Followers

Wednesday, June 20, 2018

ஒரு சிரிய அகதியின் தன்னம்பிக்கை!

ஒரு சிரிய அகதியின் தன்னம்பிக்கை!

'நான் மர்யம் யூனுஸ். சிரியாவின் இட்லிப் என்ற பகுதியைச் சேர்ந்தவள். சிரியாவில் நடக்கும் உள் நாட்டுப் போரால் எனது குடும்பம் சிதைந்தது. எனது தந்தையை இழந்தேன். எனக்கு ஒரு இளைய சகோதரன் உள்ளான். அவனது உடல் நிலை மோசமானது.  அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி எங்களின் சொந்த நாட்டை துறக்க முடிவு செய்தோம். தற்போது துருக்கி அகதிகள் முகாமில் கடந்த நான்கு வருடங்களாக தங்கியுள்ளோம்.'

'வாழ்வில் ஏற்பட்ட பல தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எனது வயதை ஒத்த இள மங்கைகளோடு பல சமூக சேவைகளை அகதிகள் முகாமில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு செய்து வருகிறோம். தொடர்ந்து படித்து வருகிறோம். எனது எண்ணங்களை எல்லாம் எழுத்துக்களாக்கி வருகிறேன்.எப்போதெல்லாம் நான் சோர்வடைகிறேனோ மன அழுத்தத்துக்கு உள்ளாகிறோனோ உடனே ஒரு இடத்தில் அமர்ந்து எழுதத் தொடங்கி விடுவேன். கவலைகளை போக்கும் மருந்தாக எனது எழுத்துக்களை பார்க்கிறேன்.  காலம் இப்படியே சென்று விடாது. இறைவன் எங்களுக்கும் ஒரு விடிவு காலத்தை உண்டு பண்ணுவான். அந்த விடிவு வரும் வரை மூலையில் முடங்கிக் கிடக்காமல் நாங்கள் தொடர்ந்து சந்தோஷமாக இயங்கி வருகிறோம்.'


No comments: