Followers

Wednesday, November 07, 2018

சர்க்கார்



சர்க்கார்
நேற்று (06-11-2018) தமிழ் ராக்கர்ஸ் தயவால் சர்க்கார் படம் ஒரு பைசா செலவில்லாமல் பார்த்தேன்.  படம் பார்க்கும் ஆர்வமெல்லாம் இல்லை. நண்பர்களுக்கு ஏதாவது இதன் மூலம் சொல்லலாமே என்பதால் பார்த்தேன். தியேட்டரில் எடுக்கப்பட்ட பிரிண்ட். இடையிடையே விஜய் ரசிகர்கள் 'தலைவா... தெய்வமே... உன்னை அடிச்சுக்க முடியாது தலைவா' என்ற கோஷங்கள் மற்றும் கர கோஷங்கள் விஷில் சப்தங்கள் ஊடாக படம் பார்த்தேன். தியேட்டரில் படம் பார்க்கும் பிரம்மையை ஏற்படுத்தியது. எம்ஜிஆர், ரஜினிக்கு இருந்த பைத்தியக்கார ரசிகர் கூட்டங்கள் தற்போது விஜய்க்கு மடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சினிமா கூத்தாடிகளுக்கு பல அடி உயரம் கட்அவுட் வைப்பது: சொந்த செலவில் பாலாபிஷேகம் செய்வது என்பது தொடர்கதையாவது வேதனையளிக்கிறது. தமிழர்கள் தங்களின் பலத்தை உணர்வது எந்நாளோ என்ற ஏக்கமே விஞ்சுகிறது.
தனது ஓட்டை வேறொருவன் போட்டு விட்டான் என்பதால் வெகுண்டெழுந்து அதனை சரி செய்ய புகுந்து அடுத்தடுத்து எவ்வாறு முழு நேர அரசியல்வாதியாக மாற்றப்படுகிறார் கதாநாயகன் என்பதுதான் கதை. மேலும் கலைஞர், ஜெயலலிதா, சசிகலா, தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் என்று எவரையுமே விட்டு வைக்காமல் அனைவரையும் இழுத்துள்ளார் இயக்குநர் முருகதாஸ். நியூட்ரினோ திட்டம், மீனவர்கள் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை என அனைத்தையும் சரி செய்ய வாக்குறுதியளிக்க வேண்டும் என்று பழ.கருப்பையாவிடம் விஜய் கேட்பார். அதற்கு “இதெல்லாம் வைச்சு தான் எங்களுக்குப் பணமே வருது. அதுலயே கை வைச்சா” என்று நீண்ட வசனம் பேசுவார் பழ.கருப்பையா. தற்கால அரசியலை அப்படியே படம் பிடித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் . ஜெய மோகனின் பல கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருபவன். அவர்தான் படத்தின் வசனகர்த்தா. பல அழுத்தமான வசனங்களையும் படம் முழுக்க தூவி விட்டுள்ளார் ஜெமோ.
பொதுவாக சினிமா என்ற இந்த கூத்தாடிகளின் கூடாரமானது பல தவறுகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கொண்டு நாட்டை திருத்தப் போகிறேன் என்பதுதான் காமெடியாக படுகிறது. ஒழுங்காக வருமான வரித்துறையை ஏமாற்றாமல் வரி கட்டும் ஒரு கதாநாயகனையும் இங்கு காண முடியாது. பிறகு எங்கிருந்து வரும் மாற்றம்? அடுத்து காட்சிக்கு காட்சி சிகரெட் பிடிப்பதையும் காட்டுகிறார்கள். சாராயம் அடிப்பதையும் பெருமையாக காட்டுகிறார்கள். இதெல்லாம் இளைஞர்களை வழிகெடுப்பதாக ஆகாதா? மாற்றம் என்பது இதுதானா?
என்று கூத்தாடிகளின் உண்மை முகத்தை மக்கள் தெரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தமிழகத்துக்கு விடிவு காலம். அதுவரை காலம் இப்படியே ஓடிக் கொண்டுதான் இருக்கும்.


4 comments:

vara vijay said...

You don't feel ashamed to watch a pirated movie then why are u blaming others. Your hands should be fitted off and eyes should be pokked for this crime and sin.

vara vijay said...

Tamil rockers is a thief and you are acknowledging that you watched a pirated version. You don't have any moral rights to write this article. If you are a true Muslim you should accept that you participated in a crime and punish yourself under sharia law.

suvanappiriyan said...

VARA vijay...

ஒரு நல்ல காரியத்துக்கு நமது பணத்தை செலவழிக்கலாம். சினிமாவுக்கு என் பணம் சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். இந்த சமூகத்தை சீரழிக்கும் சினிமாவின் ஆபத்தை உணர்த்தவாவது சிலபடங்களை பார்ப்பேன். அந்த வகையில் பார்த்ததுதான் சர்க்கார்.

இணையத்தில் வருவதை அனைவருமே பார்பர். சம்பந்தப்பட்டவர்கள்தான் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

vara vijay said...

You should be self policing because Allah is watching us.