Followers

Wednesday, March 04, 2015

மாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்?

மாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்?இந்தியாவில் மாட்டுக் கறி ஏற்றுமதி செய்து வரும் பிரபலமான 6 கம்பெனிகளில் 4 ன் உரிமையாளர்கள் இந்துக்கள். மாட்டுக் கறி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தை பெறுவது பிரேசில். அடுத்த இடத்துக்கு வருகிறது இந்தியா. ஆஸ்திரேலியா, அமெரிக்க, இங்கிலாந்து என்று அடுத்தடுத்து வருகின்றன. மேலும் மாட்டுக் கறியை விரும்பி சாப்பிடுபவர்கள் பெரும் பாலும் உழைக்கும் வர்க்கமான தாழ்த்தப்பட்ட மக்களே! முஸ்லிம்கள் பெரும்பாலும் ஆட்டுக் கறியையே விரும்பி சாப்பிடுவார்கள். எங்கள் கிராமங்களில் மாட்டுக் கறியை 'பெரிய ஆட்டுக் கறி' என்று மறைமுகமாக குறிப்பிடுவர். இந்துக்கள் மனம் புண் படக் கூடாது என்பதற்காகக் கூட இருக்கலாம். உப்புக்கண்டம் என்ற ஒரு பொருளை செய்வதற்கு மாத்திரமே எங்கள் வீடுகளில் மாட்டுக் கறியை உபயோகப்படுத்துவர். எனவே மாடு வெட்டுதலை தடை செய்வதால் இஸ்லாமியருக்கு எந்த நட்டமும் இல்லை. உண்மையில் நட்டப்படுபவர்கள் யார்?

இனி இந்தியாவிலிருந்து மாட்டுக் கறி ஏற்றுமதி பண்ணும் முன்னணி நிறுவனங்களின் பெயர் பட்டியலைப் பார்ப்போம்.

1) Al-Kabeer Exports Pvt. Ltd.
Its owner name: Mr. Shatish &Mr. Atul Sabharwal
Add: 92, Jolly makers, Chembur Mumbai 400021

2) Arabian Exports Pvt.Ltd.
Owner's name: Mr.Sunil Kapoor
Add: Russian Mansions, Overseas, Mumbai 400001

3) M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
Owner's name Mr. Madan Abott.
Add : MG road, Janpath, New Delhi 110001

4) P.M.L Industries Pvt. Ltd.
Owner's name: Mr. A.S Bindra
Add : S.C.O 62-63 Sector -34-A, Chandigarh 160022

வளைகுடா வியாபாரத்தை கணக்கில் கொண்டு அராபிய பெயர்களை நரித்தனமாக இந்த மேல் சாதியினர் தங்கள் கம்பெனிகளுக்கு வைத்து காசுபார்க்கிறார்களே. கோமாதாவை வெட்டலாமா என்று இந்த பனியா மற்றும் மார்வாடி கும்பலுக்கல்லவா ஆலோசனை வழங்க வேண்டும்? செய்தார்களா? இந்த இடத்தில் இவர்களுக்கு கோமாதாவை விட காசுதான் முக்கியம்.

ஏற்கெனவே இந்திய பொருளாதாரம் நொடித்துப் போயுள்ளது. பால் தராத கிழட்டு மாட்டுக்களை அறுத்து பதப்படுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்துத்வாவினருக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை. இந்துத்வாவினருக்கு மாதா மாதம் அமெரிக்க ஐரோப்பிய வளைகுடா நாடுகளிலிருந்து பார்பன அம்பிகள் பணம் அனுப்புவதால் செழிப்பாக இருக்கின்றனர்.

ஆனால் வானமும் பொய்த்து பலன் தந்த பசுவும் பால் தருவதை நிறுத்தி விட்டால் அந்த ஏழை விவசாயி அடிமாடாக பசுக்களை விற்காமல் என்ன செய்வான்? இஸ்லாமிய பெயர்களில் ஒளிந்து கொண்டு கோடிகளில் புரளும் இந்து முதலாளிகளை அல்லவா முதலில் இந்த இந்துத்வாவினர் கண்டிக்க வேண்டும்? ஆனால் செய்ய மாட்டார்கள். எங்காவது ஒரு தலித் வயிற்றுப் பசிக்காகவும் உழைத்து வாழும் அவனுக்கு தேவையான புரதத்தைப் பெறவும் மாட்டை அறுத்தால் சங் பரிவார கும்பல் ஓடி சென்று அடித்து அவனை கொன்றும் விடும். முன்பு வட நாட்டில் நான்கு தலித்களை இந்த இந்துத்வாதியினர் மாட்டை அறுத்ததற்காக கொன்றதை நாம் மறந்து விட முடியாது.

நடத்துங்கள்..... உங்கள் அராஜகங்கள் இன்னும் எத்தனை காலத்துக்கென்று பார்போம்.

Posted by சுவனப் பிரியன் at 1:54 PM
Labels: அரசியல், இந்தியா, இந்துத்வா, தலித், பசு

5 comments:

UNMAIKAL said...

'பீர் உண்டு...பீப் கிடையாது!' - உணவை தீர்மானிக்கும் அரசாங்கங்கள் – VIKATAN. PART

பசு என்பது புனிதமான அம்சமாக இந்துக்களால் பார்க்கப்படுகிறது என்பது இதற்கு வைக்கப்படுகிற வாதம். ரிக் வேதத்தில் பசுவை புனிதமாகக் கருத வேண்டும் என்று சொல்லும் பாடல்கள் உண்டு. அதே சமயம் வேதகாலத்தில் பசு, எருமைகளைக் கூட்டம் கூட்டமாகப் பலியிடுவதும், உண்பதும் இயல்பாக நடந்த ஒன்று.

அம்பேத்கரின் வரிகளில்:

"ரிக்வேத கால ஆரியர்கள் பசுவை உணவுக்காகக் கொன்றார்கள் என்பதும், எக்கச் சக்க பீப் உண்டார்கள் என்பதும் ரிக் வேதத்திலேயே தெளிவாக இருக்கிறது.

ரிக் வேதத்தில் இந்திரன் சொல்கிறார், 'அவர்கள் பதினைந்து கூட்டல் இருபது காளைகளை உண்ண சமைக்கிறார்கள்' (X. 86.14). ரிக் வேதம் (X.91.14) அக்னிக்குக் குதிரைகள், எருமைகள், காளைகள், பசுக்கள் பலியிடப்பட்டன என்று சொல்கிறது.

சதப்த பிராமணத்தில் வரும் பாடலே பசுவை புனிதமாக ரிக் வேதத்தில் குறித்தது. ஆனாலும், பலரும் பீப் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. ஆரியர்களின் மகாரிஷியான யக்ஞவல்கியரும் பீப் சாப்பிடுபவராக இருந்தபடியால், அவரிடம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபொழுது, " நான் அம்மாமிசத்தை உண்கிற ஒருவனாக இருக்கிறேன். அதுவும் இளசாக இருந்தால் கட்டாயம் உண்பேன்." என்கிறார்.

சரி! அம்பேத்கர்தான் பொய் சொல்கிறார் என்று ஒரு போடு போடலாம் என்று பார்த்தால், விவேகானந்தரும் கவிழ்த்து விட்டார்.

அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்: "பழைய சடங்குகளின்படி பீப் சாப்பிடாத இந்து நல்ல இந்துவே கிடையாது என்று கருதப்பட்டது. சமயங்களில் அவன் ஒரு பெரிய மாட்டையே பலி கொடுத்து அதைச் சாப்பிட வேண்டி இருந்தது." என்கிறார்.

அக்பர், 1586-ல் ஒரு பிர்மான் போட்டு பசுவதையைத் தடை செய்திருக்கிறார். ஹைதர் அலி ஆட்சியிலும் பசுவதைத் தடை செய்யப்பட்டே இருந்திருக்கிறது. பசுவைக்கொன்றால் கைகளை வெட்டுகிற அளவுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 1857 புரட்சியின் பொழுது இந்துக்களின் நம்பிக்கைகளை மதித்துப் பசுவதையைத் தடை செய்வதாகப் பகதூர் ஷா அறிவித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஆரிய சமாஜ இயக்கம், பசுவதைக்கு எதிராக குரலெழுப்பி, அதனையே முக்கிய அரசியலாக மாற்றியது.

