Followers

Wednesday, June 06, 2018

விபசாரம் புரிந்தவருக்கு இஸ்லாமிய முறையில் தண்டனை கொடுக்காதது ஏன்?


விபசாரம் புரிந்தவருக்கு இஸ்லாமிய முறையில் தண்டனை கொடுக்காதது ஏன்?


//Why always connect with others???? Have you given the right punishment? Please answer fior Bro Shahul hameef.//



3496 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் உம்மைப் பற்றி எனக்குக் கிடைத்த செய்தி உண்மையா?” என்று கேட் டார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள், “என்னைப் பற்றி தங்களுக்கு என்ன செய்தி கிட்டியது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீர் இன்ன குடும்பத்து இளம் பெண்ணுடன் தவறான உறவு கொண்டுவிட்டதாக எனக்குச் செய்தி எட்டியது என்றார்கள்.

அதற்கு மாஇஸ் (ரலி) அவர்கள், “ஆம் என்று கூறி, தமக்கெதிராக நான்கு முறை சாட்சியம் (கூறி ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார்கள். பின்னர் (அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு) நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட, அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.


விபசாரம் புரிந்தவருக்கு சாட்சிகளோடு வந்தால் கல்லெறிந்து தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு சேக் தாவூதும் நானும் கல்லெறிந்து தண்டனையை நிறைவேற்றினால் அடுத்த நிமிடமே காவல் துறை நம் இருவரையும் கைது செய்து விடும். ஏனெனில் இந்தியாவில் கிரிமினல் குற்றங்களுக்கு தண்டனை எல்லோருக்கும் பொதுவானது. சிவில் சட்டம்  அதிலும் ஒரு சிலதான் இஸ்லாமியருக்கு தனியாக உள்ளது.

ஒரு அமைப்பை நிறுவியவர்: லட்சக்கணக்கான இளைஞர்களின் நன் மதிப்பை பெற்றவர்: தற்போதய தமிழக அரசின் நன் மதிப்பை பெற்றவர். கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் அன்புக்கு பாத்திரமானவர்: லட்சக்கணக்கான இந்துக்களின் மனதில் விதைக்கப்பட்டிருந்த இஸ்லாம் சம்பந்தமான எதிர் மறை கருத்துக்களை தவிடு பொடியாக்கி உண்மை முஸ்லிம்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இவ்வளவு சிறப்பிற்குரிய ஒருவர் விபசாரம் புரிந்தது நிரூபணமானதால் அமைப்பிலிருந்து தூக்கி எறியப்படுகிறார். வாழ் நாள் முழுக்க இந்த அமைப்பில் எந்த பொருப்புக்கும் வர முடியாத அளவுக்கு தூரமாக்கப்படுகிறார். இதனைக் கண்டு இந்த அமைப்பில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. பணிகள் வழக்கமாக நடந்து வருகிறது. இப்படி ஒரு நிகழ்வு உலகில் வேறு எந்த அமைப்பிலாவது நடந்திருக்குமா என்ற ரீதியில் ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள்?  குறிப்பிட்ட நபரை தக்லீது செய்திருந்தால் இன்று அந்த அமைப்பே சிதறுண்டு போயிருக்கும்.

விபசாரம் புரிந்தவர் இந்த உலகில் தண்டனை பெறா விட்டாலும் நாளை மறுமையில் இறைவன் முன்னால் கண்டிப்பாக தண்டனை பெற்றுக் கொள்வார். அல்லது அவரால் ஷிர்க்கிலிருந்து விலகி ஏகத்துவத்தின்பால் நேர் வழிப் பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் துவாவினால் இறைவன் நாடினால் மன்னிக்கலாம். மேலும் தனது தவறுக்கு வருந்தி இனி வருங்காலங்களில் இறைவனிடம் அழுது மன்னிப்பு கோரினால் இறைவன் நாடினால் மன்னிக்கலாம். எனவே இந்த விஷயம் விபசாரம் புரிந்த அந்த நபருக்கும் இறைவனுக்கும் இடையிலான பிரச்னை. அவர் நல்லவரா கெட்டவரா என்பதை இறைவன் முடிவு செய்து கொள்ளட்டும். நீங்களும் நானும் மறுமையில் இறைவன் கேட்கும் கேள்விக்கு என்ன பதிலை தயார் படுத்தி வைத்துள்ளோம் என்று சிந்திப்போம். அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். மறுமையிலும் ஈடேற்றம் பெறுவோம்.

3 comments:

vara vijay said...

How come u can give a answer like this. Man made law or gods law which is correct of course sharia is correct. Why r u fearing for Indian (kafir) law and police. If you really believe sharia is gods law then there should be no second thought. Form ur convenient interpretation and silly excuse I strongly doubt you belief in God, rasool and his righteous path.

Dr.Anburaj said...


பல பெண்கள் - ஒரு உயா் தகுதி பெற்றவரிடம் தன்னை அா்ப்பணிப்பதாகக் கூறி -திருமணம் செய்யாமல் உடல் உறவு கொள்கின்றாா்.

இதுபோன்ற சம்பவங்கள் இசுலாமிய வரலாற்றில் காணப்படுகின்றன.விபரங்கள் தங்களுக்கு தொியும்.இவர்கள் கல்லால் எறிந்து கொல்லப்படவில்லையே ? ஏன் ?

Dr.Anburaj said...
This comment has been removed by the author.