திரு கிருஷ்ணன்!
//என்ன ஒரு கதைடா சாமி! இந்து மதம் உங்கள் போல் அரசியல் கட்சி மதம் அல்ல என்னிடம் வந்தால் சொர்க்கம் கிடைக்கும்னு சொல்லுவதற்கு. எங்கள் மதம் சுதந்திரமானது. அடிமைபடுத்தவில்லை எங்களை//
உங்கள் மதக் கருத்துக்களைப் பற்றி நீங்களே இன்னும் அறியாமல் அறியாமையில் இருப்பது எனது குற்றம் அல்ல. கீழே நான் கொடுத்துள்ள வசனங்கள் இந்து மத வசனங்களே! படித்து தெளிவு பெறுங்கள்.
ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்
சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்
யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 - ரிக் வேதம்
உலகில் தவறு செய்பவனுக்கு இறப்புக்குப் பிறகு இந்து மதம் கொடுக்கும் தண்டனை.
நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.
- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்
ஆகவே இஸ்லாம் கூறுவது போல் இறைவன் வகுத்தளித்த சட்ட திட்டங்களின் படி வாழச் சொல்லித்தான் இந்து மதமும் உங்களை ஏவுகிறது. மேலும் ஆதாரங்கள் கேட்டால் தருகிறேன்.
அந்நியன் படத்தில் இந்து மதம் எவ்வளவு கொடூரமான தண்டனைகளை இறப்புக்குப் பிறகு இந்துக்களுக்கு தர இருக்கிறது என்பதை சங்கர் பட்டியலிட்டுருப்பார். சந்தேகம் இருந்தால் அந்த படத்தை ஒரு முறை பாருங்கள். ;-)
1 comment:
அற்புதம் சுவனப்ரியர், பார்த்தீங்களா, எங்க மதத்திலேயே எல்லாம் இருக்கு. உங்க மதம் சொல்றதுக்கு முன்னாடியே எல்லாம் எங்க மதத்திலயும் சொல்லிருக்கு. யார் கண்டது திருவாளர் முகமது இதில் இருந்து கூட காப்பி அடித்திருக்கலாம். எனவே உங்க பிராடு மதத்தை உங்களுடனே வைத்து கொள்ளுங்கள்.
Post a Comment