காந்தி, தீண்டப்படாதவர்கள் மது அருந்துவது, மாமிசம் உண்பது முதலிய அசுத்தமான செயல்களைச் செய்யக்கூடாது என்றும், இந்து மதத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்று பசுவைக் காப்பது என்றும் 1927-ல் சொன்னார்.

ஆனால், எந்த வகையிலும் பசுவதையைச் சட்ட ரீதியாகவோ, கட்டாயத்தின் பெயரிலயோ தடை செய்வதை அவர் எதிர்த்தார்.

நல்லெண்ணம், புரிதல் ஆகியவற்றின் மூலமே அதைச் சாதிக்க முடியும். சட்ட ரீதியான தடை இன்னமும் பசுவதையை அதிகப்படுத்தவே செய்யும் என்று அவர் கருதினார்.

விடுதலைக்குப் பிறகு அறுபதுகளில் பல்வேறு மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போடப்பட்டன.

இதனை எதிர்த்துச் சுப்ரீம் கோர்ட்டில் முகமது ஹனீப் குரேஷி தொடர்ந்த வழக்கில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் (குறிப்பாக இஸ்லாமிய கறி விற்பனையாளர்கள்) மனு செய்திருந்தார்கள்.

அதில் தங்களுடைய அடிப்படை சொத்துரிமை, வியாபாரம், தொழில் உரிமைகள், மத உரிமை ஆகியவற்றை இந்தத் தடைகள் பாதிப்பதாகச் சொன்னார்கள். அதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

உச்சநீதிமன்றம் பொருளாதார ரீதியாக மாடுகளைக் கொல்லாமல் பராமரிப்பது கடினமான ஒன்று என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டு, முழுமையாகப் பசுவை கொல்வதைத் தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புத் தந்தது.

1967 காலகட்டத்தில், பசுவதையை முழுமையாக அமல்படுத்தலாமா என்பது குறித்து முடிவு செய்ய, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர், வெண்மைப் புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பூரி சங்கராச்சாரியார் ஆகியோர் உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

பார்கவா எனும் புகழ்பெற்ற உயிரியல் விஞ்ஞானியிடம் கோல்வால்க்கர், "எப்படி மாமிசமும், பாலும் உற்பத்தி ஆகின்றன?" என்று கேட்க, "இரண்டும் ஒரே இடத்தில் இருந்துதான், ஒரே முறையிலேயே உற்பத்தி ஆகின்றன." என்று பார்கவா சொல்ல,

"பிறகு மாமிசத்தைப் புசிக்கிற நீங்கள் ஏன் பாலை மட்டும் சாப்பிடக்கூடாது?" என்று கோல்வால்க்கர் கேட்க,

பார்கவா சூடு குறையாமல், "பாலை மட்டும் அருந்தும் நீங்கள் ஏன் மாமிசம் சாப்பிடக்கூடாது?" என்று திருப்பிக்கேட்டார்.

Continued .....

UNMAIKAL said...

'பீர் உண்டு...பீப் கிடையாது!' - உணவை தீர்மானிக்கும் அரசாங்கங்கள் – VIKATAN. PART 2

பசுக்களைக் கொல்லும் வயதை இருபத்தி ஐந்து என்று சில அரசுகள் ஏற்றி சட்டமியற்றிய பொழுது, பதினைந்து வயதோடு ஒரு மாட்டின் பயன்பாடு நின்றுவிடும் பொழுது இப்படிச் சட்டம் போடுவது முழுத்தடைக்குச் சமமானது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.

ஆனால், மிர்சாபூர் மோட்டி குரேஷி கசாப் வழக்கில், (2005) நவீன தொழில்நுட்பம் பசுக்களின் வயதை அதிகப்படுத்தி விட்டது என்றும், பசு பால் கொடுப்பது நின்று போனாலும் அதன் சாணம், கோமியம் கோஹினூர் வைரத்தைப் போல விலை மதிக்க முடியாதது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லகோட்டி அடங்கிய பெஞ்ச் கருத்து தெரிவித்தது.

குஜராத் அரசு கொண்டு வந்த தடைச்சட்டத்தை முழுமையாகச் செல்லும் என்று அத்தீர்ப்பு அறிவித்தது. ஹின்சா விரோதக் வழக்கில், சமண விழாக்களின் பொழுது மாடுகளை வெட்டும் கூடங்களை மூடியது சரியென்ற உச்சநீதிமன்றம், முழுமையான பசுவதைத்தடை என்பது சட்டரீதியாகத் தேவையற்றதும், விரும்பத்தக்கதும் இல்லை என்றுவிட்டது.

இந்தியா முழுக்கப் பசுவதையை வெவ்வேறு வகைகளில் இருபத்தி நான்கு மாநிலங்கள் தடை செய்திருக்கின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் (சட்டப்பிரிவு 48)-ல் அதற்கு இடம் இருக்கிறது. மிகக்கடுமையாக இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்கள் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான். ராஜஸ்தானில் ஈகைத்திருநாள் அன்று இஸ்லாமியர்கள் வெட்டி உண்ணும் ஒட்டகத்தைப் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவித்துப் பிஜேபியின் வசுந்தரா ராஜே அரசு சட்டம் இயற்றியது.

மத்தியபிரதேச அரசு, 2012-ல் பசுவைக் கொன்றால் மூன்று முதல் ஏழு வருட சிறைத்தண்டனை என்று சட்டம் கொண்டுவந்தது. தான் நிரபராதி என்று நிரூபிக்கும் பொறுப்பும் குற்றஞ்சாட்டப்பட்டவர் வசமே என்றது அச்சட்டம். ஹெட் கான்ஸ்டபிள் அளவில் துவங்கி ஆயுதம் ஏந்தி சோதனை செய்யும் உரிமையையும் அந்தச் சட்டம் வழங்கியது.

264.6 பில்லியன் ரூபாய் மதிப்புக் கொண்ட துறையாகத் திகழும் பீப் ஏற்றுமதியை மதச்சாயம் பூசி காலி செய்யக் கிளம்பி இருக்கிறார்கள். உலகில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மாமிச உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வியாபாரத்தை இது பெருமளவில் பாதிக்கும்.
தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் குடும்பங்கள் பெரிய அளவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அவர்களுக்குப் புரதத்தை அதிகளவில் வழங்குவது பீப் தான். எழுபது சதவிகித புரத ஆற்றல் தலித் பிள்ளைகளுக்குப் பீப் மூலமே கிடைக்கிறது.

மட்டனின் விலையில் மூன்றில் ஒரு பங்கே இருக்கும் பீப் இனிமேல் மகாராஷ்ட்ரா ஒடுக்கப்பட்ட இன பிள்ளைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால், பசுவதை மட்டுமே தடை செய்யப்பட்டு எருமைகள், பிற மாட்டினங்களைக் கொல்லலாம் என்கிற சூழல் இருந்தது. இதற்குத்தான் தற்போது மகாராஷ்ட்ரா அரசு தடை போட்டுள்ளது.

எருமை துவங்கி எந்த மாட்டு இனத்தையும் கொல்லவேக்கூடாது என்று அரசு இயற்றியிருக்கும் சட்டம், ஐந்து வருட சிறைத்தண்டனையை வழங்குகிறது. எருமையும், பசுவும் வெவ்வேறு வகையான உயிரினங்கள், அவை இரண்டும் கூடுவதுமில்லை என்று விலங்கியல் நிபுணர்கள் காட்டுக்கத்து கத்தினாலும் இவர்கள் கேட்கத் தயாராக இல்லை.

சுற்றுலாத்துறை பெருமளவில் இதனால் பாதிக்கப்படும். பீப்பும், பீரும் செமையான காம்பினேஷனாக இருக்கும் சூழலில் இந்தச் சட்டம் அதற்கு ஆப்பு வைத்துள்ளது. வெளிநாட்டவர்கள் இந்தியாவின் முக்கியச் சுற்றுலாத்தலமான மும்பைக்கு வர இனிமேல் யோசிப்பார்கள். - - பூ.கொ.சரவணன்
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39303

UNMAIKAL said...

மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்) PART 1.

மாட்டுக்கறி எங்கள் பண்பாடு
மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை
வாழ்க்கையின் பன்முகம்
எங்கள் ஆன்மாவின் உயிர்மூச்சு
"மாட்டுக் கறி உண்ணாதீர்கள்"
நான் உன்னை கேட்கிறேன் - "எப்படி உண்ணாமல் இருப்பது?"

