Followers

Wednesday, June 20, 2018

மெல்லிழைத் தாள் (Tissue Paper)

மெல்லிழைத் தாள் (Tissue Paper)
ஒன்று எடுங்கள்
வேலையை முடியுங்கள்!
உண்மையிலேயே தேவையிருந்தால்
இரண்டு எடுங்கள்!
மூன்றாவது எடுத்தால் - அது
முளைத்தது மரத்தால் என்று
முணுமுணுங்கள்!
நான்காவது எடுக்க
நாடாது மனம்!
நாடு நலமிருக்க
நடுவோம் மரம்!

M S Abdul Hameed

No comments: