Followers

Saturday, June 23, 2018

அவர் ஓர் அறிஞர், ஆனால் அவரும் மனிதர்!

அவர் ஓர் அறிஞர், ஆனால் அவரும் மனிதர்!
========================
அன்பின் சகோதரர்களே, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே எழுத நினைத்தேன் காலம் இடம் தரவில்லை. இப்போது எழுதும் சந்தர்பம் கிடைத்தது அல்ஹம்து லில்லாஹ்…
நான் யாரைப் பற்றி பேசப்போகிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
முழுவதும் படியுங்கள்…. படித்த பின்னர் அவருக்கு நீங்கள் திட்டலாம்… உங்கள் நன்மைகளை வாரி வழங்கலாம்… அல்லது அவருக்கு நீங்கள் பிரார்த்திக்களாம்… அவர் மீதான கலங்கத்தின் உண்மை வெளிப்பட இறைவனிடம் கையேந்தலாம்… நீங்கள் எதனை செய்ய வேண்டும் என்பது உங்கள் முடிவ அதனை நான் தீர்மானிக்க முடியாது.
ஆனால், அவருக்காக பிரார்த்திக்கும் பல்லாயிரக் கணக்கான மனிதர்களில் ஒருவனாக நானும் இருக்கவே விரும்புகிறேன்.
விடயத்திற்கு வருகிறேன்…
---------------------
கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக ஒரு பிரயாணத்தில் திகன கலவரம் பற்றிய வழக்கு விசாரனைக்கு சென்று வரும் வழியில் நானும் இன்னொரு முக்கியமான நபரும் கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த நேரம். கடுமையான மழை இஷா தொழுகை நேரம் என்பதினால் கொழும்பை அண்மித்த ஒரு பகுதியில் வசிக்கும் ஓர் மார்க்க அறிஞரின் வீட்டிற்கு சென்றோம்.
இஷா தொழுகை முடிந்தது.
குறித்த அறிஞருடன் ஒரு சில நிமிடங்கள் பேசும் வாய்பை அல்லாஹ் தந்தான்.
ஏகத்துவ பிரச்சாரத்தின் முன்னோடிகளில் ஒருவர். அரபு, ஹதீஸ், வரலாறு, தப்சீர் என பல்துறைகளிலும் தடம் பதித்த மேதைகளில் இவரும் ஒருவர். பிற்பட்ட நாட்களில் அல்லாஹ் அவருடைய பார்வையில் ஒரு கோலாறை உண்டாக்கினாலும் மிகச்சிறந்த நினைவாற்றலும், கவர்ந்திழுக்கும் பேச்சாற்றலும், அறிவின் ஆழத்திலும் பணிவின் அடித்தளத்தை தன்னுல் நிறப்பிக் கொண்டிருந்தார்.
பல விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தவரிடம்… அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் பற்றி சற்று பேச்சுத் தொடுத்தோம்.
'சட்டம் ஓர் இருட்டறை அல்ல’ என்ற பக்கத்தில் பி.ஜெ பற்றி ஏன் பேச வேண்டும்? என்ற சாதாரண சமயோசித சந்தேகம் யாருக்கும் எழுவதற்கு வாய்ப்புண்டு.
ஒருவருக்கு எதிராக ஓடியோ அல்லது வீடியோ சான்றுகளை வைத்து குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பது என்பது எமது நாடு மற்றும் இந்தியாவில் இதுவரை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத ஆதார முறையாக காணப்படுகிறது.
சட்டத்தின் படி ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் வரையில் அவர் சுத்தமானவர் குற்றமற்றவர் தான். இதுவே உலக நியதியும் கூட.
இந்த நிலையில் ஒரு ஓடியோவை வைத்தே ஒரு அறிஞரை எடை போடுவது எப்படி நீதியாகும் என்கிற நியாயமான கேள்வி நம்முன்னால் விடையின்றி நிற்கிறது. இந்த நிலையில் பி.ஜெ பற்றி பேச வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதினால் தான் சட்டத்துடன் தொடர்புடைய இப்பக்கத்திலேயே பேசுகிறேன்.
அறிஞர் பி.ஜெ அவர்கள் தொடர்பில் ஓர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவர் மீது ஜமாஅத் நடவடிக்கை எடுத்துள்ளது. இது உங்களுக்கு தெரியுமா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றார் என்னுடன் வந்த முக்கியஸ்தர்.
சிரியதொரு மௌனத்தின் பின் பேச்சை ஆரம்பித்தார் அந்த அறிஞர்.
ஒன்றும் சொல்வதற்கில்லை.
யார் என்ன சொன்னாலும் என் மனம் அவர் மீதான கலங்கத்தை ஒப்புக் கொள்ள மறுக்கிறது.
தௌஹீத் ஜமாஅத் ஆயிரம் பைலா - அமைப்பு விதியை வைத்திருக்கலாம். ஓர் அறிஞனின் அறிவுக்கு மறியாதை கொடுத்து செய்தி உண்மையாக இருப்பின் மானத்தை மறைத்து அவருடைய அறிவின் பலனை காலத்திற்கும் உலகம் பெற வழி செய்திருக்க வேண்டும்.
நான் முற்கால, சமகால அறிஞர்கள் என பல அறிஞர்களை படித்திருக்கிறேன். அறிந்திருக்கிறேன்.
தமழகத்தில் பிறந்த இவர் அரபு தேசத்தில் பிறந்திருந்தால் வாழும் காலத்திலேயே இமாமாக போற்றப்பட்டிருப்பார். அறிவின் ஆழம் தெரியாததினாலோ என்னவோ அவர் மீதான குற்றச்சாட்டின் பெயரில் தற்போது அவர் மானம் இணையதளம் ஏற்றப்பட்டிருக்கிறது.
என்னைப் பொருத்த வரையில் தற்காலத்தில் வாழும் ஓர் இமாமாகவே அவரை நான் பார்க்கிறேன் என்றால்.
அறிவின் உச்சத்தில் இருக்கும் ஓர் மேதை - பி.ஜெ அவர்களை பார்த்து இமாம் என்று சொன்ன அந்த நிமிடம் சொன்னவரின் பணிவின் உச்சத்தை நினைத்து மனதுக்குள் அவருக்காகவும், அறிஞர் பி.ஜெ அவர்களுக்காகவும் பிரார்த்தித்தேன்.
பேச்சை தொடர்ந்தார்…
--------------------
பி.ஜெ அவர்களை திட்டுவதற்கு முன்னர், அவர்களுக்கு எதிராக எழுதுவற்கு முன்னர் அவரை படியுங்கள். சிலர் பார்வையில் அவருடைய கருத்துக்கள் வழிகேடாக தோன்றலாம். வழிகேடு என்று தாம் நினைப்பதை கருத்தியல் ரீதியில் விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அவருடைய அந்தரங்கத்தை பற்றி விமர்சித்து அவருடைய நேர்மையான, சத்தியமான கருத்துக்களையும் தவறாக சித்தரிக்க முனைவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
பி.ஜெ மீது இன்று வந்த விமர்சனங்களை விட ஆயிரம் மடங்கு விமர்சனங்கள் முற்கால ஏன் அண்மைக் கால அறிஞர் மீதும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இப்படியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நேரத்தில் சம கால அறிஞர் பெருமக்கள் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையே நாம் பார்க்க வேண்டும்.
பொது மக்கள் பேஸ்புக்கிலும், வட்ஸ்அப்பிலும் பி.ஜெ யை பற்றி எதனையும் பேசலாம். அறிஞர் அல்பானியைப் பற்றி பேசாதவற்றையா பி.ஜெ பற்றி பேசிவிடப் போகிறார்கள். ஹதீஸ் கலை மாமேதையான அறிஞர் அல்பானியை படிக்காத, அவரைப் பற்றி அறியாத ஏன் ஹதீஸ்களின் வாடையே அற்றவர்கள் அவர் வாழும் காலத்திலும் இன்று வரையும் அவரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஆனால் அறிந்தோருக்கு தெரியும் அறிஞரின் அருமை என்பதைப் போல் அவருடைய பெருமதி அறிஞர்களுக்குத் தான் தெரியும்.
அதனால் தான் அல்பானியை விமர்சிக்க தலைப்பட்ட அறிஞர்கள் அவரின் கருத்துக்களை விமர்சனம் செய்ததோடு நிறுத்தினார்கள். அவரின் தனிப்பட்ட வாழ்வு பற்றிய எவ்வித விமர்சனங்களையும் தூக்கிப் பிடிக்க வில்லை. இதுதான் அறிஞன் அறிஞனுக்கு கொடுக்கும் மறியாதை.
தற்காலத்தில் நிறைய மார்க்கப் பிரச்சாரகர்கள் இருக்கிறார்கள். பேச்சாளர்கள் இருக்கிறார்கள். கல்வியை சுமந்தவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களில் அறிஞர்கள் குறைவானவர்களே.
அதிலும் தமிழுலகு பி.ஜெ போன்ற பல்துறை அறிஞனை காணவில்லையே இனிவரும் காலங்களில் காண வாய்ப்புண்டு அல்லாஹ் நாடினால்… ஆனால் இதுவரை காணவில்லை என்பதே உண்மை.
ஏகத்துவத்திற்காக போராடிய தியாகிகள் பலர் தமிழுகில் தோன்றியுள்ளார்கள். அவர்களில் பிரச்சாரகர்களும் கனிசமானவர்கள் இருந்தார்கள். ஆனால் பல் துறை அறிஞரான பி.ஜெ அவர்களையே நான் கண்டேன்.
பி.ஜெ அவர்களின் அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லுங்களேன் என்றார் என்னுடன் இருந்த சகோதரர்.
----------------------
ஒரு எடுத்துக்காட்டா? ஆயிரம் காட்ட முடியுமே? அல்ஹம்து லில்லாஹ்….
இந்த கால கட்டத்தில் இவருடைய நினைவாற்றலை கண்டு நான் வியந்ததைப் போல் யாருடைய நினைவாற்றலையும் கண்டு வியக்க வில்லை.
பைபிலும் - குர்ஆனும், அல்லது விஞ்ஞானமும் - குர்ஆனும், அல்லது ஹதீஸ் கலை, பிக்கு கலை என்று ஒரு துறையில் நினைவாற்றலை வெளிப்படுத்துபவர்களை பார்த்திருப்பபோம். அனைத்துத் துறைகளிலும் நினைவாற்றலை வெளிப்படுத்திய ஒருவரை இந்த ஸமான் - காலம் தமிழுலகு இவர் மூலமே கண்டது.
பி.ஜெ அவர்களின் அல்குர்ஆன் மொழியாக்கத்தையும், விளக்கவுரையையும் படித்தவர்கள் அல்லாஹ் அவருக்கு வழங்கிய அறிவு ஞானத்தின் பெருமதியை அறியாமல் இருக்க மாட்டார்கள்.
இன்றைக்கும் இதற்கு முன்பும் இதற்கு பின்னரும் அவருடைய கருத்துக்களை எதிர்க்கும் பெரும்பாலானவர்கள் பி.ஜெ அவர்களின் எழுத்தையோ, பேச்சையோ முறையாக செவிமடுக்காமல் தான் அவரை எதிர்க்கிறார்கள். விமர்சிக்கிறார்கள்.
பி.ஜெ யின் எழுத்தை படித்திருந்தார்கள் என்றால் அரபுலக அறிஞர்களை போல் கருத்தை விமர்சனம் செய்வதோடு நிறுத்தியிருப்பார்கள். அவரின் முழுப் பிரச்சாரத்தையும் எதிர்ப்பதை குறிக்கோளாக கொண்டிருக்க மாட்டார்கள்.
எனக்கு வயதாகி விட்டது. கண்பார்வையும் சரியாக இல்லை. ஆனால் இந்நேரத்திலும் அவருக்காக பிரார்த்திக்கிறேன்.
அரபுலக முற்கால அறிஞர்களையும் படித்துள்ளேன். அவருடைய தப்சீரையும் படித்துள்ளேன். ஆச்சரியமான அறிவு ஞானத்தை அல்லாஹ் அவருக்கு வழங்கியிருக்கிறான். அவர் தஃவா களத்தில் மேடையில் நின்று உரையாற்றா விட்டாலும் அவருடைய எழுத்துப் பணி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.
பி.ஜெ அவர்கள் மீதான கலங்கத்தை நான் நம்பவில்லை. காரணம் அறிஞர்கள் இப்படியான காரியங்களில் ஈடுபட வாய்பில்லை. இன்னும் சொல்லப் போனால் நவீன கருவிகளில் அவருக்கு எதிராக சூழ்ச்சிகள் பின்னப்பட்டிருக்கும் என்பதே யதார்த்தமாகும்.
தமிழுலகு கண்ட தஃவா களத்தில் நவீன கருவிகளைக் கூட அறிமுகம் செய்தவர் அவர் தான். தனது தொலைபேசி ஒத்துக் கேட்க்கப்படும் என்ற சாதாரண அடிப்படை அறிவு கூடவா அவருக்கு இருந்திருக்காது என்று நினைக்கிறீர்கள்?
தமிழகத்தின் மிகப் பெரும் அரசியல், ஆன்மீகத் தலைவராக அறியப்பட்ட பி.ஜெ அவர்களை அரசு அனுதினமும் தொடர் கண்கானிப்பில் ஈடுபடும் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயமாக இருக்கும் நிலையில் பி.ஜெ அவர்கள் இது தெரியாமல் தான் இருந்திருப்பாரா? யோசித்துப் பாருங்கள்.
லெப்டப் முதல் நவீன தொலை பேசியில் கிதாபு படிப்பது முதல், அதனை கையாளும் அனைத்து வழிமுறைகளும் மிகத் தெளிவாக அறிந்த ஒரு நபரை இப்படி நடந்திருப்பார் என்ற சிறு வட்டத்தில் சுருக்கி அடக்கி வைக்க முனைவது தவறானது.
என்னைப் பொருத்தவரையில், அவர் மீது சுமத்தப்பட்ட நவீன முறையிலான குறித்த குற்றச்சாட்டை நவீன கருவிகளின் உதவி கொண்டு முறியடிக்க முனைந்திருக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்திருக்க வேண்டும்.
அப்படியே அதனை செய்ய முடியாமல் போனாலும் ஒரு அறிஞர் மீதான கல்வித் தேவை மற்றும் கடந்த கால நம்பிக்கையான வாழ்க்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தை முறைப்படுத்தி கையாண்டிருக்க வேண்டும்.
நான் ஒதுங்கிச் செல்கிறேன். ஒதுங்கிச் செல்கிறேன். என்று விட்டு விலகி விலகி சென்றவரை இழுத்து வந்து நிறுத்தி விட்டு இப்போது அவமானம் சுமந்த நிலையில் அவரை விட்டிருப்பது மனது தாங்காத விடயமாகும்.
அல்லாஹ் அவருடைய விவகாரத்தில் மிகத் தெளிவான ஓர் நிலையை ஏற்படுத்துவான் என நினைக்கிறேன் இன்ஷா அல்லாஹ்…
அது அவர் வாழும் போதும் நடக்கலாம்… மரணத்தின் பின்னரும் நடக்கலாம்…
வாழும் போதே அவரை அல்லாஹ் தூய்மைப் படுத்தினால் அவர் மீது கலங்கம் சுமத்தியவர்களும் அவரிடம் மன்னிப்புக் கோரி தப்பித்துக் கொள்ள வாய்ப்புண்டு. அவரின் மரணத்தின் பின்னர் அல்லாஹ் அவரை தூய்மைப் படுத்தினால் அவர் மீது கலங்கம் சுமத்தியவர்களின் நன்மைகளையும் அவருக்கு வழங்க வேண்டிய நிலை கலங்கம் சுமத்தியவர்களுக்கு உண்டாகி விடும்.
நபியின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீதான அவதூறு நிகழ்வை நாம் என்றைக்கும் மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.
நபியவர்களே தன் மனைவி ஏதும் தவறிழைத்திருப்பார்களோ என்று நம்பும் அளவுக்கு அவதூறு பரப்பிகள் ஆயிஷா மீதான அவதூரை திட்டமிட்டு பரப்பி மகிழ்ந்தார்கள். ஆனால் அல்லாஹ் அன்னையவர்களின் மானத்தை காப்பாற்றி இவ்வுலகு அழியும் வரையில் ஆயிஷா தூய்மையானவர்கள் என்பதை பதிவு செய்யும் விதமாக குர்ஆனிலேயே வசனத்தை இறக்கி வைத்தான்.
அன்னை ஆயிஷாவின் மானமே இப்படியொரு நிலையை சந்தித்தது. இந்நிலையில் பி.ஜெ எம்மாத்திரம்?
அன்னை ஆயிஷா (ரலி) யின் மீது கலங்கம் சுமத்தியவர்கள் யார்? காபிர்களா? முனாபிகீன்கள் தானே? பரப்பியவர்கள் யார்? நபித் தோழர்களும் தானே? நபியின் கவிஞர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), மிஸ்தஹ் (ரலி) போன்றவர்களே அதனை பரப்பினார்களே?
அல்லாஹ் குறித்த நபித்தோழர்களை கண்டிக்க வில்லையா?
இதே நிலை தான் யார் மீது அவதூறு பரப்பப்பட்டாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
பரப்புகிறவர்கள் எப்படியானவர்களாகவும் இருக்கலாம். நல்லவர்களாக, சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக கூட இருக்கலாம். நபித் தோழர்களை விட மதிப்பு மிக்கவர்களா இப்போது இருக்கிறார்கள்?
இதனால் பி.ஜெ அவர்களுக்கு எந்த நஷ்டமும் வந்து விடாது. அவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் அமைதியை கொடுக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். மீதமுள்ள காலத்திலும் அவர் தனது எழுத்துப் பணியை தொடர வேண்டும் என்பதே என் ஆசை.
அவருடைய குர்ஆன் மொழியாக்கம், புத்தகங்கள் ஆகியவற்றில் அவருடைய பெயரை நீக்கம் செய்யப்போவதாக அமைப்பு சார்பில் அறிவித்துள்ளார்களே என்றேன்…
---------------------
மனது ஏற்றுக் கொள்ளாத, வரலாற்றுத் தவரையே தற்போது தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அவர் விடயத்தில் மேற்கொள்ள முனைகிறது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பி.ஜெ அவர்களை மேடையில் ஏற்றி அழகு பார்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால் அவருடைய அறிவை அழகுபார்க்க வேண்டும்.
அமைப்பு சட்டங்கள் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது தான். சமுதாயத்தின் தேவைக்காக தேவைப்பட்டால் அமைப்பின் சட்டங்களை மாற்றுவதில் என்ன தவறிருக்கிறது? அமைப்பு விதியென்ன அல்லாஹ்வின் விதியா? இல்லை தானே?
அமைப்பிலிருந்து யாரை நீக்கினாலும், அவருடைய உரைகளை நீக்கி விடுவோம், எழுத்துக்களை நீக்கி விடுவோம் என்ற விதி அவர்கள் புரியாமலேயே உருவாக்கிக் கொண்டது. அப்படியே இருந்தாலும் தமிழ்நாடு தெளஹீத் ஜமாஅத்தின் அமைப்பின் விதிப்படியே பி.ஜெ யின் நூல்களின் பெயர்களை மாற்றுவதோ, வீடியோக்களை நீக்குவதோ தவறானதாகும்.
அது எப்படி தவறானது என்று சொல்கிறீர்கள்? என்றேன் ...
பி.ஜெ அவர்களின் வீடியோக்களை நீக்கி, புத்தகங்களை பெயர் மாற்றம் செய்யப் போகிறோம் என்ற அறிவிப்பு முதலில் முரண்பாடானது.
எப்படி சொல்கிறீர்கள்?
பி.ஜெ அவர்களின் உரைகளை நீக்குவது என்றால் புத்தகங்களையும் நீக்க வேண்டும். எந்த பெயரிலும் மீள்பதிப்பு செய்யக் கூடாது.
டி.என்.டி.ஜெ ஆசிரியர் குழு என்று அவர்கள் புத்தகங்களை பெயர் மாற்றம் செய்யும் முடிவுக்கு வந்த காரணம் என்ன? அது பிரின்ட் செய்யும் வடிவம் என்பதினால் தானே? பெயரை மாற்ற முடியும் என்பதினால் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். இல்லா விட்டால் அதனையும் நீக்கும் முடிவுக்கு தானே வருவார்கள்.
நீக்குவதுதான் முடிவென்றால் அனைத்தையும் நீக்கியிருக்க வேண்டும்.
வீடியோக்கள் - வீடியோக்களில் வெரும் பயான்கள் மட்டுமல்ல முழு அறிவுப் பொக்கிஷமும் அழிக்கப்பட்டு விடும் தொடர் உரைகள் என்ற பெயரில் ஒவ்வொரு ரமழானிலும் அறிவை கொட்டித் தீர்த்தார் அறிஞர் பி.ஜெ விவாதக் களங்களில் அசத்தியவாதிகளை அடி அசைந்து ஆட்டம் கண்டு ஓட்டம் பிடிக்க வைத்தார். இந்த வீடியோக்களையும் நீக்க வேண்டுமல்லவா?
