Followers

Monday, June 11, 2018

வெள்ளை மனம் உள்ள பிள்ளை உள்ளம்


வெள்ளை மனம் உள்ள பிள்ளை உள்ளம்
     

நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூாியா சொன்னான் “நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன்” என்று.

சூாியா சாப்பாட்டு ராமன். பசித்து இருப்பவன் அல்ல.  அவன் தமாஷாக
சொல்லுகிறான் என்று நான் மனதினில் எண்ணிக் கொண்டேன்.

அவன் மீண்டும், மீண்டும் கூறிய போது, நான் அவனிடம் கேட்டேன், “சூாியா நீ எதற்காக நோன்பு நோற்கின்றேன் என்று சொல்லுகின்றாய்.”

“என் வகுப்பு அறையில் எனது அருகில் இருக்கும் நண்பன் முஹம்மது நோன்பு இருக்கின்றான்.  நோன்பு  ரமளானையும் அதன் பயன்களை குறித்தும் எல்லா விஷயங்களையும்  விளக்கி தந்தான். நானும் நாளை நோன்பு இருக்கின்றேன்” என்றான்.

நான் அதை பொிதாக நினைக்கவில்லை, சும்மா சொல்கிறான் என நானும் என் மனைவியும் எண்ணினோம். ஆனால் நாங்கள் ஆச்சாியம்  வியப்பும் படும் வகையில், அலாரம் வைத்து விடியல் காலையில் முஸ்லிம் பள்ளியில் பாங்கு விளிக்கும் முன்பு எழுந்து பல் துலக்கி கொஞ்சம் முந்திாி பருப்பும், தண்ணீரும் குடித்து நோன்பு வைத்து கொண்டான்.

என் மகன் பசித்திருந்து,  நோன்பு வைத்தது எங்களுக்கு அற்புதமும், ஆச்சாியமும், அபிமானமும் ஏற்பட்டது .

அவன் பள்ளிகூடத்திற்கு சென்று மாலை வீடு திரும்புவதற்கு முன்பே , மகனுக்கு ஸா்பிரைஸ் ஆக இருக்கட்டும் எனக் கருதி அவனுக்கு நாங்கள் மூன்று பேரும் நோன்பு துறப்பதற்கான எல்லா பொருள்களும் சமைத்து மேசை மீது பரத்தி வைத்ததைப் பாா்த்து பூாிப்பு அடைந்தான். முஸ்லிம் பள்ளியில் பாங்கொலி கேட்டபோது  சூாியா நோன்பு திறந்தான்.

சூாியாவிடம் “உன் பள்ளி தோழன் இந்த ரரமளான் மாதத்தைப்பற்றி வேறு என்ன கூறினான்.”  என்று கேட்டோம்.

முஹம்மது சொன்னான். “இயந்திரங்களுக்கு நாம் அவ்வப்போது நிறுத்தி சுத்தம் செய்து அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். அது போல் உடம்பிலுள்ள உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டாமா?

கடவுளின் காருண்ணியங்கள் மண்ணில் பெய்து இறங்குகின்ற  மாதமாகும். புண்ணியங்கள் செய்வதற்காக இறைவன் தந்த பூக்காலமாகும். பசியின் கொடுமையை அறியும் மாதமாகும். நம்முடைய ஆராதனை கொண்டு பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.

நம்மை சுற்றி இருப்பவா்களுக்கு உதவி செய்தும். ஏழைகளுக்கு அவா்களுக்குள்ள ஏழைகளின் வாியான ஜக்காத் கொடுப்பதும் தான தா்மங்கள் செய்து  இறைவனின் அன்பை பெறுவதுமாகும்.”

கள்ளம கபடமற்ற வெள்ளை உள்ளத்தின் வாா்த்தைகளை கேட்ட தாய் தந்தையா்கள் மகிழ்ந்தனா்.

தன் குழந்தை மத துவேஷ பாதையில் செல்லாது மத சினேகத்தை நாடுகின்றான் என மகிழ்ந்தனா்... பெருமைப்பட்டனா்.....



2 comments:

Dr.Anburaj said...

இந்துக்கள் முட்டாள்தனமாக வழிநடத்தப்படுகின்றனா் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். சமய ஆா்வம் இருந்தும் முறையான இந்து சமய பயிற்சி இல்லாததே இதற்கு காரணம். ஒரு இந்து அரேபிய வல்லாதிக்கவாதியாக மாற்றம் பெறுகிறானோ என்ற சந்தேகம் எனக்கு.

Dr.Anburaj said...

ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை
June 11, 2018
- ஜடாயு

வால்மீகி ராமாயணத்தில் ராவணனின் பெருமைகளும் (குலம், வீரம், தவம், வரங்கள், வித்தைகள் இத்யாதி), அவனது அதர்ம நடத்தைகளும் ( தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தியது, பெண்களைக் கவர்ந்து வந்தது, குரூர குணங்கள்) இணைத்தே பேசப்படுகின்றன. பல இடங்களில் நேரடியாக கவிக்கூற்றாகவும் மற்றும் ராமன், ஹனுமான், விபீஷணன் போன்றோரது எண்ணங்கள், பேச்சுகளின் வாயிலாகவும் இவை வருகின்றன. சிவபக்தன் என்ற குறிப்பு முதல் 6 காண்டங்களில் இல்லை, உத்தர காண்டத்திலேயே உள்ளது, அது பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

காவிய நோக்கில், ராமனைப் போன்று தர்மத்தின் மூர்த்தியாகவும் நற்குணக் கடலாகவும் உள்ள ஒரு மகத்தான நாயகனுக்கு எதிராக, எந்தப் பெருமைகளும் இல்லாத முற்றிலும் தீயவனான எதிர்நாயகனைப் படைப்பது என்பது முதிர்ச்சியற்ற, படுசாதாரணமான ஒரு காவிய அழகியலாகவே இருந்திருக்கும். கிரேக்க, ரோமானிய, செல்டிக் கலாச்சாரங்களின் பழைய காவியங்களும் அவற்றின் பாத்திரங்களும் இந்தப் பாணியில் தான் முற்றான நேர்-எதிர் தன்மைகளுடன் உள்ளன. கடவுள் – சாத்தான் என்ற யூத-ஆபிரகாமிய-கிறிஸ்தவ கருதுகோளும் அப்படியே.

ஆனால் நமது பண்பாட்டின் ஆதிகாவியமான ராமாயணத்தை அளித்த வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், “வீரனே, பண்பாடற்றவளிடம் பண்பாடற்றவன் பேசுவது போலவன்றோ பேசுகிறாய்” என்று சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஏன் அவர் நினைத்திருந்தால், கருப்பு வெள்ளைத்தனமாக ராவணனையும் ராமனையும் சித்தரித்திருக்கலாமே? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது.

இத்தனை நூற்றாண்டு காலமாக, ராமாயணம் பல்வேறு மொழிகளிலும் வடிவங்களும் நமது தேசமெங்கும் மீளமீளக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அடிப்படையான விஷயத்தின் ஆழமும், கனமும் நீர்த்துப் போகவில்லை. ராமனும் சீதையும் பரதனும் லட்சுமணனும் குகனும் அனுமனும் ஜடாயுவும் விபீஷணனும் போற்றப் படுகிறார்கள். ராவணன் போற்றப் படவில்லை, ஆனால் தூற்றப் படவுமில்லை. அவனை வீழ்ச்சியடையச் செய்தது எது என்பதன் வாயிலாகப் புரிந்து கொள்ளப் படுகிறான்.

இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத படித்த முட்டாள்களும், அறிவிலிகளும் தான் ராமாயணத்தையே திருப்பிப் போட்டு தாங்கள் ஏதோ புதியதாக பெரிய “புரட்சி” செய்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள். ராமாயணம் போன்ற ஒரு மகோன்னதத்தை, அதை நமக்களித்த ரிஷிகளின் கவிகளின் மேதைமையின் விசாலத்தை ஒரு சிறிதும் உணரத் திராணியில்லாத சிறு மனங்கள் கொண்ட நிர்மூடர்கள் தான், அதை வெறுப்புணர்வுகளைப் பரப்பவும், தங்கள் அரசியல் / சித்தாந்த காழ்ப்புகளை சித்தரிக்கவும் திரிக்க முற்படுகிறார்கள். இன்று பிறந்து நாளை அழியும் ஈசல்கள் இவர்கள்.

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராமாயண காதை உலகில் நிற்கும்.

யாவத் ஸ்தா2ஸ்யந்தி கி3ரய: ஸரிதஶ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா2 லோகேஷு ப்ரசரிஷ்யதி

(வால்மீகி ராமாயணம் 1.2.36)
இந்தியா முஸ்லீம் நாடானால் இராமாயாணம் அழிந்து போய்விடும்தான்