Followers

Saturday, July 22, 2017

கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!

கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!

காக்கிநாடா: ஆந்திராவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பராமரிக்கப்பட்ட, 46 பசுக்கள், நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டு, பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா நகரில், ஆதரவற்ற விலங்குகளை பராமரிக்கும் அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு, 480 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.


மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், இங்குள்ள பசுக்களில் சில, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. உணவுப் பற்றாக்குறையால், பல பசுக்கள், பசியால் வாடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், கடந்த சில நாட்களாக, நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்ட, 46 பசுக்கள் பரிதாபமாக இறந்தன.


இது குறித்து, தகவல் அறிந்த, மாநில கால்நடைத் துறை அதிகாரிகள், மாடுகள் பராமரிக்கப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பசுக்களின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது குறித்து, கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மிகச் சிறிய இடத்தில், அதிகப்படியான பசுக்கள் பராமரிக்கப்படுவதே, அவற்றின் நோய் தாக்கத்திற்கு காரணம். 150 பசுக்கள் மட்டுமே பராமரிக்க கூடிய இடத்தில், இந்த அமைப்பினர், 480 பசுக்களை பராமரித்து வருகின்றனர். மழைக் காலம் என்பதால், பசுக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.


அனைத்து பசுக்களுக்கும் போதிய உணவளிக்க முடியாததால், அவற்றில் சில, பட்டினியால் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். நிமோனியா நோய் பாதிப்பாலும், சில பசுக்கள் பலியாகியுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் உதவி
தின மலர்
23-07-2017


இந்த பசுக்கள் விவசாயிகளிடம் இருந்திருந்தால் நல்ல விலைக்கு விற்று அதனை காசாக்கியிருப்பார்கள். உழைக்கும் மக்களுக்கு உணவாகவும் சென்றிருக்கும். அதை விடுத்து 'கோமாதா எங்கள் தெய்வம்: அதனை இறைச்சிக்காக அறுக்கக் கூடாது: அதனை நாங்களே பராமரிக்கிறோம்' என்று கோமாளித்தனமான முடிவை எடுத்ததனால் இன்று 64 பசுக்கள் இறந்துள்ளன. சுற்றுப்புற சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன. இந்த கோமாளிகளான இந்துத்வா ஆட்சியாளர்கள் இதனை என்றுதான் உணருவார்களோ!


3 comments:

Dr.Anburaj said...


பகடு புறந் தருநர் பாரம் ஓம்புக!


உழவர் குடியைப் பாதுகாப்பது அரசனின் கடமை என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று எடுத்துக் காட்டுகிறது. ஏருழவர் குடியைப் பாதுகாத்து, மக்களின் நலன் பேணினால், பகைவர்கள் கூட உன்னைப் பணிந்து போற்றுவார்கள் என்று சோழ மன்னன் கிள்ளிவளவனிடம், புலவர் வெள்ளைக் குடிநாகனார் கூறுகிறார்.

""கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே;

வருந்திய குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!

வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,

பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே!'' (புறநா.35)

"கீர்த்தி உடைய அரசனே! மன்னனின் வெண்கொற்றக் குடை, வெயிலை மறைப்பதற்காகப் பிடிப்பது அன்று. வேதனைப்படும் குடிமக்களின் துன்பம் நீக்கி, இன்பம் என்ற நிழலைத் தருவதன் அடையாளமாகப் பிடிக்கப்படுவதாகும். உன்னுடைய படைவீரர்கள் உனக்கு ஈட்டித்தரும் வெற்றியானது, உழவர்கள் உழுது, பயிர் செய்து, விளைவித்த உணவின் பயனால் வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பருவமழை பொய்த்தாலும், நிலவளம் குறைந்து விளைச்சல் குறைந்தாலும், இயற்கைக்கு மாறான செயல்களைச் செய்தாலும் மக்கள், அரசனின் ஆட்சிமுறையையே குறை கூறுவர்.

அரசனே! நீ குற்றம் கூறும் அயலாரை நம்பாதே. நிலத்தையும் ஏரையும் பாதுகாக்கும் உழவர்களுக்குக் குறை உண்டாகாமல் காப்பாற்ற வேண்டும். விவசாயத்தைப் பெருக்கி, விளைச்சலைப் பெருக்குவதன் மூலம் அனைத்து குடிமக்களையும் காப்பாற்ற முடியும். இப்படி மக்கள் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டுமானால் உழவர் குடியைப் பாதுகாக்க வேண்டும். இதனால் உன் பகைவரும் உன்னைப் பணிந்து போற்றுவர்' என்கிறார் புலவர்.

வெள்ளைக்குடி நாகனாரின் கருத்து எக்காலத்துக்கும் பொருந்தும்.

பகடு என்றால் கால்நடைகள் என்று பொருள். அரேபிய காட்டுமிராண்டிகளைப் படிக்கும் தங்களுக்கு தமிழ்பண்பாடு வரலாறு தொியாது.எனவே இந்தப் பதிவு. நன்றி

Dr.Anburaj said...

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை
சங்கரா ஆர்கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது ஒன்று என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்!
திருப்பெரும் துறைஉறை சிவனே!
எந்தையே ஈசா, உடலிடம் கொண்டாய்
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!---திருவாசகம்

மாணிக்க வாசகர் பல இடங்களில் தன்னை நாயினும் இழிந்தவன் என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார். அத்தகைய அவரை எடுத்துக்கொண்டு, அவருக்கு ஈடாக இறைவன் தன்னையே அவருக்குக் கொடுத்துள்ளார். இந்தச் சரிசமம் இல்லாத பரிமாற்றத்தில் யாருக்குப் பெரும்பேறு கிட்டியது? அறிவாளி யார்? இறைவன் தன்னையே கொடுத்ததால் மாணிக்கவாசகருக்கு எல்லையில்லா ஆனந்தம் கிட்டியது.

Dr.Anburaj said...


பசுக்கள் மீது கொண்ட தங்கள் அன்பிற்கு நன்றி.