'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் நெய் சோற்றுக்கு தன்னை விற்பன் இவன்.இவனையெல்லாம் பதிவு செய்ய வேண்டுமா ? வ.உ சிதம்பரம் பிள்ளை செய்த பணிகளை சற்று நினைப்போமே வ.உ.சி. (தோற்றம் 5-9-1872 மறைவு 18-11-1936)
கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தத்ரூபமாக வ.உ.சி-ஐ நம் மனக்கண் முன்னே நிறுத்தினார்.
பார்த்தவர்கள் மனம் கலங்கியது.
செக்கிழுத்த செம்மலை எப்படிப் புகழ்வது?
மஹாகவி பாரதியாருடனான அவரது நெருங்கிய தொடர்பை யாரும் மறக்க முடியாது.
அழியாத அமர வரிகளால் பாரதியார் அவரை தனது பாடல்களில் சித்தரித்து விட்டார்:
கலெக்டர் விஞ்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லியது
2 comments:
ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் நெய் சோற்றுக்கு தன்னை விற்பன் இவன்.இவனையெல்லாம் பதிவு செய்ய வேண்டுமா ?
வ.உ சிதம்பரம் பிள்ளை செய்த பணிகளை சற்று நினைப்போமே
வ.உ.சி. (தோற்றம் 5-9-1872 மறைவு 18-11-1936)
கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தத்ரூபமாக வ.உ.சி-ஐ நம் மனக்கண் முன்னே நிறுத்தினார்.
பார்த்தவர்கள் மனம் கலங்கியது.
செக்கிழுத்த செம்மலை எப்படிப் புகழ்வது?
மஹாகவி பாரதியாருடனான அவரது நெருங்கிய தொடர்பை யாரும் மறக்க முடியாது.
அழியாத அமர வரிகளால் பாரதியார் அவரை தனது பாடல்களில் சித்தரித்து விட்டார்:
கலெக்டர் விஞ்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லியது
ராகம் - தாண்டகம் தாளம் - ஆதி
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய், கனல் மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி)
கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய், - எமை தூஷித்தாய்,
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி)
கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய், - சட்டம் மீறினாய்,
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி)
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய், - புன்மை போக்கினாய்,
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி)
தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய், - புகழ் வேண்டினாய்,
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி)
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய், - விதை தூவினாய்,
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி)
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
சொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன்
தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
தள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி)
கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோ ம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ?
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ? - அவ மானமோ?
பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ? - நாங்கள் சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ? - உயிர் வெல்லமோ?
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ? - பன்றிச் சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இத்
நீதமோ? - பிடி வாதமோ?
பார தத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ? - மனஸ் தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ? - இதில் செற்றமோ?
ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோ ம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
மலைவு றோம்; - சித்தம் கலைவுறோம்.
சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? - ஜீவன் ஓயுமோ?
இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ
பாடலை விளக்கவும் வேண்டுமோ?
Post a Comment