Followers

Friday, March 20, 2015

புரோட்டீன்களும் பரிணாமவியலின் அறியாமையும்!

நம உடலில் உள்ள அல்புமீன் என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை கொண்டவை.. நமது உடலில் உள்ள கொழுப்பு, கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள், சர்க்கரை போன்ற அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இந்த புரோட்டீன்கள் மிகவும் உதவுகிறது. நமது உடலின் ரத்தக் குழாய்கள் மூலமாக பயணித்து லிவரிலிருந்து சத்துக்களை பிரித்து கொடுத்து எந்த பொருளுக்கு எத்தனை சதவீதம் தேவை என்பதை தீர்மானித்து தனது வேலையை கச்சிதமாக செய்கிறது. இதில் எந்த தவறும் ஏற்படாமல் எந்த குழப்பமும் இல்லாமல் தனது வேலையை செய்வதை பார்த்து உயிரியல் வல்லுனர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.


(கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள புரதம்)

நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் இந்த புரோட்டீன்கள் சிறந்த சேவையாற்றுகிறது. ஒரு கட்டிடத்திற்கு செங்கல் எவ்வளவு அவசியமோ அதுபோல் நமது உடலுக்கு அல்புமீன் புரோட்டீன்களின் பங்கு மிக அவசியமாகிறது. சிறு நீரகத்தை எடுத்துக் கொண்டால் அங்கு இந்த புரோட்டீன் எந்த நேரமும் தங்குவதில்லை. எப்பொழுதெல்லாம் சிறு நீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் உடன் ஓடி வந்து பிரச்னையை தீர்த்து வைத்து சீராக செய்ல்பட வைப்பதில் இதன் பங்கு முக்கியமானது. இந்த புரோட்டீன்கள் செடிகொடிகளின் விதைகளிலேயும் உள்ளன. ஒரு கோழி முட்டையின் வெள்ளைக் கருவிலும் உள்ளது அல்புமின் என்ற புரதம் . இதன் பலனை உணர்ந்த பலர் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதைப் பார்ததிருக்கிறோம். இந்த புரதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இதன் செயலைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். நாம் கேட்பது இந்த புரோட்டீனுக்கு இத்தகைய அறிவை கொடுத்து அதனை வேலை வாங்குவது யார்?

ஒரு உயிரி மற்றொரு உயிராக பரிணாமம் அடைந்தால் முக்கியமாக இந்த புரோட்டீனின் அளவும் கூடவோ அல்லது குறைவாகவோ பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். இது பற்றி பரிணாமவியலார் எந்த தகவலும் அளிக்கவில்லை. இது பற்றி டார்வின் அறிந்திருக்கவுமில்லை.

மற்றொரு அதிசயத்தையும் பார்ப்போம். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இரைப் பைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள சுரப்பிகளால் நாம் சாப்பிடும் பிரியாணி, மாட்டு கறி, என்று எதையெல்லாம் உள்ளே தள்ளுகிறோமோ அத்தனையையும் கரைத்து உடலுக்கு சக்தியாகவும் தேவையற்றவைகளை மலமாகவும் கொல்லைப் புறம் அனுப்பி விடுகிறது. இவை அனைத்து வேலைகளும் நாம் சாப்பிடும் உணவை விட மிருதுவான இரைப் பையில் நடக்கிறது. கடினமான உணவுகளையே கரைத்து விடும் இரைப் பை பழுதாகாமல் இருப்பதற்கான சூட்சுமம் என்ன? ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம் இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் நிகழ்வதில்லை?



ஏனென்றால் அந்த இரைப்பையின் சுவர்களில் ம்யூகோஸா என்ற பெயருடைய வழவழப்பான பூச்சு பூசப்பட்டுள்ளது. சாராயம் இதன் எதிரி. நம் குடிமகன்கள் அளவுக்கு மீறி சாராயத்தை உள்ளே தள்ளுவதால் இந்த ம்யூகோஸா என்ற பொருள் கரைந்து வெளியேறி ம்யூகோஸாவின் அளவு குறைந்து விடுகிறது. இதன் பிறகுதான் குடிகாரர்களுக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பமாகிறது. பல உயிரினத்திற்கும் இந்த பொருளின் அளவு மாறுபட வேண்டும். ஏனெனில் யானையின் செரிமானத்துக்கும் சிங்கத்தின் செரிமானத்துக்கும் குரங்கின் செரிமானத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ம்யூகோஸா என்ற பொருளின் அளவு உயிரினத்தின் செரிமாணத்துக்கு ஏற்ப மாறுபட்டால்தான் அந்த உயிரால் உயிர்வாழ முடியும். பரிணாமம் இஙகிருந்து தொடங்க வேண்டும். இதற்கு எந்த ஆய்வாவது செய்து சமர்ப்பித்துள்ளார்களா என்றால் எதுவும் இல்லை. இந்த இரைப்பையின் உள்ளே ம்யூகோஷா என்ற பொருளை அளந்து அமைத்தவன் யார்? அறிவியல் அறிஞர்களால் இன்று வரை இதற்கான காரணத்தை பெற முடியவில்லை.

அல்புமீனைப் பற்றியும், ம்யூகோஸாவைப் பற்றியும் டார்வின் தனது பரிணாம கொள்கையில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. பரிணாமம் நடை பெற முதலில் டிஎன்ஏ, குரோமசோம்கள், புரோட்டீன்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். இந்த புரோட்டீன்களின் அவசியத்துக்கு காரணத்தை கண்டு பிடிக்காமல் வெளித்தோற்றத்தை வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்ததையும் மானிலிருந்து ஒட்டகம் வந்ததையும் தனது கற்பனைத் திறனால் பலரை நம்ப வைத்து விட்டார் டார்வின்.

http://en.wikipedia.org/wiki/Gastric_mucosa
http://www.buzzle.com/articles/albumin-in-urine.html
http://www.albumin.org/
http://en.wikipedia.org/wiki/Albumin

No comments: