Followers

Tuesday, August 29, 2017

இஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா?

இஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா?

சில இந்துத்வாவாதிகள் இஸ்லாமிய மார்க்கம் என்பது அரேபிய கலாசாரத்துக்காக உருவாக்கப்பட்டது என்ற வாதத்தை வைக்கின்றனர். ஆனால் இங்கு கொரிய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் முடிப்பதற்காக ஆயத்தமாவதை பார்க்கிறீர்கள். அரேபியர்களுக்கும் கொரியர்களுக்கும் எந்த வகையிலாவது ஒற்றுமை உண்டா? நிறம், குணம், சாப்பிடும் வழக்கம், உடை உடுத்தும் முறை என்று எதை எடுத்தாலும் மாற்றத்தைக் காணலாம்.

ஆனால் இந்த மக்களின் வாயிலிருந்து 'இறைவன் ஒருவனே! இறைவன் ஒருவனே! அந்த இறைவனுக்கு நிகராக யாருமில்லை' என்ற முழக்கத்தோடு இதோ கிளம்பி விட்டனர் மக்காவை நோக்கி.... இந்த இஸ்லாமிய மார்க்கமானது அரnபியர்களுக்கு மட்டும் வந்ததல்ல... அகில உலகுக்கும் வந்தது. இதனையே இந்நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.









11 comments:

mohamedali jinnah said...

நல்ல பதிவு

Dr.Anburaj said...

கொாியாவில் அரேபிய அடிமைகள் எப்படியோ உருவாக்கப்பட்டுள்ளாா்கள். பாவம் உண்மையை அறியாது அவா்கள் ஏதோ செய்கின்றாா்கள். கொாியாவில் உள்ள அரேபிய அடிமைகள் அரேபியாவில் முஹம்மதுவின் முன்னோா்கள் பின்பற்றிய-முஹம்மதுவும் பின்பற்றிய தன்னை பின்பற்றுபவா்களும் பின்பற்ற ஹஜ் யாத்திரையை கடமையாக்கினாா். அப்படியாக்கினால்தான் அவன் அரேபிய அடிமையாக வாழ்வான். கொாிய மக்கள் ஹஜ் க்கு செல்கின்றாா்கள்.இது அரேபிய அடிமைத்தனம் என்பதற்கு நல்ல உதாரணம்.

முஹம்மது தனது ஆரம்ப காலத்தில் எருசலேம் நோக்கிதான் தொளுகை செய்து வந்தாா். யுதா்கள் தன்னை ஆதாிக்கவில்லை என்ற கோபத்தில் சவுதியில் உள்ள காபாநோக்கி தொளுகை செய்ய ஆரம்பித்து அதையே விதியாக்கினாா்.

Dr.Anburaj said...

தலாக் மற்றும் நிக்கா ஹலால் அரேபிய வட்டார வழக்கம்தான்.
திருப்பம் நிகழ்த்துமா ஷயாரா பானு வழக்கு?

முத்தலாக்’ என்பது, இஸ்லாம் சமூகத்தில் கணவன் ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக் தலாக் தலாக்’ என்று கூறித் தன் மனைவியை விவாகரத்து செய்வது. இது இந்தியாவின் பல இடங்களில், பல ஆயிரம் பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது. தொலைபேசி, வாட்ஸ்அப் போன்ற தொலைத்தொடர்புச் சாதனங்களின் மூலமாகவும் அதிகம் நடைபெறக்கூடியதாக இது இருக்கிறது.

பிரச்சினையின் ஆணிவேர்

மூன்று தலாக்குகளுக்கு இடையிலும் குறிப்பிட்ட கால அவகாசம் தேவை என்கிற குரானின் வாசகம் இந்தியாவில் பல வேளைகளில் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தால், ஆயிரமாயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, விவாகரத்து செய்யப்படுகிற இந்திய இஸ்லாமியப் பெண்களில் 60% பேர் இந்த நடைமுறையினால் பாதிக்கப்படுவதாக பாரதிய மகளிர் அமைப்பு ஆதாரங்களைக் காட்டி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது.

இந்தக் கொடுமையான பாதிப்பிலிருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும், முஸ்லிம் மகளிர் அமைப்பும் ஒன்றிணைந்து நீதிமன்றத்தை அணுகியதுதான் இந்த விவாதங்களின் அடிப்படை.

இந்த வழக்கு குறித்து, நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அறிக்கை தந்திருக்கும் மத்திய அரசு, முத்தலாக் செல்லாது என்று கூறியதோடு நில்லாமல், பொது சிவில் சட்டம் தேவை என்கிற ஒரு விஷயத்தை நோக்கியும் தனது கவனத்தை முன்னெடுத்திருக்கிறது. தனது பன்முகத்தன்மையினால்தான் இந்த நாடு ஒரே நாடாக நீடித்துவருகிறது. இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடொன்றைப் பொது சிவில் சட்டத்தின் கீழாகக் கொண்டு வர இயலும் என்று நம்புவது மிக வேடிக்கையான ஒன்று. அது நடைமுறையில் எள்ளளவும் சாத்தியமில்லை. இது மத்தியிலுள்ள ஆட்சியாளர்களும் அறிந்ததுதான்.

Dr.Anburaj said...

எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் வழக்கத்தில் இல்லாத, ஒரே சமயத்தில் கூறப்படும் முத்தலாக் முறை இந்தியாவில் பல வேளைகளில், நடைமுறையில் உள்ளது என்பதையும், அதனால் தங்களது சமூகத்துப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிந்தே அதைக் கண்டும் காணாமல் புறக்கணித்துவந்திருக்கிறது இந்த அமைப்பு. முத்தலாக்குக்குப் பிறகு, ஜீவனாம்சம் தரலாம் என்று குரானில் கூறியிருப்பதாக பிளேவியா ஆக்னஸ் என்கிற கட்டுரையாளரின் மேற்கோள்களைக் காட்டிப் பொது விவாத அரங்குகளில் பேசும் இஸ்லாமிய அமைப்பினர், இந்த அநீதிகளுக்கு எதிராகப் பல காலங்களாகப் பாராமுகமாக இருப்பது ஏன் எனும் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல மறுக்கிறார்கள். மாற்றத்துக்கான காரணமும் வாய்ப்பும் மார்க்கத்திலேயே இருப்பதாக வாதிடுபவர்கள், இத்தனை காலம் அதைச் செய்யாமல் இருந்தது ஏன்? பாதிக்கப்பட்ட பெண்களின் வேதனைக்குத் தீர்வுகாண முன்வராமல் இருப்பது ஏன்?
இஸ்லாமியச் சட்டங்கள் தெரிந்த வழக்கறிஞர்கள், ஹாஜி, கல்வியாளர்கள், மற்றும் பெண்கள் இணைந்த ஒரு சட்டரீதியான முறையீட்டு மன்றங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலாவது, இந்தப் பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்களது தரப்பை முன்வைக்க ஒரு இடமாக அது இருந்திருக்கும். அவர்கள் நீதிமன்றங்களை நாடும் தேவையும் இருந்திருக்காது. அதைக் கூட இந்த முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அமைத்துத்தரவில்லை.

இஸ்லாமியச் சமூகத்தில் குரானுக்கு முரணாக நடைமுறையில் இருக்கும் இந்த முத்தலாக் போன்ற விஷயங்கள் இரண்டு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஒன்று, இஸ்லாமியப் பெண்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மற்றொன்று, இந்த நடைமுறைகளால்தான் இந்திய அளவில் இஸ்லாமிய மண விலக்கு குறித்த மோசமான ஒரு பிம்பம் இந்தியப் பொதுச் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
(ஜமாத்கள் மற்றும் இசுலாமிய அமைப்புகள்)

Dr.Anburaj said...

மும்பை ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழையவும் வழிபடவும் உரிமை உண்டு என்று சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அடியொற்றி, நீதிமன்றங்கள் வழியே தங்களது உரிமைகளை உறுதிசெய்வதை யாரும் தடுக்க இயலாது என்று இஸ்லாமியப் பெண்கள் இன்று நம்புகிறார்கள்.இந்திய இஸ்லாமிய அமைப்புகள் பலவும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அதிகமும் விலகி இருந்துவிட்டன. ஷாபானு வழக்கின்போதே இஸ்லாமியச் சமூகம் விழித்திருக்க வேண்டும். இப்போது பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கையிலெடுக்க அவர்களது மத அடிப்படைவாதம் மட்டும் காரணமல்ல.

பரிதவித்துக்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெண்கள் மீதான இஸ்லாம் சமூகத்தின் பாராமுகமும்தான் காரணம் என்பதை இந்த அமைப்புகள் சற்றுத் தீவிரமாகவே யோசிக்க வேண்டும்.

மனித உரிமைகளுக்கு எதிரான நடைமுறைகள் மாறித்தான் ஆக வேண்டும். மாற்றத்துக்கான குரல்கள் இப்போது உள்ளிருந்தே உரக்க ஒலிக்கின்றன. நியாயமான இந்தக் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டிய கடமை இஸ்லாமியச் சட்ட அமைப்புகளுக்கு இருக்கிறது. இதைக் கண்டுகொள்ள மறுத்தால், மாற்றத்தைக் காலம் அவர்கள் மீது சுமத்திவிட்டுப் போவதைத் தவிர்க்க முடியாது.

Dr.Anburaj said...


தலாக்கை விட கொடுமையானது.அசிங்கமானது.மானக் கேடானது நிக்கா ஹலால்
-----------------------------------------------------------------------------
தலாக்கை விடக் கொடுமையான, முரண்பாடான ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற வழக்கம் இருக்கிறது. கோபத்திலோ, போதையிலோ தனது மனைவியை தலாக் செய்துவிட்ட முஸ்லிம் ஒருவர் தனது மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினாலும் அது உடனடி சாத்தியமில்லை. அதற்கு அந்த முஸ்லிம் பெண் ‘நிக்காஹ் ஹலாலா’ சடங்கைக் கடந்தாக வேண்டும்.
அதாவது, விவாகரத்தான அந்த முஸ்லிம் பெண் வேறோர் ஆணைத் திருமணம் செய்து, இரண்டாவது கணவர் அந்தப் பெண்ணை தலாக் செய்த பிறகே, தனது முதல் கணவரை மறுமணம் புரிய முடியும். இந்த நடைமுறை நிபந்தனை மானக் கேடானது.தேவையின்றி கணவன் செய்த தவறுக்கு ஒரு பெண் இன்றொரு ஆணிடம் ” படுக்க வேண்டும் ” என்ற நிபந்தனை ஏகப்பட்ட குழப்பங்களுக்கு காரணமாகயிருந்து வருகின்றது. பல கொலைகள் கூட நடந்துள்ளது. இந்த சடங்குகளுக்கு எதிராகவே ஷயாரா பானு வழக்கு தொடுத்தார்.

“முஸ்லிம்களிடையே நடைமுறையிலுள்ள தலாக்-இ-பித்அத், நிக்காஹ் ஹலாலா, பலதார மணம் ஆகியவற்றை நியாயப்படுத்தும் 1937-ஆம் வருடத்திய முஸ்லிம் தனிநபர் சட்டமான ஷரீஅத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று உத்தரவிட வேண்டும்” எனக் கோரிய ஷயாரா பானு, இந்திய அரசியலமைப்பின் 14, 15, 21, 25 ஆகிய ஷரத்துகள் வழங்கும் அடிப்படை உரிமைகளை ஷரீஅத் புறக்கணிப்பதாக வாதிட்டார்.

இந்த வழக்கில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள அணுகுமுறை, முஸ்லிம் மதகுருமார்களின் பிடியிலிருந்து முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதாகவும் உள்ளது.
சரளா முத்கல் வழக்கில், 1872-ஆம் வருடத்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், 1936-ஆம் வருடத்திய பார்ஸி திருமணச் சட்டம், 1955-ஆம் வருடத்திய இந்து, பெளத்த, சீக்கிய திருமணச் சட்டங்களின்படி இருதார மணம் தண்டனைக்குரியது என்று தீர்ப்பளித்ததைக் குறிப்பிட்ட ஷயாரா பானு, முஸ்லிம் பெண்களுக்கு இவ்விஷயத்தில் பாகுபாடு காட்டப்படுவதை எடுத்துரைத்தார்.

Dr.Anburaj said...

அதன்படி உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பை மத்திய அரசு தெளிவாக முன்வைத்துள்ளது. ‘பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதும், பெண்களின் கண்ணியத்தைக் காப்பதும் அரசியல் சாசனத்தின் அடிப்படை மதிப்பீடுகள். அவை மாற்ற இயலாதவை. மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் தனிப்பட்ட மதத்தின் பெயரால் சம உரிமைகளுக்கு பங்கம் விளைவிப்பதை ஏற்க முடியாது. பிற மதத்தைச் சார்ந்த பெண்கள் அனுபவிக்கும் உரிமைகளை குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்திருப்பதாலேயே ஒரு (முஸ்லிம்) பெண் இழக்க நேரிடுவது முறையல்ல’ என்று பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
---------------------------------------------------------------------------------------
முஸ்லீம்கள் இருதாரமணத்திற்கு தடை அல்லது கூடுதல் நிபந்தனைகள் -guidelines - விதிக்கப்படவேண்டும்.
(கதிஜா அம்மையாா் உயிருடன் இருக்கும் வரை மஹம்மது ஏகபத்தினி விரதனாகவே இருந்தாா்.அம்மையாாின் இறப்பிற்கு பின் ஐயா ஏகப்பட்ட பெண்டாட்டி குமுஸ் பெண்கள் என்று நீண்டுவிட்டது.அதுபோல்தான் மஹம்மதின் மகளை பாத்திமாவை திருமணம் செய்த அலி பாத்திமா உயிருடன் இருக்கும் வரை ஏகபத்தினிவிரதனாக இருந்தாா்.பாத்திமா இறந்தபின் பல மனைவிகள் பல குமுஸ் பெண்களோடு கூடி மனிதன் 33 பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளிவிட்டாா். சாியான பொலிகாளை.)
விவாகரத்து நீதிமன்றத்தில்தான் முடிவு செய்யப்பட வேண்டும். கூடுதல் திருமணம் செய்யக் கூட அனுமதியை நீதிமன்றத்தில் பெற வேண்டும் என்று சட்டம் இயற்றலாம்.

Dr.Anburaj said...

தமிழ் பயான் என்ற வலைதளத்தில் உள்ள கட்டுரைதுறவறம் இயற்கைக்கு மாறானது என்றால் நோன்பும் இயற்கைக்கு மாறானது தானே? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி பதில் சொல்வது?
பதில்

இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது மனிதர்கள் யாரும் கடைபிடிக்க முடியாத பொய்யான கொள்கையாகும். இதனால் மனித சமுதாயத்துக்கு பாதிப்புகளைத் தவிர நன்மைகள் ஏற்படுவதில்லை.

ஒரு மனிதன் தனக்கு வாழ்க்கைத் துணையில்லாமல் ஒழுக்கமாக வாழ முடியாது. ஒருவன் திருமணம் செய்யாமல் வாழ்கிறான் என்றால் ஒன்று அவன் ஆண்மையற்றவனாக இருப்பான். அல்லது தவறான வழியில் தன் ஆசையை தீர்த்துக் கொள்ளக்கூடியவனாக இருப்பான்.

திருமணம் முடிக்காமல் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வதாக யார் கூறினாலும் அது பொய்யே. ஏனென்றால் இல்லறம் என்பது மனித உடலுக்கு அவசியமான தேவையான ஒன்று. இந்தத் தேவை ஒரு மனிதனுக்கு சரியாகக் கிடைத்தால் தான் அவனால் மன நிம்மதியாக வாழ முடியும்.

இல்லையென்றால் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவான். இந்தப் பேருண்மையை செய்தித் தாள்களின் வாயிலாக தொடர்ச்சியாக நாம் அறிந்து வருகின்றோம்.

