Followers

Sunday, May 03, 2015

பாகிஸ்தான் மாட்டுக் கறியை மட்டும் உதவியாக தந்ததா?





பாகிஸ்தான் அரசு நேபாளத்தக்கு அனுப்பப்பட்ட உதவிப் பொருட்களில் மாட்டுக் கறியும் கலந்து இருந்ததாக இந்திய பத்திரிக்கைகள் குற்றம் சாட்டியிருந்தன. இதனை மறுத்து கருத்து வெளியிட்ட பாகிஸ்தானின் உயர் அதிகாரி தஸ்னிம் ஆலம் தனது மறுப்புரையில் 'இந்திய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை உதவி வழங்குதலிலும் ஏற்படுத்தியுள்ளன. பலதரப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் 'பீஃப் மசாலா'. அந்த பாக்கெட்டின் மேல் தெளிவாக 'பீஃப் மசாலா' என்றும் குறிப்பிட்டிருந்தோம். நாங்கள் அனுப்பிய உணவுப் பொருட்கள் மிகவும் ருசியாக இருந்ததாகவும் மேற் கொண்டு உதவியும் தேவைப்படுவதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்து இருக்க தேவையற்ற சர்ச்சையை இந்திய ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன' என்று வருத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சார்பில் அனுப்பட்ட ஒவ்வொரு உணவுப் பட்டியலில், 22 வகையான சாப்பிடத்தயாரான உணவு வகைகள் இருந்தன. அதில் அரிசி, உணவு, கோதுமை, ரொட்டி, பிரட், ஜாம், பால், தயிர், பருப்பு, கேசரி, உள்ளிட்ட பலவகையான சிறிய பாக்கெட்கள் இருந்தன, அதில் ஒன்று தான் 'பீஃப்' மசாலா. மேற்படி உணவுப் பட்டியலில், தேவையானதை சாப்பிடவும் பிடிக்காததை தவிர்ந்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு பாக்கெட்டின் மீதும் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் இது இன்ன பொருள் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலுள்ள இந்துக்களில் 90 சதவீத மக்கள் எப்படி மாட்டிறைச்சியை சாப்பிடுவார்களோ அதேப்போன்று நேபாளிலுள்ள 95 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் மாடுகளை வெட்டி திருவிழா நடத்துவார்கள்.

உணவுக் கிடைக்காமல் உயிர் வாழவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான நேரத்திலும் மதத்தை நுழைத்து அதில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் இந்துத்வாதிகளின் மனோ நிலையை என்னவென்பது?

1 comment:

C.Sugumar said...

சுவனப்பிாியனுக்கு பாக்கிஸ்தானை காப்பாற்ற என்ன அக்கறை அக்கறை பாருங்கள்.இனம் இனத்தோட.அதுதான் அரேபிய ஒற்றுமை. அரேபிய மதம் என்று வந்து விட்டால் பாக்கிஸ்தானும் சீனாவும் இந்திய முஸலீமும் இணைந்து விடுவாா்கள்.