Followers

Thursday, June 28, 2018

தவ்ஹீத் ஜமாத்தினருக்கு சில படிப்பினைகள் உண்டு!

தவ்ஹீத் ஜமாத்தினருக்கு சில படிப்பினைகள் உண்டு!

கடந்த 30 வருடங்களாக தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் ஏகத்துவ கொள்கையை எடுத்துச் சென்றோம். அடி உதைகள் வாங்கினோம். ஊர் விலக்கம் செய்யப் பட்டோம். நண்பர்களால் வெறுக்கப்பட்டோம். சொந்தங்களால் தூரமாக்கப்பட்டோம். நெருங்கிய உறவுகள் விருந்துகளையும் நபி வழிக்கு மாற்றமாக இருந்ததால் புறக்கணித்தோம். வெயில் பனி என்று பாராமல் ஐந்து வேளை பள்ளியில் ஜமாத்தாக சென்று தொழும் பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டோம். இளம் வயதிலேயெ அழகிய தாடியை வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோம். தர்ஹா, கத்தம், ஃபாத்திஹா, மவுலாது என்று பித்அத் ஆன அனைத்தையும் தூரமாக்கினோம். இதை எல்லாம் பார்த்த ஊர் மக்கள் ஏகத்துவ கொள்கையை ஏற்காத மக்கள் கூட ஏகத்தவ வாதிகளை கண்ணியமாக பார்த்தார்கள்: மரியாதை செய்தார்கள்.

தமிழகத்தில் மிகச் சிறந்த சமுதாயத்தை உருவாக்கிய இந்த தருணத்தில்தான் தவ்ஹீத்வாதிகளிடம் சைத்தான் தனது வேலையை சிறுக சிறுக ஆரம்பித்தான். கிராமத்தில் நாம் மட்டும்தான் சத்தியத்தில் இருக்கிறோம்: மற்ற அனைவரும் வழிகேட்டில் உள்ளனர் என்ற மமதை ஒரு சில ஏகத்துவவாதிகளிடம் தலை தூக்க ஆரம்பித்தது. அவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.

என்னை பொருத்த வரை தவ்ஹீத் மர்கஸ், சுன்னத் ஜமாத் பள்ளி என்று எங்கு நேரம் கிடைக்கிறதோ அங்கு தொழுது கொள்வேன். ஒரு முறை காலை நேர தொழுகையான ஃபஜ்ர் தொழுகையை எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளியில் தொழுது விட்டு வெளியே வந்தேன். அதே நேரம் தவ்ஹீத் மர்கஸில் தொழுது விட்டு வந்து கொண்டிருந்த நண்பர்கள் என்னிடம் 'எப்படி பாய் சுன்னத் ஜமாத் பள்ளியில் தொழுகிறீர்கள்' என்று கேட்டனர்.

'தவ்ஹீத் மர்கஸ் வெகு தொலைவில் உள்ளது. சில நேரம் ஜமாத் கிடைப்பதில்லை. நமது கிராமத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் பல ஆண்டுகளாக தொழுது வருகிறேன்.'

'பித்அத் அதிகம் நிறைவேறும் பள்ளியில் நாம் தொழலாமா?'

'நான் எந்த பித்அத்திலும் கலந்து கொள்வதில்லை. தவ்ஹீத் முறைப்படித்தான் தொழுகிறேன்.'

'இணை வைக்கும் இமாமை பின்பற்றலாமா?'

'இந்த பள்ளியின் இமாம் இணை வைப்பதை நான் பார்க்கவில்லை. அப்படி பகிரங்கமாக பார்த்தால் விலகிக் கொள்வேன்'

'இருந்தாலும் பாய்... நீங்கள் தொழுவது எங்களுக்கு கொஞ்சம் கூட பிடித்தமில்லை' என்று உரையாடல் முடிவுக்கு வந்தது.

என்று நாம் தனிப்பள்ளி கட்டிக் கொண்டு போனோமோ அன்று முதல் நமது பிரசாரத்துக்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பித்அத் வாதிகளுக்கு நாம் தனியாக சென்றது மிகவும் வசதியாக போய் விட்டது. தனிப் பள்ளி கட்டிக் கொண்டு சென்றதில் பல நன்மைகளும் விளைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

அடுத்து இணையத்தில் தவ்ஹீத் ஜமாத் தலைவர்களைப் பற்றி ஏதேனும் விமரிசனம் வைத்தால் உடன் ஒருமையில் பேச ஆரம்பித்து விடுகின்றனர் சில தவ்ஹீத்வாதிகள். அவர்களை முஸ்லிம்கள் இல்லை என்றே ஓரங்கட்டும் நிலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் அறியாமையில் உள்ளனர். தெரிந்த நாம்தான் அவர்களுக்கு பக்குவமாக ஏகத்துவத்தை எத்தி வைக்க வேண்டும். 'நாம் உண்மையைத்தானே சொல்கிறோம்: நம்மை எதிர்க்கிறார்களே' என்று கோபப்பட்டு வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.

அதே போல் டிஎன்டிஜே தலைமையின் நிர்வாகம் சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் வைத்தால் தவ்ஹீத் ஜமாத்திலிருந்தே தூக்கி விடுகின்றனர்.  கேள்விகள் பிறந்தால்தான் சிறப்பான பதில்கள் நமக்கு கிடைக்கும். நம்மை சீர்படுத்திக் கொள்ள ஏதுவாகும். நம்மை எல்லோரும் கவனித்துக் கொண்டுள்ளார்கள் என்ற எண்ணம் வந்தாலே பல தவறுகள் மறைய வாய்ப்புண்டு. கேள்வி கேட்பவர்களை எல்லாம் நீக்கிக் கொண்டே போனால் முடிவில் யார் மிஞ்சுவர்.

'நாங்கள் மட்டுமே சத்தியத்தில் இருக்கிறோம்: நாங்கள் மட்டுமே நேர்மையாளர்கள்: இறைவனுக்கு பயந்தவர்கள்: மற்றவர்கள் அனைவரும் வழிகேட்டில் உள்ளனர்' என்ற எண்ணம் ஒரு சில ஏகத்துவ வாதிகளிடம் மிகைத்ததாலேயே இறைவன் இந்த ஜமாத்துக்கு தற்போது சோதனையை கொடுத்துள்ளான். பாக்கர், அல்தாஃபி, பிஜே, சையத் இப்றாஹிம் என்று வரிசையாக பல பெரும் தலைகள் தவறு செய்து வெளியாக்கப்பட்டுள்ளனர். எல்லோருமே ஆதமுடைய மக்கள்: யாரும் இங்கு புனிதர்கள் கிடையாது: என்பதை உணர்த்துவதற்காகவே இறைவன் செய்த ஏற்பாடாகவே இதனை நான் பார்க்கிறேன். இதனால் தவறு செய்தவர்களை நியாயப்படுத்த இங்கு வரவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இறைவனிடத்தில் தண்டனையை பெற்றுக் கொள்வார்: அவர் செய்த நன்மைக்கான கூலியையும் பெற்றுக்  காள்வார்.

எனவே ஆணவம், அகங்காரம், திமிர் போன்ற சைத்தானிய குணங்களை நீக்கி பணிவு, அடக்கம், அன்பு கொண்டு நாம் நமது சகோதரர்கள் இடத்தில் ஏகத்துவத்தை கொண்டு செல்வோம். கண்டிப்பாக இறைவன் நமக்கு வெற்றியை கொடுப்பான்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசினார். அப்போது அவரது தோள் புஜங்கள் நடுங்கின. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், சாதரணமாக இரு! நான் மன்னன் அல்லன். உப்புக் கண்டத்தை சாப்பிடும் பெண்ணின் பிள்ளை தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் (ரலி)
ஹதிஸ் என் : 3303
நூல் : இப்னுமாஜா

"(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். 

அல்குர்ஆன் 3 : 159

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்" என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5055

5 comments:

Unknown said...

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்ற அமைபபில் உள்ளவா்கள் பண விசயத்தில் செய்த தவறுகளை விட ” பெண்கள்” அதுவும் ”முஸ்லீம் பெண்கள் -செக்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களில் அதிக தவறு செய்து அசிங்கப்பட்டு விட்டார்கள். பெண்களுக்கு கோசா போட்டும் கோணல் புத்தி மாறவில்லையே !கூட்டம் சோ்ந்தால் அகம்பாவம் மமதை வந்து விடுகின்றது.

ASHAK SJ said...

இவர்களின் இறை அச்சம் பல்லிளித்த ஒன்றுதான், ஷிர்க்கை அகற்றுகிறேன் (கப்ர் வணக்கம்) பேர்வழி என்ற பெயரில் பல ஷிர்க்குகளை உண்டாக்கியவர், உதாரணமாக ஒரு இறை நம்பிக்கையாளன் சுகவீனப்படும் போது முதலில் இறைவனிடம் கை ஏந்தி விட்டுத்தான் மருத்துவமனை செல்வான், ஆனால் இவர்களோ முதலில் மருத்துமனைக்குத்தான் செல்வார்கள் (பெரும்பாலானோர்), இதுவும் ஒரு வித ஷிர்க்கு தான் என்பதை அறியாதவர்கள்.

ASHAK SJ said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...

அன்புள்ள Ashak S

ஷர்க் -காபீர்கள் -முனாம்பிக்குகள்-முர்சிக்குகள் ...............
மனிதனை இழிவு படுத்த இப்படி எத்தனை வாரத்தைகள் அரேபிய இலக்கியங்களில் உள்ளன
? பட்டியல் அளிக்க முடியுமா ?,இந்த வார்த்தைகளை மறப்பது நல்லது.
இந்த வார்த்தைகள் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது ?
முஸ்லீம்களையும் அது படாதபாடு படுத்துகின்றது. காலாவதியான அரேபிய புத்தகங்களை தலையில் வைத்து ஆடினால் நிச்சயம் சீரழிவுதான்.
ஆண்களுக்கு கற்பொழுக்கத்தை இசுலாம் போதிக்கவில்லை.மனைவிகளின் அணிவரிசையுடன் குமுஸ் பெண்களின் வரிசை என்று மனிதனின் காமதேவைகளுக்கு முழு வாய்ப்பை குரான் அளிக்கின்றது.ஆக தெளஹித் ஜமாத்தவா்கள் குரான்-முகம்மது போதனைகளில் தாக்கதாலே கெட்டுப் போனாா்கள் என்பது என்து கருத்து.9வயது சிறுமிகள் கூட பாலியல் இன்பத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளாா்கள் என்பது அசிங்கமாக உள்ளது.

ASHAK SJ said...

அன்புள்ள அன்புராஜ்
நான்கு வேதங்களிலும் உண்டு காபிர் and முஷ்ரிக், ஏன் காபிரை கொள்ளவேண்டும் என்று கூட உண்டு படித்து விட்டு வந்து பதிவிடுங்கள்

பாவம் அன்புராஜ் உங்களுக்கு சுய புத்தியும் இல்லை சொல் புத்தியும் இல்லை, குரான் மட்டுமே ஆணையும் பார்வையை தாழ்த்த சொல்லி சொல்கிறது, உல்லாசமாக இருப்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்யசொல்லவில்லை இஸ்லாம், ஹிந்து கடவுளின் நிலைகளை முதலில் தெரிந்து கொண்டு பின்னூட்டம் இடுங்கள்