"நோய்வாய்ப்பட்ட பெண்மணியை மீட்டு உறவினருடன் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத் தக்கலை கிளையின் மனித நேயப்பணி"
மேலப்பாளையம் சார்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணி ஆதரவற்ற நிலையில் தக்கலை தர்கா முன்பு உடல் ரொம்பவும் பலஹீனமான நிலையில் உள்ளார் என்றும் அநாதை பிணமாகும் முன்பு ஜமாஅத்தார்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் வந்து மீட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம், இந்த முஸ்லிம் சகோதரிக்கு உதவவும்..
என்று இப்படி ஒரு வாட்சப் செய்தி தக்கலை மற்றும் குமரி மாவட்டத்தில் வைரலாக பரவியது. இந்த வாட்சப் செய்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட தலைவர் சகோதரர் ஷேக் அலியின் (19/06/18 அன்று) கவனத்திற்கு வரவே TNTJ மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோதரர் ஹஃபீஸிடம் இது பற்றி விசாரிக்க கோரினார்.
சகோதரர் ஹஃபீஸ், TNTJ தக்கலை கிளை செயலாளர் சகோதரர் செய்தலி, து.தலைவர் பீர் முஹம்மது, கிளை து.செயலாளர் சகோதரர் பாஸிம் மற்றும் கிளை சகோதரர்கள் உடனடியாக தக்கலை பீரப்பா தர்ஹா முன்பு நோய்வாய்ப்பட்டு உடல் மிக பலஹீனமான நிலையில் படுத்திருந்த முஸ்லிம் பெண்மணியை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
விசாரித்ததில் மேலப்பாளையம் சார்ந்த பாத்திமா பீவி என்ற 30 வயது பெண்மணி ரமலான் நோன்பு 20 முதல் தற்போது வரை தக்கலை பீரப்பா தர்கா முன்பு உள்ளார். அவரது கையில் ருபாய் 1622 பணமும் வைத்திருந்தார்.
நான்கைந்து நாட்களாக சாப்பிடாமல் உடல்நிலை சரியில்லாமலும் மிக சோர்வாக பரிதாப்படும் நிலையில் இருப்பதை கண்டு உடனடியாக தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸை வரவழைத்து தக்கலை அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
அரசு மருத்துவமனை மருத்துவர் சகோதரி பாத்திமாவின் உடல் பரிசோதனை செய்த பின் தொண்டையில் தைராய்டு வீக்கம் அதிகமாக இருப்பதாலும் நான்கு அல்லது ஐந்து நாள் தொடர்ச்சியாக நீராகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாததாலும் அதுமட்டுமின்றி மிக குறைந்த இரத்த அழுத்தம் (BP) இருப்பதாலும் முதலுதவி அளிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் உடனடியாக அட்மிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில் மீண்டும் ஆம்புலன்ஸில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்று மிக சிரமப்பட்டு அட்மிட் செய்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சகோதரியின் உறவினருக்கும் நடந்த விசயங்களை எடுத்து கூறி தகவல் கொடுக்கபட்டது.
மேலப்பாளையத்திலிருந்து பாத்திமாவின் உறவினர்கள் வந்து மருத்துமனையிலிருந்து அழைத்து சென்று அவர்களின் பாதுகாப்பில் அவர்கள் ஊரில் மருத்துவ சிகிச்சை கொடுக்கும் முடிவோடு அழைத்து சென்றனர்.
"அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்." என்ற அல்லாஹ்வின் வாக்கை அடிப்படையாக கொண்டு, அல்ஹம்துலில்லாஹ் என்று கூறியவாறே மன திருப்தியுடன் அல்லாஹ் இந்த மனித நேயப்பணியை பொருந்தி கொள்ள துவா செய்தவாறு தக்கலை கிளை சகோதரர்கள் கலைந்து சென்றனர்.
".... நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும். " திருக்குர்ஆன் 18:46
#குறிப்பு : மறுநாளே இந்த பெண்மணி வஃபாத்தாகி விட்டார் என்று தகவல் வந்தது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
இவர் சேர்த்து வைத்த பணத்தை பள்ளிக்கோ அல்லது மதர்ஷாவிற்கோ பயன்படுத்தி கொள்ளுமாறு இறந்த பெண்மணியின் உறவினர்கள் கூறிவிட்டார்கள், அந்த பணத்தை
வாங்க மறுத்துவிட்டார்கள்.
வாங்க மறுத்துவிட்டார்கள்.
எனவே அதை தலைமையின் முதியோர் இல்லத்திற்கு மவுத்தான பெண்மணியின் பணம் (1622.50 பைசா) பில் போட்டு அனுப்பபட்டது.
No comments:
Post a Comment