Followers

Wednesday, August 09, 2017

இசை சம்பந்தமாக அருமையான_பதிவு

இசை சம்பந்தமாக அருமையான_பதிவு

இசை பற்றி இஸ்லாமிய நிலைப்பாட்டை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பீ ஜெய்னுலாபிதீன் அவர்கள் கூறியதற்கு சகோதரர் வாசுகி பாஸ்கர் அவர்கள் அபிப்ராயம் என்ற பெயரில் பின்னூட்டம் பதிந்ததில் ஆச்சரியமில்லை. என் தாயார் சொல்வார்கள்: சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும் என்று - சிந்திக்காத, கங்கணம் கட்டி கொண்டு மூளையை சிந்தனை செய்யாமல் தடுத்து கொண்ட சகோதரரிடம் எப்படி அதெயெல்லாம் எதிர்பார்க்க முடியும்?

ஆனால் இசை சம்பந்தமாகவும், அதன் முக்கியம் பற்றியும் சகோதரர் வே.மதிமாறன் Mathimaran V Mathiமுகநூலில் பதிந்த கருத்து ஆச்சரியம் அளிக்கிறது. தனக்கு இசை மேல் பிரியம் உண்டு, காலசக்கரத்தின் கஷ்டங்களில் இருந்து இசை தன்னை மீட்டெடுத்தது என்ற கருத்துடன் அவர் நிறுத்தி விட்டிருந்தால், அது ஒரு தனிமனிதனின் நியாயமான வாதமாக இருந்திருக்கும். ஆனால் பொதுகருத்து என்ற பெயரில் - அநியாயமான நச்சு கருத்தான - அதாவது, இசை இல்லாத வாழ்க்கை முரட்டுதனமானது, பரிதாபமானது என்று பதிந்தது - மதிமாறனுக்குள் இப்படிபட்ட ஒரு நபர் ஒளிந்திருக்கிறாரா என்ற கேள்வி எழும்பி குழப்பத்தில் தள்ளியுள்ளது.

அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் எந்த இசையை கேட்டு தங்களை நேர்முகப்படுத்தி கொண்டு ஒரு சமுதாயத்தை வழிநடத்தினார்கள்? துன்பங்கள் வாட்டிய பொழுது இவர்களை காப்பாற்றிய இசை எது?
அல்லது இவர்கள் இசை இல்லாத வாழ்க்கை வாழ்ந்த முரடர்களா?

துன்பங்களினால் கஷ்டப்பட்ட பொழுது இசைக்கு பின்னால் ஒளிந்து கொள்ளாமல், துன்பத்தின் உண்மையான பரிமாணத்தை உணர்ந்து, உள்ள-புத்தி வலிமையினால் அதிலிருந்து மீண்டு வந்து, அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் போட்ட சமுதாய அடித்தளம் - அதாவது அம்பேத்கர், பெரியார் போன்றோர் போட்ட அடிதளத்தின் ஆழத்தினை கூட நுகர்ந்து பார்க்க முடியாமல் கையை பிசைந்து கொண்டு கதறும் ஹிந்துத்துவ பாசிஸ்ட்டுகள் படும் ஒரு நிலையை விட்டு சென்ற அம்பேத்கரும், பெரியாரும் - முரட்டுதனத்தின் தயாரிப்பா?

எம்எஸ்வி (அல்லது சகோதரர் மதிமாறனுக்கு பிடித்த இசை அறிஞர்கள்) போன்றவர்களின் பாடல்களை கேட்பவர்கள் மட்டும் தான் முரட்டுதனம் இல்லாதவர்களா? நம்பிக்கையின் அடையாளமான வடக்கத்திய ஹிந்துஸ்தானி, தெற்கத்திய கர்னாட்டிய சங்கீதமும் - அதனை ஒத்த வர்ணாசிரம கொள்கையும்; வன்முறை இசையாகிய அமெரிக்காவின் வெஸ்ட் கோஷ்ட்-ஈஸ்ட் கோஸ்ட் ஹிப்-ஹாப் ராப் இசையும் (West Coast/East Coast Hip-Hop Rap) - அதனை ஒத்த வன்முறை கொலைகளும் - மிதவாதமா?

வாழ்க்கையின் நெருக்கடியான நேரத்திலும், சத்தியம் நிலைநாட்டப்படும் விவாதத்திலும் உள்ளம் மற்றும் மூளையின் பலத்தை வலுப்படுத்தி, அதனை ஆயுதமாக்கி, நிதர்சனத்தை நிலைநாட்டி வென்று மீள்வது மெய்மையா? அல்லது பலப்படுத்தி பழக்கப்பட வேண்டிய உள்ளத்தையும், அறிவையும் இசை கொண்டு சஞ்சலம் அடைய செய்து மழுங்கடிக்கும் பழக்கத்திற்கு பெயர் மெய்மையா?

