Followers

Tuesday, June 12, 2018

காலா - திருடனுக்கு தேள் கொட்டிய கதை


காலா - திருடனுக்கு தேள் கொட்டிய கதை

ரஜினியை இந்துத்வாவுக்கு ஆதரவானவர் என்று பிஜேபி தலைவர்கள் முதல் அதன் தொண்டன் வரை பிரசாரம் செய்து புளகாங்கிதம் அடைகின்றனர். ஆனால் விமரிசனங்களை வைத்து பார்க்கும் போது கலைஞரின் பராசக்தியை விட ஒரு படி மேலே போய் சீர் திருத்த கருத்துக்களை ரஞ்சித் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.

கலைஞர் பராசக்தியை சொன்ன போது நாத்திக கருத்துக்களுக்கு அமோக ஆதரவு இருந்த நேரம் அது. எனவே ஈஸியாக சொல்லி விட்டுப் போய் விட்டார். ஆனால் ரஞ்சித் வாழும் இந்த காலமோ எங்கும் சங்கிகள் நீக்கமற நிறைந்திருக்கும் காலம். அதிலும் பார்பனர்களுக்கு பிடித்தமான ரஜினியை வைத்தே பல பஞ்ச் டயலாக்குகள் வைத்துள்ள ரஞ்சித்தின் தைரியத்தை நன்றாக பாராட்டலாம்.

படத்தின் பல காட்சிகள் ராமனை வில்லனாகவும்: ராவணனை ஹீரோவாகவும் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.  இன்று, பெரியார் மண்டை உடைக்கப்படுகிற காலம்! இந்த சந்தர்ப்பத்தை விட்டால், தமிழர்களை அழிக்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். எச் ராஜா வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் போது; இன்று சூத்திரனே புத்தி மயங்கி அடக்கி ஆள நினைக்கும் ஆரியத்திற்கு தூபம் போடும் போது; பிஜேபின் நிழலாக பார்க்கப்பட்ட ரஜினியை வைத்தே பெரியாரின் "வைசியத்" தொடையில் தைத்த முள்ளை, ஒரு சூத்திர ரஞ்சித் எடுக்கிறான் என்றால், அது எத்துணை சிறப்பு. 

காலா திரைப்படம் இந்துத்வாவுக்கு ஆதரவான படம் என்று குதூகலித்திருந்தனர் இந்துத்வாவினர். ஆனால் இந்த படம் அவர்களுக்கு முற்றிலும் எதிரான படம் என்பதை ரிலீஸூக்குப் பிறகே தெரிந்து கொண்டனர். மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் சங்கிகள் நெளிவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. இறைவன் நாடினால் பெருநாள் விடுமுறையில் அபு துபாய் மற்றும் துபாய் 4 நாட்கள் நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க ரியாத்திலிருந்து செல்கிறேன். அப்போது நேரம் கிடைத்தால் தியேட்டரிலேயே இந்த படத்தைப் பார்க்க முயற்சிக்கிறேன்.

6 comments:

Dr.Anburaj said...

சாசுவதமான புகழ்கொண்ட சநாதன தா்மத்திற்கு ரஜனி என்ற முட்டுக் கால் தேவையில்லை.
இவரது படம் எந்த கருத்தையும் வலியுருத்தட்டும். அதையும் சந்திக்க தயாா்.

Dr.Anburaj said...

ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை-தமிழ்ஹிந்து
June 11, 2018
- ஜடாயு

வால்மீகி ராமாயணத்தில் ராவணனின் பெருமைகளும் (குலம், வீரம், தவம், வரங்கள், வித்தைகள் இத்யாதி), அவனது அதர்ம நடத்தைகளும் ( தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தியது, பெண்களைக் கவர்ந்து வந்தது, குரூர குணங்கள்) இணைத்தே பேசப்படுகின்றன. பல இடங்களில் நேரடியாக கவிக்கூற்றாகவும் மற்றும் ராமன், ஹனுமான், விபீஷணன் போன்றோரது எண்ணங்கள், பேச்சுகளின் வாயிலாகவும் இவை வருகின்றன. சிவபக்தன் என்ற குறிப்பு முதல் 6 காண்டங்களில் இல்லை, உத்தர காண்டத்திலேயே உள்ளது, அது பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

காவிய நோக்கில், ராமனைப் போன்று தர்மத்தின் மூர்த்தியாகவும் நற்குணக் கடலாகவும் உள்ள ஒரு மகத்தான நாயகனுக்கு எதிராக, எந்தப் பெருமைகளும் இல்லாத முற்றிலும் தீயவனான எதிர்நாயகனைப் படைப்பது என்பது முதிர்ச்சியற்ற, படுசாதாரணமான ஒரு காவிய அழகியலாகவே இருந்திருக்கும். கிரேக்க, ரோமானிய, செல்டிக் கலாச்சாரங்களின் பழைய காவியங்களும் அவற்றின் பாத்திரங்களும் இந்தப் பாணியில் தான் முற்றான நேர்-எதிர் தன்மைகளுடன் உள்ளன. கடவுள் – சாத்தான் என்ற யூத-ஆபிரகாமிய-கிறிஸ்தவ கருதுகோளும் அப்படியே.

ஆனால் நமது பண்பாட்டின் ஆதிகாவியமான ராமாயணத்தை அளித்த வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், “வீரனே, பண்பாடற்றவளிடம் பண்பாடற்றவன் பேசுவது போலவன்றோ பேசுகிறாய்” என்று சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஏன் அவர் நினைத்திருந்தால், கருப்பு வெள்ளைத்தனமாக ராவணனையும் ராமனையும் சித்தரித்திருக்கலாமே? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது.

