
உபியின் லக்னோவில் உள்ள பெஹ்ராயிச் நகரில் விஹெச் பியின் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சாத்வி பிராச்சி என்ற இந்து மத துறவி பேசியதாவது...
''பாரத் மாதா கீ ஜே' 'வந்தே மாதரம்' என்று சொல்லாதவர்கள், மாடு அறுப்பவர்கள், போன்றோர் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமையில்லை.
காந்தியின் அஹிம்சை போராட்டத்தால் இந்த நாட்டுக்கு சதந்திரம் கிடைத்து விடவில்லை. வீர சவர்க்கார் போன்ற வீர்ர்களின் முயற்சியால்தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற வேண்டும். இரண்டுக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு அரசு உதவிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.' என்று பேசியுள்ளார்.
மதவெறியை தூண்டும் இந்த சாமியாரின் பேச்சால் மேலும் சர்ச்சை வெடித்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள எவரும் இது போன்ற தீவிரவாத பேச்சுக்களை வெறுப்பர். இது தொடர்ந்தால் நாட்டின் முன்னேற்றம் வரலாறு காணாத அளவில் சரியும். அது பற்றி இவர்களுக்கு கவலையில்லை. இவர்களுக்கு தேவை வர்ணாசிரம தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்: பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்: பசு வதை தடை சட்டம் அமுலாக்கப்பட வேண்டும்: இதற்காக எத்தனை உயிர்களையும் கொல்வோம் என்று இந்த இந்துத்வா படை கிளம்பியுள்ளது.
இன்னும் என்னவெல்லாம் கூத்துக்கள் அரங்கேறப் போகின்றன. பொறுத்திருந்து பார்போம்.
தகவல் உதவி
ஜீநியூஸ்
18-03-2015
http://zeenews.india.com/news/india/vhp-leader-sadhvi-prachi-stokes-fresh-controversy-says-mahatma-gandhi-was-a-british-agent_1563396.html
No comments:
Post a Comment