துறவறம் மேற்கொள்வதாகக் கூறிக் கொள்ளும் சாமியார்களும் பாதரிமார்களும் தான் அதிகமாக பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்றனர். சாதாரண மனிதர்களை விட இவர்களை இவ்விஷயத்தில் வரம்பு மீறி நடக்கின்றனர்.
-----------------------------------------------------------------------------------
இசுலாம் துறவறத்தை ஆதாிக்கின்றது.
முஹம்மது இறக்கும் போது தனது மனைவிமாா்கள் அனைவரும் -ஜமாத்தின் தாய் போன்றவா்கள் எனவே அவா்கள் யாரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டாா்.அவரது மனைவிகளில் ஆயிசா ஹம்சா போன்றவா்கள் மிகவும் இளையவயதினா்கள். அவா்களுக்கு இல்லற சுகம்யின்றி வாழ முடிந்ததா ? இல்லையா ?
இராமாயாணம் படிக்கும் குடுமபங்களில் பலதார மணம் இல்லை. இந்துக்களின் சகவாசம் காரணமாக இந்திய முஸ்லீம்கள் மத்தியில் பலதாரமணம் மற்றும் மணவிலக்குகள் மிகக் குறைவு.
முறையாக துறவறத்தை அனுஷ்டத்துக் கொண்டிருப்பவா்கள் நிறைய போ்கள் இந்துக்களில் உள்ளாா்கள்.கிறிஸ்தவ பாதிாிமாா்கள் மீன் இறைச்சி முட்டை என்று வெளுத்து வாங்குகின்றாா்கள்.பழைய ஏற்பாட்டை படித்தவன் துறஒழுக்கம் பேண மாட்டான். இந்த நாவடக்கம் இன்மைதான் அவா்களுக்குள் இருக்கும் சில பாலியில் வக்கிரகங்களுக்கு காரணம். பல கிறிஸ்தவ பாதிாிமாா்கள் தற்போது சைவ உணவிற்கு மாறி வருகின்றாா்கள்.ஸ்ரீராமகிருஷ்ண மிஷனில் சிலகாலம் தங்கி பயிற்சி பெற்றுச் செல்கின்றனா்.
ஸ்ரீராமகிருஷ்ணா் -அன்னை சாரதாமணி தேவி -சுவாமி விவேகானந்தா் நூல்களைப் படிப்பவா்கள் அனைவரும் அனுபிரம்மச்சாியம் பேணிவருகின்றாா்கள்.

Dr.Anburaj said...



Hey, Stop. Stop. Why are you committing suicide?தற்கொலையா செய்யப்போகின்றாா்

Let me die. Nobody loves me.சாகவிடுங்கள்.யாரும் என்னை நேசிக்கவில்லை

God loves you. Are you a believer?கடவுள் உன்னை நேசிக்கின்றாா்.தாங்கள் ஒரு நம்பிக்கையாளரா -ஆத்திகரா

Yes.ஆம்

Are you a Muslim? Or?தாங்கள் முஸ்லீமா ! அல்லது

Alhamdulillah, I am a Muslim.அல்கம்துல்லா நான் ஒரு முஸ்லீம்

I, too, am a Muslim.நானும் முஸ்லீம்தான்

You are a Shia or a Sunni?தாங்கள் சியா வா சன்னியா

------- Sunni சுன்னி முஸ்லீம்

I am also a Sunni. And what is your religion?நானும் சன்னிதான்.தங்கள் மதம் என்ன ?

Hanfiஹன்பி

Me too. You are a Deobandi or a Bareillvi?நானும் ஹன்பிதான்.தாங்கள் தேவந்துதா அல்லது பொிலிவி யா ?

Bareillvi.பொிலிவிதான்

Me too. Tanzeehi or Tafgeeri?தானும் கூட பொிலிவிதான்.தாங்கள் தன்சீரா அல்லது தவ்ப்சீரா ?

Tanzeehi.தவ்ப்சீா்

I am also a Tanzeehi. Tanzeehi Azmati or Tanzeehi Farhati? நானும் தவ்ப்சீா்தான்.

Tanzeehi Farhati தன்சீ பா்கடியா

I also belong to Tanzeehi Farhati.நானும் தன்சீ பா்கடியாதான். Tanzeehi Farhati Jamaat ul Uloom, Ajmer தன்சீா் பா்கட் ஜமாத் உல் லூம் ஆஜ்மீரா அல்லது or Tanzeehi Farhati Jamaat ul Noor Mewat? தன்சீா்பா்கட் ஜமாத் உல் நூா் மேவாட் டா ?