இத்தனை நூற்றாண்டு காலமாக, ராமாயணம் பல்வேறு மொழிகளிலும் வடிவங்களும் நமது தேசமெங்கும் மீளமீளக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அடிப்படையான விஷயத்தின் ஆழமும், கனமும் நீர்த்துப் போகவில்லை. ராமனும் சீதையும் பரதனும் லட்சுமணனும் குகனும் அனுமனும் ஜடாயுவும் விபீஷணனும் போற்றப் படுகிறார்கள். ராவணன் போற்றப் படவில்லை, ஆனால் தூற்றப் படவுமில்லை. அவனை வீழ்ச்சியடையச் செய்தது எது என்பதன் வாயிலாகப் புரிந்து கொள்ளப் படுகிறான்.

இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத படித்த முட்டாள்களும், அறிவிலிகளும் தான் ராமாயணத்தையே திருப்பிப் போட்டு தாங்கள் ஏதோ புதியதாக பெரிய “புரட்சி” செய்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள். ராமாயணம் போன்ற ஒரு மகோன்னதத்தை, அதை நமக்களித்த ரிஷிகளின் கவிகளின் மேதைமையின் விசாலத்தை ஒரு சிறிதும் உணரத் திராணியில்லாத சிறு மனங்கள் கொண்ட நிர்மூடர்கள் தான், அதை வெறுப்புணர்வுகளைப் பரப்பவும், தங்கள் அரசியல் / சித்தாந்த காழ்ப்புகளை சித்தரிக்கவும் திரிக்க முற்படுகிறார்கள். இன்று பிறந்து நாளை அழியும் ஈசல்கள் இவர்கள்.

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராமாயண காதை உலகில் நிற்கும்.

யாவத் ஸ்தா2ஸ்யந்தி கி3ரய: ஸரிதஶ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா2 லோகேஷு ப்ரசரிஷ்யதி

(வால்மீகி ராமாயணம் 1.2.36)

Dr.Anburaj said...

2
சமூகக் குறியீட்டு ரீதியாக ராமாயணத்தை வாசிப்பது என்றால் – ராவணன் ஆதிக்க சாதியான அரக்கர் குலத்தவன். ஆக்கிரமிப்பின், குரூரத்தின், பயங்கர ஆயுதங்கள் கொண்ட ராணுவ படைபலத்தின், வன்முறையின், எளியவர்களை ஒடுக்க நினைக்கும் செல்வச் செருக்கின், அதர்மத்தின் அடையாளம். ராமன் சாமானிய சாதியான மானுட குலத்தவன். அரசகுமாரன் எனினும் சத்தியத்தைக் காக்கக் கானக வாழ்க்கை மேற்கொண்டு எளியவர்களான முனிவர்கள், வனவாசிகளுடன் உடனுறைந்து, கல்லையும் மரங்களையுமே ஆயுதங்களாகக் கொண்ட வானரப் படைகளின் துணையுடன், அதிகபலம் வாய்ந்த அதர்ம அரக்கரை எதிர்த்துப் போரிடும் தர்ம சக்தியின் அடையாளம்.

அதனால் தான், கடலும் இராமனுக்கு வழிதிறக்கிறது, எளிய ஜீவனான அணிலும் தன் பங்குக்கு உதவி செய்கிறது. அதனால் தான் காந்திஜி தனது இலட்சிய அரசாட்சியை ராம ராஜ்யம் என்றழைத்தார். இந்திரா காந்தி சிறுவயதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கிய தன்னார்வலர் தொண்டர் படையை ‘வானர சேனா’ என்றழைத்தார். இந்த மண்ணின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்த குறியீடு இது.

இதை அப்படியே திருப்பிப் போட்டு, ராவணனை “வஞ்சிக்கப் பட்டவனாக” (victim) சித்தரிப்பது எந்தவிதமான “புதிய புரட்சியும் ” அல்ல, மாறாக பண்பாட்டு அழிப்புச் செயல். எந்த வரலாற்று ஆதாரமுமில்லாத ஆரிய திராவிட இனவாதத்தை வைத்து திராவிட இயக்க மூடர்கள் தமிழ்நாட்டில் பரப்பி உளுத்துப்போன இழவெடுத்த பொய்ப் பிரசாரத்தை, சாக்கடையிலிருந்து எடுத்து மறுபடி புட்டியில் ஊற்றி பரிமாறும் இன்னொரு விதமான வெறுப்புப் பிரசாரம் மட்டுமே இது. என்னவோ இதில் பயங்கரமான காவிய / இலக்கிய / சினிமா உத்தி எல்லாம் இருக்கிறது என்று புல்லரிக்கும் சிலரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

vara vijay said...

Suvanapriyan firstly you can't watch any kind of cinema because it is Harram as evidenced by your previous A.R Rahaman article and in that movie ranjith is portraying Bhuddisim(athesit) as a solution not islam(believing in God and rasool).

NARESH KUMAR said...

Sir I am sure that you never like this movie 🎬,in fact you will hate this movie,please share your opinion as true after see it.

nazeer ahamed said...

படம் நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. போர் அடித்தது.

இந்த படத்திற்கா இத்தனை பில்டப் என்று நினைத்துக் கொண்டேன்.