Followers

Wednesday, March 11, 2015

வாரியார் சுவாமிகள் விரும்பிய ஏக தெய்வ வழிபாடு!

வாரியார் சுவாமிகள் விரும்பிய ஏக தெய்வ வழிபாடு!

"கடவுளை வழிபடுவதற்கு ஏக தெய்வ வழிபாடு மிகவும் சிறந்தது. தமிழ் மறையாம் தேவாரம் பாடிய மூவரும் மாணிக்க வாசகரும் ஏக தெய்வ வழிபாட்டைக் கையாண்டுள்ளனர். ஏக தெய்வ வழிபாடு என்றால் இதர தெய்வ ஆலயங்களுக்கோ மற்ற மதத்தினர் வழிபடும் இடங்களுக்கோ செல்லக் கூடாது என்பது அல்ல பொருள். முருக பக்தன் ஒருவன் வைணவக் கோவிலுக்குச் சென்றாலும் மசூதி மற்றும் மாதா கோவிலுக்குச் சென்றாலும் அங்கு இருக்கும் இறைவனை தான் வணங்கும் முருகனாக கருதி வழிபட வேண்டும்.

நால்வருக்கு பிறகு அருணகிரி நாதர்தான் ஏக தெய்வ வழிபாட்டைச் செய்தவர். அவர் முருகனைத் தவிர யாரையும் பாடியதில்லை.

கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா? என்று பலர் பிரச்னையை எழுப்புகிறார்கள். கடவுளுக்கு உருவம் இல்லை என்பது இந்து மதத் தத்துவம். ஆனால் இந்துக்கள் உருவ வழிபாடு செய்கிறார்கள். தண்ணீர் அதிக குளிர்ச்சியின் காரணமாக பனிக் கட்டியாவது போல் உருவமில்லாத இறைவன் பக்தர்களின் நம்பிக்கை காரணமாக உருவமுள்ளவனாகிறான்".

-தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சமய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அருணகிரி நாதர் 600 வது ஆண்டு நிறைவு விழாவில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவின் ஒரு பகுதி இது.

-தினமணி
12-12-1975

இந்து மத கொள்கைகளை வாரியார் சுவாமிகள் ஆய்வு செய்து இறைவனுக்கு உருவம் கற்பித்து வணங்குவதை இந்து மதம் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறுகிறார். இந்துக்கள் உருவ வழிபாடு தற்போது செய்து வருவதால் அதற்காக ஒரு சமாதானத்தைத்தான் வாரியார் சுவாமிகள் சொல்கிறார். எனவே அடிப்படையில் இந்து மதம் இஸ்லாம் கூறும் ஏக தெய்வ கொள்கையையே கொண்டிருப்பதாக ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

3 comments:

சுவனப் பிரியன் said...

//எங்கணே RDX எல்லாம் உபயோகிக்குறாங்க
எல்லாம் இதுல கூட தேசியம் பாத்துகினு சிவகாசி பாஸ்பரசை இல்ல உபயோகிக்குறானுங்க?
இதுல எங்க முன்னேற்றம்னு சொல்றது.// - சென்னிமலை

முன்னேறலியா..... மும்பை மாலேகானில் இஸ்லாமிய குடியிருப்புகளில் ஆர்டிஎக்ஸை வெடிக்கச் செய்து 50 க்கும் மேல் முஸ்லிம்கள் இறந்தனர். முஸ்லிம்கள்தான் காரணம் என்று அந்த கிராமத்து முஸ்லிம்களையே கைது செய்தனர். இந்த கொடுமை எந்த நாட்டிலாவது நடந்திருக்குமா?

ஹேமந்த் கர்கரே என்ற நியாயவான் புலன் விசாரணை செய்து உண்மையை கண்டு பிடித்தார். குண்டு வெடிப்புக்கு திட்டம் போட்டது சாத்வி பிரக்யாசிங் என்ற பெண் சாமியார். அவருக்கு ராணுவத்திலிருந்து ஆர்டிஎக்ஸ் சப்ளை செய்தது பார்பனர் ஜெனரல் புரோகித். தற்போது இருவரும் சிறையில்.

முஸ்லிம்கள் செய்தது போல் ஜோடித்து இஸ்லாமியரை முதலில் கைது செய்ய வைத்தது எல்லாம் திறமையில்லையா? இது இந்து மதத்தின் முன்னேற்றம் இல்லையா?

சுவனப் பிரியன் said...

//உங்கள் குரான் எல்லா நாட்டிலும் ஒரே குரானாக இருக்கிறாதா//

எந்த நாட்டில் வித்தியாசமாக உள்ளது. உலகம் முழுவதும் குர்ஆன் ஒன்றுதான். ரஷ்யாவில் நபிகள் நாயகம் காலத்து குர்ஆன் இன்றும் பாதுகாப்போடு உள்ளது. அதனையும் உங்கள் கையில் உள்ள குர்ஆனையும் ஒப்பிட்டு பாருங்கள். எந்த மாற்றமும் இருக்காது.

UNMAIKAL said...

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவல வெடிகுண்டு தாக்குதல் : இந்துத்துவா காவி தீவிரவாதிகள் 4 பேர் கைது - தீவிரவாதிகளை சுற்றி வளைத்தது காவல்துறை....!!


புதிய தலைமுறை பத்திரிகை அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசிய நான்கு இந்துத்துவ காவி தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு இந்துத்துவ தீவிரவாதிகளும் கோயம்பேட்டில் தீவிரவாத இயக்கமான இந்து இளைஞர் சேனாவை வளர்த்து வந்துள்ளனர்.

பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதாக கிண்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீவிரவாதிகளிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் ஹிந்து இளைஞர் சேனா அலுவலகத்திலிருந்து அதிகளவில் நாட்டு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் வேறு என்ன சதித் திட்டங்களை தீட்டியிருந்தனர் என்பது காவல்துறை விசாரணைக்கு பின்னர் தான் தெரியவரும்.

தகவல் உதவி : இந்நேரம்