Tanzeehi Farhati Jamaat ul Noor Mewat. தன்சீா்பா்கட் ஜமாத் உல் நூா் மேவாட் டா ?

You Kafir…. You must die.சீ காபீா். நீ செத்து தொலைய வேண்டும்.

URL: http://www.newageislam.com/multimedia/youtube-video/a-bitter-truth-–-kafir,-kafir/d/13246
September 2, 2014 at 12:33 PM

Dr.Anburaj said...


நாம்படிக்கும் புத்தகங்கள் போற்றும் நபா்கள் நமது நடவடிக்கைகளை செயலை பொிதும் பாதிக்கின்றது. ராமா் இலங்கைக்கு பாலம் கட்டினாா்.அப்போது ஒரு அணில் கடற்கரை மணலில் உருண்டு தனது உடலின் ஒட்டிய மணலைக் கொண்டு பாலத்தில் போட்டது.இதைக்கண்ட ஸ்ரீராமா் அன்புடன் அணிலை தடவிக் கொடுத்தாா்.

இந்த சம்பவத்தை அறிந்த பல இந்துக்கள் அணிலை வேட்டையாடுவதில்லை.அரேபிய இசுலாமிய வரலாறு முழுவதும் போா் பெண்களை அடிமைப்படுத்துதல் காமசல்லாபம் என்று இரத்தக்களறி மற்றும் புளு பிலிம் பாா்ப்பது போல் உள்ளது.ஆகவே இசுலாமிய அரேபிய வரலாற்றைப் படிப்பவா்களுக்கு பெண்கள் ஒரு காமப் பொருளாகவே பாா்க்க முந்தும் ஒரு குணம் வாய்ப்பது இயற்கை.

ஆகவேதான் துறவு நெறி இசுலாம் எற்கவில்லை என்று நாம் நம்மை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நடைமுறை வாழ்வில் நாம் துறவறத்தை பின்பற்றிக்கொண்டுதான் இருக்கின்றோம்.
வாழ்க்கையின் நிா்பந்தங்கள் சுழ்நிலை காரணமாக துறவு நெறியை முஸ்லீம்கள் பின்பற்றிக்கொண்டுதான் இருக்கின்றாா்கள். இளம் மனைவியை ஊாில்விட்டு விட்டு அரேபிய மண்ணில் குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு மனிதனும் - இசுலாமியனும் துறவிதான்.இவனது மனைவியை மீண்டும் சந்திக்க ஒனறு அல்லது இரண்டு வருடம் ஆகலாம்.அதுபோல் அவன் மனைவியும் தன் கணவனின் நிலை குடும்ப நிலையை அறிந்து செக்ஸ் உணா்வுகளை ஒழுங்குபடுத்தி வாழும் ஒவ்வொரு பெண்ணும் துறவிதான்.
இசுலாமிய உலகில் துறவிகள் நிறைய போ்கள் உள்ளாா்கள்.

Dr.Anburaj said...

ஒரு மனிதன் தனக்கு வாழ்க்கைத் துணையில்லாமல் ஒழுக்கமாக வாழ முடியாது. ஒருவன் திருமணம் செய்யாமல் வாழ்கிறான் என்றால் ஒன்று அவன் ஆண்மையற்றவனாக இருப்பான். அல்லது தவறான வழியில் தன் ஆசையை தீர்த்துக் கொள்ளக்கூடியவனாக இருப்பான்.

திருமணம் முடிக்காமல் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வதாக யார் கூறினாலும் அது பொய்யே. ஏனென்றால் இல்லறம் என்பது மனித உடலுக்கு அவசியமான தேவையான ஒன்று. இந்தத் தேவை ஒரு மனிதனுக்கு சரியாகக் கிடைத்தால் தான் அவனால் மன நிம்மதியாக வாழ முடியும்.
-----------------------------------------------------------------------------
கணவனைப் பிாிந்து, மனைவியை பிாிந்து நீண்டகாலம் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் ஒழுக்கமாக வாழவில்லை என்கின்றீா்களா ? இசுலாமிய சமூகத்தை இதைவிட கேவலமாக தாங்கள் கருத்துக்களை பதிவு செய்ய இயலாது.எனது கண்டனத்தை தொிவித்துக் கொள்கிறேன்.