ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்!
மார்க்க அறிஞர் ஷேக் மக்சூத் இம்ரான் ரஷீத் வட நாட்டில் பிரபலமானவர். அவருக்கு நியூயார்க்கில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கு விவரிக்கிறார். அதனை தமிழில் மொழி பெயர்க்கிறேன்.....
'நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் லிஃப்டுக்காக காத்திருந்த போது எனது அருகில் ஒரு பரிச்சயமான முகம் தென்பட்டது. அட... இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புன்முறுவலோடு கை கொடுத்தார். நலம் விசாரிப்புக்குப் பிறகு 'எந்த அறையில் தங்கியுள்ளீர்கள்?' என்று கேட்டார். நான் அறையின் எண்ணை சொன்னேன். சலாம் கூறி விட்டு பிரிந்து விட்டார்.
காலை தொழுகைக்காக நான் எழுந்தபோது எனது அறையின் கதவு தட்டப்பட்டது. இந்த அதிகாலையில் யார்? என்று சற்று பயத்தோடு கதவை திறந்தேன். ஆச்சரியமாக ஏ.ஆர்.ரஹ்மான் கந்தையில் முஸல்லாவோடு (தொழுகைக்காக விரிக்கும் விரிப்பு) நின்று கொண்டிருந்தார். 'நான் வரலாமா?' என்று கேட்டார். 'வாருங்கள்' என்று அன்போடு அழைத்துச் சென்றேன். இருவரும் சேர்ந்து காலைத் தொழுகையான ஃபஜ்ர் தொழுகையை தொழுது முடித்தோம். தொழுகைக்கு பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னார்....
'மவுலானா.... நீங்கள் முஸ்லிமாகவே பிறந்தீர்கள். ஆனால் நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவன். என்று நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேனோ அன்றிலிருந்து இன்று வரை ஒரு நேரத்து தொழுகையைக் கூட விட்டதில்லை. இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் மதுவின் பக்கம் நெருங்கியது கூட கிடையாது. விபசாரத்தின் பக்கமும் சென்றதில்லை. இறைவன் என்னை பொருந்திக் கொண்டான். இத்தகைய சிறந்த வாழ்வைக் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்' என்று சொன்னார்.
இவ்வாறு மவுலானாவின் பேச்சு தொடர்கிறது.......
இதில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. பல தலைமுறைகளாக இஸ்லாமியன் என்ற பெருமை பேசுகிறோம். ஆனால் முறையாக அதனதன் நேரத்தில் தொழுவதில்லை. முஸ்லிம் என்று பெயர் வைத்துக் கொண்டு மதுவின் பக்கம் செல்கிறோம்: விபசாரத்திலும் ஈடுபடுகிறோம்: . இதிலிருந்தெல்லாம் தூரமாகியுள்ள ஏ.ஆர்.ரஹ்மானை நாமும் பாராட்டுவோம்.
ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா துறையில் இருப்பதை நாம் விரும்பவில்லை. கூடிய விரைவில் அதிலிருந்தும் விலகுவார் என்று எதிர் பார்போம்.
2 comments:
ஹிந்து மதம் ஒரு நல்ல இந்துவை இழந்து விட்டது.
வருத்தமாக உள்ளது.
திரைப்படத்துறையிலும் துணை நடிகைகள் கன்னிதன்மையோடு வாழ்ந்து வருகின்றவா்கள் இருக்கின்றார்கள்.சென்னையில் ஒரு துணை நடிகையாக 4 ஆண்டுகள் வாழ்ந்தவாின் திருமண முதல் இரவில் அவருக்கு அதிக உதிர போக்கு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா்.கன்னி ஜவ்வு பலமாக இருந்ததால் உதிரப்போக்கு ஏற்பட்டதாக மருத்துவா் கருத்து தொிவித்தாா்.
திரைப்படத்துறையில் ரஹ்மான் மட்டும் மது விபச்சாரம் செய்யதாவா் அல்ல.நிறையவே நல்ல உள்ளங்கள் இருக்கின்றார்கள்.
இருந்தாலும் சினிமாத்துறை கலாச்சார சீரழிவு மலிந்த துறைதான். இன்று நாட்டில் அதிகரித்து வரும் கலாச்சார சீா் அழிவிற்கு காரணம் திரைப்படங்கள் வாடஸ்அப்.
Post a Comment