Followers

Wednesday, March 11, 2015

ஏகலைவன் வரலாற்றை நாம் கொஞ்சம் கேட்போமா?



சென்ற ஒரு வாரத்துக்கு முன்பு சாதி மாறி திருமணம் முடித்தாள் என்பதற்காக தனது பெற்ற மகளையே ஒரு தகப்பன் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றதை பத்திரிக்கைகளில் படித்தோம். இதற்கு கௌரவக் கொலை என்று பெயரும் வைத்துள்ளனர். இந்த சாதி வெறி இவர்கள் மனதில் எப்படி உருவானது. 20 வயது வரை போற்றி போற்றி வளர்த்த தனது மகளை வெட்டிப் போட எப்படி மனது வந்தது?

காலகாலமாக நமது தமிழ் புராணங்களும், இதிகாசங்களும், வேதங்களும் சாதியை முன்னிறுத்தியே புனிதம் என்ற பெயரில் அரங்கேற்றி வந்தது. கடவுளே அனுமதி கொடுத்திருப்பதால் வழி வழியாக இந்த சாதி வெறியானது நமது மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது.

இன்று இந்து மதத்துக்கு வக்காலத்து வாங்கி வரும் பிற்படுத்தப்பட்ட மக்களான சென்னி மலை, ராம் நிவாஸ் போன்ற நண்பர்கள் இந்த வரலாறை படித்திருப்பார்கள். என்னதான் கொடுமையை அனுபவித்தாலும் அதனை சகித்துக் கொண்டு தான் வாழும் இந்து மதத்தை விட்டுக் கொடுக்காமல் பேசி வரும் இவர்களின் குணம் நாம் வரலாறுகளில் படித்த ஏகலைவன் குணமே! அது அவர்களின் இயல்பு. காலா காலமாக ஒரு குறிப்பிட்ட மேல் சாதியினர் ஆதிக்கம் செலுத்த என்றுமே உறுதுணையாக இருப்பவர்கள் இந்த பிற்படுத்தப்பட்ட மக்கள். இந்த எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு பல வரலாறுகளில் ஒன்றான ஏகலைவன் வரலாற்றை சற்று படித்துப் பார்போம்.

-----------------------------------------

வேட்டுவர் குலத்தைச் சார்ந்த ஏகலைவனுக்கு வில் வித்தை கற்றுக் கொள்ள ஆசை ஏற்படுகிறது. வில் வித்தை கற்ற துரோணாச்சாரியாரிடம் செல்கிறான் ஏகலைவன்.

“நீ என்ன குலம்? என்ன ஜாதி?” என்று வில்வித்தை கற்க வந்த ஏகலைவனைப் பார்த்து துரோணாச்சாரி கேட்கின்றார்.

“நான் வேட்டுவர் குலம். நான் வேடன்” என்று சொன்னவுடனே,

"அப்படியா? உனக்கு தனுஷ் வித்யா என்று சொல்லக்கூடிய இந்த வில்வித்தையை நான் கற்றுத்தரமாட்டேன்” என்று சொல்லுகிறார்.


“வர்ணாஸ்ரம தர்மப்படி கல்வி என்கின்ற அந்த வில்வத்தையை கற்றுக்கொள்ள உனக்கு அந்த உரிமை கிடையாது. எனவே நீ அதை நினைக்கக் கூடாது, உன்னை நான் சேர்த்துக்கொள்ளக் கூடாது” என்று அனுப்பிவிடுகிறார்.

எப்பொழுதோ நடந்த சம்பவம் அதை இருவரும் மறந்து விடுகின்றார்கள். பின்னால் காட்டிலே துரோணாச்சாரி அவர்கள் சென்று கொண்டிருக்கின்ற நேரத்திலே திடீர் என்று அப்பொழுதுதான் நாய் குரைக்கிறது. குரைக்கின்ற நாயின் சத்தத்தைக் கேட்டே அம்பு விழுகிறது அந்த நாயின் வாய் இரண்டாகப் பிளந்து விடுகின்றது.

“அந்த வில்வித்தை வீரன் யார்? ஒலியை வைத்து இவ்வளவு துல்லியமாக அடிக்கக் கூடிய ஆற்றல் படைத்த வில் வித்தை வீரன் யாராக இருக்க முடியும்? அர்ஜூனன் தானே வில் வித்தைக்கே புகழ் பெற்றவன் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி அம்பு எய்தியது யார்?” என்று கேட்டு ஒரு சத்தம் கொடுக்கிறார் துரோணாச்சாரி.

உடனே ஒரு வேடன் வந்து அவர் காலிலே விழுந்து வணங்கி, “குருதேவ! நான் தான் அம்பை எய்து அந்த நாயைக் கொன்றவன்.” என்று சொல்லுகின்றார்.

இப்படிச் சொன்னவுடனே “அப்படியா? நீ யார் சொல். இந்த வில்வித்தை அர்ஜூனனுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால், இங்கு நீ அதைவிட திறமையாகச் செய்திருக்கிறாயே, உனக்கு எப்படி இந்தத் திறமை வந்தது” என்று துரோணாச்சாரி கேட்கிறார்.


“யார் உனக்கு குரு? யார் உனக்கு சொல்லிக்கொடுத்தது?” என்று கேட்கிறார் அப்பொழுது மிகுந்த அடக்கத்தோடு ஏகலைவன் சொல்லுகிறார்.

(ஏனென்றால், நாமெல்லாம் இந்த ஏகலைவன் பட்டியலிலே இருக்கக்கூடியவர்கள். இன்று இந்து மதத்துக்கு தோள் கொடுக்கும் சென்னி மலை, ராம் நிவாஸ் மற்றும் என்னைப் போன்ற மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாறு. ஏகலைவன்கள் எவ்வளவு அடக்கமாக இருப்பார்கள் எவ்வளவு நன்றியோடு இருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். :-))

“ நீ எனக்கு மாணவன் என்று சொல்லுகின்றாய் உன்னை ஒரு நாளும் பார்த்ததில்லையே” என்று கேட்கின்றார் துரோணாச்சாரி.

நடந்ததை ஏகலைவன் சொல்லுகின்றார். “வில்வித்தை கற்க நான் வந்தபொழுது அதை ஏற்க மாட்டேன் என்று சொன்னீர்கள். பிறகு உங்களைப் போலவே மண்ணாலே ஒரு உருவம் செய்து தினசரி நான் பயிற்சி செய்து அதிலேயே நான் இந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டேன்” என்று சொல்லுகின்றார்.

இதைக் கேள்விப்பட்டவுடன் அந்த குருநாதர் தன்னுடைய மாணவனை எவ்வளவு பாராட்ட வேண்டும்? அவன் உண்மையான நல்லாசிரியராக இருந்திருந்தால் தட்டிக் கொடுத்து “நான் இல்லாமலேயே என்னைப் போல் இவ்வளவு அருமையாக செய்திருக்கிறாயே. நீ அல்லவா என்னுடைய தலைசிறந்த மாணாக்கன்” என்று சொல்லித் தட்டிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தட்டிக்கொடுப்பதற்கு துரோணாச்சாரிக்கு அந்த எண்ணம் வரவில்லை. உடனே அவர் என்ன செய்கிறார்? சிரித்துக்கொண்டே ரொம்ப அமைதியாக

“அப்படியா? நீ குரு தட்சணை கொடுக்க வேண்டுமே” என்று சொல்லுகின்றார்.

ஏகலைவன் இனமோ ஏமாந்தே பழக்கப்பட்ட இனம். நன்றியுணர்ச்சியினுடைய அடிப்படையிலே ஏகலைவன் சொல்லுகின்றார்.

“குருதேவ! நீங்கள் எதைக் காணிக்கையாக கேட்டாலும் அதை நான் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லுகிறான்.

உடனே துரோணாச்சாரி “எதைக் கேட்டாலும் கொடுப்பாயா?” என்று கேட்கின்றார்.

“நீங்கள் கேட்கும் பொழுது குரு தட்சணையை நான் மறுப்பேனா?” என்று சொல்லுகின்றார்.

''என்ன தருகிறாய்?''

''என் உயிரை வேண்டுமானாலும்''

''உன் உயிர் வேண்டாம். உன்னுடைய வலது கை கட்டைவிரல் வெட்டித்தா. அதுவே காணிக்கை...''

கண்ணீர் விடுகிறான், ஏகலைவன். கலங்கித் தவிக்கிறான். மருகி மன்றாடுகிறான். கட்டைவிரல் இல்லாவிட்டால் அம்பைப்பற்றிப் பிடிக்கமுடியாது. வில்லைக் கையாளமுடியாது.

வர்ணாசிரமத்தின் கோர ரூபம் அவன் முன்னால் நின்றது. துரோணோச்சாரியாருக்கோ பாவத்தைக் கழுவுகிற யத்தனிப்பு. அவனுக்கோ வாழ்வுரிமையைப் பறிகொடுக்க இருக்கிற பதைப்பு. பரிதவிப்பு.

முடிவில் தனது கட்டை விரலை ஏகலைவன் வெட்டிக் கொடுத்தான். (இந்த இனம் காலம் காலமாக ஏமாந்த இனம் என்பதற்கு அடையாளமே அது தான்.)


துரோணாச்சாரியும் பெற்றுக்கொள்கின்றார். அதற்குப் பிறகு ஏகலைவன் சிறந்த வில்வித்தை வீரன் வில்லைத் தொடவில்லை.

துரோணர்களும், பஞ்சபாண்டவர்களும், கௌரவர்களும் சோற்றில் கை வைத்து உண்ணுகிறார்கள் என்றால், அந்த உணவு உற்பத்திக்காக சேற்றில் கால்வைத்துப் புதைகிற வியர்வை மனிதர்கள்... உழைப்பாளி மக்கள். சகலத்தையும் உற்பத்தி செய்கிற வியர்வை மனிதர்கள்.

காலா காலமாக தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்டு வருவதன் சூட்சுமம் இது போன்ற வரலாறுகள்தான். இது ஆழமாக உள் மனதில் பதிந்து விட்டதனால்தான் பார்பனர்களுக்கும் வர்ணாசிரமம் ஒரு பாவம் என்று விளங்குவதில்லை. அடிமையாக இருப்பதுதான் நம் தலையில் எழுதப்பட்ட விதி என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் ஒரு பொதுப் புத்திக்கு வந்து விட்டதால் இது ஒரு கொடுமையாகவே அவர்களுக்கு தெரிவதில்லை.

வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம். சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை.
(மனு தர்மம் 10:276)

பிராமண, சத்திரிய, வைசியர்க்கு ஒருவரில்லாவிடில் அடுத்தவருக்குத் தொண்டு புரிவதே சூத்திரருக்குத் தர்மம் ஆகும்.
(மனுதர்மம் 10:277)

பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும்.
(மனு தர்மம் 3:23)


சென்னி மலை ஆதாரங்களைத் தாருங்கள் விவாதிப்போம் என்று கேட்டதாலேயே இந்த பதிவை பகிர்கிறேன்.

இனி ராமாயணத்தில் வரக் கூடிய இன ஒதுக்கலைப் பற்றி வரக் கூடிய பதிவுகளில் பார்போம்.





1 comment:

suvanappiriyan said...

கள்ள நோட்டு மாற்றிய தம்பதி கைது!

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற வந்த வில்லியனூரை சேர்ந்த தம்பதி அய்யப்பன், கலைவாணி ஆகியோர் பிடிப்பட்டனர். வங்கி மேலாளர் சீனிவாசன் அளித்த புகாரை அடுத்து, பெரிய கடை போலீசார் தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் கள்ளநோட்டை கொடுத்தனுப்பிய ஜோதி என்பவரும் சிக்கினார். இதில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த வாலிபர் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

தினமலர்
12-03-2015