என் பெயரில் ஏதேனும் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதாவது உங்கள் உணர்வுகள் அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதைக் கூறுவதற்கு உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் ஏதேனும் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்;அபூ உஸைத் (ரலி)
நூல்: அஹ்மத் 15478
நபி அவர்களின் பெயரால் ஒரு செய்தி நம்மை வந்தடைந்தால் இது நபி அவர்கள் சொல்லியிருப்பார்களா என்று கவனிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அதை எவ்வளவு பெரிய மார்க்க அறிஞர் நமக்கு எடுத்துரைத்தாலும் சரியே! பல ஆண்டுகளாக குர்ஆனையும் நபி மொழிகளையும் படித்து வந்த நமக்கு சில வித்தியாசமான அறிவுக்கு பொருந்தாத ஹதீஸ்களை கேட்டவுடன் 'இது நபி அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்: ஏதோ ஒரு தவறு நடந்திருக்கிறது' என்று நம் உள் மனமே சொல்லும்.
அரபு மொழி அறியாதிருந்தாலும், சிந்திக்கும் திறனை நமக்கு இறைவன் வழங்கியுள்ளான். தமிழ் மொழி பெயர்ப்புகளும் அனைத்து நபி மொழிகளுக்கும் வந்து விட்டது. அதன் மூலம் நபிகள் நாயகம் இவ்வாறு சொல்லியிருப்பார்களா என்று சிந்திக்க வேண்டும்; அல்லது அது பற்றிய விளக்கம் சரியானதா என்று சிந்தித்து செயல்பட வேண்டும். அந்த நபி மொழியை அறிவித்த அறிவிப்பு தொடர் சரியாக வந்துள்ளதா? சொன்னவர் நம்பகமானவர்தானா? அது குர்ஆனுக்கு முரண்படாமல் இருக்கிறதா என்பதை எல்லாம் சிந்திக்க வேண்டும். அதன் பிறகே நாம் அந்த நபி மொழியை நடைமுறைக்கு கொண்டு வரலாமா என்ற முடிவுக்கு வர முடியும்.
3 comments:
முஹமதின் சரித்திரத்தில் உபதேசங்களில் காலத்திற்கு ஒவ்வாத முட்டாள்தனமான கொடூரமான வெறுக்கும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது.நான் படித்த அளவில் கூட இப்படி யோசிக்க வைக்கும் பல சம்பவங்கள் உள்ளன.யுத்தத்தில் கைபற்றிய இளம் பெண்களை விற்று ஆயுதங்கள் வாங்கிட தகவல் அளிக்கும் செய்தியை படிக்கும் போது எனக்கு மனவேதனையாக இருக்கும். ஒரு குழியில் பல போர்களை வெட்டி அடக்கம் செய்த சமபவங்களைப் படிக்கும் போது மனம் பதரும். ஒரு மகானின் வாழ்க்கை வரலாறா? அல்லது வேறு ஒரு ...... ? என்று மனம் பேதலிக்கும். ஆனால் அரேபிய பெயா்கள் சம்பவங்கள் அந்நியமானதாக இருப்பதால் சரியான நினைவில் இல்லை. தாங்கள் சொல்வதுபோல் சம்பவங்களை திருத்தம் செய்வது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.முஹம்மதின் மீது நம்பிக்கை குறையும் போது - உபதேசங்கள் சரித்திர சம்பவங்கள் மனதிற்கு பிடிக்காத போது நம்பிக்கை குறையும் - ஜமாத்தில் பிளவுகள்ஏற்படுகின்றன. முஹமதின் காலத்திலே பதவிச் சண்டை படுஜோராய் நடந்தது.முஹமதின் குடும்பமே அழிக்கப்பட்டது. இரத்தக்களறிதானே.சகோதரச் சண்டைதானே. அதனால்தான் ஷியா என்றும் பல பலவாய் ஷியாக்களில்பல பிரிவுகள் எனறும் பிரிந்து போகின்றது.அதில் நவீனமானது அஹமதிய்யா இயக்கம். அந்த இயக்கம் ஹிகாத் என்பது வாள் என்பது பழைய கதை.பேனைா மற்றும் மனக்கட்டுப்பாடு சுய ஒழுக்கம் என்று மடைமாற்றி புதிய விளக்கம் அளிக்கின்றாா். தன்னை சிறிய நபி என்றும் முகம்மதை பெரிய நபிஎன்றும் குறிப்பிடுகின்றாா். இயசு சிலுவையில் சாகவில்லை.காஷமீரில் வாழ்ந்து இறந்தாா் என்று அறிவித்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணா் இந்தியாவில் தோன்றிய நபி என்று இவா் ஒருவர்தான் -முஸ்லீம்களில் இவா் ஒருவா்தான்- அறிவித்துள்ளாா். ஆனாலும் இவரும் அரேபிய வல்லாதிக்க அடிமைதான். மேலும் இவா் குறித்த விபரங்கள் எனக்கு தெரியாது. அஹிலே குரான் என்ற அமைப்பு தமிிழ்நாட்டில் உள்ளது.இவர்கள் குரானை மட்டும் ஏற்பார்கள்.சுன்னா ஹதீஸ் கள் குப்பை என்று நிராகரித்து வாழும் முஸ்லீம்கள் என்று அறிந்தேன். தங்கள் முயற்றி வெற்றியடையட்டும். அரேபிய அடிமைத்தனம் ஒழியட்டும்.
