பிற மதத்தினரை கவர்ந்த
தவ்ஹீத் ஜமாஅத்....
TNTJ முதியோர் இல்லத்திற்காக
உபகரணங்கள் வழங்கிய மாற்று மத சகோதரர்கள்....
திருவள்ளூர் மேற்கு
மாவட்டம் நெசப்பாக்கம் பகுதியை சார்ந்த சகோ.ஷங்கர். ஷங்கர் மற்றும் அவர்களின் சகோதரி மேலும் அவரின் மாமி ஆகியோர் குடும்பத்தில் ஆலோசனை செய்து
முதியோர்களுக்கு பயன்படும் வகையில் புகைபடத்தில் காணும் சாதனங்களை சுமார் 20,000/- க்கும் அதிகமான மதிப்பிலான
உபகரணங்களை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை அழைத்து வழங்கியுள்ளார்கள்.
அவர்கள் சொன்ன வார்த்தை
“தவ்ஹீத் ஜமாத் தின் முதியோர் இல்ல விளம்பரத்தை பார்த்தேன்.... தமிழகத்தில் உள்ள பல
இயக்கங்களில் தவ்ஹீத் ஜமாத் வசம் கொடுத்தால் தான் அது 100% சரியான வகையில் பயன்படும் என தாங்கள் நம்புவதாகவும்” தெரிவித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
இது போன்று மாற்று
மத சகோதரர்களையும் செயல்பாடுகளால் ஈர்க்கும் வண்ணம் நம்முடைய செயல்கள் மேலும் வீரியம்
பெற அல்லாஹ் உதவி செய்வானாக ....
சகோதரர் ஷங்கர் மற்றும்
அன்னாரின் குடும்பத்தார் நேர்வழியில் நடந்து
ஏக இறைவனின் அருள் பெற து ஆ செய்யவும்....