

சில மதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பெஷாவரில் பள்ளிக் குழந்தைகளை குறி வைத்து துப்பாக்கி சூடு நடந்தது ஞாபகமிருக்கலாம். இதில் 134 குழந்தைகள் இறந்தனர். உலகையே பதற வைத்தது இந்த நிகழ்வு. வழக்கமாக இஸ்லாமிய தோற்றத்தில் ஒரு சில பாதகர்கள் இந்த செயலை நிகழ்த்தினர். துப்பாக்கி சூடு நடத்திய ஒருவனை சுட்டுக் கொன்றது ராணுவம். அவனது உடல் முழுக்க பச்சை குத்தப்பட்டிருந்தது. அவன் ஒரு ஐரோப்பியன் என்பது தெரிய வந்தது. இந்த கொலைகாரர்களை அனுப்பியதன் நோக்கம் இஸ்லாத்தின் மேல் வெறுப்பை உண்டு பண்ண வெண்டும் என்பதே! எனவே தான் எங்கு இது போன்ற துப்பாக்கிச் சூடு நடந்தாலும் அதனை செய்பவர்கள் 'அல்லாஹு அக்பர்' என்று குரல் கொடுத்துக் கொண்டு செய்வார்கள். அவனுக்கும் இஸ்லாத்துக்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். நமது மீடியாக்களும் அதற்கு கண் காது மூக்கு வைத்து மிக சிறப்பாக கதை வசனம் எழுதி காசு பார்த்து விடும்.
ஆனால் கொலைகார்களின் எண்ணத்தில் மண்ணைப் போடும் விதமாக குழந்தைகளை இழந்த பெற்றோர் தற்போது இறை இல்லத்தில் தங்கள் பாரங்களை இறக்கி வைக்க ஜெத்தா வந்துள்ளனர். மொத்தமாக 910 நபர்கள் உம்ரா செய்வதற்காக சிறு சிறு குழுக்களாக வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான முழு செலவுகளையும் பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.
உம்ரா பயணத்தில் இருந்த ஒரு பெற்றோர் 'நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காகவும் பாகிஸ்தான் மற்றும் உலகில் உள்ள குழந்தைகளின் நலனுக்காகவும் பிரார்த்திக்க வந்துள்ளோம். இறைவனிடம் முறையிட்டு எங்கள் பாரங்களை இறக்கி வைக்க வந்துள்ளோம்' என்றனர்.
எதிரிகள் எத்தனை திட்டங்களை தீட்டி இஸ்லாமிய மார்க்கத்தை களங்கப்படுத்த நினைத்தாலும் அதில் வெற்றி பெறப் போவதில்லை. நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதை இனி உணர்ந்து கொள்வார்கள்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
08-03-2015
No comments:
Post a Comment