Followers

Thursday, March 12, 2015

வங்கி அதிகாரி சென்னையில் காதலியைக் கொன்றார்!



ஆணும் பெண்ணும் கூடிய வரை படிப்பு, வேலை போன்ற இடங்களில் தனித் தனியாக செயல்படுங்கள். மேலும் காதல் என்ற பெயரால் திருமணத்துக்கு முன்பே ஆணும் பெண்ணும் வெளியே சுற்றாதீர்கள் என்று நாம் சொன்னால் நம்மை பிற்போக்கு வாதிகள் என்கிறார்கள். கீழே வரும் செய்தியை படித்து விட்டு யார் பிற்போக்குவாதிகள் என்ற முடிவுக்கு வருவோம்.

வங்கி அதிகாரி சென்னையில் காதலியைக் கொன்றார்

தினேஷும் அருணாவும் காதலித்து வந்தனர். தினேஷ் நேற்று முன்தினம் மாலை அருணாவுக்கு போன் செய்து, தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஸ்கூட்டரில் அருணா அங்கு சென்றுள்ளார். தினேஷின் வீட்டில் இருவரும் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்துள்ளனர். இரவில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் மோதலும் நடந்திருக்கிறது. வீட்டில் இருந்த கண்ணாடி பூந்தொட்டியை எடுத்து அருணாவின் தலையில் தினேஷ் அடித்திருக்கிறார். தொட்டியின் உடைந்த கண்ணாடித் துண்டாலும் அவரைத் தாக்கியுள்ளார். சிறிது நேரத்தில் அருணா இறந்துவிட்டார்.

காதல் எப்போது விபரீதம் ஆகிறது?

இருவர் இடையிலான காதல் உணர்வு எப்போது விபரீதமாகிறது? இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கம் மனோதத்துவ நிபுணர் சந்திரலேகா கூறியது:

‘இம்பல்ஸ் கன்ட்ரோல்’

காதலர்கள் இருவரில் ஒருவருக்கு சந்தேக எண்ணம் இருந்தாலோ, இருவரில் ஒருவர் ஏமாற்ற முயற்சி செய்தாலோ பிரச்சினை உருவாகிறது. இந்த சூழ்நிலையில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ‘இம்பல்ஸ் கன்ட்ரோல்’ கோளாறு ஏற்படுகிறது. அப்போது, கையில் கிடைக்கும் பொருளைக் கொண்டு மற்றவர்களைத் தாக்குவார்கள். வெளிநாடுகளில் துப்பாக்கி எளிதாக கிடைப்பதால், துப்பாக்கிச் சூடு நடக்கும். இங்கு கத்தி, சுத்தியல், அரிவாள்மனையால் தாக்குகின்றனர்.

பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது:

தனிமை சந்திப்பு ஆபத்து

ஆண் நண்பர்களை பெண்கள் பொது இடங்களில் சந்தித்துப் பேசுவதால் பெரிய பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. தனிமையில் சந்திக்கும்போதுதான் கொலை, பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. ஆண்களை தனிமையில் சந்திக்காமல் தவிர்த்தாலே 99 சதவீத பிரச்சினைகள் ஏற்படாது. தனிமையில் சந்தித்து, பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானால் முதலில் அந்த இடத்தில் இருந்து பெண்கள் வெளியேற வேண்டும். உடல் பலத்தில் ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை ஏற்பட்டால் முடிந்தவரை சத்தம் போட்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். சத்தம் போடத் தயங்கக் கூடாது. இக்கட்டான சூழலில் எதிராளி மீது வீசிவிட்டுத் தப்பிக்க, பெண்கள் எப்போதும் ‘பெப்பர் ஸ்பிரே’ தயாராக வைத்திருப்பது கூடுதல் பாதுகாப்பாகும்.

நன்றி தமிழ் இந்து நாளிதழ்
11-03-2015

இஸ்லாம் பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கிறது என்று கூப்பாடு போடுபவர்கள் இந்த சம்பவத்துக்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்? அந்த பெண்ணும் கொலையுண்டாள். கொலை செய்த இளைஞனின் வாழ்வும் போனது. இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. தினமும் நாட்டில் எங்காவது ஒரு மூலையில் கொலை கற்பழிப்பு நடந்து கொண்டுதான் உள்ளது. பாதிப்படைவது அதிகமாக பெண்களே! இதனால்தான் இஸ்லாம் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வேலைக்கு சென்றாலும், படிக்க சென்றாலும் கூடிய வரை அந்நிய ஆடவர்களோடு தனித்திருப்பதை தவிர்த்துக் கொள் என்று கட்டளையிடுகிறது. இது அந்த பெண்களின் பாதுகாப்பைக் கருதியே!
----------------------------------------------------

"உரிய துணை (மஹ்ரம்) இன்றி ஒரு பெண், ஒரு பகல் ஓரிரவுக்குக் கூடுதலாகப் பயணிக்க வேண்டாம்" என்று நபி அவர்கள் வரையறை செய்திருக்கிறார்கள் (திர்மிதீ 1089, புகாரி 1088, முஸ்லிம் 2608)

"(மஹ்ரமல்லாத) ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் அவர்களோடு மூன்றாமவனாகச் சேர்ந்து கொள்வான்"

திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1086, 1087

No comments: