கொள்கை சகோதரன் ஜவஹர் பின் முத்துப்பாண்டியன் என்பவரது பதிவு...!!
நான் ஜவஹர் கடந்த இரண்டு வருடமாக ஒவ்வொரு பெருநாளிலும் மனதை உறுத்திய, வெளியில் சொல்ல வேண்டும் என நினைத்து பின்னர் வேண்டாம் என்று மனதை தேத்திக்கொண்ட ஒரு விஷயத்தை இப்போது கூறுகிறேன்...
ரமலான் மாதம், பெருநாள் தினம். ஒவ்வொரு முஸ்லிமும் இனம்புரியா இன்பத்தில் திளைக்கும் நாள்.பேசாத வாயும் அன்று பேசும்,உடுத்தாத உடையும் அன்று உடுத்தப்படும்,காணாத சொந்தங்களை அன்று காண முடியும்,
தொழாத உள்ளமும் அன்று தொழுகைக்கு வரும் அற்புதமான நாள் அது.தொழுகை முடிந்ததும் முகத்தில் புன்னகை மிளிரும்.சிரிப்பு சத்தம் மட்டுமே காதில் விழும்.தொழுகை திடலே இன்பத்தில் ஜொலிக்கும்...
தொழாத உள்ளமும் அன்று தொழுகைக்கு வரும் அற்புதமான நாள் அது.தொழுகை முடிந்ததும் முகத்தில் புன்னகை மிளிரும்.சிரிப்பு சத்தம் மட்டுமே காதில் விழும்.தொழுகை திடலே இன்பத்தில் ஜொலிக்கும்...
ஆனால் எனக்கோ அன்றைய தினம் மட்டும் உள்ளத்தில் ஓர் வருத்தம்.
தொழுகை முடிந்ததும் திரும்பி பார்த்தால் ஒவ்வொருவரும் தன் குடும்பத்துடன் கொண்டாட்டம்.நானோ தனி மரம்.அனைத்து சொந்தங்களும் இருந்தும் அனாதையாய் திடலில் நிற்கிறேன்...
திடலுக்குள் நுழையும் போதும் அனைவரும் கூட்டாக நுழைகின்றனர்.
வெளியேறும் போதும் கூட்டமாக வெளியேறுகின்றனர். நானோ வீட்டிலிருந்து தனியாக வருகிறேன். தனியாகவே வெளியேறுகிறேன்...
அந்த தனிமையை மறக்க நண்பர்களோடு உரையாடுகிறேன்.
அந்த தனிமையை மறக்க நண்பர்களோடு உரையாடுகிறேன்.
மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறேன்...
அனைவருக்கும் பூக்களமாக தெரிந்த தொழுகைத் திடல், எனக்கு மட்டும் ஏனோ ஆளில்லா மைதானமாக தெரிந்தது...
அனைவரும் குடும்பத்துடன் சென்று ஆடை எடுக்கும்போது, நான் மட்டும் தனியாக சென்று ஆடை எடுத்தேன்.
"இந்த ஆடை நல்லாருக்கும்'' என்று பார்த்து சொல்ல கூட ஆளில்லை.
அனைவரும் ஒன்றாக சமைத்து, அமர்ந்து உண்ணும்போது, நான் மட்டும் முஸ்லீம் ஹோட்டலை தேடி அலைகிறேன்...
நான் இஸ்லாத்தை ஏற்று இத்துடன் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
ஆறு பெருநாட்களை கடந்துவிட்டேன்.
ஆனால், ஒரு பெருநாளில் கூட கலக்கத்துடன் இந்த கவலையை அடையாமல் நான் இருந்ததில்லை.
அதனாலோ என்னவோ பெருநாள் தினம் எனக்கு விசேஷமாக தெரியாமல் போனது...
அதனாலோ என்னவோ பெருநாள் தினம் எனக்கு விசேஷமாக தெரியாமல் போனது...
நான் யாரையும் பார்த்து பொறாமை படவுமில்லை. என்னை ஒப்பிடவும் இல்லை.இஸ்லாத்தை ஏற்ற பின்பு என்னுடைய தவறான அறியாமை கொள்கையை மட்டும்தான் விட்டுவந்தேன் என நினைத்தேன்.
ஆனால், நான் என்னவெல்லாம் இழந்திருக்கிறேன் என நினைவுபடுத்தக்கூடிய நாளாக பெருநாள் தினம் அமைந்துவிட்டது.
ஆனால், நான் என்னவெல்லாம் இழந்திருக்கிறேன் என நினைவுபடுத்தக்கூடிய நாளாக பெருநாள் தினம் அமைந்துவிட்டது.
இறைவனின் நாட்டம்.
நான் நன்கு அறிவேன், அல்லாஹ்
மனிதர்களிடையே காலத்தை சுழலவிடுகிறான், என்னுடைய சூழ்நிலையும் நிரந்தரம் அல்ல. நிச்சயம் சுழலும் என்று...ஆனால், ஒருவேளை இன்றே நான் மரணித்தால் அனைத்து முஸ்லிம்களுக்கும் சகஜமாய் கிடைக்கக்கூடிய ஜனாஸா தொழுகைகூட எனக்கு கிடைக்காது தானே..!
மனிதர்களிடையே காலத்தை சுழலவிடுகிறான், என்னுடைய சூழ்நிலையும் நிரந்தரம் அல்ல. நிச்சயம் சுழலும் என்று...ஆனால், ஒருவேளை இன்றே நான் மரணித்தால் அனைத்து முஸ்லிம்களுக்கும் சகஜமாய் கிடைக்கக்கூடிய ஜனாஸா தொழுகைகூட எனக்கு கிடைக்காது தானே..!
ஒவ்வொரு பெருநாள் தொழுகையிலும்
"அல்லாஹ்..! என்னுடைய இந்த நிலையை அடுத்த பெருநாளைக்கும் உண்டாக்கிவிடாதே." என்று கேட்க்கும்போது என் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை...
"அல்லாஹ்..! என்னுடைய இந்த நிலையை அடுத்த பெருநாளைக்கும் உண்டாக்கிவிடாதே." என்று கேட்க்கும்போது என் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை...
இறுதியாக சொல்கிறேன்...
என் அருமை முஸ்லிம்களே..!
என் அருமை முஸ்லிம்களே..!
உங்களுக்கு கிடைத்துள்ள குடும்பத்தாரும், சொந்தமும், பந்தமும் அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்.
அவற்றை எக்காரணம் கொண்டும் வெறுத்தோ, ஒதுக்கியோ விடாதீர்கள்.
ஏனென்றால், அவற்றிற்காக நான் ஏங்கிய நாட்கள் பல.
யாருடைய மனதையும் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இதை பதியவில்லை. கடந்த மூன்று வருடமாக வெளியில் சொல்லவேண்டாம் என நினைத்தேன். இன்று ஏனோ மனதில் உள்ளதை கொட்டிவிட்டேன். ஏதேனும் தவறு இருந்தால் அல்லாஹ்விற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்...
நான் உங்களிடத்தில் ஒன்றை மட்டும் சொல்ல ஆசைபடுகின்றேன் ஒரு வேளை நான் என்றாவது ஒரு நாள் அல்லாஹ்வின் நாட்டப்படி மரணித்தால் நான் உங்களிடம் வேண்டுவது எல்லாம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியது போல் அல்லாஹ்விற்கு இணைவைக்காத ஒர் ஏகாத்துவவாதி மரணித்தால் அவனுக்குகாக நூறு ஏகாத்துவ சொந்தங்கள் பாவமன்னிப்பு தேடினால் அல்லாஹ் அந்த அடியானின் பாவத்தை மன்னிக்காமல் இருந்தது இல்லை அதன் அடிப்படையில் இன்று தனிஆளாய் இருக்கும் உங்கள் சகோதருக்காக நாளை என்னுடைய ஜனாஸா முன் நின்று எனக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேட வேண்டும் என்பதை மட்டும் தான் உங்களிடத்தில் எதிர்பார்க்கின்றேன் மேலும் எனக்கு எத்தனை கவலைகள் இருந்த போதிலும் இந்த திருகுர்ஆன் வசனம் மட்டும் தான் என்னுடைய ஒவ்வொரு பெருநாள் தொழுகையில் நான் கண்ணீருக்கு அருமருந்தாக அமைகின்றது....
إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ فَأَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَىٰ ۗ وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
40. நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏகஇறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், "நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 9:40
அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றேன் அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்....
இப்படிக்கு
உங்கள் கொள்கை சகோதரன்
ஜவஹர் பின் முத்துபாண்டியன்
திண்டுக்கல் நகர கிளை
திண்டுக்கல் நகர கிளை
--------------------------------------------------
நமது தாய் தந்தையர் இஸ்லாமியராக இருந்ததால் நாம் கேட்காமலேயே இஸ்லாமிய வாழ்வு முறை நமக்கு கிடைத்து விட்டது. ஆனால் முத்து பாண்டியன் போன்ற சகோதரர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களை உதறி விட்டு இந்த இஸ்லாமிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளார். சொந்தங்களின் பிரிவு எந்த அளவு அவரை தாக்கியுள்ளது என்பதை அவரது எழுத்து நமக்கு அறிவிக்கிறது. இந்த சகோதரருக்கு இவரது மனம் போல் நல்ல சொந்தங்கள் அமைய பிரார்த்திப்போம். நாமும் சொந்தங்களை அரவணைத்து வாழ்வோம்.
8 comments:
அரேபியா்களுக்கு அல்லா காட்டிய சொர்க்கத்தின் வா்ணனை-
சொர்க்கத்தில் கிடைப்பதாக அரேபிய கடவுள்சொல்லும் அனைத்தும் புமியில் உண்டு.பிறகு என் சொர்க்கம் செல்ல வேண்டும் ? எனக்கு புரிய வில்லை.முத்துபாண்டியா !தாய்மதத்தை மறுத்து விடடு அரேபியனாக மாற முடியாமல் தவிக்கும் இந்துவே உனக்கு இந்த மதம் தேவையா ? இந்துவாக மாறு.நண்பனே.
சகோதரர்களே! உங்கள் இரட்சகனிடம் இருந்து வழங்கப்படும் மன்னிப்பை நோக்கியும் சுவனபதியை நோக்கியும் விரைந்து செல்லுங்கள். அதன் அகலம் வானம் - பூமி அளவு விசாலமானதாகும். எந்தக் கண்ணும் கண்டிருக்காத, எந்தக் காதும் கேட்டிருக்காத, எந்த மனிதனின் உள்ளத்திலும் உதித்திருக்காத இன்பங்களும் அருட்பேறுகளும் அங்குண்டு!
அல்லாஹ் கூறுகிறான்: பயபத்தியாளர்களுக்காக வாக்களிக் கப்பட்டுள்ள சுவனத்தின் தன்மை என்னவெனில், அதன் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அதன் கனிகளும் நிரந்தரமானவை. அதன் நிழலும் நிலையானது! (13 : 35)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "பயபக்தியாளர்களுக்காக வாக்களிக்கப்பட்டுள்ள சுவனத்தின் உன்னதத்தன்மை என்ன வெனில், அதில் தூய்மையான நீராறுகளும் சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும் குடிப்பவாகளுக்குச் சுவையூட்டும் மது ஆறுகளும் சுத்தமான தேனாறுகளும் ஓடிக்கொண்டிருக்கும். மேலும் அங்கே அவர்களுக்கு எல்லா விதமான கனிகளும் இருக்கும். அவர்களின் இறைவனிடம் இருந்து மன்னிப்பும் கிடைக்கும். (47 : 15)
வேறோரிடத்தில் கூறுகிறான்: மேலும் (நபியே, இவ்வேதத்தில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு- கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயம் உண்டு என்று நற்செய்தி கூறுவீராக! அங்கு ஏதேனும் ஒரு கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும்போதெல்லாம் - அக்கனிகள் பூமியின் கனிகளுக்குத் தோற்றத்தில் ஒத்திருப்பதால் - இத்தகைய கனிகள்தாம் முன்பு (உலகில்) நமக்கு உணவாக வழங்கப்பட்டதாக அவர்கள் கூறுவார்கள். இன்னும் அங்கு அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உண்டு. மேலும் அங்கு அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்" (2 : 25)
"சுவனத்தின் நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்திருக்கும். மேலும் அதன் கனிகள் எப்போதும் (விருப்பப்படி பறித்துக் கொள்ளும் அளவில்) அவர்கள் அருகில் இருக்கும். வெள்ளிப் பாத்திரங்களும் கண்ணாடிக் குவளைகளும் அவர்களுக்கு முன்னிலையில் சுற்றி வருமாறு செய்யப்பட்டிருக்கும். அதன் கண்ணாடிகளும் வெள்ளி வகையைச் சேர்ந்தவையாக இருக்கும். அவற்றைச் (சுவனத்தின் ஊழியர்கள்) சரியான அளவில் நிரப்பி இருப்பார்கள். அந்தக் கிண்ணங்களில் இஞ்சிச் சுவை கலந்த பானங்கள் அவர்களுக்கு அங்குக் குடிப்பதற்கு வழங்கப்படும். அது சுவனத்திலுள்ள ஒரு நீரூற்றாகும். அதன் பெயர் ஸல்ஸபீல்.
மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழி யம் புரிவதற்)காகச் சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெறித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர்!
அங்கு நீர் எந்தப் பக்கம் நோக்கினாலும் அருட்கொடைகள் நிரைந்திருப்பதையும் மாபெரும் பேரரசுக்கான அத்தனை சாதனங்களையும் காண்பீர்" (76:14-20)
மற்றோர் இடத்தில், (வேறு சில முகங்கள்) உன்னதமான சுவனத்தில் இருக்கும். அவை அங்கு வீணானவற்றைச் செவியுறமாட்டா. ஓடிக் கொண்டிருக்கும் நீருற்று அங்கு உண்டு. உயர்ந்த கட்டடில்கள் அங்கிருக்கும். கிண்ணங்களும் வைக்கப்பட்டிருக்கும். தலையணைகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். எழிலான விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும்(88:10-16)
இன்னோர் இடத்தில், "எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் அல்லாஹ் நுழைவிப்பான். அங்கு அவர்களுக்குத் தங்கக்காப்புகளும் முத்துக்களும் அணிவிக்கப்படும். பட்டு அங்கு அவர்களின் ஆடையாக இருக்கும்" (22 : 23)
"அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ கடும் குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது" (76 : 13)
மென்மையான மற்றும் கனமான பச்சை நிறப்பட்டாடைகள் அவர்களின் மீதிருக்கும். மேலும் அவர்களுக்கு வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் அதிபதி அவர்களுக்குத் தூய்மை மிக்க பானம் புகட்டுவான் (76 : 21)
(அந்தச் சுவனவாசிகள்) பச்சைக் கம்பளங்களிலும் விலை மதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணை வைத்து சாய்ந்திருப்பார்கள். (55 : 76)
இறையச்சம் உடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள். தோட்டங்களிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள். தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகள் அணிந்து எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்.
இதுவே அவர்களின் வெற்றி. மேலும் நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம்.
அங்கு அவர்கள் மனநிம்மதியுடன் எல்லாவித சுவையான பொருட்களையும் கேட்பார்கள் (44 : 51-55)
செல்லுங்கள், சுவனத்தில்! நீங்களும் உங்கள் மனைவியரும்! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்! (என்று அவர்களிடம் சொல்லப்படும்) (43 : 70)
2
இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நானும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள். இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும் எந்த ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்! உங்கள் இறைவனின் எந்தெந்த வெகுமதிகளைப் பொய்யென்பீர்கள்? அந்தப் பெண்கள் அழகு மிக்கவர்களாய் இருப்பார்கள். மாணிக்கத்தையும் முத்தையும் போன்று! (55 : 56-57)
இந்த அருட்கொடைகளுடன் நன்னடத்தையும் பேரழகும் கொண்ட மனைவிகளும் இருப்பர். உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளைப் பொய்யெனக் கூறுவீர்கள்? கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட எழில்விழி மங்கைகள்" (55 :70-72)
அவர்களுடைய செயல்களின் பயனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் அறியமாட்டார்! (32:17)
எவர்கள் நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்கு (கூலி) மிக அழகிய நன்மையாகும். இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப்புழுதியும் இழிவும் படியமாட்டா! அவர்கள் சுவனத்திற்குரியவர்கள். அவர்கள் அதில் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்" (10: 26)
மிக அழகிய நன்மை என்பது சுவனம். ஏனெனில் அதனை விடவும் அழகிய இல்லம் வேறொன்றுமில்லை! அதிகப்படியான அருள் என்பது அல்லாஹ்வின் திருமுகத்தைத் தரிசிப்பதாகும். தனது கருணை மற்றும் கிருபை கொண்டு அல்லாஹ் அந்தப் பாக்கியத்தை நமக்கு வழங்குவானாக!
சுவனம் பற்றி கூறுகிற வசனங்கள் - அதன் அருட்கொடைகளையும் மகிழ்ச்சியையும் இனிமையையும் அதன் எழிலையும் எடுத்துரைக்கும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் வந்துள்ளன!
சுவனத்து இன்பங்கள் பற்றி கூறும் நபிமொழிகள் வருமாறு:
அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நாங்கள் கேட்டோம்: அல்லாஹ்வின்தூதரே! சுவனத்தைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். அதன் கட்டட அமைப்பு எத்ததையது?
அதற்கு நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: செங்கற்கள் தங்கம் - வெள்ளியினால் செய்யப்பட்டவை., அதன் பூச்சு கஸ்தூரியாகும். அதன் கற்கள், முத்து - மாணிக்கத்தினால் ஆனவை., அதன் மணல் குங்குமமாகும். சுவனத்தினுள் பிரவேசித்தவர் இன்பத்தில் திளைத்திருப்பார். சங்டத்துக்கு ஒருபோதும் ஆளாகமாட்டார்., நிரந்தரமாக வாழ்வார். என்றைக்கும் மரணம் அடையமாட்டார்! அவருடைய ஆடைகள் கந்தலடையமாட்டா! அவரது இளமை என்றைக்கும் முடிவடையாது" (நூல்: முஸ்னத் அஹ்மத், திர்மிதி)
உத்பா பின் கஸ்வான்(ரலி)அவர்கள் ஒருதடவை சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்; அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு சொன்னார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக இந்த உலகம் முடிவுறும் தருவாய்க்கு வந்துவிட்டது. விரைவாகக் கழிந்துகொண்டிருக்கிறது. கவிழ்க்கப்பட்ட பானையில் எவ்வளவு நீர் மீதியிருக்குமோ அவ்வளவு குறுகிய காலம் தான் எஞ்சியிருக்கிறது!
( எனது கருத்து ் இசுலாம் தோன்றி 1500 ஆண்டுகள் கழிந்து விட்டது.உலகம் என் முடிவுக்கு வரவில்லை.பானையில் இருந்து தண்ணீா் வழிய 1500 ஆண்டுகள் போதாதுபோலிருக்கின்றது)
நீங்கள் இங்கிருந்து முடிவே இல்லாத ஓர் இல்லத்திற்குச் செல்லக்கூடியவர்களாய் இருக்கிறீர்கள். எனவே உங்களோடு வரக்கூடிய ஒருசில நன்மைகளையேனும் கையோடு எடுத்துச் செல்லுங்கள்!
எங்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்டது: அதாவது, சுவனக்கதவின் நிலைகளில் இரண்டு நிலைகளுக்கிடையில் நாற்பதாண்டு பயண தூரம் உள்ளது. அவ்வளவு விசாலமான இடத்திலும் மறுமையின் ஒருநாள் வரும் போது அது மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழியும்" (நூல் : முஸ்லிம்)
ஸஹ்ல் பின் ஸஅத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சுவனத்திற்கு எட்டு வாசல்கள் உள்ளன. அவற்றில் ஒரு வாசலின் பெயா ரய்யான். அதில் நோன்பாளிகள் தவிர வேறு யாரும் பிரவேசிக்க மாட்டார்கள்" (நூல்: புகாரி, முஸ்லிம்)
உஸாமா பின் ஜைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இதோ! பாருங்கள்! சுவனம் செல்ல யார் தயாராகப் போகிறீர்கள்? திண்ணமாக சுவனத்திற்கு நிகர் எதுவுமில்லை. கஅபாவுடைய இரட்சகனின் மீது சத்தியமாக! சுவனம் என்பது இயங்கிக் கொண்டிருக்கும் ஒளி, அசைந்தாடும் மலர், நெடிதுயர்ந்த மாளிகை, நிறைந்தோடும் நதி, கனிந்து நிற்கும் பழம், அழகு சௌந்தர்யமான மனைவி, ஏராளமான ஆபரணங்கள், அமைதிமிகு நிறைந்த இல்லத்தில் நிரந்தரமான ஓய்விடம், சுவைமிகு பொருட்கள், பசுமைகள், உல்லாசமான உயர்வான மாளிகையில் மகிழ்வுகள், அருட்பாக்கியங்கள் ஆகியவையாகும்" தோழர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அதற்காகத் தயாராகக் கூடியவர்கள்தாம்!
நபியவர்கள் சொன்னார்கள்: இன்ஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் - அவ்வாறே மக்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொன்னார்கள்" (நூல்: இப்னு மாஜா, பைஹகி) - இப்னு ஹிப்பான் தமது ஸஹீஹில் இதனை அறிவித்துள்ளார்கள். (இதன் அறிவிப்புத் தொடர் பலவீனமானதாகும்.)
சொன்னார்கள்: நிச்சயமாக சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. இறைவழியில் போர் புரியும் வீரர்களுக்காக அல்லாஹ் அவற்றைத் தயார் செய்து வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே உள்ள தூரம், வானம்-பூமியின் தூரம் போன்றதாகும். நீங்கள் இறைவனிடம் இறைஞ்சுவதாயின் ஃபிர்தௌஸை கேட்டு இறைஞ்சுங்கள்! திண்ணமாக அது சுவனத்தின் நடுவிலும் சுவனத்தின் உச்சியிலும் உள்ளது. அங்கிருந்துதான் சுவனத்தின் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதன் மேலே கருணைமிக்க இறைவனின் அர்ஷ் உள்ளது" (நூல் : புகாரி)
அபூ ஸயீதுல் குதிரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனவாசிகள் தங்களுக்கு மேலே பால்கனிகளில் இருப்போரைக் காண்பார்கள். கிழக்கு அல்லது மேற்கின் அடிவானத்தில் இலங்கக்கூடிய ஒளிரும் நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போன்று பார்ப்பார்கள்! அது அவர்களின் படித்தரத்தின் ஏற்றதாழ்வினாலாகும்"
தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவை நபிமார்களின் அந்தஸ்துகளாயிற்றே! அவர்களல்லாதவர் யாரும் இவற்றை அடைந்திட முடியாதே!
அதற்கு நபி(ஸல்) சொன்னார்கள்: சரிதான்! எனது உயிரை தன் கைவசம் வைத்திருக்கும் இறைவன் மீது சத்தியமாக! எவர்கள் அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு ரஸ_ல்மார்களை உண்மைப்படுத்தினார்களோ அவர்களும் இவற்றை அடைவார்கள்" (புகாரி)
அபூ மாலிக்-அல் அச்அரி(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: திண்ணமாக சுவனத்தில் உயரமான பால்கனிகள் உள்ளன. அவற்றின் வெளிப்பகுதியை உட்புறத்தில் இருந்து காணலாம். உள் நிலையை வெளிப்புறத்தில் இருந்தும் காணலாம்! யார் ஏழைக்கு உணவு அளித்தார்களோ நோன்பை நிரந்தரமாகக் கடைப்பிடித்தார்களோ, இரவில் மக்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது தொழுதார்களோ அவர்களுக்கு அல்லாஹ் இவற்றைத் தயார் செய்து வைத்துள்ளான். (நூல்: தபரானி)(இமாம் அஹ்மத் அவர்களும் இதனை அறிவித்துள்ளார்கள். அதில் - மேலும் கனிவாகவும் பேசினாரோ எனும் வாக்கியமும் உள்ளது.)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளனுக்குச் சுவனத்தில் ஒரு கூடாரம் உள்ளது. நடுப்பகுதி ஒரு காலி முத்தினால் அமைந்ததாகும் அது! வானத்தில் அதன் நீளம் அறுபது மைல்களாகும். இறைநம்பிக்கையாளனுக்கு அங்கு மனைவியர் இருப்பர்;. அவர்களிடம் அவன் போய்வந்து கொண்டிருப்பான். அவர்கள் சிலர் வேறு சிலரைக் காண முடியாது" (நூல்:புகாரி, முஸ்லிம்- அறிவிப்;பு: அபூ மூஸா(ரலி)
எனது கருத்து சொா்க்கம் என்ன தேவடியா குடியா )
அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனம் செல்கிற முதல் குழுவினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள்! பிறகு அவர்களைத் தொடர்ந்து வரக்கூடிய குழுவினர் வானத்தில் அதிக அளவு இலங்குகிற தாரகையைப்போல் தோற்றமளிப்பார்கள். அதன் பிறகு வரக் கூடியவர்கள் பல படித்தரங்களில் இருப்பார்கள். சுவனவாசிகள் மல - ஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தமாட்டார்கள்., எச்சில் துப்பமாட்டார்கள். (அதாவது, எவ்வித அசுத்தமும் செய்யமாட்டார்கள்) அவர்களின் சீப்புகள் தங்கத்தினாலானவை, அவர்களின் (நறுமணப் புகைபோடும்) தூபக்கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் கமழும்! அவர்கள் அனைவரின் உடல் அமைப்பு ஒரே ஒரு மனிதனின் உடல் அமைப்பில் இருக்கும். (அனைவரும் ஒரே உடல் அமைப்பைப் பெற்றிருப்பார்கள்)
தங்களின் ஆதி பிதா ஆதத் தின் 60 அடி உயரத்தைப் பெற்றிருப்பார்கள்" (நூல்:முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில்: சுவனவாசிகளிடையே கருத்து வேறுபாடு இருக்காது. அவர்கள் பரஸபரம் கோபப்படமாட்டார்கள். அனைவரும் ஓர் இதயம் உடையவர்கள் போல் இருப்பார்கள்! காலையிலும் மாலையிலும் தங்கள் இரட்சகனைத் துதித்துக் கொண்டிருப்பார்கள்"
எனும் எழில்விழி மங்கையராய் இருப்பர் என உள்ளது.
ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) கூறினார்கள்: சுவனவாசிகள் சுவனத்pல் உண்பார்கள்., பருகுவார்கள்! ஆனால் எச்சில் துப்பமாட்டார்கள்., மலஜலம் கழிக்க மாட்டார்கள். மூக்கு சிந்தமாட்டார்கள்! தோழர்கள் கேட்டார்கள்: அப்படியானால் உணவின் நிலை என்ன? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: ஒரு ஏப்பம் வரும்., வியர்வை வெளிப்படும்! அவ்வளவுதான்! அந்த வியர்வை கஸ்தூரி மணம் கமழும்! மூச்சு விடுவது போன்று -அல்லாஹ்வைத் துதிப்பதற்கும் புகழ்வதற்கும் அவர்களுக்கு உள்ளுதிப்பு அளிக்கப்படும்"(முஸ்லிம்)
ஜைத் பின் அர்கம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எந்த இறைவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒரு சுவனவாசிக்கு உண்பது, பருகுவது, உடலுறவு கொள்வது, ஆசைப்படுவது ஆகியவற்றில் நூறு மனிதர்களின் சக்தி கொடுக்கப்படும். அவர்களின் இயற்கைத் தேவை என்பது வியர்வையாகி மேனிகளின் வழியாக வெளியேறும்! அது கஸ்தூரி மணம் போன்று கமழும்! அவர்கள் வயிறு ஒட்டியிருக்கும்" (முஸ்னத் அஹ்மத், நஸஈ) (முன்திரி அவர்கள், அத் தர்ஃகீப் வத் தர்ஹீப் எனும் நூலில் கூறியுள்ளார்கள்: இதன் அறிவிப்பாளர்கள் ஸஹீஹ் ஹதீஸில் ஆதாரப்பூர்வமாய் ஏற்கப்படுபவர்களாய் உள்ளனர். இமாம் தபரானியும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புத் தொடர் கொண்டு இதனை அறிவித்துள்ளார்கள். இப்னு ஹிப்பானும் ஹாகிமும் கூட அறிவித்துள்ளார்கள்.)
அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினாhகள்:"உங்களில் ஒருவருக்கு தனது வில் அளவுக்கு அல்லது காலின் பாதம் அளவுக்கு ஓர் இடம் சுவனத்தில் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தாகும். மேலும் சுவனவாசிகளிலுள்ள ஒரு பெண் சொர்க்கத்திலிருந்து பூமியை எட்டிப்பார்த்தால் சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள அனைத்தையும் பிரகாசிக்கச் செய்வாள்! மேலும் அவ்விரண்டுக்கும் இடையே உள்ள அனைத்தையும் மணம் கமழவும் செய்திடுவாள்! அவளது முக்காடு உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தாகும்" (நூல்: புகாரி)
அனஸ்(ரலி) அவர்கள் மேலும் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனத்தில் அங்காடி ஒன்றுள்ளது. சுவனவாசிகள் ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் அங்கு வருவர். தென்றல் காற்றடித்து அவர்களின் முகங்களிலும் ஆடைகளிலும் புழுதி வாரிப்போடும். அதனால் அவர்கள் அதிக அழகையும் பிரகாசத்தையும் பெறுவார்கள். தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வார்கள். மேலும் அவர்களிடம் கூறுவார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் வெளியே சென்ற பிறகு நீங்கள் அதிக அழகையும் பிரகாசத்தையும் பெற்று விட்டீர்கள் என்று! அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்களும் தான் இங்கிருந்து சென்ற பிறகு அதிக அழகையும் பிரகாசத்தையும் பெற்றுள்ளீர்கள்" (நூல்: முஸ்லிம்)
அபூ ஸயீத்-அல் குதிரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனவாசிகள் சுவனத்தினுள் சென்றதும் ஓர் அழைப்பாளர் இவ்வாறு அறிவிப்பார்: நீங்கள் இங்கு ஆரோக்கியமாக வாழ்வீர்கள்., ஒருபோதும் நோயுற மாட்டீர்கள். இங்கு என்றென்றும் உயிர் வாழ்வீர்கள்., ஒரு போதும் மரணம் அடைய மாட்டீர்கள். இங்கு வாலிபத்துடன் இருப்பீர்கள்., ஒரு போதும் முதுமை அடையமாட்டீர்கள். செழிப்புடன் இருப்பீர்கள், ஒருபோதும் வறுமைக்குள்ளாக மாட்டீர்கள்! இது இந்த இறைவசனத்தின் கருத்தாகும்: (அந்நேரம்) அவர்களிடம் கூறப்படும்: நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இது தான். நீங்கள் செய்து வந்த நல்ல அமல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது" (7:43) (நூல்:முஸ்லிம்)
அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிருக்காத, எந்த மனிதனின் உள்ளதிலும் உதித்திருக்காத இன்பங்களை என் நல்லடியார்ளுக்காக நான் தயார் செய்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுவான். விரும்பினால் இந்த குர்ஆன் வசனத்தை ஓதுங்கள்:
அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்" (32 : 17)
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: சுவனத்தில் சென்றதும் ஓர் அறிவிப்பாளர் கூறுவார்: சுவனவாசிகளே! நிச்சயமாக! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கென ஒரு வாக்குறுதி உள்ளது. அதனை உங்களுக்கு நிறைவேற்றித் தர அல்லாஹ் விரும்புகிறான் -அதற்கு அவர்கள் சொல்வார்கள்: என்ன அது? அவன் எங்களின் எடைத்தட்டுகளைக் கனப்படுத்தவில்லையா? மேலும் எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? மேலும் அவன் எங்களைச் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து, நரகத்தை விட்டும் எங்களைத் தூரமாக்கவில்லையா? நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அப்போது அவர்களுக்குத் திரை விலக்கப்படும். இறைவனை அவர்கள் காண்பார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியத்தை விடவும் அதிக விருப்பமான அதிகக் கண்குளிர்ச்சியான எதையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கமாட்டான்!, (நூல்: முஸ்லிம்)
அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்களின் இந்த அறிவிப்பும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது: சுவனவாசிகளிடம் அல்லாஹ் கூறுவான்:"எனது உவப்பை உங்களுக்கு நான் அருளுகிறேன்! இனி ஒரு போதும் உங்களின் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்"
யா அல்லாஹ்! உன்னுடைய சுவனங்களில் நிரந்தரமாகத் தங்கி வாழும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக! அங்கு உனது உவப்பை எங்கள் மீது அருள்வாயாக! உன் முகத்தைக் காண்பதன் இன்பத்தையும் உனது சந்திப்பின் ஆர்வத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக!
இந்து சகோதரா
இதுவா இசுலாம் காட்டும் இறைவனின் கொடை. பெண்களை ....தான் சொர்க்கம் என்றால் இது இங்கே கிடைக்கும் போது சொர்க்கத்திற்கு என் போக வேண்டும்.சுவையான சாப்பாடு சுகமான படுக்கை கட்டில் மெத்தை அழகான ஆண் சிறுவா்கள் அழகான பெண்கள் - அனைத்தும் இங்கே கிடைக்கும் போது சொர்க்கத்திற்கு ஏன் போக வேண்டும்.
நினைத்துபார் ?
வேண்டாம் இசுலாமிய சொர்க்கம். இது உண்மை அல்ல.உளரல்.காமம் விஞ்சிய உள்ளத்தின் கற்பனை.
திருமந்திரம்படி விவேகானந்தா் நூல்கள் ஸ்ரீநாராயணகுருவின் வழிபாட்டு சீா்திருத்தங்களை அறிந்து கொள். இந்துமதம் ஒரு பிரமாண்டமான சந்தை.அங்கு நீ விரும்பும் பொருட்கள் வாங்கும் உாிமைகள் உனக்கு உண்டு. தியான மார்க்கம் பழகு. இசையால் இறைவனை பாடு துதி வா இந்துவாக மாறு.
ஐந்தாவது பண்பு: தம்முடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கக் கூடியவர்களாய் இருக்கிறார்கள் என்பதாகும். - தங்களுடைய வெட்கத்தலங்களை விபச்சாரம் மற்றும் ஓரினச் சேர்க்கையை விட்டும் பாதுகாக்கக்கூடியவர்கள். ஏனெனில் இந்தச் செயல்களில் - அல்லாஹ்வுக்குப் பாவம் செய்வது மட்டும் அல்ல, ஒழுக்கச் சீரழிவும் சமூகச் சீரழிவும் உள்ளன!
வெட்கத்தலத்தைப் பாதுகாத்தல் என்பது இதனை விடவும் விரிந்த பொருள் கொண்டதாகவும் இருக்கலாம். அதன்படி வெட்கத்தலத்தைப் பார்ப்பது, தொடுவது ஆகியவற்றறை விட்டுப் பாதுகாப்பதையும் அது உள்ளடக்கும்.
அத்தகைய நிலையில் அவர்கள் பழிப்புக்குரியவர்கள் அல்லர் எனும் சொற்றொடரில் இந்தக் கருத்தின் பக்கம் சைக்கினை உள்ளது. அதாவது, (பெண்களைப் பார்ப்பது, தொடுவது போன்ற) செயல்களுக்காகப் பொதுவாக மனிதன் பழிப்புக்கு உள்ளாகுவதே வார்த்தையின் அசல் பொருளாகும்.
ஆனால் மனைவியிடமும் அடிமைப் பெண்களிடமும் இப்படி நடப்பதால் பழிப்பு வராது. ஏனெனில் இவர்களிடம் அப்படி நடக்க வேண்டியதுள்ளது. மனித இயல்பின் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதும் சந்ததி உருவாக்கமும் இன்னபிற நலன்களும் இதில் உள்ளன!
எவர்கள் இதற்கு அப்பாலும் ஆபை;படுகிறார்ளோ அவர்களே வரம்பு மீறக்கூடியவர்கள் ஆவர்" எனும் சொற்றொடரில்- ரகசியப் பழக்கம் எனும் சுய இன்பம் அனுபவித்தல் கூடாது என்பதற்கு ஆதாரம் உள்ளது. காரணம் அது, மனைவி - அடிமைப் பெண் ஆகியோருக்கு அப்பால் ஆசைப்படுகிற செயலாகும்.
இவை தவிர இன்னும் பல பண்பு நலன்கள் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இப் பண்பு நலன்களை குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பதன் நோக்கம், சுவனம் சென்றடைய விரும்புகிறவர்கள் அப்பண்பு களைத் தம் வாழ்வில் மலரச் செய்ய வேண்டும் என்பதாகும்!
Post a Comment