இந்த முடிவுக்கு தெளஹீத் ஜமாஅத் அமைப்பினர் வந்தது என்பது பெரும் ஆன்மீக வரட்சியின் பக்கம் மக்களை இழுத்து செல்லும் தவறான முடிவாகும்.
வீடியோக்களில் பி.ஜெ யின் குரலையும், முகத்தையும் மறைக்க முடியும் என்றால் அதற்கும் டி.என்.டி.ஜெ அறிஞர் குழு என்று தான் போட முனைந்திருப்பார்கள்.
காரணம் என்ன? அவர்களின் உள், ஆழ் மனமே இந்த அறிஞரின் அறிவுப் பொக்கிஷத்தை நாம் இழந்து விடக் கூடாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனால் தானே இந்த முடிவுக்கு வருகிறார்கள்.
இதுதான் முரண்பாடு என்கிறேன்.
ஆகவே தான் அதனை நீக்கக் கூடாது என்றேன்.
அமைப்பு விதிக்கு மாற்றம் என்று எப்படி நினைக்கிறீர்கள்?
ஒருவரை அமைப்பிலிருந்து நீக்கி விட்டால் அவருடைய அனைத்து உரைகளையும் நீக்குவது என்பதை என்ன அடிப்படையை வைத்து முடிவெடுத்தார்கள்? அவர் கொள்கையில் மாற்றுக் கருத்துக் கொண்டால் உரைகளை நீக்குவது சரியாகும். அல்லது ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டால் நீக்குவது முறையாகும் - இது கூட முறைப்படுத்தப்பட்ட முறையல்ல. காரணம் கொள்கையில் மாற்றம் ஏற்படாத வரையில் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டால் கூட உரைகள் ஆக்கங்களை நாம் வைத்திருக்க வேண்டும் என்பதே சரியாக இருக்கும். ஏனெனில் அவர் இருக்கும் வரையும் இப்போதும் தெளிவான கொள்கையில் தான் இருக்கிறார் என்ற நிலையில் அவற்றை ஏன் நீக்க வேண்டும்?
அறிஞர் பி.ஜெ அவர்களின் உரைகள், விவாதங்கள், கருத்துரைகள், தப்சீர் விளக்கங்கள், மாற்று மத நண்பர்களுக்கான பிரச்சாரங்கள், இஸ்லாம் பற்றிய கேள்வி பதில்கள், புத்தகங்கள், குர்ஆன் மொழியாக்கங்கள் என்று அனைத்தும் ஓர் அறிவுப் பொக்கிஷமாக இருக்கும் நிலையில் அமைப்பு விதியை காரணம் காட்டி அவற்றை நாம் நீக்கம் செய்தால் ஆன்மீக வரட்சியை தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும் சொல்லுங்கள்?
இது போன்ற ஆய்வுரைகளை மீண்டும் இந்த தமிழுலகுக்கு கொண்டு வர எத்தனை வருடங்கள் எடுக்குமோ அல்லாஹ்வே அறிந்தவன்.
அவருடைய எழுத்துக்களை இலேசாக பெயர் மாற்றம் செய்கிறீர்கள். இந்த முடிவுக்கு வருவெதென்றால் கூட அவருடைய உரைகள் அனைத்தையும் எழுத்திற்கு கொண்டு வரும் ஒரு மிகப் பெரும் பணியை தொடங்க வேண்டும். அதனை செய்வதற்கு அமைப்பு தயாராகுமா? இல்லையே? நீங்கள் என்ன ஆய்வுக் குழுவின் பெயரிலாவது வெளியிடுங்கள் ஆனால் அவர் பேசிய தொடர் உரைகள். தப்சீர் விளக்கங்கள். ஹதீஸ் விளக்கங்களை எழுத்தில் வடித்து விடுங்கள்.
இது நீங்கள் கேட்கிறீர்கள். நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நடக்குமா? நடக்காதா? என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் அவருடைய பெயரிலேயே அனைத்து எழுத்துக்களையும் தொடர்ந்தால் அதனை விட இந்த சமுதாயத்திற்கு நன்றிக்குறிய செயல் எதுவாக இருக்கும்?
அவர் மீதான குற்றச்சாட்டு உண்மையென்றால், அவருடைய உணர்வில் ஏற்பட்ட தடுமாற்றத்திற்கு அறிவை பிழை காண்பது முறையல்ல.
-------------
உதாரணமாக இன்னும் 100 வருடங்களின் பின்னர் வரும் ஒருவர் அவருடைய குற்றச்சாட்டை பற்றி ஆய்வு செய்யப்போவதுமில்லை. அதனை வைத்து அவரை எடைபோடப் போவதுமில்லை. அல்லாஹ் அவருக்களித்த அறிவின் நுனுக்கங்களைத் தான் படிப்பார்கள். தேடுவார்கள். ஆய்வார்கள். ஆகவே தான் இந்த விவகாரத்தில் இன்னும் அதிக கலந்துரையாடல்கள் தேவை என்பதை நாம் உணர வேண்டும்.
இன்னும் அதிகமாக நாம் சிந்திக்க வேண்டும். அறிவு மட்டும் பெருமதியானதல்ல. அது யாரிடத்தில் இருக்கிறது என்பதை வைத்தும் அந்த அறிவுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால், பி.ஜெ மீதான இந்த ஓடியோவின் வெளிப்பாடே அவர் மூலமாக இந்த சமுதாயத்திற்கு கிடைத்த நல்ல பல பிரயோஜனங்களை இல்லாமலாக்குவதுதான். அவருடைய பெயர் நாசமானால் அவரால் ஏற்பட்ட தாக்கத்தையும் இல்லாமலாக்கி இனி ஏற்படவிருக்கும் தாக்கத்தையும் ஓய்த்து விடுவதே எதிரிகளின் நோக்கமாக இருக்கிறது.
அப்படியிருக்கையில் நாமே அதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கலாமா?
அவரை தஃவாவில் இருந்து நீக்கி விட்டோம் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் 30 வருட ஆய்வுக் களத்தை அழித்து விடக் கூடாது.
வரலாறுகள் உண்மை பேசும். நியாயங்கள் வரலாற்றுடன் கூடிய சத்தியத்தை பேசும் இதுதான் இப்போது நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது.
அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும். நான் அதிகமதிகம் துஆ கேட்கிறேன்.
பி.ஜெ பற்றிய இந்த செய்தி கேட்ட நேரத்திலிருந்து எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை. தொழுகிறேன். தொழுகையில் அழுகிறேன். அழுகையுடன் அவருக்காக பிரார்த்திக்கிறேன்.
ஒரு அறிவுக் கடல்..... அறிவின் சமுத்திரத்தை எண்ணி அழுத கனம் அது.....
கண்கள் கலங்கினார்.... நாங்களும் கலங்கினோம்.... அல்லாஹ் பி.ஜெ அவர்களுக்கு அருள் புரிய வேண்டுமென என்றும் பிரார்த்திக்கிறோம்.
PJ - அறிவுத் துறையில் அவர் ஓர் கடல். நான் ஓர் துளி.
ஷாபி, ஹனபி, ஹன்பளி, மாலிக் மத்ஹபுகளில் வழியில் பி.ஜெ மத்ஹபும் உருவாகி விடுமோ என்கிற பயம் கூட அந்த அறிஞரை இப்படியான பழிச் சொல்லை, இழிச் சொல்லை தாமாக ஏற்றுக் கொள்ளும் மனோ நிலைக்கு தள்ளியும் இருக்கலாம். - அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
தன் பின்னால் யாரும் வரக்கூடாது கொள்கையின் பின்னால் தான் அனைவரும் செல்ல வேண்டும் என்று அடிக்கடி பி.ஜெ அவர்கள் சொன்னது. இப்போது நிதர்சனமாக நடந்தது. அவர் ஆசை நிறைவேறியது.
எது எப்படியோ பி.ஜெ என்ற அறிஞரின் அறிவை தான் கொள்கை சொந்தங்கள் நேசித்தார்கள். பி.ஜெ என்ற தனி மனிதனை அல்ல. இங்கு தௌஹீத் தான் ஜெயித்தது, தக்லீத் அல்ல.
பி.ஜெ வுக்கு பின்னால் யாருமில்லை. கொள்கையின் பின்னால் தான் அத்தனை சொந்தங்களும் என்பதையும் இந்தப் பிரச்சினை மூலம் உலகுக்கு வெளிப்படுத்திய வல்ல ரஹ்மானுக்கே அனைத்துப் புகழும்.
யாரும் எதனையும் சொல்லலாம். ஆனால் அறிந்து கொள்ள வேண்டியது என்ன தெரியுமா?
அவர் ஓர் அறிஞர்! ஆனால், அவரும் மனிதர்!
குறிப்பு:
மார்க்கத்திற்கு முரணாக பி.ஜெ மட்டுமல்ல யார் பேசினாலும் அதனை தூக்கியெறிவோம். அதுவே எமது கொள்ளை என்பதை இங்கு நினைவூட்டுகிறேன்.
பி.ஜெயை பின்பற்றுபவன் என்று என்னை சொல்ல நினைத்தால் அவர்களுக்கான பதிலே இது.
சட்டத்தரணி ஸரூக் - கொழும்பு

3 comments:

Dr.Anburaj said...

அன்னை ஆயிஷாவின் மானமே இப்படியொரு நிலையை சந்தித்தது. இந்நிலையில் பி.ஜெ எம்மாத்திரம்?
அன்னை ஆயிஷா (ரலி) யின் மீது கலங்கம் சுமத்தியவர்கள் யார்? காபிர்களா? முனாபிகீன்கள் தானே? பரப்பியவர்கள் யார்? நபித் தோழர்களும் தானே? நபியின் கவிஞர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), மிஸ்தஹ் (ரலி) போன்றவர்களே அதனை பரப்பினார்களே?
அல்லாஹ் குறித்த நபித்தோழர்களை கண்டிக்க வில்லையா?
இதே நிலை தான் யார் மீது அவதூறு பரப்பப்பட்டாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
பரப்புகிறவர்கள் எப்படியானவர்களாகவும் இருக்கலாம். நல்லவர்களாக, சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக கூட இருக்கலாம். நபித் தோழர்களை விட மதிப்பு மிக்கவர்களா இப்போது இருக்கிறார்கள்?
----------------------
இசுலாம்என்ற அரேபிய வல்லாதிக்க இயக்கம் தகுதி குறைந்தவர்களால் துவக்கப்பட்டது.ஆகவேதான் இன்று அங்கு விமா்சனனங்கள் மிக அதிகம் உள்ளது. சிறந்த வாழ்க்கையை காட்ட அது தகுதியற்றதாக உள்ளது. இசுலாமிய சாம்ராஜ்யங்கள் வெளிஉலக சக்திகளால் தோற்கடிக்கப்படவில்லை. இந்தியாவில் அரேபிய -துருக்கி மத ஆதிக்க மன்னா்களின் ஆட்சிக்கு சிவாஜி போன்ற மன்னங்கள் தொந்தரவுதான் கொடுத்துக் கொண்டிருந்தாா்கள்.முழுமையான வெற்றியை பெற இயலாதுதான் இருந்தார்கள்.ஆனால் சகோரத சண்டையின் காரணமாக பதவி போட்டி பொறாமை காரணமாத்தான் இசுலாமிய அரசுகள் இரத்தக்களறறியில் வீழ்ந்தது. நபி தோழா்கள் மட்டும் அல்ல முகம்மது கூட குறை கூறத்தக்க பல நடவடிக்கைகளைக் கொண்டிருந்தாா் என்பதுதான் பலரின் முடிவு.

Ashak S said...

முழுக்க முழுக்க சோப்பு, முஸ்லீம் அல்லாத மக்கள் குரானை மனனம் செய்துள்ளார்கள், ஹதீஸ் காலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் அதற்காக அவர்களை இறைவன் நேசிப்பானா? பொறையாரில் வைத்து தன் போது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என்று ஒரு வீடியோ வந்தது வியாபம் இருக்கும் என்று நினைக்கிறேன், அதில் எப்படி மனிதன் நடிக்கிறார், பிறகு ஆடிவோ வில் பேசியது தான் தான் என்று ஒப்புக்கொள்கிறார், இறைவனுக்கு பயப்படாத இவர் மனிதனுக்கு பயந்து தவறை ஒப்பு கொள்கிறார், இந்த பொய் சொல்லும் தன்மைதான் அவரின் இஸ்லாமிய விளக்கங்களை ஏற்க மறுப்பதன் பின்னணி, ஆயிரம் விளக்கம் சொன்னாலும் மார்க்கம் சொல்ல தகுதியற்றவர்கள் பொய்யர்கள்

Ashak S said...

do not ignore my comments