Followers

Sunday, March 15, 2015

முன்பு ஷ்யாம் தற்போது 'ஆசாத்' - விடுதலை பெற்றவன்!



ஒரு மாதத்துக்கு முன்பு இவரது பெயர் ஷியாம் சிங். தற்போது இவரது பெயர் 'ஆசாத்'. அருமையான பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். ஆசாத் என்ற பெயரை தமிழ் படுத்தினால் 'விடுதலை' என்ற பொருளைக் கொடுக்கும். சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை பெற்றதால் 'ஆசாத்' என்ற பெயர் மிகப் பொருத்தமாக உள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ளது மீரட் மாவட்டம். பக்பாத் என்ற இடத்துக்கு அருகில் உள்ள கோவிலில் ஷியாம் சிங் கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை. இந்த கோவிலானது யாதவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அனுமதி மறுத்தால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று வாதிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் இவரையும் இவரது குடும்பத்தவரையும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக சொல்லி வழக்கு பதிவு செய்துள்ளது.

கோவிலின் பூசாரி ஷியாமுக்கு வழிபட உரிமை தர முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் வெறுப்புற்ற அவர் இஸ்லாத்தை தற்போது தழுவியுள்ளார். இவரைத் தொடர்ந்து 100க்கு மேற்பட்டவர்கள் இஸ்லாத்தை தழுவ தயாராகி வருகின்றனர். கிராமத்தில் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் ஊரை காலி செய்து விட்டு நேபாளுக்கோ அல்லது பாதுகாப்பான ஊர்களுக்கோ சென்று விடலாமா என்ற யோசனையில் உள்ளார்.

தன்னை கோவிலில் வழிபட அனுமதிக்காததை எதிர்த்து பிரதமர், கலெக்டர், தாசில்தார் என்று வரிசையாக மனுக்களை அனுப்பியுள்ளார். இந்துத்வா ஆட்சியில் தலித்களுக்கு நியாயம் கிடைக்குமா? எனவே இவருக்கு எந்த ஒரு பதிலும் அரசிடமிருந்து இதுவரை வரவில்லை.

ஆனால் ஆர்எஸ்எஸிலிருந்து சிலர் வந்து 'இஸ்லாத்துக்கு மாறி விட வேண்டாம். நிலைமை சரியாகும்' என்கிறார்களாம். கலவரம் செய்ய, வீடு கொளுத்த, கொலை செய்ய பிறகு ஆர்எஸ்எஸூக்கு ஆள் கிடைக்காமல் போய் விடுமே. எனவே ஓடி வந்து இஸ்லாத்துக்கு மாறி விடாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

'நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்கிறேன். ஆனால் இந்து கோவிலுக்குள் அனுமதி மறுத்தால் பிறகு எனக்கு இந்து மதத்தில் என்ன வேலை? வேறு மதத்துக்கு மாறுவதாக சொன்னாலும் 'நாங்கள் சரி செய்கிறோம். அவசரப்பட வேண்டாம்' என்கின்றனர். எத்தனை காலத்துக்கு எங்களை இவ்வாறு ஏமாற்றப் போகிறீர்கள்?' என்று காட்டமாக கேட்கிறார் ஷ்யாம் சிங்.

தகவல் உதவி

தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
14-03-2015

http://www.thehindu.com/news/national/other-states/denied-temple-access-dalit-converts-to-islam/article6991578.ece#comments

No comments: