துப்பினால் துப்பியவரே துடைக்க வேண்டும் - புனேயில்
மஹாராஷ்ட்ர மாநிலம் புனேயில் இனி எச்சில், பான் பராக, போன்றவற்றை பொது வெளிகளில் துப்பினால் துப்பியவரே அதனை சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக புனே நிர்வாகம் ஆட்களையும் நியமித்துள்ளது. ஒரு முறை துடைத்தால் மறுமுறை துப்புவதற்கு யோசிப்பர் எவரும். வட இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் எந்நேரமும் வாயில் எதையாவது போட்டு மென்று கொண்டே இருப்பதை பார்க்கலாம். இதனால் வரும் எச்சிலை பொது வெளியில் துப்புவதை வாடிக்கையாக சிலர் செய்வதை பார்த்திருக்கலாம்.
ரியாத்தில் ஹாரா போன்ற பகுதிகளில் ஹைதராபாதி ஹோட்டல்களுக்கு அருகில் சிறு மணல் குன்று போட்டு வைத்திருப்பார்கள். அது எதற்கென்றால் பான் போட்டு விட்டு துப்புவதற்காக!
தற்போது தமிழ்நாட்டிலும் பான் போடும் பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது. புனேயை பின்பற்றி நமது தமிழக அரசும் எச்சில் துப்புபவர்களை கண்டு பிடித்து இது போன்ற தண்டனையை வழங்கலாம்.
2 comments:
கலாச்சாரம் அற்றவர்கள் தான் இன்று பல அரசாங்க பதவிகளில் உள்ளனர், துடைக்கவிடுவதற்கு பதில் நக்க விடவேண்டும்
சுத்தமான நகரங்களை வைததே ஆக வேண்டும்.கடுமையான நடவடிக்கை தேவை. பாராட்டுக்கள்.
Post a Comment