இசை என்பது உள்ளுணர்வு கவனத்தை மழுங்கடித்துவிட்டு, வெளியுணர்வு கவனத்தை மட்டும் செயல்படுத்த வைக்கும் என்பதையும்; ஒன்றிணைந்த கவனத்தையம், அதன் ஆற்றலையும் தடுக்கும் என்பதையெல்லாம் சகோதரர் மதிமாறன் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லையா? சீரிய சிந்தனையை செலுத்தி சந்தேகங்களுக்கு தீர்வு காணாமல், அரைகுறை கவனத்துடன் கிடைக்கும் விடை தான் உயர்ந்ததா?

ஒரு மரண கடி படத்தை குறைந்தது இரண்டு முறையாவது மீண்டும் பார்க்க வைக்க, ஒன்று அல்லது இரண்டு டப்பாங்குத்து பாட்டை, இசை என்ற பெயரில் இடையில் சொருகி சிந்தனையை கட்டிப்போடும் பழக்கத்திற்கு பெயர் தான் சந்தோஷமா?

சுவையான உணவை உண்ணும்பொழுதும், பணம் அதிகமாகும்பொழுதும், சம மற்றும் மாற்று இனத்துடன் காதல் வயப்படும்பொழுதும், காமம் கொள்ளும்பொழுதும், போதை பொருள்கள் புழங்கும்போதும் சுரக்கும் டோபமைன் என்னும் இரசாயனம் தான் பிடித்தமான இசை கேக்கும் பொழுதும் மூளையில் சுரக்கிறது என்பதை சகோதரர் மதிமாறன் அறிந்து வைத்திருக்கவில்லையா?

மாட்டுக்கறி திங்காதவர் - தின்பவர் என்று இரண்டு பிரிவினர் இருக்கலாம்; அதேபோல் இசையை விரும்புபவர் - விரும்பாதவர் என்று இரு பிரிவினர் இருக்கலாம். இது பகுத்தறிவு.

ஆனால் இசையை விரும்பாதவர்கள் முரடர்கள், பரிதாபமானவர்கள் என்பது பகுத்தறிவா?1 comment:

Dr.Anburaj said...


மேற்கத்திய இசை மேடைகள் பாப் பாடல்கள் ஒழுக்கக் கேடானவை. ராக் இசைப் பாடல்கள் இசை அல்ல.பீதொவன் பாடல்கள் மனதை வருடும்.சாந்தி படுத்தும். குறிப்பாக பியானோ இசை அற்புதமானது.
நமது இந்து கா்நாடக இசை தமிழ் பண்கள் மென்மையானவை. மனதை லயிக்கச் செய்பவை.
மன இறுக்கத்தை போக்கி சாந்தி அளிப்பவை. வீணை இசை அற்புதமானது. அதுதான் நமது வாப்பாப்பா அப்துல் கலாம் அவா்களை அப்படியே மயக்கி போட்டுள்ளது. பல ஆய்வு திட்டங்களில் தலைமை பொறுப்பில் -கடுமையான வேலைப்பளுவை சுமந்து தவித்த நிலையிலும் வீணை வாசிக்கக் கற்று அதில் மன சாந்தியை உற்சாகத்தை ஓய்வை தெய்வீகத்தை பெற்றுள்ளாா்.சங்கீதம் கேட்காதவன் சுலபமாக கொலை செய்து விடுவான் என்று ஷேகஸபியா் சொல்லியிருப்பதாக நினைவில் வருகின்றது. இசையின் சிறப்புகள் ஆயிரம் உள்ளது.இசை வல்லுநா்கள் மத்தியில் பண்பாடு அறிவு நோ்மை சற்று அதிகம்.மனதை வருடி மென்மைப்படுத்தும் பேராற்றல் வீணை போன்ற இசைக்கருவிக்“க நிச்சயம் உண்டு.கா்நாடக சங்கீதம் போன்ற மென்மையான இசைப்பயிற்சி அரபு நாடுகளில் இருந்திருந்தால் அந்த சமூகத்தில் இரத்தக்களறி குறைந்திருக்கும்.

திரைப்பட பாடல்களில் ஏராளம் சாக்கடை சாக்கடைதான்.கலாச்சார சாக்கடை. இது சமூக வாழ்விற்கு பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருவது உண்மை.