கிறார்.
உடனே அந்த சிறுவன் அந்த மூதாட்டியை தனது கேமராவுக்கு போஸ் கொடுக்க சொல்கிறான். அவரும் கொடுக்கிறார். தனது வீட்டுக்கு சென்று தனது பிரின்டரில் அந்த மூதாட்டியின் புகைப்படத்தை நகல் எடுத்து 'அம்மாவின் தீபாவளியை மகிழ்ச்சியாக்குங்கள்' என்ற வாசகத்துடன் ஒரு நோட்டீஸ் அடிக்கிறான். அந்த நோட்டீஸை தனக்கு தெரிந்தவர்களிடம் கொடுத்து விளக்குகளை வாங்கச் சொல்கிறான். பல இடங்களில் போஸ்டராகவும் ஒட்டுகிறான். அந்த மூதாட்டிக்கு விளக்குகளின் விற்பனை சூடு பிடிக்கிறது. அனைத்தும் விற்று தீர்கிறது. அந்த மூதாட்டியும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பும் போது 'அம்மாவின் தீபாவளியை மகிழ்ச்சியாக்குங்கள்' என்று அந்த சிறுவன் சொல்கிறான்.
தனது வியாபாரத்துக்கு காரணம் அந்த சிறுவன்தான் என்பதை எண்ணி அவனை பார்க்க ஓடுகிறார் அந்த மூதாட்டி.... நெகிழ்ச்சியான குறும்படம். தெருவோரம் வியாபாரத்துக்கு அமர்ந்துள்ள இது போன்ற ஏழை வியாபாரிகளை ஊக்கப்படுத்துவோம்.

2 comments:

Dr.Anburaj said...

Excellent,அருமையான படம்.கதை.தயாரிப்பு.கருத்து.நடிப்பு அனைத்தும் அற்புதம்.திரைப்படங்கள் பார்த்து 40 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்று இந்த திரைப்படத்தைப் பார்த்தேன். நன்றி.பாராட்டுக்கள். அருமையான இந்த படம் தங்கள் கண்ணில் பட்டது ஒரு அற்புதம்.அதை தோ்வு செய்து இங்கே பதிவு செய்தது அருமையான தொண்டு.நானும் காய்கறிகள் பழங்கள் வாங்கினால் பிளாட்பாரத்து கடைகளில் வாங்குவேன். அடிக்கடி மீதி காசுகளை வாங்காமல் சென்று விடுவேன். தரமானதாக இருந்தால் கேட்கும் விலை கொடுத்து விடுவேன்.ஒருபோதும் பேரம் பேச-குறைத்து கேட்க மாட்டேன்.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாா்த்தபின் மனதிற்கு மகிழ்ச்சியாக நிறைவாக இருந்தது. மீண்டும் மீண்டும் தங்களைப் பாராட்டுகின்றேன். மாற்றுக் கருத்தை பதிவு செய்ய முடியாத ஒரு அருமையான பதிவை செய்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள் சுவனப்பிரியன்.