


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பர்கிட் கிளை சார்பாக 22-02-2015 அன்று தெருக்களை சுத்தமாக்கும் பணி தொடங்கியது. பல இளைஞர்களும் முன் வந்து தெருக்களை சுத்தம் செய்தனர். தேவையற்ற புற்களும், குப்பைகளும் அகற்றப்பட்டன.
எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறிக் கொண்டு இருக்காமல் இளைஞர்கள் செயலில் இறங்கியது பாராட்டப்பட வேண்டியது. ஊர்களில் கழிவு நீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் உற்பத்தி ஆவதால் பாதிப்பு நமக்குதானே! அரசியல்வாதிகள் யாரும் மக்கள் பணி ஆற்றுவதற்காக வருவதில்லை. தேர்தலில் போட்ட முதலை வட்டியும் முதலுமாக எப்படி சேர்பது என்றுதான் சிந்திப்பார்கள். எனவே அரசு செய்யும் என்று இனியும் தாமதிக்காமல் பர்கிட் மாநகரக் கிளை செய்தது போல் ஒவ்வொரு தமிழக கிராமமும் செயலில் இறங்க வேண்டும்.
மூடப் பழக்கத்தை எதிர்ப்பது மட்டும் ஏகத்துவ வாதிகளின் பணியல்ல. சுத்தத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் செல்வதும் ஒரு ஏகத்துவவாதியின் பணி என்பதை நிரூபித்த இளைஞர்களுக்கு ஒரு சலாம்! கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்து நேரத்தை ஓட்டிய இளைஞர்கள் இன்று பொது நலப் பணியில் ஆர்வம் காட்டுவதற்கு மற்றொரு சலாம்!
No comments:
Post a Comment