Followers

Thursday, March 12, 2015

தெரு விளக்குகளை உடைத்த கேரள பெண்கள்!



கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரி முதல்வராக இருந்த சமயம் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.

ஒரு கிராமத்தில் ஆண்கள் அனைவரும் கூடிப்பேசி தெருவிளக்குகள் அமைத்தார்கள். அன்றிரவே அந்தக் கிராமத்து பெண்கள் அந்த விளக்குகளை உடைத்தெறிந்தார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரவில் வெளிச்சம் அதிகம் இருந்தால் பெண்களால் தங்களின் இயற்கைத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாதென்பதால்தான் தெருவிளக்குகளை உடைத்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட இ.எம்.எஸ். அந்தக் கிராம சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உங்கள் கிராமத்தில் முதலில் கட்டப்பட வேண்டியது கழிப்பிடம்தான். சபையில் ஆண்கள் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுப்பதால் நம்மால் பெண்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் ஆண்களின் சபையாக சமூகத்தை வைத்திருக்கிறோம். எனவே அடுத்தக் கூட்டத்தில் இருந்து பெண்களையும் கலந்து பேசுங்கள். அவளால் தான் அவளது தேவைகளைப் பேச முடியும்’ என்று எழுதினார்.

இந்த சம்பவத்திலிருந்து நமக்கு தெரிவது இந்த நாட்டுக்கு தற்போது சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் தேவையில்லை. நம் நாட்டு பெண்களுக்கு முறையான கழிப்பிட வசதிதான் முதல் தேவை. . இந்து மத காவலராக தன்னைக் காட்டிக் கொள்ளும் நரேந்திர மோடி முதலில் கழிவறைகள் நாடு முழுக்க இலவசமாக கட்டிக் கொடுக்க முன் வரட்டும். பெண்களின் பிரச்னையை புரிந்து கொள்ளட்டும்.

No comments: