Followers

Tuesday, June 26, 2018

'நாங்கள் ஆண்ட பரம்பரை'

இணையத்தில் பலமுறை சாதி பெருமை பேசக் கூடியவர்கள் 'நாங்கள் ஆண்ட பரம்பரை' 'நீங்கள் பேண்ட பரம்பரை' என்று பெருமை பேசி வருவதை பார்த்துள்ளோம். மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்த நாட்டுக்கு வருவதற்கு முன் தமிழகத்தின் பல பகுதிகளில் வறுமை தாண்டவமாடியது. தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடியது. சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒருவரையொருவர் போரிட்டுக் கொண்டு காடு கழனிகளையெல்லாம் போரில் அழித்து வந்தனர். மதத்தின் பெயரால் தீண்டாமை சகல மட்டத்திலும் கடைபிடிக்கப்பட்டது. 

மார்புக்கு வரி, மேலாடைக்கு வரி, தொட்டால் தீட்டு, இரட்டைக் குவளை முறை, என்று தலித்கள் ஒரு பக்கம் துன்புறுத்தப்பட்டனர். மற்றொரு பக்கம் சைவ மதத்தவர் சமணர்களையும் பவுத்தர்களையும் வன்முறையால் மதம் மாற்றிக் கொண்டிருந்தனர். இந்த கால கட்டத்தில்தான் மொகலாயர்கள் ஆட்சியை பிடிக்கின்றனர். கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் அகண்ட பாரதத்தை ஆள்வது அதுவும் அந்த காலத்தில் என்பது அவ்வளவு லேசான காரியம் அல்ல. இதற்கு முன்னால் நடந்த இந்துக்களின் ஆட்சியை விட இஸ்லாமியரின் ஆட்சி பெரும்பான்மை மக்களுக்கு அரணாக இருந்ததின் காரணத்தினால்தான் இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்ய முடிந்தது. அதன் பிறகு வந்த வெள்ளையர்கள் நமது செல்வங்களை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றாலும் நமது நாட்டுக்கும் பல நல்லதுகள் செய்து வந்துள்ளனர்.

எனவே ஆண்ட பெருமை பேசிக் கொண்டு சில சாதி வெறியர்கள் தங்களின் ஆளுமையை பறை சாற்ற வேண்டாம். மக்களை இவ்வளவு வறுமையில் வைத்து ஆண்டு விட்டு அதனை பெருமையாக வேறு பேசித் திரிய வேண்டாம். இது நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும்.



1 comment:

Dr.Anburaj said...

தங்களின் கருத்தில் உண்மை உண்டு. நீதி செய்யாத மன்னனை மக்கள் நேசிக்க மாட்டாா்கள்.நீதி செய்யாத மன்னன் மீது அரேபியகாடையா்கள் படையெடுத்தபோது மக்கள் மன்னனுக்கு உதவவில்லை.இந்துஸ்தானத்தில் சிறு சிறு அரசுகளே இருந்தன.பெருமஎண்ணிக்கையில் அந்நிய படை பெயடுப்பு நடந்தபோது வெற்றிபெற போதிக பலத்தை பெற முடியவில்லை. பிரிதிவிராஜ்சவுகான் முதல் போரில் கோரி முகம்மதுவை தோற்கடித்தாா். பின் ஜெயசிம்மன் கோரிக்கு ஆதரவு அளித்தவுடனே கோரி வெற்றி பெற்று இந்தியாவில் அரேபிய வல்லாதிக்க அரசு கால் ஊன்றி வேர்விட்டது. மக்கள் ஏதோ நடக்கின்றது என்ற அசந்து நின்ற வேளையில் வெளிநாட்டு காடையா்கள் உள்நாட்டு காடையா்களை விட லட்சம் மடங்கு அரக்க குணம் படைத்தவா்கள் என்று உணரும் முன் இந்தியாவில் நிறைய பகுதிகள் அரேபிய காடையா்கள் வசம் சென்று விட்டது. இந்துக்கள்
தங்களைக் காப்பாற்ற வீறு கொண்டு எழுந்து பெரும் தியாகங்கள் செய்து துருக்கிய அரபு வல்லாதிக்க காடையர்களை துரத்தி அடித்தார்கள்.
இருப்பினும் பாக்கிஸ்தான்பிரிவினை செய்து கணிசமான பகுதியை இசுலாமிய அரசாக ஆக்கிவிட்டார்கள். 5 கோடி இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.ஆயிரக்கணக்கான அற்புதமான கலை அழகு கொண்ட ஆலயங்கள் அழிக்கப்பட்டது. இன்றும் பிரச்சனை காஷ்மீரில் தீரவில்லை. பிரச்சனைகள் நினைய உள்ளது. இந்துஸ்தானம் பெரிய இழப்புக்களை சந்தித்தது.