நீ யார் எனக்கு அறிவுரை கூற, எங்கிருந்து வந்தவன்?

எனக்கும் உனக்கும் என்ன உறவு?

நான் கேட்கிறேன்.
இன்று வரைக்கும்
நீ ஒரு ஜோடி காளை மாடுளை வளர்த்திருப்பாயா?

ஒரு ஜோடி ஆடுகளையாவது?
ஒரிரண்டு எருமைகளை?
அவைகளை மேய்த்த அனுபவமுண்டா?
குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா?

இவைகளுடன் ஆற்றில் இறங்கி
அவற்றை தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா?
காளையின் காதை அறுத்து துளையிட்டதுண்டா?
இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்து பார்த்திருக்கிறாயா?

அவற்றுக்கு பல்வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
அவற்றின் கால் குளம்புகள் புண்ணானால்?

உண்மையில் உனக்கு என்னதான் தெரியும்?
"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்வதை தவிர?

பாலூட்டும் தனது மகளுக்கு, பிள்ளைப் பெற்று
கொஞ்சநாட்கள் கூட ஆகாத அவளுக்கு
எப்படியாவது
நன்கு பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சித் துண்டுகளை
சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று
கவலையுடன் அலைகிறாள் யெல்லம்மா.

மாட்டின் ஈறல் சுரக்கும் சாறு - அது லேசில் கிடைக்காது
அதைப் பெற மாலா செட்டம்மாவின் கூரை பலகை
மாடிகா எல்லம்மாவின் எறவானம்
என்று வீடுவீடாகச் தேடிச் செல்வாள்.

குழந்தையின் வயிற்று கடுப்பைத் தணிக்க
பெரியவர்களின் கைகால் வலியை போக்க
மாட்டீறல் சுரக்கும் கடுஞ்சாற்றையே
அவர்கள் நம்பி இருப்பர்.

அப்படிப்பட்டவர்களைப் பார்த்து
"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்ல
உனக்கு எத்தனை துணிச்சல்?

ஜாக்கிரதை - அவர்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்.

ஓடு, அவர்கள் வருவதற்குள்...

மாலா மக்களும் மாடிகா மக்களும்
மாட்டுக் கறி உண்பவர்கள் மட்டுமல்ல, தம்பி.
மண்ணை உழுவதற்காக
காடுகளை பராமரிப்பவர்கள்
எருமைகளை, ஏர் ஒட்டிச் செல்லும் எருதுகளை
பழக்குபவர்கள்
யுகயுகமாக அவர்கள் இந்த பசும் வயல்களை உழுதுள்ளனர்
தலைமுறை தலைமுறையாக கன்றுகளை வளர்த்து வந்துள்ளனர்.

பசுக்களை, காளைகளை
நாங்கள் காடு, கரைகளில் ஓட்டிச் செல்வோம்
எங்களுக்கு இதைச் செய்ய தெரியும் -
ஒன்றை மறந்து விடாதே
மண்ணை உழுவதற்கே மாடுகளை வளர்க்கிறோம்.

மண்ணை விட்டு, மந்தைவெளியை விட்டு நீங்கியும்
மாட்டுக் கறித் தின்னும் கூட்டம் என்று எங்களை ஏசுகிறாய்-
பழைய பாட்டையே திரும்பத் திரும்ப பாடுகிறாய்
உனது ஊத்தைபற்களைக் காட்டி காட்டி.

இப்படி அங்கலாய்க்கும் நீ, நீ என்னதான் செய்கிறாய்?
கோமாதா என்று கும்பிடுகிறாய்
பாலை கறந்து கறந்து பலகாரம் செய்கிறாய்.

நாங்கள் பசுவை கறப்பதில்லை.

கோமாதா என்று வணங்குவதுமில்லை

Continued....

UNMAIKAL said...

மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்) PART 2.


கோமூத்திரத்தை குடிப்பதுமில்லை.

யார் தந்த அதிகாரத்தில் "மாட்டுக் கறி உண்ணாதே?" என்று கூறுகிறாய்?

"எருதுகளை கொல்லாதே" என்கிறாய்,

ஆனால் செத்த மாட்டை உண்ணச் செய்கிறாய்-

எங்களை தீண்டத்தகாதவர்கள் என்கிறாய்

நிலமற்றவராக வைத்திருக்கிறாய்

நீ செய்யத் தயங்கும் அழுக்கான வேலைகளை
எங்களைச் செய்ய சொல்கிறாய்

ஊர்த் தெருக்களில் விழுந்து கிடக்கும் செத்த மாடுகளை
அகற்றச் சொல்கிறாய்.

மாடுகன்றுகளை பராமரித்து
அளவாக அவற்றை கட்டி வளர்த்து
எருதையும் காளையையும் அம்மனுக்கு படையலிட்டு உண்பது
எங்கள் பண்பாடு

எங்களை தடுத்து நிறுத்த நீ யார்?

பௌத்தர்கள் பேசுவது போல நீ பேசப் பார்க்கிறாய்.

எங்களுக்கு என்ன பௌத்தம் தெரியாதா?

"மனிதர்களை கொல்லாதே" என்று சொன்னது பௌத்தம்.

நீயோ, "ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, வெங்காயம், பூண்டு உண்ணாதீர்கள்"
என்று சொல்லிக் கொண்டு மனிதர்களை வெட்டிச் சாய்க்கிறாய்.


விலங்குகளை பற்றி பேச நீ யார்?

மனிதம், நாகரிகம் தெரியாத நீ?

எருது, பசு, காளை, எருமை
எங்கள் குடும்பத்தினர்.
அவற்றின் தேவையறிந்து வளர்ப்போம்

வலியறிந்து மருந்தளிப்போம்

காயடித்து வேலைக்கு தயாராக்குவோம்.

பசுவுக்கும் உனக்குமான உறவு லேசானது -
பால், இனிப்பு, மரக்கறி உணவு, இவ்வளவுதான்.

மாட்டுக்கறி எங்களது பண்பாடு. ஜாக்கிரதை.

- கோகு ஷியாமளா

(ஆந்திராவின் முக்கியமான தற்கால தலித் பெண் கவிஞர், சிறுகதையாசிரியர், பெண்ணிய ஆய்வாளர், செயற்பாட்டாளர்.

சாதி/எதிர்ப்பு, தெலுங்கானா போராட்டங்களில் தொடர்ந்து செயலாற்றி வருபவர்

ஆங்கிலம் வழி தமிழில் - வ. கீதா
(இந்தக் கவிதை இடம் பெற்ற சஞ்சிகை: தற்கால அரசியல் செய்தி மடல், செப்டம்பர் 2012, பெண்ணிய படிப்புக்கான அன்வேஷி ஆய்வு மையம், ஹைதராபாத் வெளியீடு)

(இக்கவிதை "பூவுலகு" மார்ச் - ஏப்ரல் 2013 பெண்கள் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளது)

mohamed sultan said...

Jawaher Jms at fb பசுவதைச்(!) சட்டம் மஹாராஷ்டிர மாநிலத்தில் கொண்டு வரப்பட்டு இருப்பதற்கும் இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் முதலிரண்டு இடத்திலிருக்கும் நிறுவனங்கள் அதே மாநிலத்தில் இருப்பதற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இன்னும் மலிவான விலையில், போட்டியோ சிரமமோ இன்றி அவர்களால் மாடுகளை கொள்முதல் செய்ய இயலும்.

சரிதானா?

Narain Rajagopalan @ fb எல்லோருமே இதை வெறுமனே பசுவதை சட்ட மறுப்பாகப் பார்க்கிறார்கள். சிக்கல் அது கிடையாது. யார் ஏற்றுமதி செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். இந்த மாடல் ஏற்கனவே குஜராத்தில் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்ட மாடல் - வைரமறுக்கும் தொழிலில் முன்னணியில் ஒரு காலத்தில் அங்கே இருந்தவர்கள் இஸ்லாமியர்கள். சூரத்தில் கடந்த 15 வருடங்களில் வெவ்வேறு விதமான சட்டங்களைப் போட்டு ஒட்டு மொத்தமாக அவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். Remember the 2002 slogan "Bora kho lootooh, Musalmaan Kho kaatooh" (போரா முஸ்லீமென்றால் அவன் பொருளாதார வலிமையை அடித்து நொறுக்கு, வெறும் முஸ்லீமென்றால் கொன்று போடு)