Followers

Tuesday, March 10, 2015

நெகிழ வைத்த நிகழ்வு - இந்து மத நன்மக்கள்

நெகிழ வைத்த நிகழ்வு - இந்து மத நன்மக்கள்

முகநூலில் ஒரு இந்து நண்பர் பதிந்த பதிவும், அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும்....

நான் எனது பள்ளிப்படிப்பை பழனி அருகில் உள்ள கீரனூர் எனும் அழகிய ஊரில் படித்தேன். கிட்டத்தட்ட பாதிக்கு மேல் என் பள்ளித்தோழர்கள் இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்தவர்கள். லுங்கி அணிந்தே பள்ளிக்கூடம் வருவதும் ஒரு சில சமயங்களில் அனுமதிக்கப்பட்டே இருக்கும். பிஸ்மில்லாஹிரஹ்மானிரஹீம் என்று பள்ளியில் என் நண்பன் பஜ்ஜுலூர் ரஹ்மான் மைக்கில் ஓதுவான். இன்னொரு நண்பன் இஸ்மாயில் பள்ளிக்கூட பாட்டுப்போட்டியில் முதலிடம் வாங்குவான் . . . இன்றும் அவனது நாகூர் ஹனீபா குரலில் பாடும் . . . "பாங்கோசை கேட்டபின்பும்... பள்ளி செல்ல மனம் வல்லையோ . . .. படைத்தவன் நினைவில்லையோ" பாடல் ஒலிக்கிறது !

அப்போதே இரண்டு பிரிவுகள் . . .. ஒன்று நாகூர் அனீபா பாட்டுக்கச்சேரி நடத்தும் திமுக சார்பு அணி . . . இன்னொன்று சேக்முகமது (என்று ஞாபகம்) அவர்களை அழைத்து கச்சேரிகள் நடத்தும் ஏடிஎம்கே அணி. அன்றெல்லாம் பாய்மார்கள் எல்லாம் மாமன் மச்சான் உறவோடு பழகிய காலம் !

கோவையில் இனமோதல்களை பார்த்தபோது எனக்கு ஒன்றுமே விளங்கியதில்லை . . .. புரிபடவும் இல்லை. உள்ளூர் கலாச்சாரங்களை உலக கலாச்சாரங்கள் முழுங்கியபோதுதான் பிரச்சினைகள் ஏற்பட்டது என்று மட்டும் கொஞ்சம் புரிந்தது. ஆனாலும் லைலத்துல் கத்ர் அன்று காலை கூட உணவு உண்ணாமல் பல ஆண்டுகள் நோம்பு இருந்தேன். காந்திபுரம் வாட்ச் பாய் ஷனாவுல்லா உடன். உண்மையில் ரமலான் அவர்களுக்கு ஒரு இறையுணர்வுடன் கூடிய ஒரு புனித காலம் என்பது மட்டும் எனக்கும் அவர்களோடு பழகியதில் புரிந்தது. அவரவர்கள் வழியில் பயணிக்காமல் அடுத்தவர்களின் வழியை குறைசொல்ல தொடங்கும்போதுதான் மார்க்கங்கள் மரணங்களில் முடிகின்றன. எனக்கு தக்கலையில் ஒரு முதியவர் ஒருவர் நண்பராக இருந்தார். அவர் சொல்வார் . . . "நான் என் அளவுக்கு அல்லாவுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறேன் என்பதை மட்டுமே பார்க்கிறேன் தம்பி. மற்றவர்களின் தீர்ப்பை அல்லாதான் முடிவு செய்வார் .. அதில் எனக்கு ஒரு பங்கும் இல்லை" என்று சொல்லுவார். அனைவருக்கும் ஷியா, சன்னி என்ற இரு பிரிவுகள் மட்டுமே தெரிந்திருக்கும்போது எனக்கு இன்னொரு பிரிவான இபாதி இசுலாம் பற்றியும் படித்து வந்திருக்கிறேன். இன்றும் அவ்வப்போது நபிகளின் போதனைகளை படிப்பதும் உண்டு.

அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் !

-ஓசை செல்லா

----------------------------------------

Alangiam pallivasalil dhinandhorum kalai 5.45 paadum baangosai engalukku puthunarvu tharum ......

-Shanmuga Sundar

----------------------------------------

நான் சென்னை பாரிமுனைக்கு அருகே ஒரு கான்வென்ட் இல் lkg. -2nd STD படித்து போது, என் அம்மா வேறொரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார் .அவர் வீடு திரும்பும் முன்னரே நாங்கள் வந்துவிடுவோம் ஆகையால் நானும் என் அக்காவும் என் தோழி தமீம் பாத்திமா வீட்டில் தான் காத்துக்கொண்டிருப்போம்.... அவர்கள் வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும... அவர்கள் வீட்டில் நான் சுவைத்த ஏலக்காய் டீபோல் வாழ்க்கையில் வேறு எங்கும் சாப்பிட்டதில்லை..... என் குழந்தைப் பருவத்தின் பல பசுமையான நியாபகங்களின் களமாக திகழ்ந்தது அவர்களின் வீடு... பகிர்ந்து உண்ண நான் கற்றுக் கொண்டது அங்கே தான்....

இசுலாம் நல்ல மதம் ...இசுலாமியர்கள் நல்லவர்கள் ....கெட்டவர்கள் இசுலாமியர்களே இல்லை !

இனிய ரமலான் நல்வாழ்த்துகள்

-Iswarya Raghupathy

---------------------------------------

இதுதான் தமிழகம்..... இந்த எண்ணங்கள் தான் தமிழர்களின் பெரும்பான்மையோருடையது. ஒரு சில ராம கோபாலன்களும், தெகோடியாக்களும், நரேந்திர மோடிக்களும் இந்த அமைதியை குலைத்து விட முடியாது. என்றும் எங்களது தமிழகம் அமைதிப் பூங்காவே என்று மார்தட்டி சொல்லுவோம்.

1 comment:

சுவனப் பிரியன் said...

//வெறும் 1400 வருடங்களுக்கு முன்பாக திருத்தப்பட்ட அல்லது முன்புக்கு மிக மாற்றாக எழுதப்பட்டதுதானே அது.....//

எந்த மாபெரும் அறிஞரின் இரண்டு அல்லது மூன்று வருட பேச்சுக்களை ஆய்வு செய்தால் எராளமான விஷயங்களில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியிருப்பதைப் பார்க்க முடியும்.

குர்ஆன் முழு புத்தகமாக ஒரு நாளில் அருளப்படவில்லை. 23 ஆண்டுகள் சிறுக சிறுக இறைவனால் கொடுக்கப்பட்டதே இந்த குர்ஆன். முகமது நபி தனது கற்பனையில் கூறியிருந்தால் 23 ஆண்டுகளில் பல விஷயங்களை மறந்திருப்பார். குர்ஆனை குறிப்பெடுப்பதற்கென்றே எப்போதும் நான்கு ஐந்து பேர் கூடவே இருப்பார்கள். முன்னுக்கு பின் முரணாக பேசியிருந்தாலோ அல்லது யாரிடமிருந்தாவது கருத்துக்களை கடன் வாங்கியிருந்தாலோ கூட இருப்பவர்களால் கண்டு பிடிக்கப்பட்டிருப்பார். பாகப்பிரிவினை, வரலாற்று சம்பவங்கள், முன்னர் வாழ்ந்த இறைத் தூதர்களின் வரலாறுகள், அறிவியல் குறிப்புகள் என்று பக்கத்துக்கு பக்கம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது குர்ஆன். எங்குமே முரண்பாடுகள் இல்லை.

ஒரு முறை மிகச் சிறந்த பார்பன வக்கீல் ஒருவர் என்னிடம் 'நான் இது வரை பார்த்த பாகப் பிரிவினைகளில் உங்கள் வேதம் சொல்லும் சட்டங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் உள்ளது. யாருக்கும் அநீதி இழைக்காத வகையிலும் உள்ளது. சட்டம் படித்த எனக்கே பாடம் எடுக்கிறது குர்ஆன்' என்றார்.

அம்பேத்கார் போன்ற சட்ட மேதைகள் கூடி வரைந்த நமது அரசியல் சட்டம் 50 வருடங்களில் 100 முறை மாற்றப்பட்டு விட்டது. ஆனால் சட்டம் படிக்காத நபிகள் நாயகம் கொண்டு வந்த குடும்பவியல் சட்டங்கள் உலக முஸ்லிம்கள் அனைவரையும் கட்டுப்படுத்துகிறது. வெள்ளையன், கருப்பன், ஆசியன் ஐரோப்பியன், அரபியன், அமெரிக்கன் என்று அனைத்து உலக மக்களின் வாழ்க்கையின் அடிப்படை குர்ஆனாக இருக்கிறது. இது இறைவனிடமிருந்து வந்திருக்கா விட்டால் இந்த வெற்றி சாத்தியப்படாது. இன்று வரை உலகில் எந்த முஸ்லிமும் இந்த ஷரீய சட்டத்தினால் எனக்கு பாதிப்பு என்று சொல்லவில்லை. சட்டங்களும் திருத்தப்படவில்லை. உலக முடிவு நாள் வரை இது தான் நிலை.

இது ஒன்றே குர்ஆன் இறை வேதம் என்பதை நிரூபிக்க போதுமானதாகும்.