மீண்டும் சொல்கின்றேன். முகம்மதின் மீது நம்பிக்கை குறையும் போது புதிய தலைவா்களை வழிகாட்டிகளை நோக்கி மனம் செல்லும்.அப்போது ஜமாத் பிளவு பட்டுப்போகின்றது. முஸ்லீம்களில் 100 கணககில் பிளவுகள் உள்ளது.அனைத்திற்கும் காரணம் முகம்மதின் மீது உள்ள அவநம்பிக்கைதான்.ஆனால் ரசுல் அது இது என்று வெளிவேசத்திற்கு பேசிக்கொள்வார்கள்.நடைமுறையில் முகம்மதைவிட வேறு ஒரு பெரியவரை மனதிற்குள் முன்னிலைப்படுத்துவார்கள். இசுலாமிய சமூகத்தில் இந்த பிளவுகள் தறுதலைதனமாகப் பார்க்கப்படுகின்றது. இது தவறு.
புதிய சிந்தனைகள் வரவேண்டும். சுவாமி விவகானந்தா் தெளிவாக உறுதியாகவும் தெரிவிக்கின்றாா் ” புதிய அமைப்புகள் உருவாக வேண்டும்.அவை முந்தைய அமைப்பில் இருந்த குறைகளுக்கு தீா்வுகாணும். இப்படி புதிய புதிய ஜமாத்கள் சமூக ஆன்மீக அமைப்புகள் தோன்ற வேண்டும்.அப்போதுதான் முழுமையான வளா்ச்சி ஏற்படும் என்கிறாா்.
என்ன சுவனப்பிரியன் தலை சுற்றுகிறதா ? சுவாமி விவேகானந்தரைப் போன்றுஅறிவாற்றல் மிக்க தலைவா் ஒருவா் கூட இசுலாத்தில் பிறக்கவில்லையா ? இப்படி பிளவுகளைக் கூட வளா்ச்சியின் அடையாளமாக காணும் பக்குவம் இருந்திருந்தால் சுன்னி-ஷியா -அகமதி சண்டை நடந்திருக்காதே.ஈராக்-ஈரான் போர்நடந்திருக்காதே. லட்சக்கணக்கில் மனித உயா்கள் முஸ்லீம்கள் செத்து இருக்காதே. இன்றும் கூட சுன்னி-ஷியா வேறுபாடுகள் இரத்தக்களறிக்கும் போருக்கும் காரணமாக இருக்கின்றதே.. வருத்தமாக இருக்கின்றதா.
அடிப்படையில் இசுலாமிய சமூகம் ஒரு சர்வாதிகார சமூகம். ஒரு மனிதனை .முகம்மதுவிற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற அரேபிய வல்லாதிக்கம் பெரும் அழிவற்கு நேற்றும் இன்றும் நாளையும் காரணமாக இருக்கும்.
யேமனில் நடக்கும் போருக்கு காரணம் என்ன ? ஷியா சன்னி பரஸ்பர வெறுப்பு தான் அடிப்படையா ?
இன்று தினமணியில் உள்ள கட்டுரையை காப்பி பேஸ்ட எடுத்தேன் பதிவாகவில்லை. தாங்கள் அதை வெளியிடக் கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment