
நீங்கள் அறியாத வாகனங்களையும் படைக்க இருக்கிறான்!
சென்னி மலை!
//அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன. குரான் 42:33
இந்த நவின காலத்தில் 150கிலோ மீட்டர் வேகத்தில் எதிர் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் அளவுக்கு போர்க்கப்பல்களும், ரேசர் கப்பல்களும் (RACER BOAT) கண்டுபிடிக்கப்பட்டூவிட்டன.
முகமது வாழ்ந்த காலத்தில் இருந்த பாய்மர கப்பல்களுக்கு வேண்டுமேயானால் மேலே சொல்லப்பட்ட வசனம் செட்டாகலாம். ஆனால் நம் காலத்துக்கு செட்டாகாது.//
குர்ஆனை நீங்கள் முழுவதுமாக படித்திருந்தால் இந்த சந்தேகம் வந்திருக்காது. நுனிப் புல் மேய்ந்தால் இது போன்ற சந்தேகங்கள் வருவது இயல்பே.
இறைவன் குர்ஆனிலே மற்றொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள்.
"இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்" (அல் குர்ஆன் 16:8)
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நபி அவர்களின் காலத்தில் இருந்த குதிரைகள், கோவேறு கழுதைககள் மற்றும் கழுதைகளை வாகனங்களாக படைத்திருப்பதாக் கூறியதோடு இன்னும் நீங்கள் அறியாத வாகனங்களைப் படைத்திருப்பதாக கூறுகிறான். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் இன்று நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் கார், விமானம் போன்ற வாகனங்களை மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பிற வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளான் என்பதாகும்.
அன்றைய மக்கள் பாய் மரக் கப்பலில் தான் கடலில் பயணம் செய்தனர். மோட்டார் படகுகளையோ நவீன கப்பல்களையோ அவர்கள் அறிந்திருக்க வில்லை. அவர்களின் அன்றைய வாகனம் எதுவோ அதனை வைத்துதான் அறிவுரை கூற முடியும். மற்ற சில வசனங்களில் 'நீங்கள் அறியாத வாகனங்களையும் நாம் படைப்போம்' என்று கூறுவதிலிருந்து குர்ஆன் கூறுவது அன்றைய பாய்மரக் கப்பல்களையே! குர்ஆனின் ஒரு பகுதியை மட்டும் வாசித்து விட்டு மற்ற பகுதியை விடுபவன் இஸ்லாமியனாக இருக்க மாட்டான்.
எனவே நாங்கள் தெளிவோடுதான் இருக்கிறோம். எங்களைப் பற்றி கவலைபடுவதை விடுத்து 'கோவில் நுழைவு போராட்டம்” எப்போது நடத்தப் போகிறீர்கள்? உங்கள் வாரிசுகளாவது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கோவிலுக்குள் பிரவேசிக்கட்டும். அதற்கு ஆவண செய்ய முயலுங்கள்..
No comments:
Post a Comment