Followers

Thursday, June 21, 2018

அரசியல் கோமாளிகளை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்புவோம்.

விடுமுறையில் துபாய் சென்றிருந்தபோது வெயிலின் உக்கிரம் எந்த அளவு இருக்கும் என்பதை உணர்ந்தேன். எங்கு நோக்கினாலும் வானுயர்ந்த கட்டிடங்கள். நிழலுக்கு ஒதுங்க மரம் இல்லை. குளிப்பதற்கு தண்ணீரை தொட்டால் அனல் பறக்கிறது. தனியாக பக்கெட்டுகளில் பிடித்து வைத்து அது குளிர்ந்தவுடன் அந்த தண்ணீரை உபயோகிக்கிறார்கள். மரங்களை வெட்டி பெரு நகரங்களை உருவாக்குவதன் பலன் என்ன என்று துபாயை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இங்கு எடப்பாடி அரசு லட்சக்கணக்கான மரங்களையும் காடுகளையும் அழித்து பல மண்ணின் மைந்தர்களின் வயல்களை அழித்து குடியிருப்புகளை அழித்து சாலைகளை அமைக்க என்ன அவசியம் வந்தது? எவனோ வெளிநாட்டு கார்பரேட் காரன் டோல்கேட் போட்டு சம்பாதிக்க மண்ணின் மைந்தன் நடு ரோட்டில் நிற்க வேண்டுமா?

இதே செலவில் மேம்பாலங்களை அமைத்து ஒரு பக்கம் புல்லட் டிரெய்ன்களை அமைத்து சிட்டிகளை இணைக்கலாம். 'பசுமை வழிச் சாலை' என்று பெயரை வைத்து பசுமையை முற்றாக அழிக்கத் துடிக்கும் இந்த அரசியல் கோமாளிகளை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்புவோம்.




No comments: